Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. பகிரங்கமாக யார் எழுதியிருக்கின்றார்கள் என்று தான் முதலில் அடியில் தேடினேன்........... பகிரங்க அநாமேதயக் கடிதம் என்ற புதுவகையைச் சார்ந்தது இது........... 🤣.
  2. 🤣........... அவ்வளவு பெரிய பொதுநலவாதிகள் வெளிநாடுகளில் இருப்பது போல தெரியவில்லை........ ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்த்லுக்கு 11 பில்லியன் ரூபாய்கள் தேவை என்று தேர்தல் ஆணையாளர் கேட்டிருக்கின்றார். இரண்டு தேர்த்லுக்கும் சேர்த்து கிட்டத்தட்ட 70 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு. பெரிய செலவு தான்............ இது மக்களின் பணம் தான். ரணில் தான் இருப்பில் ஐந்து பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக விட்டுச் செல்கின்றேன் என்று அவரது கடைசிப் பேச்சில் சொல்லியிருந்தார்........... அங்கேயிருந்து தான் எடுப்பார்கள் போல.
  3. பிரதமர் ஹரிணி அமரசூரியவின் முள் பாதையை விட, எங்களின் பாதைகளில் எவ்வளவு முட்களை நாங்கள் பார்த்திருக்கின்றோம் என்கிறீர்கள்................🤣. உங்களுக்கு அப்படி நடந்து, அப்படியே திருமணமும் நடந்தது மிகச் சிறப்பான ஒரு விடயம். ஊதி வைத்த பலூன்கள் ஒவ்வொன்றாக உடைய உடைய மற்றவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள்.......
  4. இப்படியானவர்களிடமிருந்து நாங்கள் ஜனநாயகத்தை எதிர்பார்க்கவே முடியாது. ஒரு கட்டப் பஞ்சாயத்து முறையை எதிர்பார்க்கலாம். ஆனால், இவர்களுக்குள் இருக்கும் ஓரிரு சந்தர்ப்பவாதிகள் தவிர்த்து ஏனையோர் கொள்ளை அடிக்கமாட்டார்கள். ஆடம்பரத்தில் திளைக்கமாட்டார்கள். அரைவாசி சிங்கள மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு உணவு - உடை - உறையுள் என்ற மூன்று மிக அடிப்படைத் தேவைகளுக்குமான ஒரு நிரந்தர வழியும், ஊழலற்ற நிர்வாகமும் போன்றே தெரிகின்றது. அவர்களின் தெரிவு தான் இவர். 'தமிழர் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு.............' என்ற கதை, கவிதையெல்லாம் இவர்களிடம் எடுபடவே எடுபடாது. அநுர தமிழர்களுக்கு தனியே எதுவும் கொடுப்பேன் என்று சொன்னால், அது முழுப்பொய்யே அன்றி வேறெதுவும் இல்லை.
  5. Tiran Alles தான் இதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் மற்றும் இறுதிவரை அந்த குளோபல் நிறுவனத்திற்காகப் போராடியவர். 10 மில்லியன் டாலர்கள் லஞ்சம் என்று ஒரு குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்பட்டது. தான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, வாங்கியதாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகின்றேன் என்றார். எல்லா நாடுகளிலும் இப்படியான அரசியல்வாதிகள் இந்த ஒரு வசனத்தை மறக்காமல் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்......... பின்னர் உயர் நீதிமன்றம் உத்தரவு போட்ட பின்னும், பழைய நடமுறைக்கு போகாமல், ஆறு மாதங்கள் வேண்டும் என்று இவரே இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இவரின் கீழ் இருந்த ஆணையாளர் முந்தாநாள் சிறைக்கு போனார். பழைய நடைமுறையில் விசா வழங்கும் முறை உடனேயே மீண்டும் வந்துவிட்டது........ ரஜனியின் 'சிவாஜி' படத்தில் 'ஆபீஸுக்கு வாருங்கள்.........' என்று ஒரு காமடி இருக்கிறது தானே........ Tiran Alles அவுஸ்திரேலியா குடியுரிமை உள்ளவர் என்று எங்கோ வாசித்த ஞாபகம். ஓடி விட்டாரா என்று தெரியவில்லை. இவர் முன்னொரு காலத்தில் ஜேவிபி ஆதரவாளராக இருந்தவர். விமல் வீரவன்ச போல அவர்களில் ஒருவராக இருக்கவில்லை, ஆனால் அவர் போன்றவரே இவரும் போல.........
  6. இவ்வளவு விலையா, அண்ணை..........🤨. கொள்கையும் மண்ணும்............. நாலு சிவப்பு சட்டைகள் வாங்குகிறோம், கொழும்பில் போய் இறங்குகிறோம்....🤣.
  7. நான் போன நேரத்தில் இந்த மாற்றம் வரவில்லை, அண்ணை. அதன் பின்னரே வந்தது. ஒவ்வொரு விசாவிலும் 25 டாலர்கள் என்ற கணக்கில் விஎஃப்எஸ் நிறுவனைத்திற்கு போய்க் கொண்டிருந்தது. வருடத்திற்கு இரண்டு மில்லியன் பயணிகள் என்று எடுத்துக் கொண்டால், 50 மில்லியன் டாலர்கள் வருடத்திற்கு......🫢. அந்த நிறுவனத்தை ஏற்கனவே வெளியேற்றிவிட்டார்கள்.
  8. ஒரு மூன்று வருட வாழ்க்கையிலேயே எல்லா கணவன்மார்களின் இமேஜும் வீடுகளில் பணால் ஆகிவிடும் என்பது என் அனுபவம் மற்றும் தெளிவு................. எனக்கு முப்பது வருடங்கள் ஆகப் போகுது........ ஒரு ஓரமாக நின்று பினாத்துங்கோ, எனக்கு நிறைய வேலை இருக்குது என்று தான் என் வீட்டில் சொல்லுவார்.........
  9. நேற்று குடிவரவு குடியகல்வு அதிகாரியை நீதிமன்றம் நீதிமன்றக் காவலில் சிறையில் போட்டது. உடனேயே வழிக்கு வந்துவிட்டார்கள்.............. விசா வழங்கும் புதிய முறையிலிருந்து பழைய முறைக்கு போக ஆறு மாதங்கள் எடுக்கும் என்று கதை விட்டுக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது ஒரே இரவில் பழைய முறைக்கு போய் விட்டார்களே...........
  10. 🙃......... அங்கே நாட்டில் ஒரு நீண்ட வரிசையே நிற்குது...... ஒரு நண்பன் வாக்கு போட்டு விட்டு, ஒரு விரலை படமும் எடுத்து போட்டு விட்டு, சிஸ்டம் மாறவேண்டும் என்ற செய்தியும் போட்டிருந்தான் என்று முன்னர் இங்கு எழுதியிருந்தேன். அவன் இப்ப அங்கே ஒரு கோயில் கட்ட தயாராகி விட்ட மாதிரி தெரிகின்றது....... அநுரவிற்குத்தான்......படித்தவன், பதவியிலும் இருக்கின்றான்................ அவனுக்கு இப்ப எல்லாம் ஒரு நேர்கோட்டில் வருகிறது போல...😀. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி சார்பாக கிழக்கு மாவட்டம் ஒன்றில் நின்று படுதோல்வியடைந்தவர்களில் ஒருவனும் இதே வகுப்பு தான்........... இந்த தடவையும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பான்...... எனக்குத் தெரிந்த அளவில் அவன் செய்யும் ஒரே வேலை தேர்தலில் நிற்பது மட்டுமே.............😜. இப்படி இன்னும் சில உதாரணங்கள் உண்டு. இதில் எவரையும் அநுர கண்டுகொள்ளவில்லை என்றால், அநுர சரியான வழியில் போக முயற்சி செய்கின்றார் என்று சொல்லலாம்..........
  11. பலமான தரப்பு...... பல் தரப்பு....... பகிஷ்கரிப்பு............ இப்படியே மாறி மாறி ஒன்றைச் சொல்லிக் கொண்டு, அந்தப் பாராளுமன்றத்துக்குள் போவதில் மட்டும் குறியாக இருக்கின்றீர்கள் போல........... அந்தக் கேன்டீனில் சாப்பாடும் அருமையாக இருக்கும் என்று சொல்கின்றனர்.............
  12. விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை............
  13. விஜய்காந்த்தின் 'ரமணா' படத்தை கிட்டடியில் திரும்பவும் பார்த்திருக்கின்றீர்கள் போல.........🤣. உங்களுக்காக ஒரு AI இடம் இந்தக் கேள்விகளை கேட்டேன். 'அப்படி எல்லாம் ஒரு தகவலும் இங்க கிடையாது, போ போ.........' என்று கலைத்துவிட்டது..........
  14. அப்படியா............... ஏமாற்றுவது என்பது தான் முடிவு, ஆனால் என்ன பெயரில் ஏமாற்றுவது என்பதில் தான் உங்களுக்கிடையே இழுபறிகள் வரும் போல..............🤪.
  15. ஊரில் கோயில் கும்பாபிஷேகம் ஒன்று வருகுது.......... அதைச் சாட்டாக வைத்தாவது வேலைக்கு ஒரு மூன்று கிழமைகள் கட் அடிப்பமோ என்று நினைத்தனான்........... இப்ப வேண்டாம், அடுத்த கோயில் கும்பாபிஷேகம் வரட்டும்............🤣. அங்கே படித்த எல்லாருக்கும் இவர்களைத் தெரியும். என்னையும், நீர்வேலியானையும் போல இங்கு களத்தில் இன்னும் சிலராவது இருப்பார்கள். ஆனால் அடக்கமாக இருக்கின்றார்கள்...... அவர்களுக்கு தான் பதவிகளோ தெரியவில்லை...........😜.
  16. 🤣..... ரசோதர என்று என் பெயரை மாற்றிவிடப் போகின்றார்கள்....
  17. அருமையான கவிதை நொச்சி..........🙏. 'நான் பார்க்காதது எதையும் நான் எழுதவில்லை.........' என்பது போல சில பெரிய எழுத்தாளர்கள் சொல்லியிருக்கின்றனர். உங்களின் எழுத்தும் அவ்வாறானதே.........👍. ஒரு நாளுக்கு மட்டுமே என்றால் மரவள்ளியும், சம்பலும் அற்புதம் தான்..........அதுவே தினம் என்றால் அது வேற நிலைமை. 'அற்புதங்கள்....' என்ற சொல் அவநம்பிக்கையையே உடனே கொண்டு வந்துவிடுகின்றது. எங்களின் ஏராளமான முன் அனுபவங்கள் அப்படி.
  18. முந்தாநாள் இது ஒரு செய்தியாக நியூஸ் 18 இல் போய்க் கொண்டிருந்தது. செய்தியில் இவர் இன்னும் அதிகமாகச் சொன்னதாகாச் சொல்லியிருந்தார்கள். தமிழக மீனவர்கள் தெரிந்தே எல்லை தாண்டுவதில்லை என்றும், சமீபத்தில் இலங்கை மீனவர்கள் இருவர் காணாமல் போயிருந்த பொழுது மயிலாடுதுறை மீனவர்கள் சேர்ந்து தேடி உதவினார்கள் என்றும் சொல்லியிருந்தார்.................. அப்படியான மயிலாடுதுறை மீனவர்களை நீங்கள் கைது செய்து வைத்திருக்கின்றீர்களே என்றும் கேட்டார்...........🫢. பொறுப்பு மிக்க இடங்களில் இருப்பவர்கள் கூட இப்படி அரைகுறையாக இருந்தால், விடயங்களை தெரிந்து வைத்திருந்தால் என்ன தான் செய்வது, எப்படி பிரச்சனைகளை தீர்ப்பது....... சமூக ஊடகங்களில் சும்மா பொழுது போக எழுதும் நாங்களே எவ்வளவு கவனித்து எழுதிக் கொண்டிருக்கின்றோம்...............
  19. அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர். புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.
  20. நீங்கள் இப்ப இடையில் ஒரு லீவு எடுத்து, கொஞ்ச நாட்கள் ஒரு கணக்கு ட்யூசனுக்கு போனனீங்கள் தானே........... அந்தக் கணக்கு வாத்தியாரை பாவபுண்ணியம் பார்க்காமல் போட்டுத் தள்ளிவிடுங்கோ............🤣.
  21. 🤣......... வரும் தேர்தலில் தான் போடியிடப் போவதில்லை என்றும், இரண்டு வருடங்களுக்க்கு ஓய்வெடுக்கப் போகின்றேன் என்று ரணில் சொல்லியிருக்கின்றாரே........... நீங்கள் வேற இரண்டு வருடங்கள் தான் இந்த ஆட்சி என்கின்றீர்கள்.......... ரணில் வந்தால் ஜனாதிபதியாகத் தான் வருவாரோ...........😜. ** இரண்டு வருட ஓய்வு என்று ரணில் சொல்லவில்லை, நானா அடிச்சு விட்டது..........
  22. 🤣...... நம்மட கதை....... அதை இங்க எவர் கேட்கப் போகின்றார்கள், கந்தையா அண்ணை........ புலம்பெயர்ந்தவர்கள் பலர் பொதுவாக தங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் அந்தக் காலத்தில் அப்படிக் கஷ்டப்பட்டோம், இப்படி அலைக்கழிந்தோம் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். அதைக் கேட்ட பிள்ளைகள் 'உஷ்ஷ்....... யப்பா........' என்று ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார்கள் பாருங்கள்.......... அது விலை மதிப்பற்றது......... இப்ப அநுர அப்படி ஒரு கதை சொல்லியிருக்கின்றார். இந்தக் கதையின் பின், 42 வீதத்திலிருந்து அடுத்த தேர்தலுக்கு ஒரு 50 வீதமாகவேனும் கூட வேண்டும்.............🤣.
  23. இப்படியானவற்றை உண்மையிலேயே செய்யலாம். பலநாடுகளில் இருக்கும் வெற்றிகரமான நடைமுறைகளையும் ஆராய்ந்து, அதில் இருக்கும் குற்றம் குறைகளை தவிர்த்து, எங்களின் நாட்டிற்கு பொருத்தமான முடிவுகளை நீண்டகால நோக்கில் எடுக்கலாம்..............👍. நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்து விட்டு, அப்படியே வெளிநாடுகளுக்கு ஓடித் தப்பியவர்களிடமிருந்து ஒரு தொகையை மீட்கப் போகின்றோம் என்று ஒரு திட்டம் கொண்டு வராமல் இருக்க வேண்டும்.............🤣. எங்களின் முகத்தைக் கண்டால், அப்படி ஒரு திட்டம் அவர்களின் மனதில் தோன்றினாலும் தோன்றக்கூடும்............😜.
  24. 🤣............... ஒரே வாங்கில் இல்லை, அண்ணை, இருவரும் வெவ்வேறு பீடங்கள்...... மேலும், அநுர வகுப்புகளுக்கு போயிருப்பார் என்றும் நான் நம்பவில்லை.............😜. ஏனென்றால் அவர் இரண்டு வருடங்கள் பிந்தித்தான் பாஸாகி வெளியே வந்திருக்கின்றார்.........
  25. இது தான் நிர்வாக வித்தியாசம்............👍. இதுவே பழைய ஆட்சியாளர்கள் என்றால்: தேர்தலுக்கு நிதி வேண்டும் என்பார் தேர்தல் ஆணையாளர் திறைசேரியை கேட்க வேண்டும் என்பார் நிதி அமைச்சர் மத்திய வங்கி ஆளுனருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும் எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள் அதற்கிடையில் யாரோ ஒருவர் நீதிமன்றில் தேர்தல் திகதி சம்பந்தமாக வழக்கு ஒன்றை போடுவார் தேர்தல் திகதி சொல்லவே ஒரு மாதம் எடுத்திருக்கும்..............🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.