Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

  1. ஜேர்மனியில் அடுத்து வரும் தேர்தல்களில்Afd கட்சி அமோக வெற்றி பெறும். அப்போது அதற்கான காரணத்தை போர் விரும்பும் கட்சிகள் உணரும்.
  2. நான் இதே கருத்தை உக்ரேன்,ரஷ்யா சம்பந்தப்பட்ட திரிகளில் உறுதிபட எழுதியுள்ளேன்.ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்யாவின் முக்கியத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன். ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிசக்தி கிட்டங்கி.அதை வெறுத்து ஒதுக்கினால் மல்லாந்து படுத்து காறிதுப்புவதற்கு சமன். ஐரோப்பிய ஒன்றியம் என்பதை அமெரிக்கா எதிரியாகவே என்றும் பார்க்கும். இதை இன்று கண்கூடாகவே பார்க்கின்றோம். இந்த மனப்பான்மைக்காகவே நான் பிரான்ஸ் நாட்டை அன்று தொடக்கம் அதிகம் நேசிக்கின்றவன். அழிவுகள் இல்லாத நேரடி பேச்சுவார்த்தைகள். நல்லது கெட்டது எவர் பக்கம் இருந்தாலும் போர் தேவையற்றது. இன்றைய மக்ரோன் கொள்கையைத்தான் இரண்டாம் உலகப்போரில் அன்றைய பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் கடைப்பிடித்தார்கள்.
  3. இலங்கை பொலிசார் மிக மோசமானவர்கள்.அதை விட இராணுவத்தினர் இன்னும் மோசமானவர்கள். நீதி நேர்மை நியாயம் இல்லாமல் நடப்பவர்கள். லஞ்சம் கொடுத்தால் மட்டும் நேர்மையாக நடப்பது போல் தெரியும். லஞ்சமாக கருவாடு கொடுத்தாலும் சந்தோசமாக ஏற்கும் காவல்துறையுள்ள நாடு அது.
  4. ஐரோப்பா ரஷ்ய மலிவு எரிசக்தியை மீண்டும் வாங்கும் வரைக்கும் ஐரோப்பிய பொருளாதார அவலங்கள் தொடரும்.. எரிசக்தி விலை அதிகரிப்பால் ஜேர்மனியில் சென்றவருடம் வங்குரோத்து நிலைக்கு வந்த சிறிய/பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை...👇
  5. விடுதலைப்புலிகளும் தன்னிறைவு பொருளாதாரத்தை திறம்பட செய்து காட்டியவர்கள். அது ஒரு சிலருக்கு கசப்பாக தெரிந்தது. அந்த கசப்பின் பிரதிபலன்கள் தான் இன்றைய ஸ்ரீலங்கா அரசியல் நிலைகள். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நாட்டு மக்கள் அனுபவித்த பொருளாதார கட்டுப்பாடுகளும் மிக கடுமையானனது. அந்த கடுமையான சட்டங்களினால் தான் மேற்கின் பல நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்றுருக்கின்றன. கட்டுப்பாடுகள் கசந்ததினால் தான் விடுதலைகளும் அழிந்தன. இது உலக சரித்திரம்.
  6. கொம்பேறிமூக்கன் பாம்பு. யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் உள்ள அந்தச் சிறிய கிராமத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. செல்லையா, தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த பலா மரத்தின் காய்ந்த கிளைகளை வெட்டுவதற்காகக் கையில் வீச்சரிவாளுடன் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். செல்லையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருக்கும். "மரமேறிக் கைத்தழும்பு ஏறிய உடம்பு" என்று ஊருக்குள் சொல்வார்கள். பலா மரத்தின் ஒரு கிளை வீட்டின் கூரைக்கு மேலே நீண்டுகொண்டு தொல்லையாக இருந்தது. "டேய் ரகு, அந்தக் கயிற்றை இங்க எறிடா" என்று கீழே நின்ற மகனிடம் கத்தினார். கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தக் கிளையின் நுனிப் பகுதிக்கு நகர்ந்தார். அப்போதுதான் அந்தச் சலசலப்பு கேட்டது. பலா இலைகளுக்கு நடுவே பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் நீண்ட ஒரு பாம்பு பதுங்கியிருந்தது. செல்லையா உற்றுப் பார்த்தார். அவரது நெஞ்சு 'திக்' என்றது. "அடக் கடவுளே! இது சாரைப் பாம்பின்ரை ஆண் வர்க்கம்! கொம்பேறி மூக்கன்!" கிராமத்துப் பெரியவர்கள் சொல்வது செல்லையாவின் நினைவுக்கு வந்தது. ‘கொம்பேறி மூக்கன் கடிச்சால் கொல்லாம விடாது. அது கடிக்கிற வேகத்தில மரத்து உச்சிக்கு ஏறும். அது ஏற ஏற விஷம் தலைக்கு ஏறும். கடைசியில பிணத்தை எரிச்சாத்தான் கீழ இறங்கும்.’ செல்லையா சுதாரிப்பதற்குள் அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் பாய்ந்தது. செல்லையாவின் வலது கையில் மணிக்கட்டுக்கு மேலே 'நறுக்'கென்று கொத்தியது. அடுத்த நொடியே அந்தப் பாம்பு செல்லையாவை விட்டு விலகி மரத்தின் உச்சிக்கிளையை நோக்கிச் சரசரவென்று ஏறத் தொடங்கியது. "ஐயோ! அப்பா!" என்று கீழே நின்ற ரகு அலறினான். செல்லையா நிலைகுலைந்தார். விஷம் ஏறுகிறதோ இல்லையோ பயம் அவரை ஆட்கொண்டது. மரக்கிளையைப் பிடித்துக்கொண்டே கீழே பார்த்தார். கண்கள் இருட்டின. பிடி தளர்ந்தது. "தொப்"பென்று கீழே மணலில் வந்து விழுந்தார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்களும், அயலவர்களும் ஓடி வந்தார்கள். செல்லையாவின் கையில் இரண்டு பற்கள் பதிந்த அடையாளம். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஊர்ப் பெரியவர் கனகசபை ஓடி வந்தார். மரத்தை அண்ணாந்து பார்த்தார். மரத்தின் மிக உயரமான, மெல்லிய கிளையின் நுனியில் அந்தப் பாம்பு சுருண்டு உட்கார்ந்து கீழே விழுந்து கிடக்கும் செல்லையாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "மாட்டிட்டியே செல்லையா, அது கொம்பேறி மூக்கன்டா! கடிச்சிட்டு உச்சிக்கு ஏறிட்டு. இனி அது இறங்க மாட்டுது. அது மேல இருக்கிற வரைக்கும் இவன் ஒடம்பில விஷம் ஏறிக்கொண்டே தான் இருக்கும்." என்றார் கனகசபை பீதியுடன். செல்லையாவுக்கு வாய் நுரைக்கத் தொடங்கியது. உடல் வெட்டி இழுத்தது. விஷத்தின் வேலையா அல்லது மரண பயமா என்று தெரியவில்லை. "ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்கோ!" என்று ரகு கத்தினான். "தம்பி, இது சாதாரண பாம்பு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற நேரத்துக்குள்ள கதை முடிஞ்சிடும். அந்தப் பாம்பு கீழ இறங்கினாத்தான் உன்ரை அப்பா பிழைப்பான். ஆனால் உன்ரை அப்பாவை எரிச்சுக் கருமாதி செய்யுற புகை வந்தாத்தான் அது இறங்கும்." என்றார் பெரியவர். ரகுவுக்குக் கோபம் வந்தது. "என்ன லூசுத்தனமா கதைக்கிறீங்கள்? அப்பாவைக் காப்பாத்த வழியைப் பாருங்கோ!" அப்போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் "பெரியவரே அந்தப் பாம்புக்குச் செல்லையா செத்துப்போனது தெரியோணும். அவ்வளவு தானே?" என்றான். "ஓம். அவன் எரிஞ்ச புகை அதுக்குத் தெரியோணும்." என்றார் பெரியவர். "அப்ப ஒரு காரியம் செய்வம். செல்லையாவைத் தூக்கிட்டுப் போய் ஒரு ஓரமா வையுங்கோ. உடனை கொஞ்சம் பச்சை ஓலையளையும், பழைய பாயளையும் போட்டு மரத்துக்குக் கீழ எரிப்பம். அந்தப் புகை மண்டலத்தில பாம்பு ஏமாந்தாலும் ஏமாறும்." என்றான் அவன். வேறு வழியில்லை. செல்லையா மயக்க நிலையில் இருந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ரகுவும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பலா மரத்தின் அடியில் காய்ந்த சருகுகள், பழைய பனையோலைகள் எல்லாவற்றையும் குவித்தார்கள். நடுவே கொஞ்சம் பச்சை இலைகளையும் போட்டார்கள். "நெருப்பை வைடா!" என்றார் பெரியவர். நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பச்சை இலைகள் எரிந்ததில் கரும்புகை குப்பென்று கிளம்பியது. அந்தப் புகை நேராக மரத்தின் உச்சியை நோக்கிச் சென்றது. கீழே அனைவரும் மூச்சடக்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள். மரத்தின் உச்சியில் இருந்த கொம்பேறி மூக்கன் அந்தப் புகையை உணர்ந்தது. கீழே ஏதோ எரிகிறது; புகை வருகிறது என்பதை அது பார்த்தது. "எரிச்சுட்டாங்க போல" என்று நினைத்ததோ என்னவோ அந்தப் பாம்பு மெதுவாக நகரத் தொடங்கியது. "இறங்குது! பாம்பு இறங்குது!" என்று கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுத்தார். பாம்பு ஒவ்வொரு கிளையாக இறங்க இறங்க ஓரமாகப் படுத்திருந்த செல்லையாவின் இழுபறி கொஞ்சம் குறைவது போலத் தோன்றியது. பாம்பு பாதி மரத்தைத் தாண்டி கீழே வந்து கொண்டிருந்தது. திடீரென்று காற்று திசைமாறி வீசியது. புகை கலைந்து சென்றது. பாம்பு சட்டென்று நின்றது. கீழே எரிவது மனித உடல் அல்ல, குப்பைகள் என்பதை அது கவனித்துவிட்டதோ? அல்லது கீழே சலசலக்கும் மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுவிட்டதோ? அது மீண்டும் மேலே ஏறத் திரும்பியது. "ஐயோ! அது ஏமாறல! திரும்பவும் ஏறுது!" என்று ரகு கதறினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமு தன் கையில் வைத்திருந்த 'கவணை'(கெற்றப்போல்) எடுத்தான். சின்ன வயதில் குருவி, ஓணான் அடித்த கை பழக்கம். தரையில் கிடந்த ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கவணில் பொருத்தினான். குறி தவறக்கூடாது. தவறினால் பாம்பு உச்சிக்குப் போய்விடும்; செல்லையா கதை முடிந்துவிடும். மூச்சிரைக்கக் குறி பார்த்தான். பாம்பு மேல் கிளைக்குத் தாவத் தயாரானது. ‘விர்ர்ர்’ கவணில் இருந்து புறப்பட்ட கல் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. சரியாகப் பாம்பின் தலைப்பகுதிக்குக் கீழே அதன் கழுத்தில் 'நச்'சென்று தாக்கியது. பாம்பு நிலைதடுமாறியது. பிடி நழுவியது. சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து ஒரு கயிறு அறுந்து விழுவது போல அந்தப் பாம்பு தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அது சுதாரிப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் கம்பு, தடிகளால் அதை அடித்தார்கள். அதே நேரம் அங்கே ஓரமாகப் படுத்திருந்த செல்லையா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களைத் திறந்தார். "அப்பா!" என்று ரகு ஓடிப் போய்க் கட்டிக்கொண்டான். பாம்பு செத்துவிட்டது. அதன் உடல் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. பெரியவர் கனகசபை செல்லையாவின் கையைப் பிடித்துப் பார்த்தார். நாடித் துடிப்பு சீராக இருந்தது. "தப்பிச்சுட்டான். அந்தப் பாவி கீழ இறங்கினதால தான் இவன் பிழைச்சான். ஆனா அதுவா இறங்கேல்லை. நாங்கள் இறக்கினோம்!" என்றார். செல்லையா மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். அவர் கண்கள் அந்தப் பலா மரத்தின் உச்சிக்கிளையையே பார்த்துக்கொண்டிருந்தன. மருத்துவ ரீதியாக அது பயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது அந்தப் பாம்பு குறைந்த அளவு விஷத்தையே கக்கியிருக்கலாம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கு இன்றும் ஒரு நம்பிக்கை உண்டு. "கொம்பேறி மூக்கன் ஏறினால் விஷம் ஏறும்; அது இறங்கினால் தான் உயிர் தங்கும்." அன்று முதல் அந்தப் பலா மரத்தில் யாரும் ஏறுவதில்லை. காற்றில் அதன் இலைகள் அசையும்போதெல்லாம் அந்தப் பாம்பின் ஆவி இன்னும் அங்கே உச்சிக்கிளையில் உட்கார்ந்து யாராவது கடி வாங்குவார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு பயம் அந்த ஊரில் இன்றும் இருக்கிறது. நண்பனின் முகநூலிருந்து.....
  7. என்னப்பா இது? 😂 எப்ஸ்டீன கண்டவன், பக்கத்தாலை போனவன், கலோ சொன்னவன், கை குடுத்தவன், எனக்கு அவர தெரியும் எண்டவன், எப்ஸ்டீன்ர காத்து பட்டவன், கூட நிண்டு படம் எடுத்தவன் எல்லாருக்கும் அரோகரா போல கிடக்கு...🤣
  8. ஜப்பான் நாடும் சுவிர்ற்சலாந்தும் அடிக்கடி தேர்தல் முறையில் மக்கள் கணிப்பை நடத்துகின்றார்கள். மிக சரியான முறை இதுவே. நம்பி வாக்களித்த குற்றத்திற்காக நான்கு வருட கொடுங்கோல் ஆட்சி முறை நீக்கப்பட வேண்டும்.
  9. சிறிமாவினால் உள்ளூர் உற்பத்தி கொள்கை யாழ்ப்பாண தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டதல்ல.அது ஒட்டுமொத்த ஸ்ரீலங்கா மக்களுக்குமானது. அதில் பலனடைந்தவர்கள் வடபகுதி மக்கள் மட்டுமே. கிழக்கு மக்களும் இல்லை. சிங்கள மக்களும் இல்லை. எல்லோரும் பஞ்சத்தால் அவதிப்பட்டார்கள். நன்றிக்கடன் என்பது இலங்கை தமிழர்களின் இரத்தத்தில் ஊறியது.அதன் பலனை இன்று அனுபவிக்கின்றோம். இருந்தாலும் நீங்களும் உங்கள் ஆதரவாளர்களும் சிறிமா காலத்து ஈழத்தமிழர்களுக்கெதிரான இன அழிவையும் அடக்கு முறைகளையும் இலகுவாக மறந்து விடுகின்றீர்கள்.இந்த இடத்தில் காசி ஆனந்தனை நினைவுபடுத்துகின்றேன். சிங்களவர்கள் ஒரு துண்டு பாணிற்காக வரிசையில் நின்றார்கள். அவதிப்பட்டார்கள். அவர்கள் பிற்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கவில்லை.இன்றைக்கு பால் நாளைக்கு சோறு எனும் நிலையிலையே இருந்தார்கள். இதே கொள்கையிலும் வட கிழக்கு சோம்பேறிகளும் இருந்தார்கள். அதன் பரிசுதான் இனவாத ஜே ஆர் பெரும்பான்மையுடன் ஒரு ஆட்சியமைப்பு.ஆட்சிக்கு வந்ததும் மாண்புமிகு அதி உத்தம ஜே ஆர் செய்த வேலை சிறிமாவின் குடியுரிமையை பறித்தது. இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? அனுர அரசியல் இலங்கை மக்களுக்கு புதியது. அனைத்து மக்களும் ஆதரித்தார்கள். அவ்வளவுதான். விளைவுகளும் விடைகளும் அடுத்த தேர்தலில் தெரியலாம். இதற்காக பரீட்சார்த்த அரசியலை பார்ப்பவர்களுக்கு அனுர விசுவாசி பட்டம் கட்டுவது ஒருவித அரசியல் அனுபவ பற்றாக்குறையே.🌟
  10. இனவாத சிங்கள அரசுகள் விடுதலைப்புலிகளுக்கு கொடுத்த உத்தரவாதங்களை மூடி மறைப்பது உங்களுக்கு தெரியவில்லை போலும்.... குறிப்பாக பிரேமதாச ஆட்சிக்காலத்தில் இந்திய ஆக்கிரமிப்பாளர்களை முறியடிக்க புலிகளுடன் செய்த ஒப்பந்தங்கள்.....மற்றும் பல விடயங்கள். பட்ட அனுபவங்களே பல முடிவுகளை எடுக்க வைக்கும். தலைவர் பிரபாகரன் இனவாத சிங்கள அரசுகளை நம்பக்கூடாது என அன்று சொன்னார்.அவர் சொன்னது போல் சம்பவங்கள் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் நீங்களோ கிழிந்த இசைத்தட்டு போல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கின்றீர்கள்.
  11. சிங்களவன் காலம் காலமாக ஈழத்தமிழினத்தின் மீது வன்மத்தையும் இன அழிப்பையும் சட்டவிரோத குடியேற்றங்களையும் செய்யும் போது வராத கோபமும் ரோஷமும்.......ஒரு பேச்சுக்காக கூறியதையெல்லாம் பார்க்க கேட்க உள்ளமெல்லாம் கொதிக்கின்றதோ? நிற்க.... புலம்பெயர்நாடுகளில் எம் மக்களினால் நடத்தப்படும் நிகழ்வுகள் எனக்கு ஏற்புடையதல்ல. வீதிகளை மறித்து சிதறு தேங்காய் உடைப்பது,தேர் இழுப்பது எல்லாம் அளவிற்கு மீறிய செயல்கள். வந்த இடத்தில் ஆட்சிக்கு வருவதும் தேவையற்ற செயல் என்பது என் நிலைப்பாடு. இவை எல்லாம் எமக்கு தனிநாடு வேண்டும் என்ற கொள்கையாளர்களுக்கு எற்ற செயல் அல்ல. எனவே சீமானின் ஈழ அரசியலை விடுத்து அவரின் தமிழ்நாட்டு அரசியல் எனக்கு பிடித்த அரசியல்.
  12. தமிழ் மக்களை உசுப்பேற்றி உசுப்பேற்றி அதில் சுகபோக வாழ்க்கை வாழ்பவர்கள்.இயக்கங்கள் வராவிட்டால் தங்களை சோழர் பரம்பரையாகவே கதையை முடித்திருப்பர். 😂
  13. இறுதி வரைக்கும் தைரியமாக உறுதியாக இருங்கள் நாங்கள் இருக்கிறோம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. அதை விட..... விடுதலைப்புலிகள் இடையில் எல்லாவற்றையும் ...அதாவது இயக்கத்தை கலைத்து விட்டு இல்லையேல்.....சிங்கள அரசு தரும் சலுகையை மட்டும் ஏற்றுக்கொண்டிருந்தாலும்..... புறணி பாடும் உங்களைப்போன்ற வாய்கள் இன்றும் குறை/குற்றங்கள் கூறிக்கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு எம் மாவீரர்களுக்கு என்ன பதிலை சொல்கின்றீர்கள் என கோப்பையை திருப்பி போடக்கூடிய தாயுமானவர் தாங்கள்.
  14. இன்றும் விடுதலைப்புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமென முத்திரை குத்தப்பட்ட இயக்கமாகவே இருக்கின்றது. அதை மனதில் வைத்து கரிக்கருத்துக்களாகவே கொட்டுகின்றீர்கள் போல் இருக்கின்றது. ஈழ அரசியலில் 2009 அழிவிற்கு பின்னரான காலத்தையும் இன்றைய நிலையும் நீங்கள் அலசத்தயாரில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. நாங்கள் மாறுவம் நீங்கள் மாறவே மாட்டீர்கள்.😎 உலகில் உள் நாட்டு அரசியலை வல்லமை மிக்க வெளிநாட்டு அரசியல் தீர்மானிப்பதன் அவலங்களை இன்று கண்கூடாக பார்த்த பின்னரும் ......உங்களுக்கு புலிக்காய்ச்சல் தீரவில்லை என்றால்...... அந்த காய்ச்சலுக்கு மருந்தே இல்லை. வணக்கம் ஐயா! நான் எழுதுவது நகைச்சுவைதான். இருந்தாலும் நான் நிற்கும் இடத்தை குறிப்பிடுகின்றேன். ஆனால் நீங்கள் யார் பக்கம் நின்று எழுதுகின்றீர்கள் என எந்த குருவிக்கும் தெரியாது. சீனடி சிலம்படி சுத்தியடி சுழட்டியடி என்பது போல் யார்பக்கம் ஏன் எழுதுகின்றீர்கள் என்பது புரிவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.