Everything posted by ரசோதரன்
-
வருடச் செய்முறை
மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கின்றேன், அக்கா............ முப்பது வருட குடும்ப வாழ்க்கையில் சுடுதண்ணீர், பிளேன் டீ, இப்பொழுது பால் டீ வரை வந்துவிட்டேன். இப்படியே மெதுவாக முன்னேறாமல், ஒரேயடியாக திண்டுக்கல் தலைப்பாக்கட்டு பிரியாணியை அடுத்ததாக செய்து விடுவமோ என்றும் ஒரு யோசனை வருகின்றது................. ஆனால் வீட்டில் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் மூச்சு நின்றாலும் நின்றுவிடும்........... ஊரில் கிரவுண்டுக்கு என்றே நேர்ந்து விட்டது போல.......... இங்கேயும் அப்படித்தான்............🤣.
-
வருடச் செய்முறை
நல்ல ஒரு யோசனை, அண்ணா. 365 எபிசோட்............ ஒவ்வொன்றும் விளக்கம் மற்றும் அளவுகளுடன். இப்பவே ஒரு நட்சத்திரம் உதயமானது போல ஒரு உணர்வு..............🤣.
-
வருடச் செய்முறை
வருடச் செய்முறை ------------------------------ முப்பது கிலோ கோழி இருபது கிலோ மீன் பதினைந்து கிலோ ஆடு இவற்றை கழுவி துண்டு துண்டாக்கி கறியாக்கவும் ஒரு பகுதியை பொரிக்கவும் 50 கிலோ அரிசி இதை சோறாக்கவும் பத்து கிலோ பருப்பு போதும் இதைவிடக் குறைய கத்தரிக்காய் வாழைக்காய் பயற்றங்காய் போன்றன இவற்றில் பொரித்த குழம்பு பொரிக்காத குழம்பு பால்கறி இப்படி எல்லாம் வைக்கவும் தேவையான அளவு பாகற்காய் பொரிக்கவும் மிளகாய் பொரிக்கவும் வடகம் பொரிக்கவும் வாழைக்காய் பொரிக்கவும் அப்பளம் பொரிக்கவும் ஊறுகாய் வாங்கவும் தயிர் வாங்கவும் நல்ல நாட்களில் வடை சுடவும் பாயாசம் வைக்கவும் பொங்கல் பொங்கவும் வேண்டும் ஆடிப் பிறப்பன்று கொழுக்கட்டை ஆவணிச் சதுர்த்தியில் மோதகம் மீண்டும் விளக்கீட்டில் கொழுக்கட்டை நவராத்திரிக்கு அவல் கடலை நல்ல நாவல் பழம் அம்மாவின் திதி அப்பாவின் திதி என்றால் பதின்மூன்று கறிகள் வைக்கவும் அவ்வளவும் மரக்கறிகளே இன்னும் சிலதும் இருக்கின்றது உடனே நினைவில் வருகுதில்லை உதாரணமாக முழுப் பலாப்பழங்கள் ஒரு ஐந்து இவை மொத்தமும் 2024ம் ஆண்டில் நான் ஒருவன் உண்டு முடித்த கணக்கு வெளியில் உண்டதையும் சேர்த்தால் அசைவம் இன்னும் அதிகமே சைவம் ஒரு சம்பிரதாயத்திற்கே நாளையிலிருந்து இதே கணக்கு மீண்டும் தொடங்குகின்றது கள நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
'லப்பர் பந்து', 'நிறங்கள் மூன்று' போன்ற படங்களை எடுப்பதற்கு சில கோடிகளே, ஐந்து கோடிகள் அல்லது குறைவாகவே, போதும் என்று நினைக்கின்றேன். இவற்றை விடவும் குறைந்த செலவில் பல படங்கள், நூற்றுக் கணக்கில், வந்திருக்கின்றன போல............ நாம தான் பார்க்காமல் விட்டுவிட்டோம்.......... நீங்கள் சொல்லியிருக்கும் ஆயிரம் கோடி கணக்கு சரியே. நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை, ஆனால் தனிப்பட்ட சிறிய தயாரிப்பாளர்களின், விநியோகஸ்தர்களின் நிதிநிலைக்கு இது மிகவும் அதிகமே.
-
செந்தமிழாய் எங்கும் இசை-பா.உதயன்
நன்றாக இருக்கின்றது, உதயன்.
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
அண்ணாமலையாருக்காக நாங்கள் எல்லோரும் பரிதாபப்படவேண்டும். தமிழ்நாட்டில் தான் பாஜகவிற்கு ஆகக்குறைந்த எண்ணிக்கையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அமித்ஷா கூப்பிட்டுவைத்து குட்டி இருக்கின்றார். மலையார் நான் இங்கேயே இல்லையே, லண்டனில் இருந்தேனே என்று தப்பப் பார்த்திருக்கின்றார். ஆனால் அது அமித்ஷாவிடம் எடுபடவில்லை. இப்ப சாட்டையால் அடிப்பது, செருப்பு இல்லாமல் நடப்பது என்று ஒரே நேர்த்திக்கடன்களாக அண்ணாமலையார் செய்து கொண்டிருக்கின்றார்............ விஜய் காரில் வந்து ஆளுனரிடம் மனு கொடுத்து, அப்படியே காரிலேயே கிளம்பி, தன் போராட்டத்தை அவர் வழியிலேயே செய்துவிட்டார். அவர் ஆளுனரை பனையூருக்கு வரச் சொல்லாமல் இருந்ததே விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல் தான்.............. மாநிலங்களுக்கு ஆளுனரே தேவை இல்லை என்று விஜய் முன்னர் சொல்லியும் இருந்தார்.............. சீமான் கட்சிக்காரர் ஒருவரும் சில மாதங்களின் முன் இப்படியான ஒரு விவகாரத்தில் மாட்டுப்பட்டு போக்சோ சட்டத்தில் உள்ளே இருக்கின்றார்............. ஆதலால் மெதுவாகத்தான் வருவார், அப்படியே பட்டும்படாமலும் போயும் விடுவார்............
-
வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
கொடுப்பனவின் அளவு வேலை செய்யும் பிரதேசத்திற்கு ஏற்ப மாறுபட வேண்டும் என்பதைச் சொல்ல மறந்து போய்விட்டேன். கொழும்பில் 50 ஆயிரம் கொடுத்தாலும் போதாதே............. இங்கு அமெரிக்காவில் கலிஃபோர்னியா, நியூ யோர்க் போன்ற இடங்களுக்கு என்று வேறு ஒரு கணக்கு இருக்கும். தொழில்நுட்பத்துறையில் இதை நான் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன். அரியநேந்திரன் அரசவேலையில் இருக்கவில்லையா................ கட்சியா சம்பளம் கொடுத்தது......... நானும் போய் சேரப் போகின்றேன்..............🤣.
-
வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, அரியநேத்திரன் அவர்கள் தனது மாத வருமானம் 60 ஆயிரம் ரூபாய்கள் என்றே குறிப்பிட்டிருந்தார் என்று ஒரு ஞாபகம். இவர் என்ன இவ்வளவு குறைவான சம்பளத்தில் இருக்கின்றாரே, இவர் என்ன வேலை செய்கின்றார் என்ற யோசனை வந்தது. ஊரில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தவர், தனது சம்பளம் 30 ஆயிரம் என்றே சொல்லியிருந்தார். அது தற்காலிக வேலை, அதை நிரந்தரமாக்க என்ன செய்யலாம் என்று அவர் முயன்று கொண்டிருந்தார். 50 ஆயிரம் என்பது அதிகமாகவே தெரிகின்றது. எட்டு மணித்தியாலத்திற்கு மேல் வேலை செய்தால், ஒவ்வொரு மணி நேரத்திற்கான கொடுப்பனவும் அதிகரிக்க வேண்டும் - ஒன்றரை அல்லது இரு மடங்குகள். இவர்கள் ஏன் அரைவாசியாக்கி இருக்கின்றார்கள்..............
-
2025 புதுவருட வாழ்த்து
நீங்கள் அவரை விடமாட்டீர்கள்..................🤣. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
👍............. பெரிய நிறுவனங்களுக்கு நீங்கள் சொல்வது பொருந்தும். உதாரணமாக, சண் பிக்சர்ஸ் இப்படிச் செய்யமுடியும். ஆனால், விஷால் போன்ற ஒருவர் பிரபல பைனான்சியர் அன்புச்செழியனிடம் பல கோடிகளை கடன் வாங்கி படமெடுத்து நஷ்டப்படும் போது, அந்தக் கடன் விஷாலின் வாழ்க்கையை பாதித்துவிடுகின்றது. இதைப் போன்றே ஊரிலிருந்து அதுவரை தேடியதை எல்லாம் சினிமாக் கனவுகளுடன் கொண்டு வரும் பல தயாரிப்பாளர்கள். நடிகர் சசிகுமார் இன்னுமொரு உதாரணம். ஆனால், சினிமா எவருக்காகவும் நிற்பதில்லை, அது கால வெள்ளத்தில் மூழ்காமல், தேவையான மாற்றங்களுடன், ஓடிக் கொண்டே இருக்கும். மனிதர்கள் தான் மூழ்கிப் போகின்றனர்.
-
ரூ.1,000 கோடி நஷ்டம் : அழிவை நோக்கி போகிறதா தமிழ் திரையுலகம்?
மொத்தமாக இந்திய சினிமாக்கள் எந்த வருடமும் இழந்து கொண்டே இருக்கின்றன. ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என்று இழப்பு எல்லா இடமும் நடந்து கொண்டே இருக்கின்றன. 70ம் ஆண்டுகளில், 80ம் ஆண்டுகளில் மொழிவாரியாக 100 படங்கள் என்ற அளவில் வந்து கொண்டிருந்த போதும் பத்து படங்கள் தான் வென்றன, 90 படங்கள் தோற்றன. அப்பொழுதே தயாரிப்பாளர் துரை என்று நினைக்கின்றேன். பின்னர் ஒரு கோவில் தர்மம் வாங்கிக் கொண்டிருந்தார். மணிரத்தினத்தின் சகோதரர், ஜீ.வி, தற்கொலை செய்துகொண்டார். ஏவிஎம்மே இனிமேல் முடியாது என்று ஒதுங்கிக் கொண்டனர். அட்சயபாத்திரம் போல இருந்த, அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ஆர்.பி. சௌத்திரியும் ஒதுங்கினார். இந்திய சினிமா உலகம் என்பது லாஸ் வேகாஸ் போன்றதே. லாஸ் வேகாஸில் இறுதியில் வென்றவர்கள் எவருமில்லை என்பார்கள். ஷாருக்கின் 'திவான்', 'பதான்' இரண்டும் வந்து தான் ஹிந்திப் படங்களிற்கு இன்னும் சந்தை இருக்கின்றது என்பது தெரியவந்தது. அதுவரை சில வருடங்களாக பாழும்கிணற்றில் விழுந்தது போலக் கிடந்தது ஹிந்தி திரையுலகம். 400 கோடிகள் செலவென்றால், 800 கோடிகள் வசூலாக வந்தால் தான் போட்ட முதல் கையில் வரும் என்ற நிலைதான் இன்று. 800 கோடிகள் மதிப்புள்ள படைப்பாளிகள், கலைஞர்கள் என்று தமிழில் எவரும் இல்லை. படம் வெளியாகி அடுத்த நாள், மூன்றாம் நாள், முதல் வாரம் என்று அறிக்கைகளில் வெற்றி கொண்டாடுவார்கள். ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்தில் பின், தாங்கள் இழந்து விட்டோம் என்ற உண்மையை விநியோகஸ்தர்கள் வெளியே சொல்லிக் கொள்கின்றனர். தீராத கவர்ச்சி, கறுப்பு பணம் போன்றன சினிமாவை அழியாமல் கொண்டு செல்கின்றன. சரவணாஸ் 'லெஜெண்ட்' போல சிலர் வந்து சினிமாவை வாழவைப்பார்கள். லைக்கா போன்ற நிறுவனங்களும் வாழவைப்பார்கள். 'பொன்னியின் செல்வன்' வெளிவந்த போது, அதுவரை வெளியாகியிருந்த லைக்காவின் எந்தப் படங்களும் இலாபத்தை சம்பாதிக்கவில்லை என்று ஒரு செய்தியும் வந்திருந்தது. ஆனால், அவர்களின் பல படங்களை பெரும் வெற்றிப்படங்களாக அவை வெளியான காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சினிமா என்பது திரையில் மட்டும் தான் நடிப்பு என்றில்லை, திரைக்கு வெளியேயும் சம்பந்தப்பட்டவர்கள் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்திய மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஒரு நாயக பிம்பம் என்றும் தேவையாக இருக்கின்றது. ஒரு சின்ன விலங்கு உருளையில் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருப்பது போல சமூகமும், திரை உலகமும் ஓடிக் கொண்டிருக்கின்றது.
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
மூன்று கிழமையாகி எனக்கு முத்தரசன் என்றாலே யார் என்று மறந்து போய்விட்டது. நீங்கள் இப்ப வந்து சீமான் அப்படி என்ன மாறி மாறிப் பேசுகின்றார் என்றால், நான் எங்கே போவன்...................🤣. சவுக்கடி அண்ணாமலையார், அடுப்படி மருத்துவர் ஐயா, பனையூர் விஜய் என்று உலகம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றது, தூயவன்.............. தமிழ்நாடு இப்படியே போனால் சீமானே மங்கலாகி விடுவார்........😜. எப்படியும் சீமான் ஏதாவது திரும்பவும் சொல்லுவார், அப்ப பார்த்துக்குவம்............... ஐபிஎஸ் வருண்குமாருடன் ஒரு பிரச்சனை போய்க் கொண்டிருக்கின்றது போல.............. அது கருத்து மோதல் இல்லைத்தானே...............
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
❤️................... அசத்தலான எழுத்து, கவிஞரே............... நாங்கள் தெரியும் என்போம், அவர்கள் மறந்திருப்பார்கள்................. அவர்கள் தெரியும் என்பார்கள், நாங்கள் மறந்திருப்போம்............... பின்னர் இரண்டு பக்கங்களுக்குமே விந்தையாக இருக்கும்..........👍.
-
விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல' - திருமாவளவன் நேர்காணல்
நீங்கள் சும்மா படுத்திருந்த சிங்கத்தின் மூக்குக்குள் தும்பு விட்டிட்டீர்கள்................🤣. 'அரசகட்டளை' மட்டும் எத்தனை தடவைகள் பார்த்தேனோ........ ஏழோ எட்டோ வயதிலேயே யோகநாயகி, ரஞ்சனா என்று இரண்டு தியேட்டர்களுக்கும் தனியே போய் வர ஆரம்பித்துவிட்டேன். என்னை நம்பித்தான் எம்ஜிஆர் படங்களையே இறக்கினார்கள்............ இப்ப சிவாஜிலிங்கம் ஊரிலிருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போடுகின்றார்............. ஆனால் அவரை நான் தியேட்டரில் பார்த்ததே இல்லை...... முறைப்படி, உரிமைப்படி நான் தான் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட வேண்டிய ஆள்...............🤣. அவர் சிவாஜி ரசிகன் என்று நினைக்கின்றேன், நான் தான் அக்மார்க் எம்ஜிஆர் ரசிகன்............... 'இருந்ததையும் கெடுத்தார் இளையதம்பி மேத்திரியார்...............' என்று என்னூரில் சொல்வார்கள். பின்னர், வளர வளர, எம்ஜிஆரும் ஒரு இளையதம்பி மேத்திரியார் தான் என்ற புரிதல் வந்தது..............
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
🤣.................... சைனா ஒரு கெட்டபயல்............... எல்லாவற்றையும் செய்து தானே வைத்துக்கொள்ளும் ஒரு நாடு......... ஈரானுக்கு நாலு, ரஷ்யாவிற்கு நாலு, சிரியாவிற்கு நாலு என்று கொடுத்தால், இஸ்ரேலையும் உக்ரேனையும் தூள்தூளாக்கியிருக்கலாமே............... அமெரிக்கா தன் அணுகுண்டையே இஸ்ரேலிற்கு கொடுக்க, அதை இஸ்ரேல் சிரியாவில் போட்டிருக்கின்றார்களாம்.............. பாலகிருஷ்ணா ஓடுகின்ற புகைவண்டியை ஒற்றைக் கையால் நிற்பாட்டியது, பறக்கிற விமானத்தை கைதட்டியே விழுத்தினது எல்லாம் ஒன்றுமே இல்லை இன்றைய சில ஊடகங்களுடன் ஒப்பிடுகையில்.........
-
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
👍............. இது நல்ல ஒருயோசனையாகத் தெரிகின்றது.............
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
👍................ இதையே தான் நாங்கள் பலரும் சொல்லுகின்றோம்................
-
இலங்கை இந்திய மீனவர் விவகாரத்தில் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை ; அமைச்சர் சந்திரசேகரன்!
'மீனவர்களுக்கிடையே இனிமேல் பேச்சுவார்த்தை கிடையாது, இனி அதிகாரிகள் பேசிக் கொள்வார்கள்.......' என்று தான் தலைப்பு இருந்திருக்க வேண்டும்.................... ஆனால் அது சப்பென்று, பூசைக்கு உப்பில்லாமல் செய்த வெண்பொங்கல் போல, போய் விடுமே.................
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
🤣.................. மனித வாழ்வில் மூன்று விசயங்கள் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமே இல்லாதவை போல, விசுகு ஐயா - அறிவு, படிப்பு, லூசுத்தனம்...................😜. ஆறு முறைகள் தன்னை அடிப்பேன் என்று சொல்லிவிட்டு எட்டு முறைகள் அடித்தும் விட்டார்......... அண்ணாமலையாருக்கு கணக்கு வேற மட்டுப் போல............🤣. அந்த சவுக்கடியை ஆறு அடிகளுடன் ஓடி வந்து தடுக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்ட நபர் தான், வேண்டும் என்றே எட்டு அடிகள் வரை விட்டுப் பார்த்தாரோ தெரியவில்லை...........🤣.
-
நத்தார் பரிசு
யேர்மனி என்றபடியால் ஒரு உயிர் தப்பியது. இதுவே அமெரிக்காவில் நடந்திருந்தால், கிறிஸ்மஸ் அன்று நடந்த பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் இதுவும் சேர்ந்திருக்கும்............... உதாரணம் ஒன்று: https://www.azfamily.com/2024/12/26/4-injured-2-detained-shooting-inside-phoenix-sky-harbor-christmas/ குடும்பம் குடும்பமாக கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுவார்கள் என்று நினைத்தால், இவர்கள் சுடுபடுகின்றார்கள்..........🫣.
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
'.............. என்றால் பேயும் இரங்கும்' என்று பூசி மெழுகித்தான் சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆனால் அது தான் இது என்று வெளிப்படையாகச் சொல்ல எல்லோருக்கும் பயம் போல................😜.
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
https://minnambalam.com/india-news/how-can-chinas-new-super-dam-to-be-built-in-tibet/
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
சீனா இந்தியாவிற்கு ஒரு இராட்சத 'நீர்க்குண்டு' தயார் செய்கின்றது என்று ஒரு செய்தியில் இருந்தது.......... இந்தப் பெரிய அணை உடைவதை நினைத்துப் பார்த்தாலே திகிலாகத்தான் இருக்கின்றது..........
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
* சிறுவயதில் எல்லாக் கடவுள்களும் இருக்கின்றார்கள் என்று நம்பியிருக்கின்றேன். பதின்ம வயதுகளில் ஒரு கடவுளும் இல்லை என்று முடிவெடுத்தேன். இப்பொழுது எல்லாக் கடவுள்களும் எங்கே போய் விட்டார்கள் என்று தேடுகின்றேன். * பூமி அப்படியே நடுவில் நிற்கின்றது என்று சிறுவயதில் நம்பினேன். பூமி சுற்றுகின்றது, சூரியன் நடுவில் அப்படியே நிற்கின்றது என்று பதின்ம வயதுகளில் சொல்லித் தந்ததை அப்படியே நம்பினேன். எல்லாமும், எங்களின் சூரியன் உட்பட, கண் மண் தெரியாத ஒரு வேகத்தில் அண்டவெளியில் இழுபட்டுப் போகின்றன என்று இன்றைய அறிவியல் சொல்வதை இப்பொழுது நம்புகின்றேன். * சினிமாக் கதாநாயகர்கள் எல்லோரும் நிஜத்திலும் நாயகர்களே என்று நம்பினேன். எம்ஜிஆர் மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று நம்பியிருக்கின்றேன். ஒன்றும் மாணிக்கம் கிடையாது, எல்லாமுமே கரிக்கட்டிகள் தான் என்று இன்று வாழ்க்கை போகின்றது. * சிங்கள மக்கள் பொல்லாதவர்கள் என்று சிறுவயதில் நம்பியிருக்கின்றேன். சிங்கள மக்கள் மட்டும் அல்ல, இங்கு எல்லா மக்களும் ஒன்றே என்று உலகம் தெரிய தெரியவந்தது. * அரிசிச் சோற்றில் தான் ஆரோக்கியம் இருக்கின்றது என்று நம்பியிருக்கின்றேன். இன்று அதில் ஆரோக்கியம் இல்லை என்று சொல்லப்பட்டாலும், அதுவே தேவை, போதும் என்று ஆகிவிட்டது. * எந்தக் கடலையும் நீத்திக் கடக்கலாம் என்று அன்று நம்பியிருக்கின்றேன். என்னை சுருட்டி அடித்த ஒரு அலையின் பின், நான் மட்டும் இல்லை, இங்கு எல்லா மனிதர்களும் இயற்கையின் முன் ஒரு தூசி என்று தெரிந்தது. * பேய்கள் என்று நம்பிப் பயந்திருக்கின்றேன். இன்று பேய்கள் இல்லை என்று உறுதியாகத் தெரிந்தாலும், அந்தப் பயத்தில் கொஞ்சம் இன்னும் உள்ளே ஒட்டியிருக்கின்றது. * வயது போனாலும் என்னுடைய வயதான அப்பா, அம்மா, மாமா, மாமி, தாத்தா, பாட்டி போல நான் இருக்கமாட்டேன் என்று நம்பியிருக்கின்றேன். இப்பொழுது கண்ணாடியில் பார்க்கும் போது அவர்களே தெரிகின்றார்கள்.............🤣.
-
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை - ஆனந்த விஜே
மஹிந்திராவின் மலிவு மாடல் நல்ல காற்றோட்டமானது.......................... குதிரை ஏற்றத்தில் முன்அனுபவம் இருந்தால், பயணம் சிறக்கும்................