Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. ஆழ்ந்த இரங்கல்கள். மிகவும் திறைமையான ஒரு நடிகர். ஆரம்ப ரஜனி - கமல் வெள்ளத்தில் மூழ்கிப் போனவர்களில் ஒருவர்.
  2. ஒற்றுமையே பலம்............. நாளைக்கு குஜராத் வெல்லுது............. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக முட்டைகளை வாங்குகின்றோம்......................😜.
  3. உண்மைகளை, வரலாறுகளை புதைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, விசுகு ஐயா. ஆனால் கமல் போன்றோரின் பேச்சுகளை நம்பி நடவடிக்கைகளில் இறங்குவது மண் குதிர் ஒன்றை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம் மற்றும் குறிப்பாக கமல் சரியான புரிதலோ அல்லது தொடர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக விடயங்களை சொல்லுகின்றார். இவரது பேச்சுக்களால் இதுவரை ஒரு விடயம் கூட சமூகத்தில் மாற்றம் அடையவில்லை என்பது கண்கூடு. ஒரு புள்ளியை மட்டுமே பார்க்காமல், பின்நோக்கி சென்று ஒரு கோடாக பார்த்தால் இவரின் அவசரத்தனங்களை அறிந்து கொள்ளலாம். எனது சொந்த அனுபவத்தை, திருச்சியில் என் பெற்றோரின் மரணச் சான்றிதழ்கள் பெற்ற நிகழ்வை, இங்கு களத்திலேயே ஒரு கதையாக எழுதியிருக்கின்றேன். அந்தக் கதையில் கமலின் ஊழல் எதிர்ப்பு கோசமும், நடவடிக்கைகளும் வருகின்றது. அந்தக் கதையின் சாராம்சமே கமலும், இவரைப் போன்றவர்களும் நிஜ உலகிலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கின்றார்கள் என்பதும், இவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமே அற்றது என்பதும்தான். வெறும் பரபரப்பு மற்றும் விளம்பரங்களுக்காக தங்களுக்கு தேவையான நேரங்களில், சினிமா வெளியீடு அல்லது தேர்தல் காலங்களில், எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். தமிழின் தொன்மை இப்பொழுது இந்திய மத்திய அரசின் தொல்துறைப் பிரிவால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையான பிரச்சனை. இதை கேள்வி கேட்க ஆரம்பித்தது சு. வெங்கடேசன். சில வருடங்களின் முன் மொழிகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக்குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. அப்போதும் இதை தட்டிக் கேட்டவர் வெங்கடேசன் தான். மேடையில் இரண்டு வரிகளை சொல்லி விட்டு, பின்னர் அதையே அன்பு, நட்பு என்று சமாளித்துக் கொண்டு போகும் கமல் போன்றோர் இந்த விடயங்களின் பக்கம் வருவதேயில்லை. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால், ஒன்று அதில் தீவிரமாக இருக்க வேண்டும், இரண்டாவது நல்ல புரிதல் இருக்கவேண்டும். தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களோ அல்லது ஐயாயிரம் வருடங்களோ எவ்வளவு பழமையானது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் திரட்டவேண்டும். அதை உலகில் இந்த துறையில் இருப்பவர்களுடன் பகிரவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரிசா பாலு போன்றவர்களின் ஆதாரங்கள் எங்கள் ஊடகங்களை தாண்டி வேறு எங்கேயும் போகாது. இதை விடுத்து, மலையாளம் தமிழில் இருந்து தான் வந்தது என்று மேடைகளில் சொல்வதால் கிடைக்கும் பயன் தமிழ் - மலையாளிகள் வெறுப்பு மட்டுமே. தமிழ் மூவாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கின்றது (எழுத்துரு மாறியிருக்கின்றது போல.......), ஆனால் மலையாளம் 800 வருடங்களாக மட்டுமே இங்கிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எங்களால் வெளியிட முடியும் என்றால், மேடைகளில் இப்படியான பேச்சுக்களை பேசும் தேவையே இல்லை. பல வருடங்களின் முன் தமிழ்மொழி ஒரு ஆபிரிக்க மொழியிலிருந்து தான் வந்தது என்ற ஒரு கட்டுரையை வாசித்திருக்கின்றேன். ஆபிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதப்பட்டிருந்தது. சிரித்து விட்டு அதை விட்டுவிட்டேன். இதையே பல ஆபிரிக்கர்களும் மீண்டும் மீண்டும் வந்து சொன்னால், சிரிப்பு வருவதற்கு பதிலாக எரிச்சல் வர ஆரம்பித்து, இறுதியில் வெறுப்பு தான் வரும். கிட்டத்தட்ட இதுவே தான் தென்னிந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி பற்றி வேறு எந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் எந்த வித ஒப்பீடும் செய்யாமலேயே பேசலாம்.
  4. அங்கு கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருக்கும் சித்தராமையாவிலிருந்து எடியூரப்பா வரை கமலின் கருத்தை மறுத்துவிட்டார்கள். கமலுக்கு வரலாறே தெரியாது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே. ஒரு தரப்பினர் உண்மை, மறுக்க முடியாத வரலாறு என்று ஒன்றை வாதாடுவதும், இன்னொரு பக்கம் அதே விடயத்தை அது அப்படியில்லை என்று வாதாடுவதும் ஒன்றும் புதிது அல்லவே. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன கமலே, 'நான் சொல்வது எனக்கு சரி. நீங்கள் சொல்வது உங்களுக்கு சரி...........' என்று தானே சொல்லியிருக்கின்றார். நான் சொல்வது எனக்கு சரி என்பதன் பொருள் இது அவருடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்ற பொருளில் தானே வருகின்றது. தொடர்ந்து பேசிய கமல் இந்த மொழி ஆராய்ச்சியை பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும், அவர் உட்பட, தகுதிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றார். மன்னிப்பு என்ற வார்த்தை இல்லாத ஒரு மன்னிப்பை கேட்டிருக்கின்றார் கமல். 'அன்பு.............' என்று வேறு ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கின்றார். சிவராஜண்ணா மீதான அன்பை வெளிப்படுத்துவதன் கமலின் நோக்கம் என்றால், அப்படித்தான் கமல் இப்போது சொல்லுகின்றார், தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது. தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. அரசியல் நலன்கள் நோக்கி சிலர் நிராகரிக்கின்றார்கள். சுயமரியாதை வேண்டி சிலர் நிராகரிக்கின்றார்ர்கள். இந்த மொழிகள் ஒரே குடும்பம் என்று சொன்னால் எவரும் நிராகரித்து எதிர்க்கப் போவதில்லை.
  5. நீங்கள் சொல்லியிருப்பவை சரியானவையே. லோக்சபா தேர்தல்களில் சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போன அல்லது தோல்வியடைந்த சிலர் ராஜ்யசபா சென்று அங்கிருந்து முக்கிய பங்களிப்பு வழங்கியிருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தேர்ந்த, முழுநேர அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிட தயங்கி பின்வாங்குவதும் இப்படியான ஒரு வழியும் இருப்பதாலேயே.
  6. பங்களூரு முன்னேறி விடும் போல தெரியுதே............ கிளி இறுதிப் போட்டியை நோக்கி பறக்குது............🤣.
  7. 'என்னுடைய பேச்சால் கன்னட மக்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக் கொள்கின்றேன். நான் அங்கே மேடையில் பேசியது என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை. அதை நான் அங்கே அப்படி சொல்லியிருக்கக்கூடாது.......................' இப்படி வழவழா கொழகொழா என்று அடிக்கடி மன்னிப்பு கேட்பது அங்கு மிகச் சாதாரணம். மேலும் சீமான் இப்பொழுது கொஞ்சம் தணிந்து இருக்கின்றார். நாலு ஊர்களில் நாலு வழக்குகள் என்று அவரை கொஞ்ச நாளாக பாடாய்ப்படுத்திவிட்டார்கள்.
  8. சில வாரங்களின் முன் மக்கள் நீதி மய்யத்தின் ஏழாவது வருட விழா நடந்தது என்று நினைக்கின்றேன். அதில் பேசிய கமல் எங்களில் ஒருவர் நாடாளுமன்றம் போகின்றார், எங்களின் குரல் அங்கே ஒலிக்கும் என்றார். கடந்த லோக்சபா தேர்தலில் திமுக - மநீம உடன்பாடு வைத்துக்கொண்டதன் பிரகாரம் மநீமவிற்கு ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவி கிடைக்கும் என்று ஏற்கனவே தெரியும். ஆனால் யார் அந்த ஒருவர் என்பது தான் கேள்வியாக இருந்தது............... கடைசியில் கமலே அந்த ஒருவர் ஆகிவிட்டார் என்பது ஆச்சரியம் தான். தமிழ்நாட்டின் முதலமைச்சராக எண்ணி முடிவில் ராஜ்யசபா எம்பி ஆகியிருக்கின்றார். ராஜ்யசபாவிற்கு எவராவது போகின்றார்களா, ஏதாவது கதைக்கின்றார்களா என்ற செய்திகள் பொதுவாக வருவதில்லை. சச்சின் இருந்தார், இளையராஜா இருக்கின்றார் என்று நினைக்கின்றேன், இன்னும் ஏராளமான பிரபலங்கள் அங்கு இருந்திருக்கின்றார்கள். ஒரு meet and greet இடம் போல........
  9. சிஎஸ்கே, பத்து அணிகளில் ஒரே ஒரு அணி.............. யாழ் களத்தையே கவிழ்த்துப் போட்டுதே...............🤣.
  10. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்கும், கேட்கலாம். அறியாமை அல்லது ஆணவம் தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. வழமை போலவே இரண்டு வரிகளை அறிவுஜீவித்தனமாக சொல்லி விட்டு, மூன்றாவது வரியிலிருந்து பொருள் இல்லாமல் கதைக்க ஆரம்பிப்பது கமலுக்கு ஒரு பழக்கம் ஆகிவிட்டது. 'எனக்கு நான் சொல்வது சரி. உங்களுக்கு நீங்கள் சொல்வது சரி. வேறொருவருக்கு இரண்டுமே சரி. இன்னொருவருக்கு இரண்டுமே பிழை............................'. இது என்ன பேச்சு................🫣. பொதுவெளியில் பொறுப்புடன் கருத்துகளை சொல்லும் கடமையும், பொறுப்பும் புகழுடன் சேர்ந்து வருவது. சொந்த வீட்டினுள் ஒரு அறைக்குள் இருந்து எதையாவது சொல்லிக் கொள்ளலாம். மேடையில் ஏறினால் விவேகத்துடன் சமயோசிதமும் தேவை. தமிழர்கள் தவிர்ந்த எந்த தென்நாட்டவர்கள் தமிழ் மொழியை திராவிடத்தின் முதல் மொழி என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்கின்றார்கள்................. எவருமேயில்லை. நாங்கள் தான் திராவிடம் என்றும், எங்களின் மொழிக் குடும்பமே சமஸ்கிருதத்திலிருந்து வேறானது என்றும் சொல்லுகின்றோம். மற்றைய தென்நாட்டவர்கள் எப்படி ஆரம்பித்தார்களோ தெரியவில்லை, ஆனால் இன்று சமஸ்கிருதத்தை தங்கள் மொழிகளில் மிக அதிகமாகவே கலந்துவிட்டார்கள். மலையாள மக்களே தாங்கள் சமஸ்கிருத வழியில் வந்தவர்கள் என்று தான் சொல்லுகின்றார்கள். இப்படி தமிழில் இருந்து தான் உங்களின் மொழிகள் வந்தன என்று மற்றவர்களுக்கு சொல்வது புதிதாக எதையும் நிரூபிக்கப் போவதில்லை. ஏற்கனவே மொழிவாரியான இனங்களுக்கிடையே இருக்கும் பிரிவினையை இது இன்னும் கூட்டும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா என்று எந்த மாநிலமும் இந்தக் கோட்பாட்டை என்றும் ஏற்பதில்லை. இவ்வகையான பேச்சுகள் அவர்களைத் தூண்டுகின்றன. சாதாரணமாக ஒரு வேலைத்தளத்தில் இப்படியான பேச்சுகள் வந்தாலே அங்கே பிரிவு ஆரம்பித்துவிடுகின்றது. கமல் தமிழின் தொன்மையை ஆதாரத்துடன் நிலைநாட்ட விரும்பினால், கீழடி அறிக்கையை மத்திய அரசு ஏன் மாற்றச் சொன்னது என்று டெல்லியில் போய் போராடவேண்டும். இப்பொழுது ரஜனியிடம் இதைப் பற்றிக் கேட்கப் போகின்றார்கள். அவர் அம்பானி வீட்டுக்கு போய் வந்து விட்டே கைலாசம், வைகுண்டம் என்றவர். தமிழ் கைலாசம், கன்னடம் வைகுண்டம் என்று அவர் அவருடைய விளக்கத்தை இனிச் சொல்லுவார். 'கமல் சார் எவ்வளவு பெரிய அறிவாளி.................... நான் என்னத்தை சொல்லுறது................' என்று நழுவுவதற்கும் சாத்தியம் அதிகம்.
  11. கடஞ்சா, மாநில அரசியலில் இருப்பவர்களுக்கே மத்திய அரசியல் தெரியாது என்று நீங்கள் சொல்லும் போது, எங்கோ உலகின் ஒரு மூலையில் ஒரு வீட்டுக்குள் இருந்து கொண்டு விசைப்பலகையில் மட்டும் வீரம் காட்டும் எனக்கு இவை எப்படித் தெரியும். மத்திய மாநில அரசியலும், அதிகாரமும் என்றல்ல, ஒரு பஞ்சாயத்து சபை எப்படி இயங்குகின்றது என்பதே நடைமுறையில் எனக்குத் தெரியாது. என்னுடையவை பலவும் ஊகங்கள் தான். ஆனால் அவை என்னுடைய விருப்பங்கள் அல்ல. ஊகங்களுக்கும், விருப்பங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கின்றன. ஊகங்கள் பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள், சக மனிதர்கள் மற்றும் சூழலால் கிடைக்கும் அனுபவங்கள், வரலாறு, உள்ளுணர்வு போன்றவற்றால் ஏறபடுத்தப்படுகின்றது. விருப்பங்களாலும், நம்பிக்கைகளாலும் அல்ல. கருணாநிதியை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததிற்கு அவருடைய குடும்பத்தினரின் அல்லது மிகவும் வேண்டப்பட்டவர்களின் பெரிய தவறுகள் காரணமாக இருக்கலாம். இன்றைய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் மாநில அரசுக்களை பணிய வைக்கும் ஒரு முயற்சி போன்றது அது. ஜெயலலிதா வாஜ்பாய்யின் அரசை ஒன்றுமே இல்லாமல் ஆக்கவில்லையா. மாநிலம் மத்தியை கட்டுப்படுத்திய உதாரணங்களும் ஏராளம் உண்டு. மாநிலங்களில் இருந்து போவோர் பலரும் மத்திய ஆட்சியில் பங்காளர்களாகவும், மத்தியில் கொள்கை வகுப்பாளார்களாகவும், பொறுப்பிலும் இருந்து கொண்டே வருகின்றார்கள். இது ஒன்றும் கோவில் பூசகர் வேலை போன்றது அல்ல. இது ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் மற்றும் புரியும் என்று சொல்வதற்கு. மாநிலங்களில் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் எது எவை என்று தெரியும். இந்தியாவின் தேவையை நிறைவேற்றுபவர்கள் ராஜதந்திரிகள் போன்று தெரிகின்றனர். இலங்கை அரசின் அதிகாரிகள் இந்தியாவின் தேவையை செய்து முடிக்கின்றனர், அதனாலேயே அவர்கள் அப்படித் தோன்றுகின்றார்கள். ஈழத்தமிழ் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவின் தேவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தியாவுடன் இணக்கமாக போகமுடியாது. ஏனெனில் இந்தியாவின் தேவைகள் எங்களின் நலனுக்கு, எங்களின் இருப்பிற்கே பாதகமானவையாக எங்களுக்கு தெரிகின்றது. இதன் அர்த்தம் நாங்கள் ராஜதந்திரிகள் இல்லை என்று அல்ல, மாறாக இருப்பிற்கே போராடும் ஒரு இனம் என்பதே முதற்காரணம். இங்கு உங்களுடன் சில நாட்கள் உரையாடிய பின் உங்களின் முதல் மொழி தமிழ் இல்லை என்ற ஒரு சந்தேகம் வர ஆரம்பித்திருக்கின்றது. ஒரு குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்புவது போன்றே உங்களின் பதிவுகளை வாசிக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் இப்படியேயாயினும் தொடருங்கள். மாற்றுக் கருத்துகளும், முரணியக்கங்களுமே முன்கொண்டு செல்லும்.
  12. 🫢.............. உண்மையாகவா அண்ணா..................... எங்களூர் அம்மன் கோவில் திருவிழா நாட்களில் நாங்கள் ஊர்க் கட்டுப்பாடு, அம்மன் கண்ணைக் குத்துவார் என்று சொல்லி வளர்க்கப்பட்டு, 15 நாட்களும் கிழங்கு ரொட்டி தான் சாப்பிட்டுக் கொண்டு திரிந்தோம். அம்மன் திருவிழாவின் போது ஊரில் எல்லா ரொட்டிக் கடைகளிலும் கிழங்கு ரொட்டி மட்டுமே போடுவார்கள். உங்கள் இடத்தில் மேளம் அடிப்பவர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்................ என்னுடைய ஊரில் கோவிலில் இருந்து 300 மீட்டர், 400 மீட்டர் என்று அளந்தால் அடுத்த ஊர் வந்துவிடும். அந்த நாட்களில் கோவிலின் முன் பக்க அருகாமையில் (சிவாஜிலிங்கத்தின் வீட்டருகே), பின் பக்க அருகாமையில் (தலைவர் வீட்டருகே) என்று ஏராளமான ரொட்டிக் கடைகள் இருந்தன. இந்தப் பதினைந்து நாட்களும், வெள்ளிக்கிழமைகளையும் தவிர்த்து, ஏனைய நாட்களில் நல்ல கொத்துரொட்டி போடுவார்கள். கோவிலின் முன்பக்கம் இருந்த ரொட்டிக்கடை மிகவும் பிரபலம். 25 மீட்டர் தூரம் அல்லது குறைவாக வரும் என்று நினைக்கின்றேன். இதுவரை நல்லூரைச் சுற்றி அருகாமையில் இப்படியான கடைகள் இல்லாமல் இருப்பது ஆச்சரியம் தான்............ அங்கிருக்கும் மக்களின் மனம் புண்படுகின்றது என்றால், கொஞ்சம் தள்ளி கடையை போட்டுக் கொள்ளுங்கள்................ ஈழம் ஒரு சிவபூமி, சைவர்களின் ராஜ்யம் என்று சொல்லப்படும் மற்றும் எழுதப்படும் போது, அவர்கள் வேறு ஒரு பிரதேசத்தை சொல்லுகின்றார்கள் என்ற உணர்வே இன்றுவரை ஏற்படுகின்றது. சிவசேனாவும், வேலன் சுவாமிகளும் அதைவிட அந்நியமாகத் தெரிகின்றார்கள்.
  13. முருகப் பெருமானே............ நீ தானே தமிழுக்கு கடவுள்............ இறங்கி வந்து வேலால் குத்தமாட்டியா....................🤣.
  14. போதிய வேலை வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட பல நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் சில இட ஒதுக்கீடுகள் இருக்கின்றன. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தப் போக்கை காணலாம். நாட்டில் சில காரணங்களால் பின்தங்கிப் போனவர்களை முன்னோக்கி கொண்டு வரும், சமூகநீதியை வளர்க்கும் சரியான ஒரு நோக்கம் இதன் பின்னால் இருக்கின்றது. தற்காலிகமாக சில வருடங்களுக்காவது அரசதுறைகளில் சில இடங்களை அங்கு நீண்டகாலமாக அல்லது அங்கேயே பிறந்த ஈழத்தமிழ் பின்புலம் கொண்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கலாம். உலகெங்கும் வெவ்வேறு தொழில்களுக்கான ஊதிய வித்தியாசங்கள் அந்தந்த நாடுகளில் இருக்கும் தேவை மற்றும் வழங்கல்களை பொறுத்து தான் அமைகின்றது. அத்துடன் நாட்டின் வருமானமும் இதை தீர்மானிக்கின்றது. சில வரலாற்றுக் காரணங்களும், அவை தவறானவை என்றாலும், இருக்கக்கூடும். ஊதிய வித்தியாசங்கள் குறைக்கப்பட்டாலும், வேலைகள் மற்றும் தொழில்களுக்கிடையேயான வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். Job versus Career என்று இந்த வேறுபாட்டைச் சொல்லலாம். செய்யும் வேலையில் முன்னே முன்னே சென்று அடுத்த கட்டங்களை, அதன் தொடர்ச்சியாக இன்னொரு வேலையை அடையலாமா, இல்லாவிட்டால் ஒரே இடத்திலேயே தங்கி நின்று விடுகின்றதா என்பது இதன் அடிப்படை வேறுபாடு. மேலும் உடல் உழைப்பு எவ்வளவு அதிகமாக தேவையாகின்றது என்பதும் இங்கே இன்னொரு பிரதான வேறுபாடு. மனிதர்கள் நடுத்தர வயதுகளின் பின் தாங்கள் செய்யும் வேலையை அதே வினைத்திறனுடன், செயல் திறனுடன் செய்ய முடியாமல் போகும் நிலை சில வேலைகளில் ஏற்படலாம். இது போன்ற காரணங்களாலேயே ஆரம்ப ஊதியம் குறைவாக இருந்தாலும், அடிப்படையில் தேவையான கல்வித் தகுதி மற்றும் பயிற்சிகள் அதிகமாக இருந்தாலும், இளைய தலைமுறையை ஒரு பக்கம் போக விடாமல் இன்னொரு பக்கமாக போங்கள் என்று காலம்காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.
  15. நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் பலதும் மிகச் சரியான கவனிப்புகள், வசீ. சில வேளைகளில் 'என்னடா இது.................' என்று களைத்தும் போயிருக்கின்றேன். எதற்கெடுத்தாலும் பிறரை அல்லது பிற நிகழ்வுகளை குற்றம் சொல்லும், காரணமாகக் காட்டும் இயல்பு எங்களிடம் கொஞ்சம் அதிகமாக வந்து விட்டதோ என்றும் தோன்றும்................😌.
  16. இந்த மக்களை முடிந்த அளவிற்கு அந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரச் செய்வதே எங்களால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கேயே இருக்கும் எங்களின் தலைமுறை இந்தச் சூழலுக்கும், இது கொடுக்கும் ஒரு விதமான பெரும் பிரயத்தனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கும் நன்கு பழகிவிட்டார்கள். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் அடுத்த அடுத்த தலைமுறையில் முன்னே போக முயற்சி செய்பவர்கள் இருக்கின்றார்கள். குடியுரிமை இல்லாததால் எம். காம் முடித்தாலும் ஒரு ஆசிரியப் பணி கூட கிடைக்காது என்ற இக்கட்டான நிலையிலும், இந்த இளையவர்கள் பலர் தனியார் துறை நோக்கிப் போக முயல்கின்றார்கள். குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது. பாஜக குடியுரிமை கொடுக்கவேமாட்டாது. அவர்களின் தமிழ் இன விரோதம் வெளிப்படையானது கூட. என்றாவது காங்கிரஸ் அல்லது ஒரு கூட்டாட்சி வந்தால், இது நடக்கக்கூடும். தமிழ்நாட்டு மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் அங்கேயே, மண்டபம் குடியிருப்பில் என்று நினைக்கின்றேன், பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை சில வருடங்களாக பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக போட்டியிட்டு தங்கங்களை வென்றிருக்கின்றார். இந்தியக் குடியுரிமை இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்திற்காக விளையாட முடியும் என்றால், மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.
  17. நந்தன் - புலவருடன் நாங்கள் நாலு பேர்கள் கூட்டணி வைத்ததற்காகவே லக்னோ ஒரு 240 அடிக்கவேண்டும்........................😜.
  18. ஆறு கோள்களும் ஒரு நேர் கோட்டில் வருவது என்பது இதைத்தான்........... புள்ளிகளை இப்பவே போட்டு விடலாம்................🤣. ஆறும் பத்தரை மாற்றுத் (24 காரட்) தங்கங்கள்..................😜.
  19. மொத்தமாக இந்தியாவில் இருக்கும் ஈழத்தமிழர்களில் தமிழ்நாடு அரசு வழங்கும் குடியிருப்புகளில் இருப்பவர்கள் அரைப்பங்கினர். மிகுதி அரைப்பங்கினர் சொந்த வீடுகளில் அல்லது வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்திற்கும் சிறிது குறைவு. இரண்டாவது, மூன்றாவது தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் சரியாக வரவில்லை என்று நினைக்கின்றேன். 'அகதி முகாம்' என்ற சொல்லைத் தவிர்த்து, அவற்றை அரசு வழங்கும் குடியிருப்புகள் என்று எழுதுகின்றேன். வெளியே வீடுகளில் வசிப்பவர்கள் சுயவிருப்பின் அடிப்படையிலேயே அங்கு தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலும் புலம் பெயர்ந்து மேற்குப் பக்கமாகச் சென்ற அவர்களின் உறவுகளிடமிருந்து உதவிகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் சுயமாக தொழிலும் செய்கின்றனர். இவர்களில் பலர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் கல்வி, திருமணம், சில வேலை வாய்ப்புகள் என்று தமிழக மக்களுடன் சிறிது சிறிதாக கலந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள். அரச குடியிருப்புகளில் இருப்பவர்களில் பல மாவட்டக்காரர்கள் இருந்தாலும், மன்னார், முல்லைத்தீவு அடங்கலாக வன்னி மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் என்று நினைக்கின்றேன். இவர்கள் தமிழ்நாட்டு அரசிலேயே முற்று முழுதாக தங்கி இருக்கின்றனர். பிள்ளைகளும் அங்கேயே பிறந்து, அதற்குள்ளேயே வளர்கின்றார்கள். மிகக்குறைவானவர்களே உயர்கல்விக்கு போகின்றார்கள். தமிழ்நாட்டில் அரச ஆதரவுடன் தங்கி இருப்பவர்களை புலம்பெயர் தமிழர்களின் உதவிகளுடன் இலங்கையில் மீளக் குடியேற்றி, அவர்களுக்கு நிரந்தரமான வாழ்வாதாரங்களையும் உருவாக்கலாம் என்ற யோசனை இடைக்கிடையே பல குழுமங்களிலும் பகிரப்படுவதுண்டு. ஆனால் ஏற்கனவே இலங்கையில் நாளாந்த வாழ்வே போராட்டமாக இருக்கும் ஒரு பிரிவு மக்களுக்கு புலம்பெயர் தமிழர்களால் என்ன செய்ய முடிந்தது என்ற கேள்வி இங்கு பொருத்தமானது என்று நினைக்கின்றேன். இந்த மக்களில் ஒரு பகுதியினர் போராளிகள். அவர்கள் தங்களை 'முன்னாள் போராளிகள்' என்று சொல்லக் கூடாது என்று சொல்லியிருக்கின்றார்கள். அவர்கள் தங்களை என்றுமே போராளிகள் என்று சொல்வது மிகச்சரியே. இந்தப் போராளிகளின் வாழ்க்கைகளை புலம்பெயர் தமிழர்களால், இத்தனை வருடங்கள் ஆன பின்னும், பெரிதாக மாற்ற முடியவில்லை என்பது தான் உண்மை. முக்கியமாக பெண் மற்றும் மாற்றுத் திறனாளிகளாக உள்ள போராளிகள். 'பெண் போராளிகளை நோக்கிய எங்கள் சமூகத்தின் உளச்சிக்கல்...............' என்பது போன்ற தலைப்பில் சிலர் எழுதியும் விட்டார்கள். இதே போன்றே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இன்று ஒற்றைத் தலைமையில், பெரும்பாலும் பெண் தலைமையில், இருக்கும் குடும்பங்கள். பதினாறு வருடங்களில் எவ்வளவை எங்களால் மாற்ற முடிந்தது. இதனாலேயே தமிழ்நாட்டிலிருந்து மக்களை இலங்கையில் மீளக் குடியேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒரு விடயமாக இருக்கின்றது. ஊர்ச் சங்கங்கள், நலன்புரிச் சங்கள், அமைப்புகள், அன்புநெறிகள், மனிதநேயங்கள், ஐஎம்எச்ஓ,......... என்று நூற்றுக் கணக்கானவை இருக்கின்றன. இந்த அமைப்புகள் உதவிகளும் செய்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் கடலில் விழுந்த துளிகள் போலவே இவை போய்க் கொண்டிருக்கின்றன. கடல் அப்படியே கரித்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு அரசுக்கு நிகரான ஒரு அமைப்பு வேண்டும் என்றே நினைக்கின்றேன். அப்படி ஒரு அமைப்பை உருவாக்க முடிந்தால் கூட, அந்த அமைப்பின் முதலாவது கடமையாக, செயற்பாடாக இலங்கையிலேயே இன்றும் இருக்கும் மக்களே அமைவார்கள். வேறு சில தகவல்கள்: தமிழ்நாட்டுக்கு 2009ம் ஆண்டின் பின் தான் எம் மக்கள் போனார்கள் என்றில்லை. பெரும்பாலான எம்மக்கள் 90ம் ஆண்டுகளிலேயேயும், அதற்கு முன்னரும் கூட அங்கே போய் விட்டார்கள். முள்ளிவாய்க்கால் கொடுமையை, அழிப்பை இந்தியா தடுக்காமல் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது ஈழத்தமிழ் மக்களுக்கு இந்தியா செய்த மன்னிக்க முடியாத துரோகமும், வலியும். ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அதற்கு பல வருடங்கள் முன்னரேயே தமிழ்நாட்டில் தஞ்சம் அடைய ஆரம்பித்துவிட்டார்கள். இவை இரண்டும் இணைந்தவை அல்ல. தமிழ்நாட்டு அரச குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சொல்லும் நாங்கள் இன்றும் இலங்கையில் எம் மக்கள் பலர் இருக்கும் இடங்களை போய்ப் பார்க்கவேண்டும். ஒரே ஒரு குடிசையில் தான் ஒரு குடும்பம் இருந்தது. அருகே தோண்டிய பள்ளம் தான் கிணறு............... தமிழ்நாட்டுக்கும், அந்த சிறிய குடியிருப்புகளுக்கும், அவர்கள் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் இலவச அரிசிக்கும் என்றென்றும் நன்றி. இவற்றை இன்று அந்த மக்களுக்கு கொடுப்பதற்கு இந்த உலகில் வேறு எவருமே இல்லை.
  20. அவரும் மற்றவர்கள் செய்வதையே செய்துவிட்டார்............... அவுட்டாகிப் போனார்............ ஜக்கம்மாவிற்கு ஜே................
  21. கடைசி இரண்டு ஓவர்களிலும் மும்பை பையன் சாருக்காக விளையாடினது போல இருந்தது...........
  22. எடுத்துக் கொண்ட சத்தியத்தை ஐந்து தடவைகளுக்கு மேலே வெளியே சொன்னால், அது இல்லாமல் போய்விடும் என்று ஒரு சத்திய விதி இருக்கின்றது, பையன் சார்.................🤣. ** மும்பை அணி கொஞ்சம் தள்ளாடுதே, அதனால் தான் இந்தப் புது விதி...................😜.
  23. 🤣................ முடிந்த வரைக்கும் தாய் சொல்லை மீறக் கூடாது தான்........ ஆனால் இங்கே அம்மா ஜக்கம்மா சொல்லவில்லை தானே........... மகன் தானே மும்பையை முழுதாக நம்பி வாக்குக் கொடுக்கின்றார்......... அதை அங்கே இங்கே அப்பப்ப மீறலாம் தானே.................😜. எப்படியும் என்னுடைய இந்த லாஜிக்கிலும் ஓட்டைகள் இருக்கும்........... செம்பா எப்படியும் விடப் போவதில்லை.....................🤣.
  24. நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கும் உடன்பாடே, ஆனால் நீங்கள் அதைச் சொல்லியிருக்கும் விதம் குத்திக் கிழிப்பது போன்று இருக்கின்றது. ஊரில் நான் சிறு வயதில் இருந்த ஒழுங்கையின் தொடக்கத்தில், வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி வீதியில் அவர்கள் ஒரு குடும்பமாக வந்து கடை ஒன்றை சொந்தமாக நடத்தினார்கள். அவர்கள் எங்கள் ஒழுங்கையிலேயே ஒரு வீட்டில் வசித்தார்கள். அங்கு பலரும் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்தப் பெயரிலேயே அவர்களை பேச்சில் குறிப்பிடுவார்கள். நாங்கள் என்ன ஒரு சமூகமாக இருந்திருக்கின்றோம் என்று இப்பொழுது வேதனையாக இருக்கின்றது. அவர்களின் வீட்டில் என் வயதை உடைய ஒருவரும் இருந்தார். அந்த வீட்டுக்கார அக்காவின் தம்பி. சில காலத்தில் நானும் அவனும் நல்ல நண்பர்கள் ஆனோம். அவன் பள்ளிக்கூடம் போகவில்லை. அவர்களின் கடையிலேயே வேலை செய்தான். பின்னர் ஊரை விட்டுப் போய்விட்டார்கள்................. நான் இங்கு யாழில் ஒரு வருடத்தின் முன் இணைந்த போது எழுதிய குறுங்கதை ஒன்று கீழே உள்ளது. இது இன்னொரு நிகழ்வு. இது கற்பனையில்லை. தலைப்பே தலைவிதியாக மாறியது போல இருக்கின்றது....................
  25. 👍................ நீங்கள் ஜக்கம்மா என்று எழுதுவதை இங்கே முன்னரும் பார்த்திருக்கின்றேன், பையன் சார். வேறு எவரும் எழுதியதாக நினைவு இல்லை. ஆதலால் ஜக்கம்மாவின் அருள் உங்களுக்கே.................🤣. நான் சிறுவனாக இருந்த போது, எங்களூர் தியேட்டரில் 'ஜக்கம்மா' படம் வந்தது. அப்பொழுது அதில் நடித்திருந்த நடிகர் ஜெய்சங்கர் தமிழ் ஜேம்ஸ் பாண்ட். பின்னர் வீரபாண்டிய கட்டப் பொம்மன் ஜக்கம்மாவை தெய்வமாகக் கொண்டிருந்தார் என்று வாசித்திருக்கின்றேன். அவர் வழி வந்த குடுகுடுப்பைக்காரர்களும், முகம் பார்த்து பலன் சொல்பவர்களும் இன்றும் ஜக்கம்மா என்று சொல்லியே பலன் சொல்ல ஆரம்பிக்கின்றனர். வீரப்பையனும் ஜக்கம்மாவின் ஒரு புதல்வன் போல..................👍.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.