Everything posted by குமாரசாமி
-
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனின் முன்னாள் சபாநாயகர் உயிரிழப்பு
உப்பிடியான வேலையளை செய்யக்கூடிய ஆளெண்டால் புட்டின் தான்🤣 எனவே உது புட்டின்ர நாசகார வேலை எண்டு அடிச்சு சொல்லுறன்.😎
-
நடனங்கள்.
எச்சரிக்கை. 18+ 👈 பால்குடிகள் ,குஞ்சுகுருமன்கள் மற்றும் கண்ணியமானர்களுக்கு உகந்த நடனமல்ல. சதிராட்டம் என்பது இது தானோ? https://www.youtube.com/watch?v=vy3BRUrNj9s
-
ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
எல்லாம் கையில வைச்சிருக்கிற புத்தகம் செய்யிற வேலை.😎 அந்த புத்தகத்தின் மூலம் ஒரு செய்தியை சொல்லுறார் கண்டியளோ😂- சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
தேவையில்லாத விசயத்துக்கும் அவசியமில்லாத விசயத்துக்கும் போய் மூக்கை நுழைக்கிறததே அவர்ர வேலை.இரு தடவைகள் மக்களால் நிராகரிப்பப்பட்டவருக்கு ரோசம் மானம் எதுவுமே இல்லை போல...தானும் ஒரு ஆளெண்டு 😁- வேலணையில் தீ!
சொல்கிறேன் கேளுங்கள்.😎 எண்ணைகளில் ஆமணக்கெண்னை விசேடமானது. பிசுபிசுப்பு தன்மை அதிகமானது.அது மட்டுமில்லாமல் தோல்களில் ஒட்டும் தன்மை கூடியது. இந்த ஆமணக்கெண்ணையுடன் ஆனையிறவு உப்பையும் ஒரிஜினல் மிளகாய் தூளையும் கலந்து பச்சை மட்டை சாத்தல் போட்ட இடத்தில் தடவி விட்டால் அவ்வளவுதான்.சம்பந்தப்பட்டவருக்கு இமயமலை உச்சி கண்ணெதிரே தெரியும். 😂 சன்லைட்,மில்க்வைட் போன்ற காரம் கூடிய சவுக்காரங்களினாலும் எப்படி தேய்த்து கழுவினாலும் சருமத்தை விட்டு அகலாது.😋 தவறான சிந்தனை உள்ள ஒருவர் வாழ்நாள் முழுவதும் நல்லதையே செய்ய தூண்டும் செய்முறை அது.- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
அவர்கள் முதலில் தங்களுக்குள் பலி/பழி தீர்த்துக்கொள்ளட்டும்.அதன் பின் என்ன நடக்கின்றது என பார்க்கலாம்.- சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
சுமந்திரனையும் அவர் பக்தர்களையும் சனம் ஒதுக்கி வைச்சது கிட்டத்தட்ட ஒரு வித பச்சைமட்டை அடிதான்.என்ன ஒண்டு பட்டும் திருந்தேல்ல. 😂 சுமந்திரன் கொம்பனி திருந்துற நோக்கமும் இல்லைப்போல கிடக்கு..🤣- சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!
மேற்குலகின் வயித்தை கலக்குவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.😎- போலி ‘like’ காட்டி தமிழக மக்களை ஏமாற்றியுள்ள விஜய்
இந்த உலகில் ஒரு விசித்திர அரசியல்வாதி என்றால் அது நடிகர் விஜய் தான்.நான் சில நேரம் இவரை ஒன்லைன் அரசியல்வாதி என நினைப்பதுண்டு. சினிமா கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து முதலமைச்சராக நினைக்கின்றார். இவர் மட்டுமல்ல அவர் சகாக்களும்.அவர் சகாக்களுக்கு தமிழே ஒழுங்காக வராது.இந்த நிலையில் அவர் சகாக்களுக்கு நடிகர் விஜய் அவர்களை முதல்வராக்கும் கனவு வேறு. பொது ஊடகங்கள் இல்லை என்றால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பாரா என்பது சந்தேகம் தான்.😎- சுமந்திரன் ஒரு விலாங்கு மீன்; யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
இனவாத சிங்களத்திற்கு சேவகம் செய்ய வந்தவர்களுக்கு தமிழின ரோசம் ஏது?மானம் ஏது? சம்பந்தன் எப்படியோ அவரின் கண்டுபிடிப்பு சுமந்திரனும் அப்படியே.- வேலணையில் தீ!
கலப்படம் இல்லாத சிறிதளவு மிளகாய்த்தூள்,கொஞ்ச ஆனையிறவு உப்பு,ஆமணக்கு எண்ணை கலந்து பச்சை மட்டை அடித்த இடங்களில் தடவ வேண்டும். ஏழேழு ஜென்மத்திற்கும் எந்த தவறும் செய்ய மாட்டார்கள்.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
வெளியே சொல்லப்படாத,ஆதாரங்கள் இல்லாத உண்மை என்றால் நீங்கள் எழுதியதுதான். ஆனால் வெளியே ஆதாரத்தோடு சொல்லப்பட்ட காரணம் வேறு. சதாம் ஹுசைனும்,கடாபியும் ஈரோ நாணயத்தை கையில் எடுத்ததுதான் பெரியண்ணருக்கு எரிச்சலை ஊட்டியது. பெரியண்ணர் நேட்டோ எனும் போர்வையில் லிபியா மீது போர் தொடுத்து தன் எரிச்சலை தீர்த்து விட்டார்.அந்த நேரம் புட்டின் ஆட்சியில் இருந்திருந்தால் கடாபிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனவும் பேசிக்கொள்ளப்பட்டது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
https://youtu.be/KUDyzfr1DUs?si=WZyxwBubO-RsYZd8 70 களின் ஞாபகம் வருகின்றது.- நடனங்கள்.
https://youtu.be/S0SGB6pzxsM?si=JOhwr5WZxtfrpASH அழகான பிள்ளையார் சதுர்த்தி நடனம்.- யுத்தத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி அறிவுறுத்தல்
ரணிலின் கைது கொதிப்பை தடுக்க அதிரடி நடவடிக்கை 😂- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
மிகச்சிறந்த கண்ணோட்டம் வசி! நீங்கள் எழுதியதும் அத்தனையும் உண்மையே. ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ அமைப்புகளும் விரிவடைய வேண்டுமாம். ஆனால் ரஷ்யா கூனிக்குறுகி நிற்க வேண்டுமாம். ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்றைய மனநிலை இப்படித்தான். உக்ரேனுக்கு நேட்டோ ஆசையும் ஐரோப்பிய ஒன்றிய ஆசையும் வருவதற்கு முதல் ஒழுங்காகத்தான் அந்த நாடு இருந்தது. ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இந்தியா அதி முக்கிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடாகி விட்டது.எனவே மேற்குலகில் இருந்து ஈழத்தமிழர்களுக்காக கதவும் திறக்காது படலையும் திறக்காது என்பது என் கணிப்பு.- இரசித்த.... புகைப்படங்கள்.
நான் இந்த படத்தை ரசித்ததை விட இயற்கையின் அற்புதத்தை வியந்து இரசித்தேன். பனம் குருத்து பனை ஓலையாகி காவோலையாக விழும் மட்டும் தான் தூக்கணாங்குருவியின் வாழ்காலம். இவ்வளவு நுண்ணியமாக கூடு கட்டி தன் சந்ததியை பெருக்கி விட்டு காவோலை விழ அதன் வாழ்க்கையும் அஃதே.- மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன்
வளர்ந்த நாடுகளில் ஒரு சர்வதேச நிகழ்வு வருகின்றது என்றால் ஒரு பிரபல்யமில்லாத அல்லது பின் தங்கிய இடங்களை தேர்வு செய்வார்கள்.அதன் பின் சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்து அந்த இடத்தை முன்னேற்றுவார்கள். ஆனால் இது இலங்கை அரசியலுக்கு சரி வருமா என தெரியவில்லை.மகிந்த கட்டின விமானநிலையம் நெல்லு காயப்போட லாய்க்கு இல்லை என எங்கேயோ வாசித்த ஞாபகம்.😂- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
அமெரிக்காவை மீறி எதையும் செய்ய வலிமை உள்ள ஐரோப்பாவிற்கே தைரியம் இல்லை என்பதற்கு இந்த புகைப்படம் நல்ல சாட்சி. அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வளர்ந்த அரபுநாடுகள் எப்படி மேற்குலகின் செல்லப்பிள்ளை இஸ்ரேலின் அஜாரகங்களை எதிர்ப்பார்கள்?எண்ணைக் குழாய்களில் அடைப்பு வந்தால் கூட அந்த அடைப்பை எடுக்க அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களுமே தேவை. நிலமை இப்படி இருக்க....? ஆனால் உலக நாடுகளின் பிரச்சனையை தீர்க்கும் வல்லமையும் அமெரிக்காவிடம் இல்லை.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
உக்ரேனின் மீது உள்ள மனிதாபிமானத்திற்காக/உரிமைக்காக ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் உதவுகின்றது என விசுகர் நினைத்தால் குமாரசாமி ஆகிய நான் விழுந்து உருண்டு பிரண்டு சிரிப்பதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. ஆக்கிரமிப்பு என்பதன் அர்த்தம் எல்லா இடங்களிலும் ஒன்றுதான். ஆனால் பிராந்திய அரசியல் என ஒன்று வரும்போது அதன் வடிவங்களும் அர்த்தங்களும் வேறுபடும். எம்மவர்கள் பலர் இன்றும் ஹிந்தியாவை திட்டிக்கொண்டிருக்கின்றார்கள். ஏன்?- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
ஏதோ பழி தீர்க்கும் படலமாகவே எனக்கு தெரிகின்றது. எதற்கு வெட்கப்பட வேண்டும். அவர்களின் தொழிலே அதுதானே. தமிழர் பிரச்சனையை தீர்க்க வந்த வெள்ளைப்புறா 2009ன் பின்னர் ஏன் தமிழர் பிரச்சனையை தீர்க்க முடியாமல் இருக்கின்றது? இப்போது சிங்களவர்களின் பிரச்சனையை தீர்க்கப்போகுகின்றதா? அது வெள்ளைப்புறா அல்ல வெள்ளை நரி.- வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?
ஒரு சின்ன கோட்டுக்கு கீழ பெரிய கோட்ட கீறிப்போட்டு கதை விடுறியள் என்ன? 😀 இதற்காகத்தானே சீனா மற்றும் இந்தியாவை நோக்கி மேற்குலக வியாபாரிகள் தலை தெறிக்க ஓடுகின்றார்கள்.மலிஞ்ச கூலி நிகர லாபம். 😎- நல்லூர் தேர்திருவிழாவில் பணப்பையை பறிகொடுத்த வெளிநாட்டு பெண்
பணக்கார நல்லூர் கந்தன் மீது இந்த பெண்மணிக்கு இன்னும் பக்தி பரவசமாக வாய்ப்புகள் உள்ளது.- ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!
உக்ரேனுக்கு சாத்துப்படி டெய்லி தானே நடக்குது. 😎 ஆனால் ஒன்று மேற்குலகம் காசாவில் செய்யும் அழிவுகளை போல் ரஷ்யா உக்ரேனுக்கு செய்யவில்லை. செய்யவும் நினைக்கவில்லை.மக்களை எலும்பும் தோலுமாக அலைய விடவுமில்லை. ஒரே நேரத்தில் இரண்டு அழிவுப்போர்கள் நடக்கின்றன. அதில் எது மோசமானது எனவும் எது எதற்காக போராடுகின்றார்கள் எனவும் யார் பின்னணியில் இருக்கின்றார்கள் எனவும் கவனித்து பாருங்கள்.ஒன்று பலஸ்தீனம் மற்றது உக்ரேன். ஒரு உக்ரேனியனுக்கும் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. எல்லோரும் சொர்க்கக்தில் இருப்பது போல் இருக்கின்றார்கள்.இப்படியொரு காட்சியை உக்ரேன் யுத்தங்களில் கண்டிருக்கின்றீர்களா? 👇 ☹ படத்திற்கு நன்றி யுனிசெப். - முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.