Everything posted by ரசோதரன்
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்.............. அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை................. அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........
-
கொடுங்கோலின் கடைசிப் படைவீரன்
ஒரு படைவீரர் இப்படி தன் நிலையைச் சொல்லியிருந்தார். இது அவரின் வார்த்தைகளே........... கொடுங்கோலின் கடைசிப் படைவீரன் ------------------------------------------------------------- என்னுடன் இருந்தவர்கள் என்னவானார்கள் என்று எனக்குத் தெரியாது சிலர் அந்தப் பக்கமாக போனார்கள் சிலர் இந்தப் பக்கமாக போனார்கள் நான் பிரதான தெருவுக்கு போக விரும்பினேன் அங்கிருந்து எந்த ஊருக்கும் போகலாம் பின்னர் என்னை யாருக்கும் தெரியாது அதன் பின் எனக்கு கவலையும் இல்லை ஒரு ஊருக்கு போனேன் பின்னர் இன்னொரு ஊருக்கு போனேன் எங்கும் மக்கள் கூட்டங்களாக கூடியிருந்தனர் அவர்கள் எல்லோரும் ஓடி விட்டனர் என்றனர் அழுது அழுது மகிழ்வாக இருந்தேன் இறைவனே எல்லாப் புகழும் உனக்கே.
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
🤣................... கட்டணம் எவ்வளவு என்று கேட்டுச் சொல்கின்றேன். அது சரி, உங்களுக்குக்காக கையெழுத்து போடப் போடும் மற்ற மூவரும் யார்....... நாலு பேர்களில் நான் ஒன்று............🤣. ஊரில் அந்த நாட்களில் 'கலாநிதி ஸ்டோர்ஸ்' என்று ஒரு பலசரக்கு கடை இருந்தது.......... இந்தப் பட்டம் கொடுக்கும் வியாபாரத்திற்கு அது நல்ல தோதான பெயர்................😜.
-
குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
👍.................... பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னை தான். முழு ஆதரவும் கொடுத்து, எப்போதும் தூக்கிச் சீராட்டியதும் தமிழ்நாடு அரசு தான்............... சந்திரபாபு நாயுடுவும், பவன் கல்யாணும் திடீரென தூக்கத்தில் இருந்து எழும்பி இருக்கின்றார்கள்................ இவர்களால் தான் சீமானுக்கு வேலை வருகின்றது................🤣 தெலுங்கு வழியாக வந்த தமிழர்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றார்கள் தமிழ்நாட்டில். கருணாநிதியின் குடும்பத்தையும் இப்படித் தானே சொல்கின்றனர். உதயநிதியும் 'தெலுங்கு பாய்' தான் இவர்களின் கணக்குப்படி.................. இதைத் தானே கஸ்தூரி சொல்ல ஆரம்பித்து, பின்னர் அவரைத் தேடிப் பிடித்தார்கள்.......😜.
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!
தினமும் நாலு அறிக்கைகள் விடவேண்டும் என்ற நிலையில் நாமல் இப்பொழுது இருக்கின்றார். கீதநாத்தும் இதே போல ஒரு கட்டாயத்தில் இருக்கின்றார். இந்திய ஒன்றிய அரசும், தமிழ்நாடு மாநில அரசும் அங்கிருக்கும் எங்களின் மக்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்குவதே இதற்கு ஒரு முடிவாகும். அதையே தான் முகாம்களில் 30 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வரும் எம் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். ஜெயலலிதா அவரின் கடைசி நாட்களில் இதற்கான முயற்சிகளை எடுத்தார்........... ஆனால் அவரின் திடீர் இறப்பின் பின், இந்தியக் குடியுரிமைச் சட்ட மசோதாவின் பின், இதைக் கண்டு கொள்வோர் இல்லை.........😌. அங்கேயே பிறந்து, படித்து, வளர்ந்து வரும் எம் மக்கள் குடியுரிமை இல்லை என்ற காரணத்தால் இழப்பவை மிக அதிகம். ஆசிரியப்பணி உட்பட எந்த அரச வேலைகளுக்கும் எம் மக்கள் தகுதியில்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர் அங்கே................😌.
-
அமெரிக்க வரலாற்றில் முதல் முறை; ஒரே நாளில் 1,500 பேருக்கு தண்டனையை குறைத்த பைடன்
பைடன் தன் மகனுக்கு முற்றான ஒரு பொதுமன்னிப்பு வழங்கியதை நியாயப்படுத்தும் முகமாக இப்பொழுது இப்படி பெரிய அளவில் செய்கின்றாரோ என்றும் தோன்றுகின்றது............... திருந்தியவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதில் தப்பேதும் இல்லை. ஆனால் மன்னிப்பு என்பது அவர்களையும், அவர்களின் செயல்களையும் சட்டத்திடம் இருந்து மறைப்பதற்காக அல்லது காப்பாற்றுவதற்காக என்னும் போது நீதி செத்துவிடுகின்றது.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அடப் பாவிகளா................ அசாத் போன்ற ஒருவருக்காகவும் நியாயம் கதைப்பீர்களா.............. இங்கு நீங்கள் அசாத்திற்காக நியாயம் சொல்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு தீராத வெறுப்பு வேறு எங்கோ ஒரு இடத்தில் இருக்கின்றது என்று பொருள்........................🫣. அது உள்ளிருந்தே கொல்லும்.........
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.
-
யாழ்ப்பாணத்தில் கூரைமேல் சோலார் அனுமதியில் முறைகேடு நடந்தது உறுதி!
'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன. அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே. ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.
-
மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்ற டக்ளஸ் - சுப்பையா பொன்னையா குற்றச்சாட்டு!
சரியான கணக்கு வழக்கு வெளியே வந்தால், எலான் மஸ்க் இரண்டாவது இடத்திற்கு போய் விடுவார் போலத் தெரியுதே............... நாங்களும் இடதுசாரிகள், நீங்களும் இடதுசாரிகள்................ இப்படியும் சொன்னர் இவ்வளவையும் செய்துவிட்டு......................
-
ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்
அதுவே தான். எம்ஜிஆர் திரைக்கு வெளியேயும் அதே பிம்பத்தை வைத்திருக்க வேண்டிய ஒரு நிலையில் இருந்தார். ஆனால் ரஜனி திரை வேறு, தன் சுயம் வேறு என்று காட்டியும், அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக தமிழ் சினிமாவில் இருந்தார் என்பது பெரும் ஆச்சரியமே. ரஜனியின் திரை வாழ்க்கை மாறியது போலவே, தமிழ் சினிமாவின் போக்கும் ரஜனியால் மாறியது. எம்ஜிஆர், சிவாஜி ஆதிக்கத்தின் பின்னர் 70களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் சினிமா வேறு ஒரு திசையை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. ஆனால், ரஜனியின் 'முரட்டுக்காளை' மற்றும் கமலின் 'சகலகலா வல்லவன்' தமிழ் சினிமாவை மீண்டும் பழைய பாதையிலேயே போக வைத்தது. ஷங்கர் இதற்கே வண்ணம் தீட்டினார். மணிரத்னம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களின் தாக்கத்தினால், இந்தப் போக்கிலிருந்து வெளியேற முயன்றார். ஓரளவிற்கே அவரால் தமிழ் சினிமாவை ரஜனி போன்ற கதாநாயகர்களிடமிருந்து விடுவிக்க முடிந்தது. பாலா வந்த பின்னர் தமிழ் சினிமா மாறியது. பாலா போல பலர் வந்தனர், வந்து கொண்டிருக்கின்றனர். நாயகர்களின் பிம்பங்களையும் தாண்டி மாற்றுச் சினிமாக்கள் இன்று பலவும் வந்து நன்றாக ஓடுகின்றன. புதிய முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அத்துடன் ரஜனியும், விஜய்யும் நிற்கின்றார்கள். பான் - இந்திய திரைப்படங்கள் இன்று ரஜனி போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு ஒரு அளவுகோலாகிவிட்டது. அல்லு அர்ஜூனாவின் 'புஷ்பா - 2' எட்டு நாட்களில் ஆயிரம் கோடி வசூல் என்பது புதுச் சாதனை. எந்த தமிழ் நடிகரும், ரஜனி உட்பட, 1000 கோடி வசூலை இன்னும் எட்டவில்லை. அமீர் கான், பிரபாஸ், ஷாரூக், அல்லு அர்ஜூன் என்று இது இன்னொரு வரிசை. ரஜனியோ, விஜய்யோ இதில் இல்லை. இன்றைய நிலையில் இவர்கள் வரவும் முடியாது. தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூல் கொண்டு வரும் ஒரு புதிய நட்சத்திரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது....................
-
குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?
இந்த இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய சாதனையை செய்திருப்பது பெரும் வியப்பே............❤️. தமிழ்நாட்டில் இந்த விளையாட்டிற்கு நல்லதொரு சூழல் அமைந்திருக்கின்றது...............👍.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
stent ஒன்றை அடைபட்ட இடத்தில் வைத்திருப்பார்கள், அண்ணா.............. பின்னர் சில மருந்துகளை கொடுத்திருப்பார்கள். சுரண்டி எல்லாம் எடுக்க முடியாது....................
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
எனக்கு தெரிந்த ஒருவருக்கு இந்த மாதிரியான வைத்திய முறைகள் தெரியும்............. ஆனால் அவர் மருத்துவர் இல்லை................. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி தான் அவர்............ கோவிட் காலத்தில் உடம்புக்குள் இருக்கும் சார்ஸ் வைரஸிற்கே நேரே மருந்தடிக்க வெளிக்கிட்டவர் அவர்................ இல்லை, கொலஸ்ட்ரோல் நீக்க இப்படியான முறை ஒன்று இல்லை, அது முடியாது என்றும் நினைக்கின்றேன். எடையை, உடல் பருமனை குறைப்பதற்காக liposuction என்று ஒன்றுள்ளது. அது வேறு.
-
சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!
சபாநாயகர் ஒரு பெரிய sabbatical leave ஆகப் போட்டு விட்டு, போய் எங்காவது பட்டம் பெற்றுக் கொண்டு வரலாம்............. அவராகவே பதவி விலகினார் என்றால் அது முறை..............
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
👍............... ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்படுவது முற்றிலும் வேறான நிகழ்வுகள், கோஷான்............👍. மாவீரர்கள் சங்கப்பாடல்கள் போன்றவர்கள்............... அழிவற்றவர்கள் மற்றும் தமிழின் முதன்மையான சொத்துகள். சொந்த மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்படுவது அசாத் போன்றோருக்கும் மற்றும் அவர்களின் வழி வந்தோருக்கும் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள். இன்றைய ரஷ்யர்கள் லெனினைக் கூட விடவில்லை.........😌.
-
மின்சார சபையை ஆக்கிரமித்துள்ள மாபியாக்களை கட்டுப்படுத்தாமல் மின்கட்டணத்தை குறைக்க முடியாது - மின்சார பொதுச் சேவை சங்கம்
ஆறு மாதங்களுக்கு மின்கட்டணத்தில் மாற்றம் இல்லை என்பது சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் உடனேயே மின்கட்டணத்தை குறைக்கின்றோம் என்று பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்து, பின்னர் மின்கட்டணத்தை குறைக்க முடியாது என்று சொல்வதை தான் மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். உறுதிமொழிகள், வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வீசி விட்டு, இப்பொழுது வெறும் கையை மட்டும் விரித்து விரித்து காட்டினால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் தான்................ எல்லாமே மாஃபியாவா நாட்டில்.....................🫣.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு இப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் நினைவிடம், சிலை, கல்லறை என்று வைத்தால், பின்னர் என்றோ ஒரு நாள் அவை அழிக்கப்படும் போல................ தாங்கள் கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள் என்று அறியாமல் ஒரு மாய உலகத்துக்குள்ளேயே வாழ்ந்து இருக்கின்றார்கள்....................
-
இறுதிவிருப்பம்
கே. சச்சிதானந்தனின் கவிதை ஒன்று. இதை ஜெயமோகன் அவரது தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். எங்கும் போரால் நிறைந்திருக்கும், அப்பாவி மக்களை ஆதரவற்றவர்களை பலவீனமானவர்களை கொன்று குவிக்கும் இன்றைய உலகிற்கு ஏற்ற ஒரு கவிதை இது வென்றோம் என்றவர்களே தோற்றவர்கள் ஆகின்றனர். https://www.jeyamohan.in/208930/ ********************************************************** இறுதிவிருப்பம் ---------------------- நான் அசோகன் பிணக்குவியல்களின் துயரம் நிறைந்த காவல்காரன் சகோதரர்களின் தலைகளை மிதித்து ரத்தநதியை கடக்கும் துரியோதனன் குருதிகலசத்தை கிரீடமாக்கிக்கொண்ட வெறும் ஊன்தடி என் கழிவிரக்கம் பாலைவெளியில் அலையும் ஆண்மையற்ற காளை என் மனமாற்றம் குருதி படிந்த வாளின்மீது சுற்றப்பட்ட காவி தர்மச்சொற்பொழிவாற்றும் இக்கனவுகளால் என் பாவத்தை மறைக்கமுடியாது அவையும் என் கீர்த்தித்தூண்களென்றாகும் என் தீமையின் விரைத்தெழல்கள். என் சக்கரத்தின் ஒவ்வொரு ஆரக்காலும் நான் ஒடுக்கிய ஒரு வம்சத்தின் முதுகெலும்பு என் சிம்மங்களின் ஒவ்வொரு சடைமயிரும் நான் எரித்த நகரங்களின் சிதைச்சுவாலை. இருபோர்களிலும் நான் தோற்றேன் எனக்கு மரணதண்டனை அளியுங்கள் என் இறுதிவிருப்பம் இதுவே இப்புவியின் இறுதி அரசன் நானேயாகவேண்டும்.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
🤣................ நானாவது ஒரு பதில் எழுதினேன்......................😜. முற்றிலும் பகிடியே, அண்ணா. உங்களின் கேள்விகள் மரம் அரியும் வட்ட வாள் போன்றது........ சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்........................👍.
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
உண்மையே கிருபன், இது ஒரு அளவேயில்லாமல் வால் போல நீண்டு வளர்ந்து கொண்டே போகுதே.......... இளங்குமரனும் மிகவும் துடிப்பானவர் என்று சொன்னர்கள்............. அவர் ஊழியர்களுக்குகாக நிற்கவேண்டும் அல்லவா..........
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
🫣................... இது இன்னுமொரு மருந்தே இல்லாத நோயாகக் கிடக்குதே ........................
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
11 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாக இருக்கின்றார்கள் என்று ஒரு கணக்கு சொல்லுகின்றனர். ஆனால் அதில் இரண்டு லட்சம் மக்களைக் கூட கைது செய்து வெளியேற்றுவதற்கு தேவையான வளங்கள் அதற்கு பொறுப்பானவர்களிடம் இல்லை என்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக விவசாயம் மற்றும் தொழிற்துறைகளில் இவர்களின் இடத்தை யார் நிரப்பப் போகின்றார்கள்.................. அமெரிக்கர்களும், இந்தியர்களும் குனிந்து புல்லுப் பிடுங்கப் போவதில்லை........ எனக்குத் தெரிந்த அளவில் என்னுடைய சுற்றுவட்டாரத்தில் புல்லு வெட்டிக் கூட்டும் ஒரே ஒரு 'இந்தியன்'.............. நான் மட்டுமே............🤣.
-
"குடியுரிமை ரத்து.." பகீர் கிளப்பிய டிரம்ப்.!
ஒரு சிரிப்புக்காகவே அதை எழுதினேன், கோஷான்.......... கூகிள், மைக்கிரோசாஃப்ட் இப்படி எல்லாமே அவர்களாலேயே நிரம்பி இருக்கின்றது என்றும் அதில் சொல்லியிருந்தேன். தொழில்நுட்ப துறை மட்டும் அல்ல, மருத்துவர்கள், விஞ்ஞானிகள்................ இப்படி இந்தியா அமெரிக்காவிற்கு துறைசார் நிபுணர்களையும், பணியாளர்களையும் உருவாக்கும் ஒரு தொழிற்சாலை ஆகிவிட்டது. இரு பக்கங்களும் வெற்றி - வெற்றி என்று கருதுகின்றார்கள்...........