Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிழலி🎉
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
இது உக்ரேன் போர் பற்றிய திரி. இங்கே உக்ரேன் அரசியலையும் தமிழர் அரசியலையும் சேர்த்து பிசைவதால் எந்த பலனும் இல்லை. உலகின் ஒவ்வொரு அரசியலையும் நிறுத்தி நிதானித்து முற்றுப்புள்ளியுடன் விவாதிக்க முயற்சி செய்யுங்கள். உக்ரேனுக்காக ஐரோப்பிய ஒன்றியம் நிற்பதால் மட்டுமே...உக்ரேன் இன்னும் நிமிர்ந்து நிற்கின்றது.இது தான் இங்கு பேசு பொருள். இனி மேலைத்தேய ஊடகங்களில் உக்ரேன்/செலென்ஸ்கி போன்ற செய்திகள் தலைப்பு செய்தியாக வராது என நம்புகின்றேன்.இராணுவ அடி பலம் மட்டுமல்ல அரசியல் அடியும் பலமாக வீழ்ந்து விட்டது போல் தெரிகின்றது. டொன்பாஸ்?????? 😁
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வைரமுத்துவிற்கு என் அஞ்சலிகள். வேளாண்மை செய்பவர்களுக்கும் கடின வேலை செய்பவர்களுக்கும் புட்டு,ரொட்டி அவசியமான உணவு. சுழல் கதிரை தொழிலாளர்களுக்கு அது வில்லங்க உணவு. 👈 மற்றும் படி புட்டும் தேங்காய் பூவும் அருமையான உணவு. புட்டு சாப்பிடுவதால் தான் நீரிழிவு என்றால் இலங்கை இந்திய நாடுகளில் அநேகம் பேர் உயிரிழந்திருப்பர். சாப்பிட்ட சாப்பாடு எதுவோ அதற்கேற்ப வேலை செய்தால் எந்த விக்கனமும் வராது. இது என் சொந்த அனுபவம். புட்டின் அருமை தெரியாதோர் கம்பேக்கருக்கு அடிமையானோர்.😜 சோம்பேறியாக இல்லாமல் வேலை செய்து பாருங்கள். இரும்பும் கரையும்.😎
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையகம். மலயகத்திற்கென்று ஒரு தனி அரசியல் தளம் இருக்கின்றது. அங்கே யாரும் வாலாட்ட முடியாது. அன்றைய தொண்டமான் தொடக்கம் இன்றைய தொண்டமான்கள் வரைக்கும் மலையக அரசியல் பாணி தனி வழி. அது திராவிட நட்புகளை கொண்டது. மலைய அரசியலில் இனவாத சிங்கள அரசியல் இல்லை. அப்படியிருந்தும் ஏன் தோட்டத் தொழிலாளர்களால் ஒரு எல்லையை மீறி முன்னேற முடியவில்லை?அதைப்பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை? நூற்றாண்டு கால சரித்திரம் உள்ளவர்கள் அல்லவா மலையக தமிழர்? ஒரு அங்குலம் கூட அவர்கள் ஏன் அவர்களால் முன்னுக்கு வரமுடியவில்லை. ஏன் எதனால் என்பதை பற்றி ஒரு கட்டுரை,பந்தியாவது எழுதியிருக்கின்றீர்களா? காலம் காலமாகத்தான் மலையக பிரதேசங்களில் மண்சரிவுகளும் அழிவுகளும் வந்து போகின்றன.அப்போது காணாத கண்கள் இப்போது சுமந்திரன் சொல்லிவிட்டார் என்பதற்காக குத்தி முறிகின்றீர்கள்.ஏன் அன்றைய கால அழிவுகளுக்கெல்லாம் குரல் கொடுக்கவில்லை. மீள் குடியேற்ற சிந்தனைகள் வரவில்லை? சரி வேண்டாம் மலையகத்தில் கஷ்டப்படுபவர்களுக்காக நிதியுதவி பற்றி யாராவது இங்கு விவாதித்திருக்கின்றார்களா? பாதிக்கப்பட்டவர்களை வடபகுதியில் குடியேற்ற முடியும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்குரிய வாழ்வாதாரம் பற்றி யாராவது விவாதித்தார்களா? மீண்டும் வீட்டு வேலைகள்,தோட்ட வேலைகள் தான் அவர்கள் வாழ்வாதாரம் என்றால் அவர்கள் அங்கேயே இருப்பது புத்திசாலித்தனம். மற்றும் படி தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றுவதன் மூலம் சிங்கள பொருளாதாரத்தை வீழ்த்த முடியும் என கனவு கண்டால் அதுவும் பொய்க்கனவாகவே அமையும். பத்தாயிரம் மைல் கடந்து வாழ்வது பணம் படைத்த நாடுகளில்.....இங்கே எப்படியும் வாழலாம்.....அந்த நாடுகளிடம் பணம் இருக்கு...உதவி செய்கின்றார்கள். செய்வார்கள்.வேலைக்கு போகாமல் விட்டாலும் வாழலாம். இது அங்கு சாத்தியமா? மற்றும் படி தமிழீழ நிகழ்ச்சி நிரலில் மலையகமும் ஒரு அங்கம் என்பதனை இங்கே பலருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இந்த மலையக தமிழரின் மீள் குடியேற்ற விவகாரத்தில் சுமந்திரன் ஐயா சொன்னவுடன் எல்லாம் நடந்து விடும் என்ற தொனியில் பலரின் கருத்துக்கள் உள்ளது. இத்தனைக்கும் சுமந்திரனும் மனோகணேசனும் எதற்கும் லாயக்கு இல்லாத அரசியல்வாதிகள். சும்மா பேச்சுக்காக,தங்கள் அரசியல் லாபத்திற்காக வசனங்களை வெளி விடுபவர்கள்.அந்த இருவரும் ஜதார்த்தமாக எதையும் சிந்தித்த வரலாறு இல்லை. குட்டையை குழப்பி சுகம் தேடுபவர்கள். விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி? அரசியல்/பொருளாதார ரீதியாக சிங்கள அரசு இதனை அனுமதிக்கும் என நினைக்கின்றீர்களா? கிந்திய அரசு மீள் குடியேற்றத்திற்கு ஆதரவளிக்கும் என நம்புகின்றீர்களா? இன்றைய ஸ்ரீலங்கா அரசியல் நிலவரத்தில் இந்தியாவை மீறி சிங்கள அரசால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பது பெரும் துயரம்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
கோசான் சார்! நீர்மூழ்கி கப்பல்ல கப்டனாய் வேலை செய்யுறார் எண்டு நான் நினைக்கிறன்.😂
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
நடக்காத முடியாத விடயத்தை பேசு பொருளாக்கி தன்னை பிரபல்யமாக்குவதில் சுமந்திரனார் ஒரு நடிகர் திலகம். பிரதேசவாதம் பிரதேசவாதம் என யார் அலறுபவர்கள் யாரென்று பார்த்தால் எல்லாம் சுமந்திரன் போராளிகள் தான்.அன்றைய ஆயுத போராட்டத்தை அடியோடு வெறுக்கின்றேன் என கூறும் சுமந்திரன் தான் அந்த அவலத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்.
-
போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது.
மூக்கு உள்ள வரைக்கும் சளி இருக்கும் என்பது போல் பலஸ்தீன பிரச்சனை இருக்கும் வரைக்கும் யூதர்கள் எங்கும் நிம்மதியாக வாழமுடியாது.
-
ஆர்பனை ஓரங்கட்டவும், ரஷ்ய சொத்துக்களை என்றென்றும் முடக்கவும் சட்டப்பூர்வ தீர்வை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரிக்கிறது.
மற்றவன் சொத்தை அபகரிப்பதும் மேற்குலகின் இரத்தத்தில் ஊறிய விடயம் தான். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
-
மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு, கிழக்கு, மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்
அருட்தந்தையின் சிந்தனை தூர நோக்கு சிந்தனை.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
விடுதலைப்புலிகள் காலங்களை தவிர்த்து.....நீண்ட இடை வெளிகள் 1948 தொடக்கம் இன்று வரைக்கும் இருந்துள்ளது. இன்றும் இருக்கின்றது. உங்கள் கொள்கையாளர்கள் அந்த இடைவெளிகளில் சாதித்ததை தேடினேன். எதுவுமே கிடைக்கவில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
"பிரதேசவாதம்" இது உலகில் உள்ள அனைத்து சமூகத்தினரிடமும் உண்டு. ஆகையால் எம்மை நாமே தாழ்த்திக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சிங்களவர்களும் வடக்கு கிழக்கில் குடியேற்றங்களை அமைக்க ஆசைப்படுகின்றார்கள். சுமந்திரனும் அதே போல் ஆசைப்படுகின்றார். சிங்கள மாகாணங்களில் இப்படியான தமிழர் குடியேற்ற நிலங்களை அமைக்க முடியாதா?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையக மக்களுக்கு நான் எதிரியல்ல. சிங்கள பகுதிகளிலும் தமிழ் சார் பகுதிகளிலும் சரி சமமாக குடியேற்றப்பட வேண்டும் என்பது என் கருத்து. அதிலும் வாழ்வாதார நிலங்கள் என பார்த்தால் சிங்கள பகுதிகளே அதிகமாக தெரிகின்றது. தமிழர் பிரதேசங்களில் ஏற்கனெவே வாழ்வாதார பிரச்சனைகள் உண்டு. இதனால் மேலதிக குடியேற்றங்கள் இன்னும் பல பிரச்சனைகளை உருவாக்கும். ஒட்டு மொத்த மலையக தமிழர்களையும் கீழ் இறக்கி விட்டால் சிங்கள பொருளாதாரம் சிக்கு முக்காடும் என்பது இன்னொரு பார்வை.
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!
எனது முதலாவது கருத்து என்னவென்றால் கப்பல் நினைப்பில் இருப்பவர்கள் வெளிநாடு வரக்கூடாது. இரண்டாவது கருத்து என்னவென்றால் அந்த கப்பல் நினைப்பு உள்ளவர்களுக்கான காணொளிகளை தூக்கிக்கொண்டு திரியக்கூடாது. அவர் கஷ்டப்பட்டு வேலை செய்ய மாட்டாராம். அவர் செல்வந்தராம். நிறம் கூடினவராம்.வடிவானவராம்.நடிகர் மாதிரி இருக்கிறாராம்.இதுதான் ஒரு மனிதனுக்கு மூலதனமென்றால் அந்த மனிதரை கடந்து செல்வதே மேல். மற்றும்படி.....காணொளியில் வரும் ஜேர்மனியின் கடின வாழ்க்கை சித்தரிப்பு நம்பக்கூடிய மாதிரி இல்லை.
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
மதம் புகுத்தப்பட்டது வேறு சமாச்சாரம். ஒரு நாடு தன்னை இன்ன/ இந்த மத சார்பு நாடாக அடையாளப்படுத்துவது முக்கிய விடயம் என நான் நினைக்கின்றேன். இது சம்பந்தமாக உங்கள் கருத்தை எதிர்பார்க்கின்றேன். கந்தையர்! உங்களுக்கு ஐ போனிலை எழுதுறது சரிப்பட்டு வராது போல கிடக்கு. சொல்லுக்கு சொல் முற்றுப்புள்ளி வைக்கிறது வடிவில்லாமல் கிடக்கு.😁 சரி அது கிடக்கட்டும்....😊 அந்த ஆசிரியர் ஏன் எதற்காக பிரித்தானியா கிறிஸ்தவ நாடு என்பதை கூறினார் என்பதற்கு விளக்கங்கள் இல்லை.அவர் சும்மா வீதியால் சென்ற ஒருவரை கூப்பிட்டு இது கிறிஸ்தவநாடு என சொல்லவில்லை.அல்லது சந்தியில் நின்று இது கிறிஸ்தவ நாடு என மதவாதம் பேசவில்லை. எனது அனுமானம் என்னவெனில்..... அந்த முஸ்லீம் மாணவர் ஒட்டு மொத்த கழிவறையையும் நாறடித்திருப்பார்.இதை ஆசிரியர் கண்டித்திருப்பார். அதற்கு அந்த மாணவர் எங்கள் மார்க்கம்,அல்லா அது இது என பொங்கியிருப்பார். ஆசிரியரும் தன் பங்கிற்கு கொட்டியிருப்பார்.அவ்வளவுதான்😎 இன்னுமொன்று..... அந்த ஆசிரியருக்கு தண்டனை பகிரங்கமாக கொடுக்காமல் விட்டால்....சம்பந்தப்பட்ட அவர்கள் சம்பந்தமான குஞ்சுகுருமன்கள் எங்கும் எப்போதும் காலம் காத்து சின்ன வெங்காயம் ,பச்சைமிளைகாய் நறுக்கிற கத்தியால அப்பாவி பொதுமக்களை குதறிக்கொண்டே இருப்பார்கள். இது இன்றைய உலக அனுபவங்கள்😭
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
இதெல்லாம் காலா காலமாக நான் யாழ்களத்தில் எழுதிய கருத்துக்கள் அது யாருக்காக எங்கு எந்த திரியில் எழுதப்பட்டது என்பதுதான் பேசு பொருள்.அமீர்,சேனாதிபதி கொம்பனிகளுக்கு அப்படியான கருத்துக்கள் தகும். அன்றைய பின்கதவு அரசியலை சுமந்திரன் இன்றும் கைப்பிடியாக/விடாப்பிடியாக கடைப்பிடிக்கின்றார். வீரம் பேசி விவேகமாக தமிழீழ அரசு அமைத்து காட்டியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். இது சாத்தியம் என உலகிற்கு உலகிற்கு காட்டியவர்கள். அவர்களை அழித்தவர்கள்,காட்டிக்கொடுத்தவர்கள் இன்றும் நலமுடனேயே உலாவுகின்றனர். அந்த அவர்கள் 2009க்கு பின்னர் இன்றுவரை தமிழர்களுக்காக சாதித்தது என்ன?
-
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனுக்கும் கொடுக்கும் நிதியினால் முக்கிய அரச பதவியில் உள்ளவர்கள் கோடீஸ்வரர்களாகி நாட்டை விட்டு வெளியேறி துபாய் போன்ற நாடுகளில் குடியேறிக்கொண்டிருக்கின்றார்கள். அண்மையில் ஒரு முக்கிய உக்ரேன் அமைச்சர் ஒருவர் பதவி விலக்கப்பட்டதும் ஊர் உலகம் அறிந்ததே. அந்த அமைச்சர் தற்போது துபாயில் இருப்பதாக செய்தி. உண்மை பொய் தெரியவில்லை. ஆனால் ஊழலால் அந்த அமைச்சர் பதவி நீக்கப்பட்டது உண்மை.இதில் செலென்ஸ்கி எவ்வளவு சுருட்டிக்கொண்டிருக்கின்றார் என்பது அவர் பதவியை விட்டு விலகிய பின்னர் தான் தெரியும். 👉ஊழல் என்பது உக்ரேனியனியர்களுக்கு கைவந்த கலை மட்டுமல்ல. அதுதான் அவர்கள் வாழ்க்கை.👈 நேட்டோ அமைப்பு என்பது காசை கரியாக்கும் அமைப்பு. அந்த அமைப்பு ஏனைய நாடுகள் மீது செய்யும் நாசகார வேலைகளையும் அழிப்புகளையும் பங்கு போட்டுக்கொள்ளும் அமைப்பே தவிர வேறொன்றுமில்லை. இன்றைய உலக அரசியல் சூழ்நிலையில் டொனால்ட் ரம்ப் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். தாமே செய்தியை உருவாக்கிய காலம் கைத்தொலைபேசி பொதுமக்களிடம் சரளமாக பாவனைக்கு வந்த காலத்திலிருந்தே தொடங்கியது. அதற்கு முன் பொய் செய்திகள் பரப்பட்டதில்லை. 75 ஆண்டுகளும் பொய் செய்தி பரப்பப்பட்ட காலங்கள் அல்ல.
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
எனது வேலை இடத்திலும் மொரோக்கோ,துனேசியன் நாட்டவர்கள் அவ்வப்போது வேலைக்கு வருவார்கள். அவர்கள் மலசலகூடங்களை பாவித்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கேவலமாக விட்டுச்செல்வார்கள்.ஏதாவது கண்டிப்புடன் துப்பரவாக வைத்திருங்கள் என கூறினால் மதத்தை இழுத்து பதில் சொல்வார்கள். நாங்கள் பன்றி போல் அசுத்தமாக இருப்பதில்லை என்பார்கள்.
-
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.... அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.
-
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!
மனிதாபிமானத்தின் இன்னொரு முகம்..😎
-
ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது: யுக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
உக்ரேனுக்கு இன்றைய அவசர தேவை ஜனாதிபதி தேர்தல். சர்வாதிகாரி செலென்ஸ்கி ஆட்சியிலிருந்து துரத்தப்பட வேண்டும்.
-
உலகின் மிக அழகான பெண்களின் பட்டியல்
பெண்கள் அழகிற்கு கைகால் நீளம்,விரல் நீளம் ,மூக்கு நீளம் எல்லாம் உன்னிப்பாக கவனிக்கப்படும். நீங்கள் சுட்டிக்காட்டிய மூவருக்கும் அது அறவே இல்லை. 😎
-
நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்
புட்டினின் உதவி,நிவாரணங்கள் பற்றி ஆபிரிக்க/தென்னமெரிக்க மக்களை கேட்டால் தெரியும். தனியே மேற்குலக செய்திகளை மட்டும் கேட்டு இன்புறுபவர்களுக்கு அந்த கடவுளிடமே மருந்து இல்லை. 😂