ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ரசோதரன்
-
காற்றாடி
🤣.............. ஆனால் கதை 'படிக்காத' ஒரு மனிதனைப் பற்றிய சம்பவங்களே.............. கதையில் 10ம் வகுப்பின் பின் படிப்பை நிற்பாட்டிவிட்டேன். இனி என்ன செய்வது என்று இந்தக் கதை நாயகனுக்காக நான் யோசிக்கின்றேன். போராட்டத்தில் இணைவது, இறுதியில் பெரும் துன்பம் என்று நிச்சயமாக போகப் போவதில்லை...............
-
கர்ண பரம்பரையின் கனவு
சிலவற்றை மனம் போன போக்கில், ஒரு சிறுவன் போன்று, அர்த்தங்கள் எதுவும் இல்லாமல் எழுதுவது............... அநேகமாக அம்மாவும் அதில் வந்து சேர்ந்துவிடுவார்..........❤️. இங்கே இந்த வாரம் சில நாட்களில் மழை பெய்தது. எங்கே போய் விட்டார் இந்த சூரிய மகாராஜா, யார் இவரை ஒளித்து வைத்திருக்கின்றார்கள் என்று தேடவேண்டி இருந்தது........🤣.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
👍....................... இது தான் கணக்கு. மற்றவர்கள் எல்லோருக்கும் டிபாசிட் போய் விடும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. திமுகவின் சில சமீபத்திய நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன, உதாரணம்: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், வேங்கைவயல் அறிக்கை,.................. ஈரோடு இனி அதிமுக கூட்டணிக்கு கிடைக்காது போல................. நாதக நாலாவதாக அல்லது ஐந்தாவதாக ஓடும் அடுத்த பொது தேர்தலில்................
-
கர்ண பரம்பரையின் கனவு
கர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் அம்மா எழுப்பும் போது அது மீண்டும் அடி வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது.
- karnaparamparai.jpg
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
👍.............. அதிமுக போட்டியிட்டு இருக்கவேண்டும். இடைத் தேர்தலை வெல்ல முடியாது, ஆனால் திமுகவிற்கு எதிராக இருக்கும் ஒரேயொரு மாற்று நாங்களே என்று அது தமிழ்நாடு முழுவதற்கும் சொல்லும் ஒரு செய்தியாக அமைந்திருக்கும். ஏற்கனவே தேய்ந்து தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கட்சி இப்பொழுது இன்னும் சிதறிப் போய்விட்டது. இதில் விஜய் வேறு அடுத்த தேர்தலில் புதிதாக உள்ளே வருகின்றார்..............
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
இனி வரும் வாரத்தில் இருந்து கனடாவோ, மெக்சிக்கோவோ அல்லது உலகில் எந்த நாடுமோ அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் அவசரப் பிரச்சனை இனி உள்நாட்டில் தான். எட்டு மாத சம்பளம் கொடுக்கின்றோம், வேலையை விட்டுப் போங்கள் என்று சொன்ன பின்னும், 40000 பேரே மத்திய அரசின் வேலையிலிருந்து விலகியிருக்கின்றார்கள். அவர்கள் ஏற்கனவே இந்த வருடம் ஓய்வடையும் நிலையில் இருந்தவர்கள் தான் என்கின்றனர். அவர்கள் போகும் போது போனஸுடன் போகின்றார்கள். ட்ரம்பும் எலானும் கொடுத்த கெடு முடிந்துவிட்டது. ஆனால், ட்ரம்பும் எலானும் எதிர்பார்த்த 200000 பேர்கள் வேலையை விட்டுப் போகவில்லை. வழக்குகள் தான் போட்டிருக்கின்றார்கள். நீதிபதிகளும் அரசின் நடவடிக்கைகளுக்கு தடை உத்தரவுகளை போட ஆரம்பித்திருக்கின்றார்கள். வேறு சில விடயங்களிலும் இப்படி நீதித்துறையும், அரசும் முரண்டுபட்டுக்கொண்டு நிற்கின்றது. நான் என்ன வழக்கு போடலாம் என்று எனக்கே ஒரு யோசனை வருகுது என்றால் பாருங்களேன்................🤣.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2025 LIVE: தபால் ஓட்டுகளில் நோட்டாவிடம் நாதக தோல்வி- நோட்டா 18; நாதக 13
இதே தொகுதியில் நடந்த கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில்: நாதக 14000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது திமுக 5000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது நோட்டா 6000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது கடந்த தேர்தலில் வாக்களித்த ஏறக்குறைய 16000 பேர் இந்த தடவை வாக்களிக்கவில்லை. இது மொத்தமாக 41000 என்று வருகின்றது. கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 44000. அதிமுக தான் கவலைப்பட வேண்டும். மற்ற எல்லாம் இருந்த இடத்திலேயே இருக்கின்றது.
-
காற்றாடி
இவர்கள் எல்லோரும் எனக்கும் தெரிந்தவர்களே.............! ஆனால், கணேசலிங்கம் மாஸ்டரிடம் மட்டுமே படித்தேன். மற்றவர்களிடம் ஏன் போகவில்லை என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு என்று நினைக்கின்றேன் - ஒரு நோக்கமோ அல்லது வழிகாட்டலோ இருக்கவில்லை. அதைவிட முக்கியமாக பந்தடி மேல் இருந்த விருப்பம். அதிகாலையில் தீருவில் மைதானத்தில் பந்தடிப்பார்கள். அந்த நேரத்தில் தான் இந்த ஆசிரியர்களின் வகுப்புகளுக்கு நண்பர்கள் போய் வந்தார்கள். பூவா தலையா போட்டுப் பார்க்காமலேயே, நான் பந்தடி என்று முடிவு செய்துகொண்டேன். என் அதிர்ஷ்டம் எனக்குத் தெரிந்த கேள்விகளே பரீட்சைகளில் வந்தன.................. 'Slumdog Millionaire' படத்தை பார்த்த போது இது நல்லாவே விளங்கியது................🤣. 'நூறு டாலர் நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்ற கேள்வியைக் கேட்காமல், வேறு ஏதாவது ஒரு நோட்டில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டிருந்தீர்கள் என்றால், எனக்கு அதற்கு பதிலே தெரியாது...............' என்பது போல ஒரு காட்சி அந்தப் படத்தில் வரும். நம்ம வாழ்க்கை இது என்று தோன்றியது...............🤣.
-
காற்றாடி
சித்திரத்திற்கும், எனக்கும் இடையே இருக்கும் தூரம், இரண்டு நட்சத்திரக் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் தூர அளவை விட கொஞ்சம் அதிகம். AI இடம் கேட்டு வாங்கியே இங்கே போடுகின்றேன்.................
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
🤣...................... இலங்கையில் எல்லா வீதிகளும் போடப்பட்டாலும், இந்த வீதியை மட்டும் போடவே மாட்டம் என்று அடாத்தாக நின்றார்கள்................ பழி வாங்குகின்றார்களாம்.................🫣.
-
கனடா மீதான வரி விதிப்பு நிறுத்தி வைப்பு: டிரம்பின் இந்த திடீர் மன மாற்றத்துக்கு என்ன காரணம்?
சென்னை பஜாரிலும், கொழும்பிலும் கிடைக்காத பிராண்டுகளா, அண்ணா........... ஒரு எழுத்தை மாற்றி விட்டிருப்பார்கள்................🤣.
-
காற்றாடி
காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------ சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது. உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும். அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே. இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ. மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல. அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை. அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார். 'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல. அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல. அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார். பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது. (தொடரும்........................)
- kaaththaadi - 1.jpg
-
மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று
🤣................. ஏதோ அந்த ஊர் வீதியை இப்பவாவது திருத்துகின்றார்களே............. அங்கே தெருவில் ஒரு நாய் கலைத்தால் கூட, நாயையும் பார்த்து, வீதியில் இருக்கும் பள்ளங்களையும் பார்த்து ஓட வேண்டிய நிலை.....
-
காற்றாடி
🤣.................. ஜெயமோகன் தனக்கும் கணிதபாடம் வரவே வராது என்று சொல்லியிருக்கின்றார். ஆனால், எல்லாக் கணக்குகளையும் பாடமாக்கி, கணிதப் பரீட்சைகளில் நல்ல புள்ளிகள் எடுத்தேன் என்றும் சொல்லுகின்றார். அவருக்கு ஞாபகசக்தி அதிகம் தான், அதற்காக கணக்குகளையே பாடமாக்குவதா............🤣. அத்துடன் இலங்கையில் படிப்பிக்காத கணக்கு மட்டும் தானே பரீட்சையில் வரும்............ நாங்கள் எதையென்று பாடமாக்குவது....................
-
காற்றாடி
🤣.................... இந்தப் பூமிக்கு ஒரே ஒரு சூரியன் தான்........... நான் எழுதியிருப்பதும் அவரே தான்........ எனக்கு பாடசாலையில் அவர் தான் பிரயோக கணித ஆசிரியர். ஆனால் அத்துடன் இல்லாமல், ஊரில் இருந்த வல்வைக் கல்வி மன்றம் என்னும் தனியார் கல்வி நிலையத்திலும் தூய கணிதம், பிரயோக கணிதம் இரண்டும் படிப்பித்தார். நான் அங்கே தான் ஏலெவல் ரியூசனுக்கு போனேன். ரியூசனில் இன்னும் உக்கிரமாக இருந்தார். அந்த நாட்களில் நல்லையா மாஸ்டர் எதிர் வெக்டர் வேலாயுதம் மாஸ்டர் எதிர் இன்னும் சில ஆசிரியர்கள் என்று ஒரு போட்டி நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் ரியூசன் வகுப்பில் வேறு எந்த ஆசிரியர்களிடமாவது ரியூசன் படிப்பவர்கள் எழும்பி நில்லுங்கள் என்றார். வகுப்பில், என்னைத் தவிர, எல்லோரும் எழும்பி நின்றார்கள். அவ்வளவு பேரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் அன்று வகுப்பு நடந்தது............... கிறுங்கவே கிறங்காத, பயமறியா மனிதன் அவர்.................. சில வருடங்களின் முன், கனடாவில் பழைய வகுப்புத் தோழி ஒருவரைச் சந்தித்தேன். நீங்கள் வார்த்தகப் பிரிவில் தானே படித்தீர்கள்............ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில்: ஆரம்பத்தில் நான் உங்களுடன் கணிதப் பிரிவில் தான் இருந்தேன். ஒரு நாள் கணேசலிங்கம் மாஸ்டர் எனக்கு கணக்கு சரிவராது என்று என்னை வர்த்தகப் பிரிவிற்கு கலைத்துவிட்டார்....................🤣.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இந்த விசயத்தை முதலில் கேள்விப்பட்ட போது நம்ப முடியாமல் தான் இருந்தது. போன வருடம் நான் இலங்கை போயிருந்த பொழுது, விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு போன வாகனத்தின் ஓட்டுநரும் இதே கணக்கை சொல்லியிருந்தார். பல வருடங்களின் ஒரு இந்தியர் குறுகிய கால வேலைக்காக தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்திருந்தார். ஆறு மாதங்கள் மட்டுமே அவருக்கு வேலை என்றிருந்தது. ஆறு மாதங்களின் பின்னர் அவர் திரும்பிப் போகவேண்டும். இங்கு ஒரு கார் வாங்கலாமா, வாங்கினால் திரும்பப் போகும் முன் அதிக விலைக்கு விற்கலாம் தானே என்று என்னைக் கேட்டார். உலகத்தில் எங்குமே அப்படியெல்லாம் விற்க முடியாது, கார் வாங்கியவுடனேயே அதன் பெறுமதியில் நாலில் ஒரு பங்கு குறைந்து விடும் என்று சொன்னேன். அமெரிக்காவில் இது தான் நிலைமை. அப்படியானால் ஏன் அதை நான் வாங்க வேண்டும் என்று அவர் கார் வாங்கவில்லை. ஆனால், பதிலாக, சென்னையில் ஒரு வீடு வாங்கினார். பம்மலுக்கு அருகே இருக்கும் அனகாபுத்தூரில் என்று ஞாபகம். மூன்று நண்பர்களும், இவருமாக நாலு யுனிற் உள்ள ஒரு கட்டிடத்தை வாங்கினார்கள். இரண்டு கீழே, இரண்டு மேலே என்றுள்ள தனித்தனி வீடுகள். அடுத்த வருடம் அங்கு கொட்டிய மழையில் இவரின் ஊர் வெள்ளக்காடாகியது. இவரின் வீடு கீழே இருந்தது. வீடு முழுவதும் வெள்ளத்தல் நிரம்பியது என்று சொன்னார். அமெரிக்காவிடம் இருந்து தப்பி, அனகாபுத்தூரிடம் மாட்டிக்கொண்டார்.
-
அருச்சுனா இராமநாதன் மோசடியாக சம்பளம் பெறுகிறாரா ?
🤣.................. அது ஒரு கனவுக் காலம்............ அன்னா ஹசரேவிற்கு ஆதரவாக இங்கே மெழுகுவர்த்தி ஊர்வலம் கூட நடந்தது. என்னுடன் வேலை செய்து கொண்டிருந்த பல இந்தியர்கள் இந்த ஊர்வலத்தில் பங்குபற்றியும் இருந்தனர். அடுத்த நாளே பெரிய எல்சிடி அல்லது பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டிகளை வரி எதுவும் கட்டாமல் எப்படி அவர்களின் விமான நிலையங்களினூடாக எடுத்துப் போவது என்று அவர்கள் ஆலோசனை செய்ததையும் கண்டேன். மெழுகுவர்த்தி எரிந்து முடிய, ஊழலை ஒழிக்கும் சிந்தனையும் முடிந்து விட்டது போல............ இவர்களையா அன்னா ஹசரே நம்புகின்றார், ஐயோ பாவம் அவர் என்று நினைக்க, அந்த மனிசனும் இன்னொரு பக்கம் இழுபட்டு போய்விட்டது. ஊழல் மட்டும் எங்கேயும் போகாமல் அங்கேயே நிற்கின்றது...........🤣.
-
இன்னொரு சக்கரவர்த்தி
வேறு திசையில் போய், ஒரு கொடுங்காலமும் ஆகலாம் தான், அல்வாயன். முள்ளிவாய்க்கால் கடைசிநாட்களிலும் பெரும் நம்பிக்கைகளோடு தான் நாங்கள் பலரும் எவ்வளவோ எழுதிக் கொண்டிருந்தோம். எல்லா எழுத்துகளும் பொய்யாக, பெரும் அழிவு மட்டுமே நிஜமானதாக எஞ்சியது.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
இங்கு ஒரு ஐந்தாறு வருடங்கள் முன் வரை கூட எம்மவர்கள் எவரும் அமெரிக்கன் கார்களை வாங்கவேமாட்டார்கள். நீண்டகால நம்பிக்கை இன்மை, மிகக்குறைந்த மீள்விலை, அதிக பெட்ரோல் செலவு இப்படி பலப்பல காரணங்கள். பொதுவாக எம்மவர்கள் ஜப்பான் தயாரிப்புகளை வாங்குவார்கள். வருமானம் அதிகமானால் ஜேர்மன் தயாரிப்புகள் தான், அது ஒரு அந்தஸ்து போல......... முன்னர் கொரியாவின் தயாரிப்புகளையும் பலரும் வாங்குவதில்லை. ஆனால் இப்பொழுது அவை மிகவும் தரமும், வசதியும் உள்ளவை என்று அவைகளையும் வாங்குகின்றனர். டெஸ்லா வந்த பின் வாங்குகின்றார்கள், ஆனால் அது வேற கணக்கு. நான் இன்னமும் இல்லை. எலான் மஸ்க்கிற்கு காசு கொடுக்க மனம் இல்லை. நான், முடிந்தவரை, அமெரிக்கன் வாகனங்களையே வாங்கிக் கொண்டிருக்கின்றேன். அமெரிக்க தேசியம் பேசி, அமெரிக்க நாட்டை சிறப்பிக்கப் போகின்றோம் என்ற கொள்கையின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என் நண்பர்களில் எவரும் அமெரிக்கன் வாகனங்களை வாங்குவதை நான் இதுவரை காணவில்லை. இவர்களின் இந்த விசயம் ட்ரம்பிற்கு தெரியாது......................🤣. 2008ம் ஆண்டு பொருளாதார வீழ்ச்சியின் பின், அமெரிக்கா தெருவில் நின்றது. வேலைகள் இல்லை, வருமானம் இல்லை. வீடுகளை விட்டு விட்டு மக்கள் போய்க் கொண்டிருந்தனர். அமெரிக்காவின் வாகன தயாரிப்புகளின் தலைநகரான Detroit இல் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அப்பொழுது தொலைக்காட்சியில் விவரணப் படம் ஒன்று ஒரு நாள் போனது. வாகனத் தயாரிப்பில் இருக்கும் மிகப்பெரும் நிறுவனங்கள் பெருமளவிலான தொழிலாளர்களை வேலையை விட்டு நிற்பாட்டியிருப்பதால், அந்த நகரத்தில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைக் காட்டிக் கொண்டிருந்தனர். ஒரு குடும்பத்தலைவி வீட்டில் எதுவுமே இல்லை, மேசையில் பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட இல்லை என்று சொன்னார். அவர் கண்களில் ஒரு ஆறு உடைத்து ஓட தயாராக இருந்தது. வேலை எதுவும் தங்களுக்கு இங்கே இல்லை என்று சொன்னார். இலவச உணவு கொடுக்கும் இடங்கள் பற்றிய தகவல்களைச் சொன்ன போது, அவர் அடக்கமுடியாமல் அழுதார். பின்னர், மிகக் குறுகிய காலத்திலேயே, அமெரிக்க அரசு இந்தப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு நிதி உதவி அளித்தது. அவர்கள் மீண்டும் உற்பத்திகளை ஆரம்பித்தார்கள். அது ஒரு புரட்சி, ஆனால் இங்கு வாழும் எம் மக்களுக்கு அதில் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இப்படி ஒரு விடயம் நடந்ததையே எங்களில் பலர் அறியார்கள். அந்த நிறுவனங்களும், அந்த மக்களும் மீண்டு வந்தார்கள்.
-
காஸா: அமெரிக்கா கைப்பற்றும் என டிரம்ப் கூறியது ஏன்? பாலத்தீனர்களை வெளியேறச் சொல்கிறாரா?
இங்கு அவருடைய ஆதரவாளர்களாக இருக்கும் நம்மவர்களின் வாதங்கள், பூனை ஒன்று ஒரே இரவில் ஒரு சிங்கமாக மாறியது போல இருக்கின்றது. ஜனநாயக் கட்சியினர் எல்லோரையும் நாட்டுக்குள் விடுகின்றனர், நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை முன்னேறவே இல்லை, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை,............ இப்படியான பலதைச் சொல்கின்றனர். நாங்களும் இங்கு ஓடித்தான் வந்தோம். படித்து விட்டு, மேற்படிப்பிற்கு என்று, முறையாக வந்தோம் என்பது இதற்கான ஒரு நியாயமே கிடையாது. படித்து முடித்தவுடன் அங்கிருந்து தப்பவே இங்கு வந்தோம். படித்திருக்காவிட்டால், ஏதோ ஒரு நாட்டுக்கு எப்படியோ போய்த்தான் இருப்போம். அதுதானே மிகப் பெரும்பாலானோர் முன்னிருந்த ஒரே ஒரு தெரிவு. அதையே தான் வேறு நாட்டவர்களும் செய்கின்றனர். எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது, ஆகவே இனி அவர்கள் இங்கு வரவே கூடாதா................. ஒரே ஒரு சின்ன மாற்றம்................. நாங்கள் படித்து முடித்து, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு மேல் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் போது, இதே ட்ரம்ப் அவர்கள் அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்து இருந்தால், நாங்கள் எவருமே அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தே இருக்கமாட்டம். நாங்கள் எல்லோருமே ட்ரம்பைத் திட்டிக் கொட்டிவிட்டு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா அல்லது கனடா தான் போய் இருப்போம். ஆனால், இன்று அதே கூட்டத்தில் ஒரு பகுதி அவர் தான் சரி என்கின்றது............🫣.
-
இன்னொரு சக்கரவர்த்தி
இன்னொரு சக்கரவர்த்தி --------------------------------------- அற்புதமான ஆடை என்று கொடுக்க அதை உடுத்து ஆடம்பரமாக நிமிர்ந்து நடந்து வந்தார் ஒரு சக்கரவர்த்தி என்னே ஆடை இது எப்படி மின்னுது இது இதுவல்லவோ அழகு எங்கள் ராசா என்ன கம்பீரம் என்று கூட்டம் குரல் எழுப்பியது இன்னும் பெருமைப்பட்ட சக்கரவர்த்தி இன்னும் இன்னும் கைகளை நீட்டி கம்பீரமாக நடந்தார் சின்னப் பயல் ஒருவன் திடீரென 'ஐயே................ ராசா அம்மணமாக வருகிறாரே.....' என்று கத்திச் சொல்லி அவன் கண்களையும் மூடினான் சக்கரவர்த்தி வெட்கத்தில் பொத்திக் கொண்டு ஓட கூட்டமும் ஆடை நெய்தவரும் உயிர் தப்ப ஓடினார்கள் என்னைப் பார் என்னைப் பார் என்று இன்று இன்னொரு சக்கரவர்த்தி இப்பொழுது நடந்து வருகின்றார் அழகோ அழகு என்று சுற்றி நிற்கும் கூட்டமும் கைதட்டுகின்றது பின்னர் வரலாறு சொல்லும் 'ஐயே................... இந்த ராசாவும் இவரின் கூட்டமும் ஆடை அணிந்திருக்கவில்லை.................' என்று.
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
🤣.................... களத்தில் ஒரே ஒரு கணக்கு வாத்தியார் தான்................. அது யார் என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால், மேலே இருக்கும் கோஷானின் பதிவிற்கு சிரித்து வைத்திருக்கும் அடுத்தவர் யார் என்று பார்க்கவேண்டும்............🤣.
-
காற்றாடி
ஒரு நாள் பாடசாலையில் பிரயோக கணித வகுப்பில் நண்பன் ஒருவன் மணிக்கூடு கட்டியிருந்தான். ஆசிரியர் வழமை போல கணக்கை எழுதி விட்டு வகுப்பைச் சுற்றிக் கொண்டிருந்தார். மணிக்கூட்டைப் பார்த்துவிட்டார். எங்களின் வகுப்பறை மேல் மாடியில் இருந்தது. முதலில் நண்பனின் கொப்பி மேல் மாடியில் இருந்து கீழே பறந்தது. சடார் படார் என்று சில அடிகள் விழுந்தது. நல்ல காலம், நண்பனின் மணிக்கூட்டை ஆசிரியர் பறக்க விடவில்லை. அதுவோ எதுவோ, நான் மணிக்கூடு கட்டுவதேயில்லை......🤣