Everything posted by ரசோதரன்
-
பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும் தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !
உலகம் ஏற்றுக்கொண்ட தமிழ்ப்பிராமி கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள். அசோகப்பிராமியையும், தமிழ்ப்பிராமியையும் வேறுபடுத்தியவரே இவர்தான். தமிழ்நாட்டில் இருந்த கல்வெட்டுகளை வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தெரிந்திருந்த பிராமி எழுத்துக்களை கொண்டு வாசிக்க முடியாதிருக்கும் போது, அவை இன்னொரு வகை பிராமி எழுத்துருக்கள் என்றும், அவர் அதை தமிழ்ப்பிராமி என்றும் வகைப்படுத்தி கல்வெட்டுகளை வாசித்து தொகுத்தார். தினமணியில் ஆசிரியராகவும் இருந்தார். அன்று தான் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாற்றம் வந்தது. பத்திரிகைகளில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்ததும் மகாதேவன் அவர்களே. புதுமைப்பித்தனும், அசோகமித்ரனும் அவருடைய முயற்சியால் தான் தமிழர்களுக்கு ஓரளவாவது தெரியவந்தனர். இன்று கூட இவர்களை எங்களின் சமூகத்தில் பலருக்கும் தெரியாது. புனைவு உலகில் உலகில் எவருக்கும் இணையான இரு மேதைகள் இவர்கள். இன்னும் மகாதேவன் அவர்கள் பற்றி நிறையவே எழுதலாம். அவர் அன்றே வெளிநாடுகள் போய் இருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டிலேயே தங்கி அரசுப் பணியுடன் குகைகளையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். இதில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு புத்தகம் உலகெங்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. ஒரு ஆராய்ச்சியாளின் அடிப்படையே நேர்மை என்பதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாதவர். இவரின் சில புத்தகங்கள்: The Indus Script: Texts, Concordance and Tables (1977) Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003) Corpus of Tamil-Brahmi inscriptions (1966) The Indus Script: Texts, Concordance and Tables (1977) Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D. (Harvard Oriental Series, 62) (2003) Early Tamil Epigraphy: Tamil-Brahmi Inscriptions. Revised and Enlarged Second Edition: Volume 1 (en: Central Institute of Classical Tamil) (2014) Akam and Puram: 'Address' Signs of the Indus Script (2010) Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study (2014) Toponyms, Directions and Tribal Names in the Indus Script (Archaeopress) (2017) 2018ம் இவர் ஆண்டு இறந்த பொழுது தான் இவரையோ, இவரின் பணிகளையோ அறிந்தவர்கள் மிகச்சொற்பமே என்று தெரிந்தது. முக்கியமாக ஈழத்தமிழர்களில் இவரை அறிந்திருந்தவர்களை எண்ணி விடலாம் என்ற நிலையே இருந்தது. இன்றும் அதுவே தான் நிலை. இவர் மறைந்தது தமிழ் பேசும் உலகத்திற்கு ஒரு மிகப்பெரிய, நிரப்பவே முடியாத இழப்பாகப் போனது. அவர் விட்ட இடத்திலிருந்து முயன்று கொண்டிருக்கும் ஒருவர் பாலகிருஷ்ணன். தமிழின் வரலாற்றில் நிற்கப் போகும் இன்னொரு மேதை கி.ரா. இவர்களை எல்லாம் தமிழர்களே இல்லை என்றும், வசவு வார்த்தைகளாலும் பொதுவெளிகளில் எழுதும் சிலர் தமிழுக்கு என்ன தான் செய்திருக்கின்றார்கள்...............
-
சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
போதை மாத்திரைகள் என்றால் இவை fentanyl மாத்திரைகளா......... அழிந்தது முழுநாடும். இவை பவுடர் அல்லது ஹெரோயினை விட 50 மடங்கு வீரியமானவை. இதை பல நாடுகள் இன்று உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். சீனாவே பெருமளவில் இவற்றை உற்பத்தி செய்கின்றது. சிரியா செய்து கொண்டிருந்தது. அமெரிக்காவிலும் இது ஒரு பெரும் பிரச்சனை. சமீபத்தில் கண்மூடித்தனமாக அமெரிக்கா கனடாவை இந்த விடயத்தில் குற்றம் சாட்டியது. இது இலங்கை அரசையே மீறிய ஒன்று. அமெரிக்காவில் இது அமெரிக்க அரசையே மீறிய ஒன்று. இந்த விடயங்களில் அவரவர்களே அவரவர் குடும்பங்களுக்கு பொறுப்பும், காவலும். அந்த நாட்களில் கஞ்சா, கறுப்பு அல்லது அபின், பவுடர் அல்லது ஹெரோயின்........... இப்படியானவற்றை இலங்கை அரசோ அல்லது சிங்கள மக்களோ நாட்டுக்குள் கடத்தி வரவில்லை. அவை வேறு வழிகளிலேயே நாட்டுக்குள் வந்தன. இங்கு இருக்கும் பலர் இவற்றை உங்களின் வாழ்க்கைகளில் ஒரு தடவை கூட கண்டிருக்கமாட்டீர்கள். ஆனாலும் அவை வந்து போய்க் கொண்டிருந்தன.
-
‘தக் லைஃப்’ விமர்சனம்: கமல் - மணிரத்னம் கூட்டணி பாராட்டு பெற்றதா, பாடாய் படுத்தியதா?
சாருவின் விமர்சனம் இது. சாரு இப்படி எழுதியிருக்கின்றாரே என்பதற்காக இந்தப் படம் வேறு எவருக்கும் இப்படியே தோன்றும் என்றும் இல்லை. முன்னர் சாரு திட்டித் தீர்த்த சில படங்கள் எனக்கு பிடித்தும் இருந்தன. அவர் கொண்டாடிய சில படங்கள் கொடுமைகளாகவும் இருந்தன. ஆனாலும் எழுத்தில், விமர்சனத்தில் சாரு எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் பிடித்திருக்கின்றது. கமலுக்கும் சாருவிற்கும் ஏற்கனவே ஆகாது. இப்பொழுது புதிதாக என்ன ஆகிவிடப் போகின்றது................ https://charuonline.com/blog/?p=15790 ********************************************** தக் லைஃப் – விமர்சனம் June 6, 2025 ஒண்ணும் ரெண்டும் ஏழு, ஏழும் ஒன்பதும் இருபத்தைந்து, இருபத்தைந்தும் முப்பதும் தொண்ணூறு என்று ஒருத்தர் கணக்குப் போட்டு நம்மிடம் சொல்லி, கணிதத்தை வேறு திசையில் செலுத்தியிருக்கிறேன் என்று சொல்வது போலிருந்தது தக் லைஃப் படம். மணி ரத்னத்துக்கும் கமல் ஹாசனுக்கும் எதார்த்த உலகம் பற்றி எதுவுமே தெரியாதது போல் இருக்கிறது. படத்தில் எல்லா காட்சிகளும், எல்லா பாத்திரப் படைப்புகளும் மிகவும் சிறுபிள்ளைத்தனமாக இருந்தன. சில உதாரணங்களைத் தருகிறேன். அமரனை (சிம்பு) சக்திவேல் நாயக்கர் (கமல்) சிறுவயதிலிருந்தே (ஏழு வயது என்று வைத்துக்கொள்லலாம்) வளர்க்கிறார். இருபது இருபத்தைந்து ஆண்டுகள் வளர்த்திருப்பார். அமரனுக்கு ஏழு வயது என்றால் அப்போது சக்திவேலுக்கு முப்பத்திரண்டு இருக்கலாம். அப்படியானால் அது தந்தை மகன் உறவுதானே? ஆனால் படத்தில் அண்ணன் – தம்பி என்று வருகிறது. அதற்கு ஒரு ஆபாசமான காரணம் இருக்கிறது. சக்திவேலின் காதலியான இந்திராணியை (த்ரிஷா) அமரனும் காதலிக்கிறார். தந்தை மகன் உறவு என்றால் சித்தியைக் காதலிப்பது ஆசாரமல்ல, தமிழ் மக்கள் எதிர்ப்பார்கள் என்று அண்ணன் தம்பி உறவு என்று நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இதற்கு ஒரு மூலக்கதை இருக்கிறது. சக்திவேலும் இன்னொரு தாதாவும் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள். அதில் இன்னொரு தாதா போலீஸிடம் போட்டுக்கொடுக்கிறான். துப்பாக்கிச் சூடு. அதில் சிறுவன் அமரனைத் தூக்கி வைத்துக்கொண்டு தப்பிக்கிறார் சக்திவேல். அப்போதுதான் அமரனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் இறக்கிறார். அந்தச் சம்பவத்தில் அமரனின் நாலு வயது தங்கை சந்திரா காணாமல் போய் விடுகிறாள். உன் தங்கையைக் கண்டு பிடித்துக் கொடுப்பது என்று சொல்லும் சக்திவேல் பல டான்ஸ் பப்களில் தேடி இந்திராவைக் கண்டு பிடித்துக் கூட்டிக்கொண்டு வந்து தன் காதலியாக வைத்துக்கொண்டு விடுகிறார். இந்த இந்திராதான் அமரனுக்கும் சக்திவேலுக்கும் முட்டிக் கொள்வதற்குக் காரணம். சக்திவேல் ஊரே நடுங்கும் தாதா. அப்படிப்பட்டவரின் காதலியான இந்திராணியிடம் எவ்வளவு சொத்தும் பணமும் இருக்க வேண்டும்? ஆனால் சக்திவேல் இறந்து விட்டார் என்று நம்பப்படும் காலகட்டத்தில் அமரன் இந்திராணியிடம் “நீ என்னோடு வந்து விடு, இல்லாவிட்டால் போய் விடு” என்று சொல்லும் சமயத்தில் இந்திராணி ஏதோ ஒரு அனாதையைப் போல “நான் எங்கே போவது?” என்று பசப்புகிறாள். எப்படி இருக்கிறது கதை? தான் காதலித்த சக்திவேல் இறந்ததாக நம்பப்படும் சமயத்தில் தன்னைப் பெண்டாள நினைக்கும் அமரனை இந்திராணி செருப்பால் அல்லவா அடித்திருக்க வேண்டும்? அப்படி நடக்கவில்லை. சக்திவேல் எப்போது தொலைவார், இன்னொருத்தனிடம் போகலாம் என்று காத்துக்கொண்டிருப்பவளைப் போல் நடந்து கொள்கிறாள் இந்திராணி. நம்பவே கேவலமாக இருக்கிறது. இப்படித்தான் படம் முழுவதுமே காதில் பூ சுற்றுகிறார்கள். இன்னொரு காட்சி. சக்திவேல் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். வெளியே வந்ததும் வீட்டுக்குப் போகாமல் நேராக காதலி வீட்டுக்குப் போகிறார். அங்கே ஒரு வாரம் ஜாலி பண்ணி விட்டு மனைவியிடம் செல்கிறார். அங்கே மனைவி ஜீவா (அபிராமி) தன் கணவன் ஒரு வாரம் காதலி வீட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்று தெரிந்து, ஏதோ தன்னை விட்டுவிட்டுத் தனியாக சினிமாவுக்குப் போய் வந்தவனோடு ஊடல் கொள்வது போல் சிணுங்குகிறார். யோவ், நீங்களெல்லாம் என்ன சங்க காலத்திலா வாழ்கிறீர்கள்? சங்க காலத்துத் தலைவிதான் வேசி வீட்டுக்குப் போய் வந்த கணவனோடு அப்படி ஊடல் கொள்வதாக சங்கப் பாடல்கள் சொல்கின்றன. நிஜத்தில் என்ன நடக்கும் தெரியுமா சினிமா உலக லெஜண்டுகளே? துடைப்பக்கட்டையால் கணவனைப் பின்னி எடுத்து விடுவார்கள். அல்லது, விஷம் வைத்துக் கொன்று விடுவார்கள். மணி & கமல், நீங்கள் இருவரும் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? எந்தப் பாத்திரத்திலும், எந்தக் காட்சியிலும் பார்வையாளர்கள் ஒன்றவே முடியவில்லை என்பதற்கு இன்னும் சில உதாரணங்கள் தருகிறேன். சக்திவேலின் அண்ணனுக்கு (நாஸர்) சக்திவேலின் மீது பொறாமை. அதேபோல் சக்திவேலின் அடியாட்கள் நாலைந்து பேருக்கும் அவர் மீது எரிச்சல். சக்திவேல் கைலாஷ் (இமயமலை கைலாஷ்) போகிறார். அங்கே ஒரு மலை உச்சியில் வைத்து அந்த நான்கு பேரும் – அடியாட்களும் அண்ணனும் – சேர்ந்து. நேருக்கு நேராகவே சண்டையிட்டு, துப்பாக்கியால் சுட்டு, என்னென்ன எழவோ செய்து அவரைப் போட்டுத் தள்ளுகிறார்கள். போட்டுத் தள்ளும் முயற்சியின்போது அமரனும் வந்து விடுகிறான். அவன்தான் இந்த சதித்திட்டம் போட்டதே. அவன்தான் சக்திவேலை மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி விடுவது. இடைவேளை ஸ்லைட் காண்பிக்கப்படுகிறது. மீதிக் கதையை நீங்களே யூகித்து விடலாம். எந்த த்ரில்லும் கிடையாது. மீதிக் கதையை யூகித்து விட்டீர்களா? கீழே விழுந்த சக்திவேல் பிழைத்து எழுந்து வந்து எல்லோரையும் பழி வாங்குகிறார். அண்ணன்மாரே, இந்தக் கதை எந்த லெஜண்டின் கற்பனையில் உருவானது? இன்னொரு பைத்தியக்காரத்தனம், கேளுங்கள். அமரன் தன்னை இருபத்தைந்து ஆண்டுகளாக வளர்த்த தன் தந்தை போன்ற சக்திவேலை ஏன் தீர்த்துக்கட்ட முயல்கிறார் தெரியுமா? சக்திவேலின் அண்ணன் அமரனிடம் “உன் தந்தையைக் கொன்றது சக்திவேல்தான்” என்கிறார். உடனே அமரன் அதை நம்பி சக்திவேலைக் கொலை செய்ய முயல்கிறார். டேய், டேய், டேய், காதில் பூ சுற்றுவதற்கும் ஒரு அளவில்லையா லெஜண்டுகளா? ஏன், அமரனுக்கு சுயபுத்தியே இல்லையா? யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் முட்டாப்பயலா அமரன்? கிட்டத்தட்ட படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுமே இப்படித்தான் வருகின்றனர். ஊரே நடுங்கும் தாதாவான சக்திவேல் இப்படித்தான் தன்னைக் கொலை செய்யத் திட்டமிடும் அடியாட்களைத் தன் வலது கரமாக வைத்துக்கொண்டு திரிவாரா? அமரனைப் போலவே சக்திவேலுக்கும் ஆட்டாம்புழுக்கை அளவுக்குக் கூட மூளை இல்லை என்பது போலவே இருக்கிறது கதையமைப்பு. இதற்கிடையில் ஒரு அடியாள் எப்போது பார்த்தாலும் எல்லா அடியாட்களிடமும் சக்திவேல் பற்றி பொல்லாங்கு சொல்லிக்கொண்டே இருக்கிறான். அமரன் உட்பட. இது சக்திவேலுக்கு மட்டும் எப்படித் தெரியாமல் போயிற்று? சக்திவேல் ஒரு ‘தக்’ என்கிறார்கள். ஆனால் அவரோ ரமண மகரிஷி மாதிரியே நடந்து கொள்கிறார். ஒரே ஒரு காட்சியில் இந்திராணியிடம் லவ்ஸ் பண்ணும்போது மட்டுமே ரமணராக இல்லாமல் நவீன கால சாமியாராக மாறுகிறார். கடைசி காட்சியில் சக்திவேல் நமது வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாராக மாறி விடுகிறார். தாடிதான் வெள்ளையாக இல்லாமல் கருப்பாக இருக்கிறது. அது ஒன்றுதான் வித்தியாசம். படத்தில் ஒரே ஒரு ரிலீஃப் என்றால் முத்தமழை பாடல் இல்லாததுதான். எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று நூலில் படித்தேன். எனக்கு எம்.எஸ். பற்றி ஒரு நீண்ட நாள் கேள்வி இருந்தது. இவர் ஏன் காமத்துப் பால் கீர்த்தனைகளை பக்தி ரசமாகப் பாடுகிறார் என்று. அந்த நூலில்தான் என் சந்தேகம் தீர்ந்தது. எம்.எஸ்.ஸின் கணவர் சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் ஒரு உத்தரவு போட்டாராம். “நீ எப்போதுமே – எந்தக் கீர்த்தனையாக இருந்தாலும் – பக்தி ரசம் ததும்பவே பாட வேண்டும்” என்று. நம் சின்மயியும் அதே பாணியில் முத்த மழை பாடலை பக்தி ரசம் ததும்பப் பாடியதை தக் லைஃப் விழாவில் கேட்டு எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. நல்ல காலம். படத்தில் அந்தக் கொடுமை இல்லை. (கொஞ்சம் நிலவு, கொஞ்சம் நெருப்பு போன்ற பாடல்களைக் கொடுத்த ரஹ்மானும் மணி ரத்னமுமா இப்படி முத்த மழை போன்ற பக்திப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்கள்!) மணி ரத்னமும் கமல் ஹாசனும்தான் திரைக்கதையாம்! ஒரு படத்தில் திரைக்கதை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணமாக விளங்கும். சமீபத்தில் செக்டார் 36 என்று ஒரு ஹிந்திப் படம் பார்த்தேன். தெரிந்த கதை. தெரிந்த சம்பவங்கள். தெரிந்த முடிவு. எல்லாமே செய்தித்தாள்களில் அக்கு வேறு ஆணி வேறாக அலசப்பட்ட சம்பவங்கள். ஆனாலும் படத்தில் ஒரு நொடி கூட தொய்வு இல்லை. முப்பதுக்கு மேற்பட்ட சிறார்களை வெட்டிக் கொன்ற சீரியல் கில்லரான ஒரு இளைஞன் போலீஸிடம் தன் தரப்பு நியாயத்தை விளக்குகிறான். அப்போது அவன் பேசும் வசனம், அப்போது அந்த நடிகனின் நடிப்பு இரண்டும் உலகத் தரம். அந்த நடிகரின் பெயர் விக்ராந்த் மாஸே. செக்டார் 36 திரைப்படக் கலையைக் கற்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்கக் கூடியது. ஏனென்றால், இதன் கதை, சம்பவங்கள், முடிவு எல்லாமே செய்தித்தாள்களில் விலாவாரியாக அலசப்பட்டது. இருந்தாலும் கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது இதன் திரைக்கதையும், நடிப்பும், வசனமும். நம்முடைய லெஜண்டுகள் பழைய பெருங்காய டப்பாக்களாகி விட்டார்கள். சுருக்கமாகச் சொன்னால், தக் லைஃப் போன்ற ஒரு கொடூரமான தலையிடி படத்தை சமீப காலத்தில் பார்த்ததில்லை. இன்னொரு குறிப்பும் தர வேண்டும். இந்தப் படத்தை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன் இந்தப் படத்தை மாமனாரின் இன்ப வெறி போன்ற பிட் படங்களோடு ஒப்பிடுகிறார். இந்திராணி விஷயத்தில் அமரன் செய்யும் சேட்டைகளைப் பார்த்தால், மாறன் சொல்வது சரிதான். சந்தேகமில்லை, இது ஒரு மாமனாரின் இன்ப வெறி படம்தான். என்ன, கொஞ்சம் ஆடம்பரமாக எடுத்திருக்கிறார்கள்.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
முதலாம் எண், சிம்ம ராசி இப்படியான ஒரு சிங்கத்தை நான் சிறு வயதில் இருந்தே மிக நன்றாக அறிந்திருந்தேன். அந்தச் சிம்மம் என்ன நினைத்ததோ ஏது நினைத்ததோ அவ்வளவாக முயற்சி எதுவும் செய்யவில்லை. அந்த மனிதனின் கடைசி இரு நாட்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், அவர் வாயாலேயே, வாயால் மட்டும், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று எல்லா கோள்களுக்கும் போய் வரும் ஆற்றல் கொண்டிருந்தார். ஞாயிறில் கூட (சூரியன்......!) இறங்கி ஏறுவேன் என்பார். ஒரு மண்டைதீவுச் சாத்திரியார் பற்றி முன்னரே இங்கு களத்தில் எழுதியிருக்கின்றேன். ஒரு பக்கம் மண்டைதீவுச் சாத்திரியார், இன்னொரு பக்கம் சிம்மம்.................. தப்பிப் பிழைத்ததே ஒரு சாதனை தான்.......................🤣.
-
யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி
நாணய சுழற்சியில் வெல்லும் அணி? (10 புள்ளிகள்) தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடும் அணி? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா முதல் இனின்ஸ்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா இரெண்டாம் இனிங்சில் எந்த அணி அதிக ஓட்டம் குவிக்கும்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய ஓட்டம் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Travis Head போட்டியில் ஏதாவது ஒரு இனிங்சில் ஆக கூடிய விக்கெட் எடுக்கும் வீரர் யார் ? (10 புள்ளிகள்) Pat Cummins போட்டியின் ஆட்டநாயகன் எந்த அணியினன்? (10 புள்ளிகள்) அவுஸ்திரேலியா போட்டியை வெல்வது, தெ.ஆ. அல்லது அவுஸ் அல்லது சமநிலை (20 புள்ளிகள்) அவுஸ்திரேலியா
-
நன்றி இல்லாதவர்’... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பு முறிவும் பரஸ்பர சாடல்களும்!
'ரஷ்ய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியும் சிறுவர்கள் போல சண்டை போட்டுக் கொள்கின்றார்கள். அவர்கள் இருவரையும் சில காலம் சண்டை பிடிக்க விட்டுவிட்டு பின்னர் வழிக்கு கொண்டு வருகின்றேன்.................' என்பது போல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முந்தாநாள் சொல்லியிருந்தார். ட்ரம்ப் சொல்பவைகளுக்கு மூன்று நாட்கள் ஆயுள் இருந்தாலே அதிசயம். அதனால் தான் அவருடைய புதிய பெயரான TACO என்பது மிகப் பிரபலமாக வந்துவிட்டது. ஆனால் இரு சிறுவர்கள் தெருவில் சண்டை பிடிப்பது என்பது சில நாட்களாவது நிலைத்து நின்று விடும் போல. ஒரு சிறிய மாற்றம் - எலானும் ட்ரம்பும் தான் அந்த இரு சிறுவர்கள். எலானின் அந்த சல்யூட்டையோ, மரம் அரியும் வாளை மேடையில் தூக்கிக் காட்டியதையோ, அரச வேலைகளில் பணி நீக்கம் செய்ததையோ, தொண்டு நிறுவனங்களை இல்லாமல் ஆக்கியதையோ, எப்போதும் எடுத்தெறிந்து பேசும் இயல்புகளையோ, இன்னும் பல விடயங்களை இங்கு எவரும் மறந்துவிடப் போவதில்லை. எலான் தற்போது ட்ரம்பிற்கு எதிராக சொல்லும் கருத்துகள் தன் நலன் சார்ந்ததே அன்றி, ஒரு துளியேனும் அமெரிக்க மக்களின் அல்லது உலக மக்களின் நன்மை கருதி இல்லை. தன்னைத்தானே stable genius என்று சொல்லிக் கொள்ளும் ட்ரம்ப் எலானை mediocre Musk என்று இறுதியில் சொல்ல வேண்டிய ஒரு நிலைமை இவ்வளவு விரைவாக வந்துவிட்டது. அமெரிக்காவை காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவன் என்று எலானை கொண்டாடிய ட்ரம்பின் மஹா (MAGA) குழுமம் இன்று எலானை நீ செவ்வாய் கிரகத்துக்கு பின்னர் போகலாம், நீ இப்பொழுது முதலில் ஆபிரிக்காவிற்கு திரும்பி போ என்று சொல்லுகின்றார்கள். நேற்று எடுத்த கெட்டமைனின் தாக்கம் இறங்க, எலான் இன்று பணிய ஆரம்பித்துவிட்டார். எலான் கலிஃபோர்னியாவிலிருந்து டெக்சாஸ் போகலாம். நீலத்திலிருந்து சிவப்பாக மாறலாம். ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் போகமுடியாது. ட்ரம்புடன் சேர்ந்து நிற்கும் போது அவருடைய நிறுவனங்கள் சந்தையில் தளம்பின. வெளியேறி ட்ரம்பை எதிர்க்கும் போது இன்னும் அதிகமாக தளம்புகின்றன. மொத்தத்தில் இவை எதுவுமே இவருக்கு தேவையில்லாத விடயங்கள். நிகோலா டெஸ்லா அவருடைய தாயாருக்கு எழுதிய கடைசிக் கடிதம் நன்கு பிரபலமானது. டெஸ்லா என்னும் பெயரையே எலானும் தொடர்கின்றார்.
-
சுய அறிமுகம் பற்றி
வணக்கம் நண்பர் arjaywu. உங்கள் வரவு நல்வரவாகுக. உங்களின் களப்பெயரை தமிழில் எவ்வாறு எழுதுவது? நீங்கள் தமிழகத்தில் இருந்து இணைகின்றீர்களா?
-
ஆசிரியையான மனைவியின் தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்; வவுனியாவில் கொடூரம்!
ஒரு பதினைந்து அல்லது இருபது வருடங்களின் முன் சுமதி என்னும் பெயரில் அல்லது கறுப்பி என்னும் பெயரில் (என்று தான் ஞாபகம்) அவர் பழைய திண்ணை இணைய இதழ்கள் உட்பட பல இடங்களில் சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தார். நான் முன்னரோ, பின்னரோ தமிழில் அப்படியான கதைகளை எங்கும் காணவில்லை. அவருடைய பல கதைகளில் வரும் பெண்ணின் பார்வைகள் என்னை நிலைகுலைய வைத்தன. இந்த சம்பவம் போன்றே ஒரு கதையும் அவர் எழுதியிருந்தார். கதைக்களமாக கனடா இருந்தது. அந்தக் கதையில் இறுதியில் அந்தப் பெண் இறந்து போகின்றார். தற்கொலை என்று சொல்லுகின்றார்கள். இரு ஆண்களும் இறுதி ஊர்வலத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். அந்தக் கதையில் வரும் அந்தப் பெண்ணுக்காக இதை எழுதும் போதும் கண்கள் கலங்குகின்றன. அரவிந்தனின் 'சிதம்பரம்' படத்தை இளைய வயதில் ஒரு தடவையும், பின்னர் சில வருடங்கள் முன் ஒரு தடவையும் பார்த்தேன். இதே போன்ற நிகழ்வுகள். ஒரு ஆண் அவ்ராகவே இறந்து போகின்றார். அடுத்தவர் சித்தம் இழந்து அலைகின்றார். உயிர் தப்பிய பெண் வழியற்று கோவில் ஒன்றின் வாசலில் வாழுகின்றார். எங்களின் சமூகத்திலும், இன்னும் பல சமூகங்களிலும் நான் உட்பட ஆண்களின் புரிதல்கள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்றே எனக்குத் தோன்றுகின்றது. விலகிப் போய்க் கொண்டே இருக்கலாம். இதில் என்ன தன்மானம், தற்பெருமை, வீரம் குறைந்து போகின்றது.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
அண்ணா, அறுதியாக பொய்கள் என்றோ அல்லது உண்மைகள் என்றோ எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதிகளாக நிறுவ முடியாத நம்பிக்கைகள் பல இங்கே காலம் காலமாக இருக்கின்றன. உதாரணமாக, ஒரு நடுப்புள்ளித் தேற்றம் போன்றோ அல்லது நியூட்டனின் வகை பௌதீக விதிகள் போன்றோ இந்த நம்பிக்கைகளை நிறுவமுடியாது. இப்படியான நம்பிக்கைகளில் ஒன்று சோதிடம். கடவுள் நம்பிக்கையும் அவ்வாறானதே. இன்னும் ஏராளமான அமானுஷ்ய விடயங்களும் இப்படியே இங்கு நிலைத்து நின்று கொண்டிருக்கின்றன. இப்படியான ஒரு விடயத்தை ஒரு ஆசிரியர் எப்படி நிறுவினார் என்று ஒரு வேடிக்கையான சம்பவம் இருக்கின்றது. நான் சிறு வயதில் இருக்கும் போது ஊரில் நடந்தது. அடுத்த பதிவில் அதை எழுதுகின்றேன். பொதுவாகவே இயற்கையில் நடக்கும் ஏராளமான நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு normal distribution ஆகவே இருக்கின்றது. முற்றிலும் எழுந்தமானமாக நூறு நூறு ஆட்களாக எடுத்து அவர்களின் பாடல் பாடும் திறமையையோ அல்லது பந்தடிக்கும் திறமையையோ கணித்தோம் என்றால், ஆச்சரியமேயில்லாமல் அவை கிட்டத்தட்ட ஒரு முடிவையே மீண்டும் மீண்டும் தரும். ஐந்து பேர்கள் நன்றாக பந்தை அடிப்பார்கள். ஐந்து பேர்களுக்கு அது சரியே வராது. ஓரளவு விளையாடக் கூடியவர்கள் என்று நடுவில் ஒரு ஐம்பது பேர்கள் இருப்பார்கள். இப்படியே தான் ஒவ்வொரு நிகழ்வின் ஒவ்வொரு தொகுதியும் இருக்கும். இதற்கும் நாள் - நட்சத்திரம் - கைரேகை போன்ற பிறப்பால் வரும் அடையாளங்கள் எவற்றுக்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. இதையே தான் நர்லிகர் அவர்களும் இன்னொரு விதமாகச் சொல்லி, அதை தரவுகளின் அடிப்படையில் நிரூபித்தும் இருக்கின்றார். என்னுடைய அனுபவங்களும், எண்ணமும் கூட இதுவேயாகவே எப்போதும் இருந்து வருகின்றது. இதில் மிகவும் ஆபத்தான ஒரு நிலையும் இருக்கின்றது. நாங்கள் பிறக்கும் கணமும், பிறப்பில் கிடைக்கும் அடையாளங்களுமே பலவற்றை ஏற்கனவே தீர்மானித்து விடுகின்றது என்றால், ஸ்மிருதிகளும், வர்ணாசிரமக் கோட்பாடுகளும், சாதிய பாகுபாடுகளும் கூட சரியென்று ஆகிவிடும் அல்லவா. இந்தப் பாகுபாடுகளை, தீண்டாமைகளை கைக்கொள்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்களின் ஆதராமே ஒவ்வொருவரின் பிறப்பே அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கின்றது என்பதே. தாழ்த்தப்பட்ட ஒரு வீட்டில் பிறந்தால், அதுவே தலைவிதி அல்லது கர்மவினைப் பயன் என்றும், அதை இந்தப் பிறவியில் அப்படியே வாழ்ந்து கடந்து விட வேண்டும் என்றல்லவா அவர்கள் சொல்கின்றார்கள். இதை ஏற்றுக் கொள்ளாமல், தீண்டாமைகளை எதிர்க்கும் நாங்கள், பிறப்பால் மட்டுமே கிடைக்கும் இன்னொரு தலைவிதியை மட்டும் சரியென்று எப்படி ஏற்றுக் கொள்ளலாம்.... அண்ணா, உலகத்தை நோக்கிய என்னுடைய ஒரு கருத்தே இது. உங்களையோ அல்லது வேறு எவரையுமோ தனிப்பட்ட ரீதியில் எதிர்க்கும் பார்வையில் இதை நான் எழுதவில்லை.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
இப்படிச் சொல்வதால் இது கிரகோரியன் நாட்காட்டியின் படியே செயல்படுகின்றது என்று ஒரு அர்த்தமும் வருகின்றதல்லவா, அண்ணா.............. இதை நாங்கள் ஆங்கில கலண்டர் என்றும் சொல்லுகின்றோம். அப்படியாயின் தமிழ் நாட்காட்டி, இஸ்லாமிய நாட்காட்டி, ஐரோப்பாவில் கிரகோரியனுக்கு முன்னிருந்த ஜீலியன் நாட்காட்டி, இன்னும் உலகெங்கும் இருக்கும் ஆயிரம் நாட்காட்டிகள் போன்றவற்றுடன் ஒரு தொடர்பும் மனிதர்களுக்கு இல்லையா............. அரசியலில் சிறப்பாக செயல்படமாட்டார்கள் என்ற குணாம்சம் ஏதாவது ஒரு எண்ணுக்கு, சில எண்களுக்கு இருக்கின்றதா................ தமிழ்நாடு மற்றும் இலங்கையில் அரசியலில் உருப்படவே போவதில்லை என்னும் நிலையிலும் சிலர் அரசியலில் இருக்கின்றார்கள்............. அவர்களின் எண்கள் என்னவாக இருக்கும் என்ற ஒரு ஆவல்தான்...................🤣. ராமதுரை அவர்கள் சொன்னது போலவே சோதிடத்தை நம்புவதும், நம்பாததும் அவரவர் தனிப்பட்ட தெரிவு/விருப்பம் என்று போவது தான் சிறப்பு போல...........👍.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சாதாரணமாக நன்றி என்று சொல்லிவிட்டு கடந்து போக முடியாதுள்ளது, @கிருபன் . எவ்வளவு ஒரு பெரிய காரியத்தை தனி ஆளாக செய்துள்ளீர்கள்................🙏🙏. சக போட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். @நந்தன் எப்பவோ எங்களை எல்லாம் முந்திக் கொண்டு போய்விட்டார். அவர் திரும்பிப் பார்க்கவேயில்லை. அதிகமான நாட்கள் இரண்டாம் இடத்தில் இருந்தவர் @புலவர் என்றே நினைக்கின்றேன்...............👍. அடுத்த போட்டி எப்ப....................❤️.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
🤣............ பல வருடங்களின் முன் இங்கு அமெரிக்காவில் ஒரு நண்பனின் வீட்டில் அறுவைச் சிகிச்சை மூலம் அவர்களது குழந்தையின் பிரசவம் நடைபெற வேண்டி வந்தால், அது அடுத்த 17ம் திகதி என்று மருத்துவரால் ஒரு நாள் குறிப்பிடப்பட்டது. அவர்கள் 17 வேண்டவே வேண்டாம் என்றும், 18ம் திகதி என்று மாற்ற முடியுமா என்றும் கேட்டார்கள். அந்தப் பிள்ளை வளர்ந்து இன்று அமோகமாக இருக்கின்றது. எனக்கும் ஒரு மகள் போலவே. ஆனால் பிறந்த திகதி 17, 18, 19,........ இதில் எது என்று எனக்கு ஞாபகமில்லை. பெற்றோர்களினதும், எங்கள் எல்லோரினதும் அன்புடனும், ஆசீர்வாதத்துடனும் மகள் என்றும் நல்லாவே இருப்பார். எம்ஜிஆர் 17ம் திகதி பிறக்காமல், 18ம் திகதி பிறந்திருந்தால் இன்னும் அமோகமாக வாழ்ந்து முடித்திருப்பாரோ.................😜. தமிழில் மிக இலகுவான, தரமான அறிவியல் கட்டுரைகளை எழுதியவர் என்றால் அது திரு. என். ராமதுரை அவர்கள். 2018ம் ஆண்டில் மறைந்தார். 'தினமணிசுடர்' ஆசிரியராக இருந்தார். அவருடைய இணைய தளம் இன்றும் இயங்குகின்றது: https://www.ariviyal.in/ வானவியல் சம்பந்தமாகவும் பல எளிமையான கட்டுரைகள் அவருடைய தளத்தில் இருக்கின்றது. உதாரணமாக சனிப்பெயர்ச்சி பற்றிய ஒரு கட்டுரை. ராமதுரை அவர்கள் மிகவும் தன்மையான ஒரு மனிதர் போல. அவர் தடாலடியாக எதையும் நிராகரிக்கவில்லை, ஆனால் சோதிடம் ஒரு அறிவியல் அல்ல. அதை நம்புவதும், நம்பாததும் உங்களின் தனிப்பட்ட இஷ்டம் என்று கேள்வி - பதில் பகுதிகளில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் முன்னரே எனக்கு இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. பின்னர் சுத்தமாகவே இவை மனித மனங்களின் அடியில் என்றும் தங்கியிருக்கும் அச்சங்களின் ஒரு வகையான வெளிப்பாடுகள் என்று தான் தோன்றுகின்றது. திருக்கோணேஸ்வரர் கோவிலின் கீழே நின்று முகம் பார்த்து பலன் சொல்பவர்களைப் பற்றிய என் அனுபவத்தை கடந்த வருடம் இலங்கை போய் வந்து இங்கு களத்தில் எழுதியிருந்தேன். மனிதர்களுக்கு என்றே சில பொதுவான குணங்கள் இருக்கின்றன போல. அவற்றை இந்த சோதிடர்கள், ஒரு அனுபவமுள்ள விற்பனைப் பிரதிநிதி போல, நம்பத்தகுந்த வகைகளில் சொல்லுகின்றார்கள், எழுதுகின்றார்கள் போல.
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
எங்களின் போராட்டத்திற்கு இந்திய மத்திய அரசின் ஆதரவு மட்டுமே போதுமானது, அண்ணா. வேறு எந்த நாடுகளின் ஆதரவும் கிடைக்காமல் இருந்திருந்தால் கூட நாங்கள் சமாளித்திருப்போம். இன்று கூட அது தான் நிலை. ஆனால் இந்திய மத்திய அரசு என்றும் அப்படியான ஒரு ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்பவில்லை. எங்களின் நிலை மட்டும் இல்லை, காசாவில் பாலஸ்தீன மக்களின் நிலையைப் பாருங்கள், அண்ணா. நேற்று நிவாரணம் பெற வரிசையில் நின்ற அந்த மக்கள் வரிசையை மீறி விட்டார்கள் என்று சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதற்கு முதல் நாளும் அந்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அங்கு மருத்துவமனை வாசலிலேயே அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள். உலகமும், அராபியர்களும் பாலஸ்தீனியர்களுக்கு உதவி செய்து இதைத் தடுக்க முடியாதா? மணிப்பூரிலும் இதே நிலை தான். ஒரு மொழி, ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்று இருக்கும் பெரும் தேசங்களில் எல்லாம் இந்தக் கொடுமைகள் தினமும் நடந்து கொண்டேயிருக்கின்றன. வெகு சில செய்திகளும், நிகழ்வுகளுமே வெளியே தெரியவருகின்றன. ஆதிக்கங்களின் அடக்குமுறைகளுக்குள் எத்தனையோ மக்கள் திரள்கள் தங்களின் அடையாளங்களை இழந்து வாழ்ந்து மடிகின்றார்கள். ஆனாலும் இவற்றில் சில மக்கள் திரள்கள் பெரும் இழப்புகள் தங்களுக்கு வரும் என்று தெரிந்தும் முடிந்தவரை ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடுகின்றார்கள். உலகம் ஒரு முள்ளிவாய்க்காலையோ அல்லது ஒரு காசாவையோ மட்டும் கண்டுவிடவில்லை. இவை திரும்பத் திரும்ப நடந்து கொண்டேயிருக்கின்றன. உக்ரேனுக்கு தற்காலிகமாகவேனும் உதவிகள் கிடைப்பது அந்த உக்ரேனிய மக்களுக்கு கிடைத்த ஒரு கொடை. என்ன தான் உதவிகள் கிடைத்தாலும் களத்தில் போராடுவதும், இழப்பதும் அந்த மக்கள் மட்டும் தானே, உதவும் உலகம் எதையும் இழக்கவில்லை. கொடுத்த உதவிக்கு கணக்கு எழுதி, அவர்களின் வளங்களையல்லவா ஈடாகக் கேட்கின்றது இந்த உலகம். இந்த உலகில் எந்த ஒடுக்கப்படும் மக்கள் திரளுக்கும் ஒரு தார்மீக ஆதரவு கூட காட்ட முடியாவிட்டால், நான் கடந்து வந்த பாதைதான் என்ன................. இந்த தாக்குதல் நடப்பதற்கு முதல் நாளும் ரஷ்யா உக்ரேன் குடியிருப்புகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அப்பாவி உக்ரேனிய மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் உக்ரேன் தெரிந்தெடுத்த ரஷ்ய இராணுவ விமான இலக்குகள் மீதே தனது தாக்குதலை நடத்தியது. இப்போது 'உக்ரேன் செய்தது ஒரு பயங்கரவாதச் செயல்................' என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது ரஷ்யா. இப்படித்தானே நாங்களும் இலங்கை அரசால் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தட்டித் தூக்கிட்டமில்ல...............
-
ரஸ்யாவினுள் உள்ள விமானத்தளங்கள் மீது உக்ரேன் தாக்குதல்
ஒவ்வொரு ட்ரோனும் சில நூறு ஈரோ செலவில் செய்யப்பட்டவை. மொத்தமாக 117 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்று உக்ரேன் அதிகாரிகள் சொல்லியிருக்கின்றனர். இந்தச் சிறிய ட்ரோன்கள் ஒரு வீட்டின் அடுப்படி வரை போகுமே............ இதில் ரஷ்யர்கள் அவர்களின் விமானங்களை எங்கே நிற்பாட்டி இருந்தார்கள், ஏன் அப்படி நிற்பாட்டி இருந்தார்கள் என்பது தான் பிரச்சனையா........... ரஷ்யாவின் ஆதிக்கத்திற்கு எதிராக உக்ரேனிய மக்களும், அரசும் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு மிகவும் ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கின்றது. அதுவும் அமெரிக்காவின் சமீபத்திய மிகத் தளம்பலான ஒரு நிலைப்பாட்டின் பின்னும் கூட. ஒரு எல்லை நாடாக இருந்து கொண்டே ஒரு பெரிய வல்லரசுடன் இப்படி மோதுவது என்பது ரஷ்யாவிற்கு மட்டும் இல்லை, அமெரிக்காவிற்கும் ஒரு பாடமே. உக்ரேன் ஒரு வருடத்தில் இப்படியான ஐந்து மில்லியன் ட்ரோன்களை தயாரிக்கும் வல்லமை தங்களுக்கு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றது. உலகமே பெரிய ஒரு சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றது. எந்த நாட்டிலும், எந்த தளமும் பாதுகாப்பானது என்று சொல்ல முடியாது போல.
-
“ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
நர்லிகர் அவர்கள் அவருடைய ஆராய்ச்சிகளின் நடுவே சாஸ்திரங்கள், சோதிடங்களை பொய்யென நிறுவும் ஒரு பணியையும் செய்திருப்பது நல்ல ஒரு விடயம். இந்த விடயங்களில் சமூகங்களில் பெரிதாக ஒரு மாற்றத்தையும் உடனடியாக எதிர்பார்க்க முடியாது, ஆனாலும் அந்த நாட்களில் கேம்பிரிட்ஜ் பி.எச்டி என்பதற்கு மதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதனால் இவர் என்ன சொல்லுகின்றார் என்று சிலராவது காது கொடுத்து கேட்டிருப்பார்கள். சில பில்லியன் ஒளி ஆண்டுகள் தூரத்தில், சில பில்லியன் ஆண்டுகளின் முன் நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறியிருக்க, அங்கிருந்து வந்த ஒளித் துணிக்கைகளை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் இன்று பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தூரம் ,காலம், இடையில் இருக்கும்பொருட்கள், வெளி, நிகழ்வுகள் இவை எல்லாமே மனதால் அளந்து கூட பார்க்க முடியாத ஒரு பிரமாண்டமாக இருக்கின்றது. இந்த மனிதர்கள், பூமி, நாங்கள் உருவாக்கி வைத்திருப்பவை இப்படி எல்லாமே அற்பத்திலும் அற்பமாக தோன்றும் சில கணங்கள் இவை. இந்தக் கணங்களில் எங்களுக்கு ஒரு விதியின் பாதை இருக்கின்றது என்ற நம்பிக்கை ஒரு நகைச்சுவையாகவும் இருக்கின்றது. ஆனாலும், இந்த எண்ணம் வராத மற்றைய நேரங்களில், வாழ்க்கைகள் ஒரு மயக்கத்திலேயே போய்க் கொண்டிருக்கின்றன. இளைய தலைமுறை முந்டைய தலைமுறையை விட அதிகளவில் இந்த சாத்திர சோதிட விடயங்களில் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற கூற்று/முடிவு சரியென்று தோன்றவில்லை. ஒவ்வொரு புதிய தலைமுறையும் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும் போது இந்த விடயங்களில் குறைவாகவே நம்பிக்கை கொள்ளுவார்கள் என்று தான் தோன்றுகின்றது. ஆனால் இன்று விதம் விதமான ஊடகங்கள் உக்கிரமாக இருக்குக்கும் ஒரு காலம். எல்லா வகையான செய்திகளுமே காட்டுத்தீ போல பரவுகின்றன. ஆகவே இது ஒரு மாயத் தோற்றமாகக்கூட இருக்கலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............... இதுவரை கொஞ்சமாக அதர்மத்தின் பாதையில் போய் நண்டுக் குழாமாக இருந்தவர்கள் எல்லோருக்கும் திருந்துவதற்கு கிடைத்திருக்கும் கடைசி சந்தர்ப்பம் இது. எங்களில் மூன்று பேருக்காவது புள்ளிகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்............. கிளி நண்டைத் தூக்கிக் கொண்டு போய் கறிச்சட்டிக்குள் போட்டும் விடும்..................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஏதாவது ஒரு Antivirus software கூட காரணமாக இருக்கலாம், எப்போதும் தமிழன். அதுவே தானாக புதிதாக உங்களின் கவனத்தையும் மீறி உள்ளே இறங்கியிருக்கலாம். Please check all the running process in the task manager. முன்னர் ஒரு தடவை சுவைப்பிரியனும் இப்படிச் சொல்லியிருந்ததாக ஞாபகம். Avast தான் அதன் காரணம் என்றும் ஒரு ஞாபகம்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
இன்னொரு தேரர் தமிழர்கள் 'கள்ளத் தோணிகள்' என்றும் சொல்லியிருக்கின்றார். இதையே தான் பெரும்பாலான சிங்கள் மக்களும் நம்ப விரும்புகின்றார்கள். இதை வரலாறாக எழுதியும் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வரலாறுகள் அவரவர் வசதிகளுக்கு ஏற்ப எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சித்தார்த்தரும் சைவரா................. இன்று தான் கேள்விப்படுகின்றேன். 'ஈழம் ஒரு சிவபூமி..............' என்று இப்பொழுது இடைக்கிடை சொல்லப்படுவதையே சீரணிக்க சிரமமாக இருக்கின்றது. இப்பொழுது சித்தார்த்தர் சைவர், பாகிஸ்தான் இந்துக்கள் சைவர்கள் என்று பலதும் வர ஆரம்பித்திருக்கின்றன.................
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
கமல் சொன்னதையே மோடியும் சொல்லியிருந்தால் மோடியின் கொடும்பாவியும் கர்நாடகாவில் எரிந்திருக்கும். கர்நாடக பாஜகவே மோடிக்கு எதிராக தெருவில் இறங்கியிருப்பார்கள். ஆனால் மோடியும், கமலும் சொன்னவை ஒன்றல்ல. நான் முன்னரேயே எழுதியும் இருந்தேன். தமிழின் தொன்மையையும், தொடர்ச்சியையும் எந்த ஒரு மொழியுடனும், மக்கள் திரளுடனும் ஒப்பீடுகள் இல்லாமலேயே இலகுவாக செய்யமுடியும் என்று. அதுவே சரியான ஒரு வழியும் ஆகும். மோடி இந்திய ஜனாதிபதி அல்ல, அவர் பிரதமர். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு. இவரை மோடியும், பாஜகவும் ஜனாதிபதியாக தெரிந்தது எடுத்ததே அவர்களின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசியலை ஒரு வர்ணம் தீட்டி மறைப்பதற்கே. மோடி திருக்குறள் சொல்வதும், பாரதியின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவது, தமிழ் தொன்மை என்று சொல்வதும் இன்னொரு அத்தகைய வர்ணமே. தீவிரமாக இந்தியை திணித்துக் கொண்டே, ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த நிதியை தமிழ் ஆராய்சிகளுக்கு வழங்கிக் கொண்டே அவர் சொல்லும் புகழாரங்கள் வெறும் வாக்கு அரசியல் என்ற புரிதல் தமிழ்நாட்டில் மிக நன்றாகவே இருக்கின்றது. குஜராத்தி மொழியுடன் ஒப்பிடும் போது இந்தி என்பது உண்மையில் ஒரு மொழியே அல்ல என்று மோடி சொல்வாரா................ இந்தி குஜராத்தியில் இருந்து வந்தது என்று சொல்வாரா....... இந்திக்கு சொந்தத்தில் எழுத்துருவே கிடையாது என்று சொல்வாரா........... ஒரு தடவை கருணாநிதி அவர்கள் தமிழ் பதினேழு இலட்சம் வருடங்களாக இருக்கின்றது என்று சொல்லியிருந்தார். வேறு எவரும் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பதினேழு கோடி வருடங்கள் என்று சொன்னால் என்ன, முதல் மொழி என்று சொன்னால் என்ன, இன்னொரு கிரகத்திலும் பேசப்படுகின்றது என்று சொன்னால் என்ன, கன்னட மக்களோ அல்லது வேறு எந்த மக்களோ எதிர்ப்பு எதுவும் காட்டப் போவதில்லை. சிலர் வாய்விட்டு சிரிக்கக்கூடும். கருணாநிதி அவர்கள் சொன்னதைக் கேட்டு நான் சிரித்தேன். இவர்கள் எல்லாம் எங்கள் இனத்தின் பேரறிஞர்கள் என்று நினைத்த போது சிரிப்பு வெடித்துச் சிதறியது.
-
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்.. காலையில் நடந்த சோகம்!
ஆழ்ந்த இரங்கல்கள். மிகவும் திறைமையான ஒரு நடிகர். ஆரம்ப ரஜனி - கமல் வெள்ளத்தில் மூழ்கிப் போனவர்களில் ஒருவர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒற்றுமையே பலம்............. நாளைக்கு குஜராத் வெல்லுது............. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக முட்டைகளை வாங்குகின்றோம்......................😜.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
உண்மைகளை, வரலாறுகளை புதைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை, விசுகு ஐயா. ஆனால் கமல் போன்றோரின் பேச்சுகளை நம்பி நடவடிக்கைகளில் இறங்குவது மண் குதிர் ஒன்றை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமானம் மற்றும் குறிப்பாக கமல் சரியான புரிதலோ அல்லது தொடர்ச்சியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக விடயங்களை சொல்லுகின்றார். இவரது பேச்சுக்களால் இதுவரை ஒரு விடயம் கூட சமூகத்தில் மாற்றம் அடையவில்லை என்பது கண்கூடு. ஒரு புள்ளியை மட்டுமே பார்க்காமல், பின்நோக்கி சென்று ஒரு கோடாக பார்த்தால் இவரின் அவசரத்தனங்களை அறிந்து கொள்ளலாம். எனது சொந்த அனுபவத்தை, திருச்சியில் என் பெற்றோரின் மரணச் சான்றிதழ்கள் பெற்ற நிகழ்வை, இங்கு களத்திலேயே ஒரு கதையாக எழுதியிருக்கின்றேன். அந்தக் கதையில் கமலின் ஊழல் எதிர்ப்பு கோசமும், நடவடிக்கைகளும் வருகின்றது. அந்தக் கதையின் சாராம்சமே கமலும், இவரைப் போன்றவர்களும் நிஜ உலகிலிருந்து எவ்வளவு தள்ளி இருக்கின்றார்கள் என்பதும், இவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமே அற்றது என்பதும்தான். வெறும் பரபரப்பு மற்றும் விளம்பரங்களுக்காக தங்களுக்கு தேவையான நேரங்களில், சினிமா வெளியீடு அல்லது தேர்தல் காலங்களில், எதையாவது உணர்வுபூர்வமாக சொல்லிவிட்டு போய்க் கொண்டிருக்கின்றார்கள். தமிழின் தொன்மை இப்பொழுது இந்திய மத்திய அரசின் தொல்துறைப் பிரிவால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றது. இது உண்மையான பிரச்சனை. இதை கேள்வி கேட்க ஆரம்பித்தது சு. வெங்கடேசன். சில வருடங்களின் முன் மொழிகள் பற்றிய ஆராய்ச்சிகளுக்காக நிதி ஒதுக்கும் போது தமிழுக்கு மிகக்குறைவான நிதியே ஒதுக்கப்பட்டது. அப்போதும் இதை தட்டிக் கேட்டவர் வெங்கடேசன் தான். மேடையில் இரண்டு வரிகளை சொல்லி விட்டு, பின்னர் அதையே அன்பு, நட்பு என்று சமாளித்துக் கொண்டு போகும் கமல் போன்றோர் இந்த விடயங்களின் பக்கம் வருவதேயில்லை. இந்தப் பக்கம் வர வேண்டும் என்றால், ஒன்று அதில் தீவிரமாக இருக்க வேண்டும், இரண்டாவது நல்ல புரிதல் இருக்கவேண்டும். தமிழ் மொழி மூவாயிரம் வருடங்களோ அல்லது ஐயாயிரம் வருடங்களோ எவ்வளவு பழமையானது என்பதை ஆதாரங்களுடன் நாங்கள் முன்வைக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் திரட்டவேண்டும். அதை உலகில் இந்த துறையில் இருப்பவர்களுடன் பகிரவேண்டும். அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஒரிசா பாலு போன்றவர்களின் ஆதாரங்கள் எங்கள் ஊடகங்களை தாண்டி வேறு எங்கேயும் போகாது. இதை விடுத்து, மலையாளம் தமிழில் இருந்து தான் வந்தது என்று மேடைகளில் சொல்வதால் கிடைக்கும் பயன் தமிழ் - மலையாளிகள் வெறுப்பு மட்டுமே. தமிழ் மூவாயிரம் வருடங்களாக அப்படியே இருக்கின்றது (எழுத்துரு மாறியிருக்கின்றது போல.......), ஆனால் மலையாளம் 800 வருடங்களாக மட்டுமே இங்கிருக்கின்றது என்பதை ஆதாரங்களுடன் எங்களால் வெளியிட முடியும் என்றால், மேடைகளில் இப்படியான பேச்சுக்களை பேசும் தேவையே இல்லை. பல வருடங்களின் முன் தமிழ்மொழி ஒரு ஆபிரிக்க மொழியிலிருந்து தான் வந்தது என்ற ஒரு கட்டுரையை வாசித்திருக்கின்றேன். ஆபிரிக்காவிலிருந்து ஒருவர் எழுதியிருந்தார். அது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை போல எழுதப்பட்டிருந்தது. சிரித்து விட்டு அதை விட்டுவிட்டேன். இதையே பல ஆபிரிக்கர்களும் மீண்டும் மீண்டும் வந்து சொன்னால், சிரிப்பு வருவதற்கு பதிலாக எரிச்சல் வர ஆரம்பித்து, இறுதியில் வெறுப்பு தான் வரும். கிட்டத்தட்ட இதுவே தான் தென்னிந்தியாவில் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி பற்றி வேறு எந்த மொழிகளைப் பேசும் மக்களுடன் எந்த வித ஒப்பீடும் செய்யாமலேயே பேசலாம்.
-
'அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது'- கன்னட மொழி சர்ச்சை குறித்து கமல் ஹாசன் அளித்த விளக்கம் என்ன?
அங்கு கர்நாடகாவில் எதிரும் புதிருமாக இருக்கும் சித்தராமையாவிலிருந்து எடியூரப்பா வரை கமலின் கருத்தை மறுத்துவிட்டார்கள். கமலுக்கு வரலாறே தெரியாது என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். கந்தரோடையில் அன்றே விகாரைகள் இருந்தன, ஆகவே அன்றே முழு இலங்கையுமே ஒரு பௌத்த தேசமே என்றால், நாங்கள் ஏற்றுக்கொள்வோமா, இல்லைத் தானே. ஒரு தரப்பினர் உண்மை, மறுக்க முடியாத வரலாறு என்று ஒன்றை வாதாடுவதும், இன்னொரு பக்கம் அதே விடயத்தை அது அப்படியில்லை என்று வாதாடுவதும் ஒன்றும் புதிது அல்லவே. மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்ன கமலே, 'நான் சொல்வது எனக்கு சரி. நீங்கள் சொல்வது உங்களுக்கு சரி...........' என்று தானே சொல்லியிருக்கின்றார். நான் சொல்வது எனக்கு சரி என்பதன் பொருள் இது அவருடைய தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே என்ற பொருளில் தானே வருகின்றது. தொடர்ந்து பேசிய கமல் இந்த மொழி ஆராய்ச்சியை பேசுவதற்கு எந்த அரசியல்வாதிக்கும், அவர் உட்பட, தகுதிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கின்றார். மன்னிப்பு என்ற வார்த்தை இல்லாத ஒரு மன்னிப்பை கேட்டிருக்கின்றார் கமல். 'அன்பு.............' என்று வேறு ஒரு அர்த்தமும் சொல்லியிருக்கின்றார். சிவராஜண்ணா மீதான அன்பை வெளிப்படுத்துவதன் கமலின் நோக்கம் என்றால், அப்படித்தான் கமல் இப்போது சொல்லுகின்றார், தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருக்கலாம். தான் சிவராஜண்ணாவிற்கு ஒரு சித்தப்பா போல என்றவர், இரு மொழிகளையும் ஒரே குடும்பம் என்று சொல்லியிருந்தால் அது எவ்வளவு பொருத்தமாக இருந்திருக்கும். வரலாறு எது, உண்மை எது, இட்டுக்கட்டிய கதைகள் எவை என்பன ஒரு புறம் இருக்கட்டும். இப்படியான பேச்சுகளால் இன்றும், நாளையும், எதிர்காலத்திலும் எந்த நல்லவையும் நடக்கப் போவதில்லை. மாறாக பிரிவும் வெறுப்புமே தூண்டி விடப்படுகின்றது. தமிழ்த்தேசியம் என்று தீவிரமாக நிற்கும் போது, நாங்களே திராவிடம் என்ற பகுப்பை ஆங்கிலேயர்களின் அறிமுகம் என்று சொல்லி ஒதுக்குகின்றோம், திராவிடத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ் எப்படி மூலமொழியாகி இருக்கும் என்று நாங்களே சிந்திப்பதில்லை. ஆகவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, கேரள மக்கள் இந்தக் கோட்பாட்டை நிராகரிப்பதில் ஆச்சரியம் எதுவும் கிடையாது. அரசியல் நலன்கள் நோக்கி சிலர் நிராகரிக்கின்றார்கள். சுயமரியாதை வேண்டி சிலர் நிராகரிக்கின்றார்ர்கள். இந்த மொழிகள் ஒரே குடும்பம் என்று சொன்னால் எவரும் நிராகரித்து எதிர்க்கப் போவதில்லை.
-
நாடாளுமன்றம் செல்கிறார் கமல்ஹாசன்... திமுக வெளியிட்ட 4 எம்.பி வேட்பாளர்கள் யார் யார்?'
நீங்கள் சொல்லியிருப்பவை சரியானவையே. லோக்சபா தேர்தல்களில் சில காரணங்களால் போட்டியிட முடியாமல் போன அல்லது தோல்வியடைந்த சிலர் ராஜ்யசபா சென்று அங்கிருந்து முக்கிய பங்களிப்பு வழங்கியிருக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் தேர்ந்த, முழுநேர அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் போட்டியிட தயங்கி பின்வாங்குவதும் இப்படியான ஒரு வழியும் இருப்பதாலேயே.