-
Posts
9545 -
Joined
-
Days Won
16
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by யாயினி
-
< அக்கரைப் பச்சை >>அண்மைக் காலத்தில் தாயகத்தில் வெளி நாட்டு மோகம் அதிகரித்து இருப்பது கண்கூடு;; இலங்கையில் பொருளாதார நெருக்கடி மிகுந்துள்ள இவ் வேளையில் தப்பிப் பிழைக்கவும், குடும்ப மேம்பாட்டுக்காகவும் புலம் பெயர்வு என்பது பலருக்கும் அவசியமானதாகப் படுவது புரிகின்றது;;//வெளி நாட்டிற்கு செல்வதாயின் முதலில் நீங்கள் போய் 1-2 வருடம் உழைத்து பின் குடும்பத்தை அழையுங்கள்;; நீங்கள் நினைப்பதொன்று அங்கு இருப்பதொன்று// என்ற சமூக வலைத் தளப் பதிவுகளும் காணக் கிடக்கின்றது;;தாய் மண்ணை நேசிப்பவர்களுக்கும்; அம்மா அப்பா, சுற்றம் சூழல், உற்றார் உறவினர் என்று சமூக, குடும்ப பந்தத்தைத் தொடர விரும்புவர்களுக்கும்; முக்கியமாக மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றைப் பேண வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் புலம் பெயர் வாழ்க்கை என்பது கசப்பாகவும் ஏமாற்றம் தருவதாகவும் இருக்கும் என்பது எனது பார்வை;தாங்கள் ஏற்கனவே நாடு விட்டு நாடு வந்து, தாய் மண்ணில் எஞ்சி இருப்போருக்குப் புத்தி புகட்டுவதாகத் தாயக மக்கள் மனசு அடித்துக் கொள்வதையும் உணர முடிகின்றது;;எண்பதுகளில் போர் மேகம் சூழ்ந்திருந்த காலப் பகுதியில் புலப் பெயர்வு என்பது நிர்ப்பந்திக்கப் பட்ட ஒன்று என்றே எடுத்துக் கொள்ளல் வேண்டும்;; ஒரு அமைதி கிடைக்கும் பட்சத்தில் மீண்டும் தாய் மண் செல்லும் எண்ணத்ததுடன் வந்தோரே அதிகம்;ஆனால் அமைதிப் பேச்சுவார்த்தை இழு பட்டுப் போக;; இங்கு வந்தவர்களின் வாரிசுகள் பெருகி, குடும்பம் வேரூன்றி விழுதிறக்கி ஆழப் புதைந்து விட்ட நிலையை என்னவென்று சொல்ல;; இன்று சங்கிலிக் கோர்வையைக் கழற்றி விட்டு மீண்டும் நிரந்தரமாகப் பிறந்த மண் வந்து விட முடியாத நிலை பலருக்கும் நிலவுவதே யதார்த்தம்;இன்றோ தாய் மண்ணில் பூட்டிக் கிடக்கும் வீடுகள் அதிகம்;; அநேக வீடுகளில் வயது முதிர்ந்த அம்மா அப்பாக்கள் தனித்து விடப் பட்ட நிலையில்;; அதிலும் துணையை இழந்த அம்மாக்களின் தனிமை வாழ்வு என்பது வெறுமையை உணர்த்திடும் வாழ்வாகிப் போய்;;அவர்களுக்குக் காசு பணம் டொலரில் வருவதாக இருக்கலாம்;; ஆனால் பிள்ளைப் பாசம், பேரப் பிள்ளைகளின் குதூகலம் என்பன அவர்களுக்கு எட்டாக் கனியாகவே;; பெற்றதனால் ஆய பயன் இதுதானா என்று அங்கலாய்க்கும் தனித்த ஜீவன்கள் அவர்கள்;;மாறாகப் புலம் பெயர்ந்தவர்கள் மகிழ்வாக இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழாமல் இல்லை;; அதற்கான ஒரே பதிலாக, "பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை" என்பதை உணர்ந்து வருந்துகின்றோம் என்றே கூற முடியும்;;மேலும் "நாம் தமிழர்" என்று மார் தட்டி வாழ விரும்பிய நாங்கள், இன்று பல் இன, பல் மொழி பேசும் வேறுபட்ட கலாச்சார பின்னணியைக் கொண்டவர்களைத் திருமணம் செய்து கொண்டு அல்லல் படுவதையும் கண்டு கொண்டுதான் உள்ளோம்;;இங்குள்ள எம் வாரிசுகளுக்குத் தமிழ் எழுத வாசிக்கத் தெரியாது;; ஒரு தேவாரம் திருவாசகம் துண்டறத் தெரியாது;; தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்றால் என்னவென்றே புரியாது இரண்டும் கெட்டான் நிலையில் தத்தளிப்பதைக் காண முடிகின்றது;;இன்னும் ஒரு கால் நூற்றாண்டில் எமது வாரிசுகளுக்கு எமது தாய் மண் மறக்கப் பட்ட நிலமாக அல்லது விடுமுறைக்கான தளமாக இருக்கப் போவதே யதார்த்தம்;கூடு விட்டுப் பறந்து வந்த எமது பிள்ளைகளுக்கு, தாய் மண்ணில் எஞ்சி நின்ற எம் சகோதரங்களையோ அவர்களின் பிள்ளைகளையோ அடையாளம் தெரியாத நிலையே நிலவப் போகின்றது;; அவர்கள் மீது அன்பு பாசம் என்பது துளியும் இருக்கும் என்று எண்ணவும் முடியாது;;மச்சான் மச்சாள், அண்ணா தங்கை என்று உறவைப் பேணுவார்கள் என்றும் கூற முடியாது; எனவே, தாய் மண் உறவுகளே;; எதற்கும் சிந்தித்துச் செயல் படுவது சாலவும் சிறந்தது;;நீங்கள் நினைப்பது போல் அக்கரைக்கு இக்கரை பச்சை இல்லை;அருண் செல்லப்பா
-
மலையக தமிழ் மக்களுக்கான இன்றைய தேவை என்ன ....?°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°இற்றைக்கு 159 ஆண்டுகளுக்கு முன் 05 .02 .1866 ஆம் ஆண்டு மன்னார் படகுத்துறையிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு 120 தொழிலாளர்களையும் 150 டன் சரக்குகளையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஆதிலட்சுமி என்ற பெயர் கொண்ட கப்பல் நான்கு மைல் தூரம் சென்ற நிலையில் கடும் சுழிக்காற்றில் சிக்கி அள்ளுண்டு தூக்கி எறியப்பட்டு கடலில் கவிழ்ந்த போது அதில் பயணித்த நூற்றி இருபது தொழிலாளர்கள் கடலில் மூழ்கி மாண்டு போனார்கள் . இருந்தும் கப்பலின் மாலுமிகள் மற்றும் சேவையாளர்கள் 14 பேர் காப்பாற்றப்பட்டனர் என்று "தி ஒப் சேர்வர் " பத்திரிகை செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தியிலிருந்து ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது . அந்தக் கப்பலில் பிரயாணித்த ஒட்டுமொத்த சேவையாளர்கள் 14 பேர் காப்பாற்றப்பட்டிருந்த போதும் ஏன் ஒரு தொழிலாளர் கூட காப்பாற்றப்படவில்லை என்பதற்கு காரணம் அந்த தொழிலாளர்களும் அந்தக் கப்பலில் ஏற்றி வரப்பட்ட 150 டன் பண்டங்களாகவே கருதப்பட்டு மூழ்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதாகும். இப்படி நூற்றுக்கணக்கான கப்பல்களும் படகுகளும் தோணிகளும் கடலில் மூழ்கி ஆயிரக்கணக்கானோர் மாண்டொழிந்து போயிருந்தாலும் இன்று அவர்களைப் பற்றி சிந்தித்து கவலைப்படுவோர் யாரும் இல்லை.ஆனால் அத்தகைய மரணங்களில் இருந்து தப்பி பிழைத்து கண்டிச்சீமை நோக்கி வந்தவர்கள் தான், ஆரம்பத்தில் கோப்பி பயிர்செய்கை, அதன் பின்னர் தேயிலை , தென்னை , ரப்பர் ஆகிய பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டு இன்று வரை மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணி வருமானத்தை பெற்றுக் கொடுத்து இந்த நாட்டை வளம் கொழிக்க செய்தார்கள். நேற்று வரை இந்த நாட்டின் பொருளாதாரம் செல்வ செழிப்புடன் இருந்திருக்கிறது என்றால் அதற்கு எமது மக்களின் கடின உழைப்புதான் காரணம். ஆனால் அதற்குப் பிரதி உபகாரமாக இந் நாட்டை அடுத்தடுத்து ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் அவர்களுக்கென ஒன்றையும் வழங்கவில்லை மாறாக அவர்களின் பிரஜா உரிமையை பறித்து 40 ஆண்டுகாலம் நாடற்றவர்களாக ஆக்கினார்கள். அதன் பின்னர் சிறிமா - சாஸ்திரி என்ற ஒப்பந்தத்தை கொண்டு வந்து அவர்கள் அனைவரையும் இந்தியாவுக்கே துரத்தி விட முயற்சி செய்தார்கள் . அடுத்தடுத்து முடுக்கி விடப்பட்ட வன்முறைகளால் அவர்களது உயிர்கள் , உடைமைகள், வீடுகளை எரித்து சித்திரவதை செய்தார்கள்.இவர்களது உழைப்பினாலேயே கொழும்பு துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்தும் ஏற்படுத்தப்பட்டது. இலங்கை முழுவதும் பெருந்தெருக்கள் அமைக்கப்பட்டன. ரயில்வே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. இத்தகைய ரயில் பாதைகளும் விருந்தெருக்களையும் சார்ந்ததாக பெரும் பாலங்களும் குகைவழிப் போக்குவரத்தும் உருவாக்கப்பட்டது. இவற்றை அமைக்கும் பணியில் நேரடியாகவே இம்மக்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நாட்டில் பொது வேலை திணைக்களம் அன்று முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டு இலங்கையின் அனைத்து நகரங்களிலும் நகர சுத்தி தொழிலாளர்கள் என்போர் குடியமர்த்தப்பட்டனர். இலங்கையில் சிறு முதலாளித்துவ பிரிவினர் என்ற ஒரு வர்க்கம் உருவாகி அவர்கள் தேசிய முதலாளிகள் என்ற பெரும் உள்ளூர் வர்த்தகர்களாக உருவாகினர். அவர்களில் இருந்து தோன்றியவர்களே இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரித்தானியை எதிர்ப்பு இயக்கத்திற்கும் காரணமாகினர்.இலங்கையின் சிறு முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதன் காரணமாகவே அவர்களின் பரம்பரையிலிருந்து தோன்றியவர்கள் இங்கிலாந்துக்கும் பிற நாடுகளுக்கும் சென்று ஆங்கில கல்வி கற்று திரும்பி வந்து இந்த நாட்டுக்கு அரசியல் தலைமைத்துவத்தை தந்தார்கள். இவர்களது உழைப்பால் உருவானதே தேயிலை பொருளாதாரம் என்ற " சிலோன் டீ " என்ற வர்த்தக நாமமும் அது மட்டுமன்றி தேயிலையை மையமாகக் கொண்டு பல்வேறு சேவைகளும் உப வர்த்தக பிரிவுகளும் உருவாகின.காடுகளை அழிக்கும் ஒப்பந்தக்காரர்கள், தொழிலாளர்களை அழைத்து வந்து வழங்கும் ஒப்பந்தக்காரர்கள் , பெருந்தோ ட்டங்களுக்கான உணவு வகைகளை அனுப்பி வைக்கும் ஒப்பந்தக்காரர்கள் , சில்லரை, மொத்தவிற்பனை, கட்டிட நிர்மாணம் , சாராய மற்றும் கள் தவறனைகள் இப்படி பல்வேறு வர்த்தகத் துறைகள் வளர்ச்சி அடைந்தபோது மேட்டுக்குடியினர் என்ற ஒரு வர்க்கமும் இந்த நாட்டில் உருவானது . பின்னர் அவர்களே நாட்டின் அரசியல் நிர்வாகத்தை கட்டுப்படுத்தும் சக்தியாக மாறினார்கள்.என்ற போதும் இவற்றையெல்லாம் தாண்டி இன்று இந்த நாட்டில் மலையகத் தமிழர் ஒரு தனியான தேசிய இனமாக உருவாகி இருக்கின்றனர். அவர்களது சனத்தொகை அண்ணலவாக 18 லட்சமாக காணப்படுகிறது என்று ஒரு உத்தியோகபூர்வமற்ற கணிப்பீடு காட்டுகிறது . எனவே அவர்கள் மேலும் தாமதிக்காது ஒரு தேசிய இனம் என்ற தோரணையில் தமக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்ள முற்பட வேண்டும் . மேற்படி சனத்தொகைக்கு ஏற்றபடி பாராளுமன்றத்திற்கு அதிக உறுப்பினர்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளை அவர்களே செய்து கொள்ள வேண்டும் . தேசிய அரசியல், மாகாண அரசியல், உள்ளூராட்சி மன்றங்கள், மாவட்ட செயலாளர் , தமிழ் பிரதேசங்களுக்காண கல்வி அதிகாரிகள், முக்கியமான அரசு சேவைகளில் தம்மை இணைத்துக் கொள்ளுதல், சனத்தொகைக்கு ஏற்ப கிராம சேவையாளர்கள் , சுகாதாரம் , கல்வி, போன்றவற்றில் தமது வகி பாகத்தை பெற்றுக் கொள்ளுதல் போன்ற விடைய பரப்பளவுகளில் அவர்கள் முனைந்து போராடி செயல்பட்டு நமது உரிமை களைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற இலக்கை அடைதலே அவர்களது இன்றைய தேவையாக இருக்கிறது என்பதனை இத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.சட்டத்தரணி இரா. சடகோபன்
-
Please read if you like writer Sujatha..!சீனியர் சிடிசன்களுக்கு அர்ப்பணம்.Youngsters must readதனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது:"மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.மெரீனாவில் நடக்கும்போதுஎதிர்ப்படுபவர்கள் பெரும்பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட்பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்."யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்."எதுக்குப்பா?""தொடுங்களேன்!"சற்று வியப்புடன் தொட்டார்."மத்த விரல்களை றெக்கை மாதிரி அசையுங்கோ!" என்றேன்.''இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்."ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து...""இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்."உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?""ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னீங்க. மறந்துட்டீங்க!" என்றேன்.தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன.ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால்,எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது.பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை.'படையப்பா'வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகையின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒருமணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை. மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள்.இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்!கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது...இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது.ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர் தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன்.பொதுவாகவே, பொறாமைப் படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன.ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன்.சின்னவராக இருந்தால், 'பரவால்லை... நாம தப்பிச்சோம்!' என்றும், பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்து, 'பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு என்றும் எண்ணுவேன்.எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்...ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக்கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.Today I am alright, thank God!ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன்ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும்,நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன்.நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்...முதலிடத்தில்உடல் நலம்,மனநலம்,மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது,தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது,இன்சொல்,அனுதாபம்,நல்ல காபி,நகைச்சுவை உணர்வு,நான்கு பக்கமாவது படிப்பது,எழுதுவதுபோன்றவை பட்டியலில் உள்ளன"-Writer Sujatha.----------------------------------------
-
Toronto - Montreal நகரங்களுக்கு இடையிலான விமான சேவைகளை WestJet விமான நிறுவனம் எதிர்வரும் 2024 ஆண்டு April மாதம் வரை நிறுத்துகிறது.
-
ஆரோக்கியத்தை விட மற்ற எதுவுமே பெரியதில்லை என்பதை மருத்துமனை புரிய வைக்கும்
சுதந்திரத்தை விட விலை விலை மதிப்பானது வேறு ஏதும் இல்லை என்பதை சிறைச்சாலை புரிய வைக்கும்.
உயிரோடு வாழ்வதை விட பெரியது எதுவுமில்லை என்பதை சுடுகாடு புரிய வைக்கும்...படித்ததிலிருந்து
-
இருபது வயதுவரை பறவை வாழ்க்கை சுற்றித்திரிகிறோம்.
நாற்பது வயதுவரை கழுதை வாழ்க்கை பொதி சுமக்கிறோம்.
அறுபது வயது வரை நாய் வாழ்க்கை அலைந்து திரிகின்றோம்.
எண்பது வயது வரை நத்தை வாழ்க்கை கூட்டுக்குள் ஒடுங்குகிறோம்.
இறக்கும் வரை கொக்காய் தவமிருக்கிறோம் அமைதியான அழைப்பிற்காய்.நான் அமைதியாயிருந்து வாசிப்பதிலிருந்து...✍️👋
-