Everything posted by ரசோதரன்
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
🤣............. அமெரிக்காவின் ஒரு வருடத்துக்கான வெளியிடப்படும் பாதுகாப்புச் செலவு கிட்டத்தட்ட 900 பில்லியன் டாலர்கள் என்று ஒரு கட்டுரையில் இருந்தது. அது நீங்கள் இணைத்திருக்கும் தரவுடன் ஒத்துப் போகின்றது. பாதுகாப்புச் செலவை எல்லோரும் அரைப்பங்காக குறைக்கவே சீனாவையும், ரஷ்யாவையும் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று கூப்பிடுகின்றனர். சீனா மிகக் குறைவாகவே செலவு செய்து கொண்டிருக்கின்றார்கள். ரஷ்யா இன்னும் மிகக்குறைவு. மற்றும் இவர்கள் எல்லோரும் மறைத்தும் சிலவற்றை செய்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற கடப்பாடும் இவர்களுக்கு கிடையாது................ மூன்று தாதாக்கள் ஒரு உடன்பாட்டிற்கு வருவது போலவே இது.....
-
இரண்டு ஆண்பிள்ளைகள் பெற்ற எனக்கு என்ன பயம்?
உங்களின் துயரம் புரிகின்றது, அண்ணா, ஆனால் இது ஒரு தண்டனை இல்லை............... அம்மாவும் அன்றைய நிலையில் நீங்கள் அங்கே வரக்கூடாது என்றே நினைத்திருப்பார்............... 'Don't be hard on yourself..................' என்று சொல்லுவார்கள், அண்ணா........... நாங்கள் விடும் தவறுகளைக் கூட நாங்களே மன்னித்து கொள்ளவேண்டும் என்ற ஒரு அர்த்தத்தில், அங்கிருந்து முன்செல்ல வேண்டும் என்ற பொருளில். இதில் உங்களின் தவறு ஏதும் இல்லை, அண்ணா.............🙏.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
இங்கு ஆடிக்காற்றில் அம்மியே பறந்து கொண்டிருக்கின்றது.................. இவர் ஜெலன்ஸ்கி தனக்கு வர வேண்டிய பணம் வரவில்லை என்று குறைப்படுகின்றார்..............🤣. அடுத்ததாக Social Security and Medicare தான் இவர்களின் இலக்குகளாக இருக்கும். மிகப் பெரிய தொகை அங்கு போய்க் கொண்டிருக்கின்றது. ஆனால் அமெரிக்கா ஏற்கனவே முதியவர்களை காப்பதிலும், கவனிப்பதிலும் வளர்ந்த நாடுகளில் மிக மெத்தனமாக இருக்கும் ஒரு நாடு. வாக்கு வங்கியும் அங்கேயே இருக்கின்றது. அங்கு விரயங்கள் அல்லது ஊழல்கள் இருந்தால், சீரமைப்புக்கு மக்களும் ஒத்துக்கொள்வார்கள், ஆனால் வெறுமனே பயன்களை மட்டும் குறைப்பதற்கோ அல்லது இல்லாமல் செய்வதற்கோ மக்கள் உடன்படமாட்டார்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு இந்த விபரங்கள் அவ்வளவாகத் தெரியாது, ஆனால் இந்திய அணி முன்னர் இருந்த இந்திய அணிகளை விட மிகத் திறமையான அணி என்று பொதுவாக கேள்விப்பட்டிருக்கின்றேன். ஐபிஎல் போட்டிகள் கூட நான் பார்த்ததில்லை, ஆனால் இந்தியாவின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு ஐபிஎல் ஒரு பிரதான காரணம் என்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். வளர்ந்தவுடன், அவர்களுக்கு செருக்கும் வந்து விட்டது போல............ இலங்கை அணி மீது ஒரு ஒவ்வாமை எப்போதும் இருந்தது/இருக்கின்றது. இது எங்களின் இனப்பிரச்சனையையும் தாண்டியது............. இதன் பின்னால் வேறு தனிப்பட்ட உளவியல் காரணங்களும் இருக்கின்றது போல.............
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
🤣............... நூறு நாட்கள் வேலை திட்டத்தில் வேலையும் கொடுக்கின்றார்கள் இல்லை, இதுவரை செய்த வேலைகளுக்கு சம்பளமும் கொடுக்கவில்லை என்று போன வாரமும் தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் நடந்தது.................... அங்கு, வசீ சொல்லியிருப்பது போலவே, மேட்டுக்குடி மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளி மிக அதிகம்.................
-
டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது
இப்படியும் ஒரு விமானம் கவிழும் என்று நினைத்தது கூட இல்லை. பெரிதாக நசியாதது ஆச்சரியம் தான், அதனால் தான் எல்லோரும் தப்பியுள்ளார்கள்.................👍. இறங்கிய பின், தரையைத் தொட்ட பின், சறுக்கி கவிழ்ந்திருக்குது போல.......... இங்கு வீதிகளில் SUV மற்றும் பெரிய ட்ரக்குகள் எப்பவாவது சறுக்கி கவிழ்வது போல........
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
🤣................. அதெல்லாம் ஒரு ஆறு மாதங்கள் கூட கவனிக்கமாட்டார் அதை வாங்கியவர்.............. 'நாய்க்கு வேலையும் இல்லை நடக்க நேரமும் இல்லை...............' என்று ஊர்ப்பக்கம் சொல்லுகின்றவர்கள் தானே....................🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அன்றிலிருந்து இன்று வரை என்னுடைய அணி இந்திய அணியே.............😜. 80ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டை மிக அதிகமாக பின்பற்றியிருக்கின்றேன் (ஆனால் கிரிக்கெட் விளையாடினது மிகக் குறைவு, உதைபந்தாட்டம் தான் அப்போது எப்போதும் விளையாடுவது....). இந்திய வீரர்களைத் தான் பிடிக்கும். பின்னர் கிரிக்கெட்டுடன் எந்த தொடர்புமே இருந்ததில்லை............... கடந்த டி - 20 உலகக் கோப்பை களப் போட்டி வரை. இந்திய அணி மீது இன்னமும் அதே அபிமானம் இருக்கின்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெல்லக் கூடும் என்ற ஒரு நினைப்பிலும் (எந்த விதமான ஆராய்வுகளும் இல்லாமலேயே), களப் போட்டி கலகலப்பாக இருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து இருக்கின்றேன். அதிலும் என்னுடைய தெரிவு இந்தியா - பாகிஸ்தான் ஃபைனல்................🤣.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
🤣................. நூறு F-35 யுத்த விமானத்தை விற்றாலும், எட்டு பில்லியன் டாலர்கள் தான் வரும். அதில் செலவு போக இலாபம் இன்னும் குறைவாகவே இருக்கும். ஒரு வருடத்தில் ஆயிரம் பில்லியன் டாலர்களை எப்படிக் குறைக்கலாம் என்று யோசிக்கின்றார்கள், அண்ணா..............
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
இன்றைய 'The Conversation' பதிப்பில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. கட்டுரையின் தலைப்பு: Must the president be a moral leader? இரண்டு பக்கங்களையும் கட்டுரை சுருக்கமாக அலசுகின்றது. மிக நல்லதொரு கட்டுரை. இந்த தளம் மிகவும் தரமான ஒரு தளம். இந்த தளத்தில் பல துறைகளிலும் கட்டுரைகள் தகுதிகளும், அனுபவங்களும் உள்ளவர்களால் எழுதப்படுகின்றன. ஆமாம், இவர்கள் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். கிணற்றை கலக்கி சேற்றை மேலே கொண்டு வந்து, இது தான் நிஜம் என்பார்கள். தாங்களே பாதிக்கப்பட்டவர்கள் என்னும் மனப்பான்மை பொதுவாகவே இன்று பெரும்பானமை சமூகங்களிடம் இருக்கின்றன. அவர்கள் மிக இலகுவில் இதை நம்பியும் விடுகின்றனர். The ConversationMust the president be a moral leader?Presidents Day celebrates the American president – not only as a political leader, but as a moral leader. But can a president be a person of strong moral character, as well as a strong leader?
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
தங்களது நெருக்கடிகளை தவிர்க்கவே உலகில் ஒரு பக்கம் சமாதானம், இன்னொரு பக்கம் சண்டை, புதிய வர்த்தக வரிகள், உதவிக் குறைப்புகள் என்று பல உத்திகளை கையாண்டு கொண்டிருக்கின்றார்கள். ஐரோப்பிய யூனியனுக்கு இது ஒரு நல்ல தருணம்............... ஒரு வருடத்தில் ஒரு ட்ரில்லியன் டாலர்களை அமெரிக்க மத்திய அரசு அதன் செலவீனத்தில் இருந்து குறைக்கப் போவதாக திட்டமிட்டுள்ளார்கள். அதன் ஒரு பகுதியாகவே பாதுகாப்புச் செலவீனங்களை அரைவாசியாக குறைக்கும் திட்டமும் வருகின்றது. யு எஸ் எய்ட் நிதியையும், மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கான பங்களிப்பையும் நிற்பாட்டியதின் மூலம் வருடத்திற்கு 40 பில்லியன் டாலர்கள் அளவில் தேறும். இதை விட இன்னும் 960 பில்லியன் டாலர்கள் தேற்ற வேண்டும்................🫢.
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தவுடன், 'என் இனிய இயந்திரா...........' என்ற தலைப்பு தான் உடனே ஞாபகத்திற்கு வந்தது. அந்த நாட்களில் ஆனந்த விகடனில் வந்த சுஜாதாவின் ஒரு பிரபலமான தொடர்........... எங்கேயும் போகாது, அக்கா, ஆனால் ஒரு நாள் நடுரோட்டில் நிற்கப் போகின்றது. ஏற்கனவே இன்னொரு கார் நடுரோட்டில் நின்று, அதை ஒரு கதையாகவும் எழுதியிருக்கின்றேன். இது நிற்கும் போது, இன்னொரு கதை எழுதுவம்...............🤣. இங்கே Blue Book என்று ஒன்று இருக்கின்றது. ஒரு காரில் வரலாறையும் மற்றும் அதன் இன்றைய தரவுகளையும் வைத்து, அது பழைய கார்களுக்கு விலையை மதிப்பிட்டுச் சொல்லும். பின்னர் நேரில் வந்து பார்ப்பவர், காரின் தோற்றத்தையும், அது நிற்கும் நிலைமையையும் வைத்து, அந்த விலையில் இருந்தும் குறைத்துக் கேட்பார். இதுவரை எதுவும் பூச்சியத்திற்கு கீழே போனதாக இல்லை என்று நினைக்கின்றேன்.............🤣.
-
காதலர் தினக் கதை
எனக்கும் இப்படித்தான் அவர்களின் எழுத்து உருக்களை பார்த்த பின் தோன்றியது. இது என்ன எல்லாவற்றையும் சின்ன சின்ன சித்திரங்களாக கீறி வைத்திருக்கின்றார்களே என்று. இதே நண்பனுடன் சில காலம் ஒன்றாக வேலை செய்ததில் அவன் பல தகவல்களை சொல்லியிருந்தான். இன்று புழக்கத்தில் இருக்கும்புதிய சீனமொழி மிகவும் வேறுபட்டது என்றான். தன்னால் பழைய சீன மொழியை வாசிக்கவே முடியாது என்றும் சொல்லியிருந்தான். அவர்களிடம் 5000 வருடங்களிற்கு முற்பட்ட எழுத்துகள் இருக்கின்றன. ஓரளவு பழகிய பின், சில சூழ்நிலைகளால் ஏற்பட்ட வித்தியாசங்கள் அன்றி, அவர்களும் நாங்களும் அடிப்படையில் பல ஒற்றுமை கொண்டவர்களாவே இருப்பது போலத் தோன்றியது. எங்களுக்கு மற்ற சமூகங்கள் மீது இருக்கும் அவநம்பிக்கை அவர்களுக்கும் இருக்கின்றது, அதுவே ஒரு பெரிய தடை................ அடுத்ததாக அவர்களின் ஆங்கில உச்சரிப்பு. இலங்கையர்களின், எங்களின் தலைமுறையின், ஆங்கில உச்சரிப்பும் அவ்வளவு நல்லதில்லை தான், ஆனால் சீன மொழி ஆங்கிலத்தை வெளியே வரவே விடுவதில்லை...............
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
இந்த தடவையும் கை கால்களுக்கு விலங்குகள் போடப்பட்டது. திருப்பி அனுப்ப்பட்ட ஒருவரின் பேட்டி இப்பொழுது நியூஸ் 18 இல் போய்க் கொண்டிருக்கின்றது. இது என்ன கொடுமை..... மோடி வந்து போன பின்பும் இதே கதியே தொடர்கின்றது.............🫣.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நுணாவிலான்!
-
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
நல்லாயிருக்குது அல்வாயன்...............❤️. இப்படி ஒன்றை எழுதி என் வீட்டில் காட்டினால், நம்பப் போவதில்லை............ 'காலையில் கூட மனுஷன் நல்லாத்தானே இருந்தது............' என்று குழம்பிப் போவதற்கு சாத்தியம் அதிகம் இருக்கின்றது.........🤣.
-
மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
சுந்தர் பிச்சை எனக்கு ஜூனியர்.................. அவரை அனுப்பின பிறகு தான் என்னை அனுப்புவார்கள்............🤣. மாதம் 165,000 ரூபாய்கள் என்று வருகின்றது. தனியார் துறைகளில் ஓய்வூதியம் கிடையாது. அரசவேலைகளில் இப்படி ஒரு சம்பளம் கலெக்டருக்கு கூட அங்கே கிடையாது. ஓய்வூதியம் இந்த அளவு எவருக்கும் வராது என்று நினைக்கின்றேன். மிகவும் அதிக திறமையும், நீண்ட அனுபவமும் உள்ள ஒருவருக்கு தனியார் தகவல் தொழில்நுட்பதுறையில் வருட சம்பளமாக 25 இலட்சங்கள் வரை வரும். வரிகள், பிடித்தம் போக 120,000 வரை வரும் மாதத்திற்கு.
-
'அமெரிக்கா உதவிக்கு வராது' - ஒருங்கிணைந்த ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க ஜெலென்ஸ்கி அழைப்பு
இப்பவாவது நல்ல யோசனை வந்தால் சரி தான்.............. அமெரிக்காவையும், சீனாவையும், ரஷ்யாவையும் விட்டுவிட்டு உங்களை நீங்களே சேர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள். இந்த மூவருமே நாட்டாமைகள்.................. முதலில் பாதுகாப்பு செலவை இன்றைய இரண்டு வீதங்கள் அளவிலிருந்து நான்கு வீதத்திற்கு ஐரோப்பிய நாடுகள் சில வருடங்களுக்கு என்றாலும் அதிகரிக்கவேண்டும். வருகிற அறிக்கைகளை பார்த்தால், ஐரோப்பிய நாடுகளின் பலம் படு மோசம் போல உள்ளது. ஈராக் இருந்தது போல ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன. இப்பவாவது புடின் அங்கே அவரின் படையில் இருக்கின்ற இலங்கை இளைஞர்களை திருப்பி அனுப்பிலாம்..................
-
விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!
விஜய்க்கு வை பிரிவு பாதுகாப்பு தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஷாருக், சல்மான், கங்கணா இவர்களுக்கு வை பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அவர்களுக்கு இந்தியா முழுவதும் இது கொடுக்கப்பட்டிருக்கின்றது. விஜய்க்கு இந்தப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டுமே. ஷாருக்குக்கு அடுத்ததாக ஒழுங்காக வரி கட்டும் பிரபலம் விஜய், அவருக்கும் ஒரு வை பிளஸ் கொடுத்திருக்கலாம் தானே............. தமிழ்நாடு என்றால் ஒன்றிய அரசுக்கு ஒரு இளக்கம் தான்....................🤣. சீமானிடம் இந்த வை பிரிவுப் பாதுகாப்பைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்: எனக்கு எதற்கு பாதுகாப்பு...................... நான் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு..................😜. விடிந்தால் பொழுது சாயும் வரை உலகம் முழுக்க தனித்தனியே சிரிக்க வைக்கின்றனர் பலர்.....
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
என்னுடைய காரின் கதை தான் இது, வில்லவன். இன்றைக்கு அல்லது நாளைக்கு என்று சேடம் இழுத்துக் கொண்டு, ஆனால் ஒரு வருடமாக அதே நிலையில் ஓடிக் கொண்டிருக்கின்றது. 'இந்தக் கடாரம் எங்களுக்கு என்னத்துக்கு...............' என்று வீட்டில் அடிக்கடி அதுவும் நானும் வாங்கிக் கட்டிக்கொண்டும் இருக்கின்றோம். இந்தக் காரைக் கையைவிடலாம், அது ஒரு பிரச்சனையே இல்லை, ஆனால் அதற்குள் இருக்கும் பொருட்களை வீட்டுக்குள் கொண்டு போக விடமாட்டார்களே.................🤣.
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
ஒரு காரின் கடைசி வாக்குமூலம் ---------------------------------------------------- 'இதோ உங்களின் பேபி................' என்று சொல்லியே புத்தம் புதிதாக என்னை வாங்கியவரிடம் கொடுத்தார்கள் வாங்கியவருடன் ஒரு பெரிய பேபியும், இரண்டு சின்ன பேபிகளும் வந்திருந்தனர் நல்லதொரு குடும்பம் என்று நானும் சந்தோசப்பட்டேன் சின்னப் பெண் ஒரு வருடத்திற்கு இருக்கைக்கு மேல் ஒரு இருக்கை போட்டு இருந்தார் பெரிய பையன் தெனாவெட்டாக பின்னுக்கு போய் மூன்றாவது வரிசையில் தனியே இருப்பான் சில மாத கவனிப்புகளின் பின் ஆரம்பித்தார்கள் அவர்களின் வேலைகளை அவர்கள் சாப்பிடுவதில் கொஞ்சம் கொட்டி அப்படியே விட்டார்கள் ஏதோ நானும் சாப்பிடுவது போல அது நாறி நான் மூச்செடுக்க முடியாமல் தவித்தேன் சீப்பு பவுடர் பேனை பென்சில் இன்னும் என்ன என்னவோ எல்லாம் நாலு கதவுகளுக்குள்ளும் வைத்தார்கள் எதை வைத்தாலும் எடுக்க மாட்டார்கள் இன்னும் புதிதாகவும் கொண்டு வந்து வைப்பார்கள் பின்னர் தேடி சண்டை போடுவார்கள் அவர்கள் ஒழுங்காக குளித்தார்கள் எனக்கு எதுவும் கிடையாது மழையும் இல்லாத ஊர் இது காடு மலை வனாந்தரம் எல்லாம் ஓடினேன் நூறாயிரம் மைல்கள் கடந்தேன் அப்பப்ப ஓயில் மட்டும் மாற்றினார்கள் மற்றது எதுவும் செய்யவில்லை நான் உள்ளுக்குள் உருகி ஒரு நோயாளியாகி கொண்டிருந்தேன் யாரு சாமி இந்த இளையராசா................. தினமும் அவர் இசை தான் இதுக்கு மேலும் முடியாது என்று மக்கர் பண்ண ஆரம்பித்தேன் என்னைத் திருந்தாமல் இன்னொரு புதுசைக் கொண்டு வந்தார்கள் நான் இப்ப அடிமாடாக ஆகினேன் இந்தப் பயல் ஒரு விளையாட்டுப் பைத்தியம் விளையாடுவது விளையாடதது என்று எல்லாக் குப்பைகளாலும் என்னை நிறைத்தார்கள் இப்ப இந்தப் பயலைத் தவிர வேறு எவரும் எனக்குள் வருவதேயில்லை எஞ்சின் லைட்டை எரித்துக் காட்டினேன் அவனில் ஒரு அசைவும் இல்லை உறுமிப் பார்த்தேன் பாட்டுச் சத்தத்தை பலமாக்கி கேட்கின்றான் இப்ப இந்தக் கணத்தில் இந்த நடுரோட்டில் என் மூச்சை நிறுத்தப் போகின்றேன் என்னில் எந்த தப்புமே கிடையாது எல்லாமே இந்தப் பயலின் கவலையீனம் தான்.
- CarWithGoods.jpg
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பையன் சார், இது என்ன வேண்டுகோள்........................... புலவர் குத்தியது குத்தியதாகவே இருந்து விட்டுப் போகட்டும்.......................... குத்துப்பட்டாலும் புலவர் கையால் குத்துப்பட்டேன் என்று சிரித்துக்கொண்டேன்.......🤣. பாகிஸ்தான் கப்பை தூக்குது, அதில் தான் கவனத்தை குவித்து வைத்திருக்கின்றேன்......................😜.
-
காதலர் தினக் கதை
அவ்வளவு தூரம் வந்த பின், ஏன் அண்ணா தெருவில் புடுங்கிக் கொடுப்பான்............... அல்வாயன் கடையில் வாங்கியே கொடுக்கலாம்................. ஆகவே இது மரபணு தான், சில மனிதர்களுக்கு மட்டுமே வந்து சேர்கின்றது போல.................🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
கூட்டம் இன்னும் வேண்டும் என்றால், சீமான் - சுமந்திரன் - அர்ச்சுனா பெயர்களில் மூன்று entries இங்கே உள்ளே தள்ளி விடுவம். முழு யாழுமே இங்கே தான் நிற்கும்.................................🤣.