-
கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
அடிடா புடிடா எண்டு போன ஜேர்மன் வீரர்கள்.....போன அதே வேகத்தில் திரும்பி வந்து கொண்டிருக்கினமாம்... அமெரிக்கா இல்லை என்றால் ஜேர்மனிக்கு முதுகெலும்பு இல்லாத பீலிங் எப்பவும் இருக்கும்.
-
“மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் வெனிசுலாவின் ஆட்சி முறையை எதிர்த்து பொருளாதார தடைகளை விதித்தவர்களில் ஐரோப்பியர்களும் அடங்குவர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் தல டொனால்ட் ரம்ப் அவர்கள்.
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
அன்று தலைவர் போட்டு வாறன் பிள்ளையள் என்று சொன்னதும்..... இன்று. அனுர போட்டு வாறன் என்று சொல்வதும் நம்மவர்களின் ஒற்றுமையின் சிகர சொப்பனம். https://youtu.be/f8unFNmNYzw?si=yeTSgHnult2bSgMR
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அறவே மலசல கூடங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் திட்டமாகவே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஏற்கனவே மலசலகூட வசதி இருப்பவர்களின் திருப்பணி வேலைகளுக்கு பொதுப்பணி சரியான நிலையா? இல்லையேல் நான் பிழையாக விளங்கிக்கொண்டேனா? நான் நினைப்பது தவறாக இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.🙏
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
அமெரிக்க இராஜாங்கத்தின் உள் மனதிற்குள் இருந்த திட்டங்களை டொனால்ட் ரம்ப் அவர்கள் வெளியே கொண்டு வருகின்றார் என நான் நினைகின்றேன். பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் வளர்ச்சி என்பது அமெரிக்காவின் சர்வதேச அதிகாரத்திற்கு பெரிய இடையூறாக இருக்கின்றது. உதாரணத்திற்கு எண்ணை உற்பத்தி நாடுகளின் ஈரோ நாணய நாட்டங்கள். பிரச்சனைகள் எங்கேயோ இருக்க..... தேவையில்லாத இடங்களில் நின்று சண்டை பிடிக்கும் நிகழ்வுகள் இன்று நேற்றல்ல. அன்று தொடக்கம் நடக்கும் நிகழ்வுதான்.... இதை எம்மவர்களின் குடும்ப சண்டைகளிலும் நன்கு அவதானிக்கலாம். நிற்க.... அமெரிக்க ஆதிக்கத்தையும் ரஷ்ய ஆதிக்கத்தையும் மாறி மாறி கடிந்து கொள்பவர்கள்.....கறையான் போல் உலகையே அரித்துக்கொண்டுவரும் சீன ஆதிக்கத்தை கண்டு கொள்வதில்லை. சொல்ல வருவது சீனாவின் பட்டுச்சாலை திட்டம். இன்றைய காலத்தில் சீனாவின் பொருளாதார ஆதிக்க விளைவுகளை உலகின் சகல நாடுகளும் அனுபவிக்கின்றன.சீனாவின் ஒரு சில மூலப்பொருட்கள் இல்லையெனின் ஐரோப்பாவின் பல தொழிற்சாலைகள் முடங்கு நிலைக்கு வருவது நல்ல உதாரணம். கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதை எதிர்த்தால் நாளை சீனா வந்து கையகப்படுத்தும். அதை யாரிடமும் எங்கேயும் எதிர்ப்புகளை காட்ட முடியாது.
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் அதிர்ச்சியை தரும் செய்தியாக இருக்கின்றது. மோகனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. உங்கள் ஆளாத்துயரில் நானும் பங்கெடுக்கின்றேன்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
எப்ப தொடக்கம் என்ற கேள்வி வருகின்றது? பதில்கள் ஆண்டு வாரியாக வரும் என எதிர்பார்க்கின்றேன்.
-
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் வீதி விபத்துகளில் 82 பேர் உயிரிழப்பு!
ஒரு நாடு முன்னேற போக்குவரத்து சட்டங்களும் மிக மிக முக்கியமானது. போக்குவரத்து சட்டங்கள் மீறப்படும்போது லஞ்சம் வழங்கப்படுவதால் இத்தகைய விபத்துகள் நிகழ மேலும் வாய்ப்பளிக்கின்றது. மேலைத்தேய நாடுகளைப்போல் சட்டங்கள் பாகுபாடின்றி இறுக்கமானதாக இருக்க வேண்டும்.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
ஆதரவு வேறு. எதிர்பார்ப்பு வேறு. இலங்கை தமிழர்கள் ஆதரவு நிலையில் இருந்து விலகி எதிர்பார்ப்பு அரசியலில் இறங்கியுள்ளார்கள் என நான் நினைக்கின்றேன். புதிதாக வருபவர்கள் ஏதாவது நல்லது செய்ய மாட்டார்களா என்ற நப்பாசையில் அவர்கள் பேச்சை கேட்டு வாக்களிக்கின்றார்களே ஒழிய கட்சி ஆதரவு அல்லது தனிமனித ஆதரவு வாக்குகள் இன்றைய நிலையில் அங்கில்லை. இதற்கு நல்ல உதாரணமாக..... சுமந்திரன்,அங்கஜன்,டக்ளஸ் போன்றோர் இன்னும் பலரின் தோல்விகளை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். அதை விட இரா.சம்பந்தனின் மரண நிகழ்வு நிகழ்ச்சிகள் இன்னும் பல நிசர்சனங்களை சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லியுள்ளது. அதே போல் இனவாதத்துடன் இயங்கும் சிங்கள பேரினவாத குழுக்களுக்கு... சிங்கள அனுர திசநாயக்கவையும் தமிழர்கள் ஆதரிப்பது தமிழர்களிடம் இனவாதம் இல்லை என்பதை எடுத்து சொல்லட்டும். இப்படிக்கு... இடம் கண்ட இடத்தில் மடம் கட்டியவன்🤣
-
திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட சம்பவம் - 4 தேரர்கள் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல்
இனியென்ன புத்தபிக்கு பயங்கரவாதிகள் இவர்கள் விடுதலை வேண்டி அஜாரகங்கள் உட்பட வீதி மறியல் செய்து போராட்டங்கள் செய்வார்கள். அரபு நாடுகளைப்போல் ஸ்ரீலங்காவும் இன/மதவாத தீவிர அரசியல் கொண்ட நாடு.
-
சிரியாவில் அசாத் போல் இரானில் காமனெயி அரசு வீழுமா? ஒரு விரிவான அலசல்
இஸ்லாமிய ஆட்சிகளை எதிர்ப்பவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கும் இஸ்லாமிய கொள்கைகளை கையில் எடுப்பதுதான் கொஞ்சம் அல்ல பெரிய நெருடலாக இருக்கின்றது. நேரடியாக கண்காணும் நிகழ்வுகளின் அனுபவங்கள்.
-
6 ஆண்டுகளில் 390 கோடி ரூபாய் இழப்பு : மத்தள விமான நிலையத்தை மீட்க புதிய திட்டம்
பிராந்திய அரசியலை கையில் எடுக்க நினைக்கும் சீனா கொஞ்சம் வட கிழக்கு பகுதியிலும் கால் வைத்திருந்தால்... பலருக்கும் பல வெற்றிகள் கிடைத்திருக்கும். ஒரு தரித்திரம் வாலை சுருட்டியிருக்கும்.
-
கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
சிங்கள ஸ்ரீலங்கா பிக்பாஸ் நிகழ்ச்சி. கண்டு களியுங்கள்.😁
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
நீங்கள் கூறுவது எல்லாம் சரிதான். ஆனால் இந்த உலகில் ஈழத்தமிழினம் மட்டும் நேர்மையாக,நீதியாக,ஒழுக்கமாக இருக்க வேண்டும் என சிந்திப்பது ஏன்? இலங்கையில் தற்போது தமிழர் பிரதேசங்களில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு வாய் திறக்காமல்......பழைய பிரச்சனைக்களுக்கு மட்டும் தீர்வு காண நினைக்கும் நீங்கள் யார் என்பது ரகசியம் அல்ல.
-
பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!
இவ்வளவு காலமும் இனவாத சிங்களத்திற்கு சார்பாக இயங்கிய மனிதனின் இன்னொரு முகமூடி உடைக்கப்பட்ட தருணம்.