-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
போர் என வந்து விட்டால் பொருளாதாத நெருக்கடிக்குள் தள்ளி அவர்களை வீழ்த்துவதும் ஒருவித போர் வெற்றிதான். இன்று ஐரோப்பிய ஒன்றியமும் அது சார்பு நாடுகளும் தங்கள் பொருளாதாரத்தை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றன. காரணம் எரிசக்தி அரசியல் மட்டுமே. இதனை ரஷ்யா செவ்வனே செய்கின்றது. இன்று கூட ஜேர்மனியதொழிற்சாலைகள் மன்ற தலைவர் அரசிடம் எரிசக்தி பிரச்சனையை உடனடியாக தீர்க்குமாறு எச்சரிக்கையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவ்வளவிற்கு நிலமை கவலைக்கிடம். அமெரிக்காவை போல் ஐரோப்பாவும் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் ஒரு கண்டம். அதன் பாதிப்பை உலகம் முழுவதும் உணரக்கூடியதாகவே உள்ளது. மற்றும் படி ஆக்கிரமிப்பு என்றால் அதன் இடம் பொருள் ஏவல் பார்க்க வேண்டும். ரஷ்யாவின் உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பிற்கும், ஈழத்தமிழர் மீதான இனவாத சிங்களத்தின் ஆக்கிரமிப்பிற்குமான வேறுபாடு,வித்தியாசங்களை உக்ரேன் விசுவாசிகள் தேடிப்பிடித்து விளங்கிக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றீர்கள். கந்தன் பொண்டில் பொன்னன் பொண்டிலுக்கு அடித்தாள் எனும் ஆக்கிரமிப்பு செய்திகளையும் இங்கே இணைத்து ஒப்பீடு பார்க்காத வரைக்கும் கடவுளுக்கு நன்றி.🤣
-
பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர் கைது
இதர பிரிட்டிஷ் றோயல் குடும்ப அங்கத்தவர்கள் தங்களை தூய்மைப்படுத்த ஒருவரை பலி கொடுத்துள்ளார்கள். அவ்வளவுதான். மற்றும் படி இந்த அரச குடும்பங்கள் உலகில் செய்த அட்டூளியங்களை போல் செய்ய இன்னும் ஒருவரும் பிறக்கவில்லை. இப்படிக்கு உலக வரலாறுகளை படித்தவன்😎
-
அன்பு ௐ
அரோகரா....என் ஐயனுக்கு அரோகரா....🙏 https://youtu.be/T0rNBPBYwas?si=hCbrfBXVSdf-OoXU
-
றோசா முள்ளா? மலரா??
நலம் பெற வேண்டுகின்றேன்.
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
உங்களுக்கு யார்,எவர், எந்த அரசியல்வாதி நேர்மையானவராக தெரிகின்றார்? எந்த நாட்டின் நிலவரங்கள் சரியாக தெரிகின்றது? 😄
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
என்னது ரஷ்யாவிற்கு நிலவெறியா? ஓ மை காட்.....😧 அப்படியானால் சூரிய அஷ்தமனம் இல்லாத உங்கள் பட்டத்து ரோயல் இராச்சியத்தின் நடவடிக்கைகளை என்ன என்பீர்கள்? பிரான்ஸ் எனும் நாட்டில் கூட ஆபிரிக்கா இல்லையென்றால் வீட்டில் விளக்கு எரியாது என்று கூட சொல்கிறார்கள்.பிரான்ஸ் நாட்டின் ஆபிரிக்க சூறையாடல்களை பொது வெளியில் விவாதிக்க தொடங்கி விட்டார்கள். நிலமை கவலைக்கிடம் போல் உள்ளது. அதை விட உங்களிடம் ஒரு கேள்வி? மேலைத்தேயத்திற்கு படையெடுத்து வருபவர்கள்....இங்கே வந்து செயற்படும் செயல்களை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா? உதாரணத்திற்கு... பாலியல் வன்முறைகள்... கத்தி குத்துகள்... பொது மக்கள் கூடும் இடங்களில் வாகனங்களை ஏற்றி கொலைகள் செய்தல்.. வேலைகளுக்கு செல்லாமல் அரச பணத்தில் வாழுதல்... இன்னும் பல... உலகில் இருக்கும் ஒவ்வொரு இன மக்களும் தம் தேசியத்துடனும் சுய மரியாதையுடனும் தாம் பிறந்த மண்ணில் யாருக்கும் பங்கமில்லாமல் வாழ வேண்டும். இது தான் என் ஆசை. நாம் எமது மண்ணுக்காக எப்படி போராடுகின்றோமோ..... அதே போல் அவர்களும்....
-
டித்வாவினால் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு சென்ற IMF பிரதானி
ஒரு நாட்டில் என்னென்ன பிரச்சனை இருக்கின்றது என்பதை நேரில் பார்த்து அறியும் அளவிற்கா இன்றைய ஐ தொழில்நுட்பம் கொண்ட உலகு இயங்குகின்றது? இன்றைய அரசியல்வாதிகள் மேலைத்தேய ஜாம்பவான்களை சந்தித்து ஈழத்தமிழர் பிரச்சனைகளை விளக்கும் அளவிற்கு தற்போதைய உலகம் குருட்டு உலகம் இல்லை. அவர்களுக்கு தமிழர் பிரச்சனை நன்கு தெரியும். இருந்தாலும் அவர்கள் போடும் நாடகங்களுக்கு எம்மவர்கள் தாளம் போடுகின்றார்கள். அவ்வளவுதான்.
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
ஜேர்மனியில் அடுத்து வரும் தேர்தல்களில்Afd கட்சி அமோக வெற்றி பெறும். அப்போது அதற்கான காரணத்தை போர் விரும்பும் கட்சிகள் உணரும்.
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
நான் இதே கருத்தை உக்ரேன்,ரஷ்யா சம்பந்தப்பட்ட திரிகளில் உறுதிபட எழுதியுள்ளேன்.ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ரஷ்யாவின் முக்கியத்துவம் பற்றியும் எழுதியுள்ளேன். ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கான எரிசக்தி கிட்டங்கி.அதை வெறுத்து ஒதுக்கினால் மல்லாந்து படுத்து காறிதுப்புவதற்கு சமன். ஐரோப்பிய ஒன்றியம் என்பதை அமெரிக்கா எதிரியாகவே என்றும் பார்க்கும். இதை இன்று கண்கூடாகவே பார்க்கின்றோம். இந்த மனப்பான்மைக்காகவே நான் பிரான்ஸ் நாட்டை அன்று தொடக்கம் அதிகம் நேசிக்கின்றவன். அழிவுகள் இல்லாத நேரடி பேச்சுவார்த்தைகள். நல்லது கெட்டது எவர் பக்கம் இருந்தாலும் போர் தேவையற்றது. இன்றைய மக்ரோன் கொள்கையைத்தான் இரண்டாம் உலகப்போரில் அன்றைய பிரான்ஸ் நாட்டு தலைவர்களும் கடைப்பிடித்தார்கள்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இலங்கை பொலிசார் மிக மோசமானவர்கள்.அதை விட இராணுவத்தினர் இன்னும் மோசமானவர்கள். நீதி நேர்மை நியாயம் இல்லாமல் நடப்பவர்கள். லஞ்சம் கொடுத்தால் மட்டும் நேர்மையாக நடப்பது போல் தெரியும். லஞ்சமாக கருவாடு கொடுத்தாலும் சந்தோசமாக ஏற்கும் காவல்துறையுள்ள நாடு அது.
-
ஐரோப்பிய ஒன்றியம் எரிசக்தி விலைகளை அவசரமாகக் குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரிய அதிபர் கூறுகிறார்.
ஐரோப்பா ரஷ்ய மலிவு எரிசக்தியை மீண்டும் வாங்கும் வரைக்கும் ஐரோப்பிய பொருளாதார அவலங்கள் தொடரும்.. எரிசக்தி விலை அதிகரிப்பால் ஜேர்மனியில் சென்றவருடம் வங்குரோத்து நிலைக்கு வந்த சிறிய/பெரிய நிறுவனங்களின் எண்ணிக்கை...👇
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்களுக்கு அப்படி ஒரு சிந்தனை இருக்கின்றதா? 🤣
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
விடுதலைப்புலிகளும் தன்னிறைவு பொருளாதாரத்தை திறம்பட செய்து காட்டியவர்கள். அது ஒரு சிலருக்கு கசப்பாக தெரிந்தது. அந்த கசப்பின் பிரதிபலன்கள் தான் இன்றைய ஸ்ரீலங்கா அரசியல் நிலைகள். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பிய நாட்டு மக்கள் அனுபவித்த பொருளாதார கட்டுப்பாடுகளும் மிக கடுமையானனது. அந்த கடுமையான சட்டங்களினால் தான் மேற்கின் பல நாடுகள் இன்று பொருளாதார வளர்ச்சி பெற்றுருக்கின்றன. கட்டுப்பாடுகள் கசந்ததினால் தான் விடுதலைகளும் அழிந்தன. இது உலக சரித்திரம்.
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
கொம்பேறிமூக்கன் பாம்பு. யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் உள்ள அந்தச் சிறிய கிராமத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. செல்லையா, தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த பலா மரத்தின் காய்ந்த கிளைகளை வெட்டுவதற்காகக் கையில் வீச்சரிவாளுடன் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். செல்லையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருக்கும். "மரமேறிக் கைத்தழும்பு ஏறிய உடம்பு" என்று ஊருக்குள் சொல்வார்கள். பலா மரத்தின் ஒரு கிளை வீட்டின் கூரைக்கு மேலே நீண்டுகொண்டு தொல்லையாக இருந்தது. "டேய் ரகு, அந்தக் கயிற்றை இங்க எறிடா" என்று கீழே நின்ற மகனிடம் கத்தினார். கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தக் கிளையின் நுனிப் பகுதிக்கு நகர்ந்தார். அப்போதுதான் அந்தச் சலசலப்பு கேட்டது. பலா இலைகளுக்கு நடுவே பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் நீண்ட ஒரு பாம்பு பதுங்கியிருந்தது. செல்லையா உற்றுப் பார்த்தார். அவரது நெஞ்சு 'திக்' என்றது. "அடக் கடவுளே! இது சாரைப் பாம்பின்ரை ஆண் வர்க்கம்! கொம்பேறி மூக்கன்!" கிராமத்துப் பெரியவர்கள் சொல்வது செல்லையாவின் நினைவுக்கு வந்தது. ‘கொம்பேறி மூக்கன் கடிச்சால் கொல்லாம விடாது. அது கடிக்கிற வேகத்தில மரத்து உச்சிக்கு ஏறும். அது ஏற ஏற விஷம் தலைக்கு ஏறும். கடைசியில பிணத்தை எரிச்சாத்தான் கீழ இறங்கும்.’ செல்லையா சுதாரிப்பதற்குள் அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் பாய்ந்தது. செல்லையாவின் வலது கையில் மணிக்கட்டுக்கு மேலே 'நறுக்'கென்று கொத்தியது. அடுத்த நொடியே அந்தப் பாம்பு செல்லையாவை விட்டு விலகி மரத்தின் உச்சிக்கிளையை நோக்கிச் சரசரவென்று ஏறத் தொடங்கியது. "ஐயோ! அப்பா!" என்று கீழே நின்ற ரகு அலறினான். செல்லையா நிலைகுலைந்தார். விஷம் ஏறுகிறதோ இல்லையோ பயம் அவரை ஆட்கொண்டது. மரக்கிளையைப் பிடித்துக்கொண்டே கீழே பார்த்தார். கண்கள் இருட்டின. பிடி தளர்ந்தது. "தொப்"பென்று கீழே மணலில் வந்து விழுந்தார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்களும், அயலவர்களும் ஓடி வந்தார்கள். செல்லையாவின் கையில் இரண்டு பற்கள் பதிந்த அடையாளம். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஊர்ப் பெரியவர் கனகசபை ஓடி வந்தார். மரத்தை அண்ணாந்து பார்த்தார். மரத்தின் மிக உயரமான, மெல்லிய கிளையின் நுனியில் அந்தப் பாம்பு சுருண்டு உட்கார்ந்து கீழே விழுந்து கிடக்கும் செல்லையாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "மாட்டிட்டியே செல்லையா, அது கொம்பேறி மூக்கன்டா! கடிச்சிட்டு உச்சிக்கு ஏறிட்டு. இனி அது இறங்க மாட்டுது. அது மேல இருக்கிற வரைக்கும் இவன் ஒடம்பில விஷம் ஏறிக்கொண்டே தான் இருக்கும்." என்றார் கனகசபை பீதியுடன். செல்லையாவுக்கு வாய் நுரைக்கத் தொடங்கியது. உடல் வெட்டி இழுத்தது. விஷத்தின் வேலையா அல்லது மரண பயமா என்று தெரியவில்லை. "ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்கோ!" என்று ரகு கத்தினான். "தம்பி, இது சாதாரண பாம்பு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற நேரத்துக்குள்ள கதை முடிஞ்சிடும். அந்தப் பாம்பு கீழ இறங்கினாத்தான் உன்ரை அப்பா பிழைப்பான். ஆனால் உன்ரை அப்பாவை எரிச்சுக் கருமாதி செய்யுற புகை வந்தாத்தான் அது இறங்கும்." என்றார் பெரியவர். ரகுவுக்குக் கோபம் வந்தது. "என்ன லூசுத்தனமா கதைக்கிறீங்கள்? அப்பாவைக் காப்பாத்த வழியைப் பாருங்கோ!" அப்போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் "பெரியவரே அந்தப் பாம்புக்குச் செல்லையா செத்துப்போனது தெரியோணும். அவ்வளவு தானே?" என்றான். "ஓம். அவன் எரிஞ்ச புகை அதுக்குத் தெரியோணும்." என்றார் பெரியவர். "அப்ப ஒரு காரியம் செய்வம். செல்லையாவைத் தூக்கிட்டுப் போய் ஒரு ஓரமா வையுங்கோ. உடனை கொஞ்சம் பச்சை ஓலையளையும், பழைய பாயளையும் போட்டு மரத்துக்குக் கீழ எரிப்பம். அந்தப் புகை மண்டலத்தில பாம்பு ஏமாந்தாலும் ஏமாறும்." என்றான் அவன். வேறு வழியில்லை. செல்லையா மயக்க நிலையில் இருந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ரகுவும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பலா மரத்தின் அடியில் காய்ந்த சருகுகள், பழைய பனையோலைகள் எல்லாவற்றையும் குவித்தார்கள். நடுவே கொஞ்சம் பச்சை இலைகளையும் போட்டார்கள். "நெருப்பை வைடா!" என்றார் பெரியவர். நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பச்சை இலைகள் எரிந்ததில் கரும்புகை குப்பென்று கிளம்பியது. அந்தப் புகை நேராக மரத்தின் உச்சியை நோக்கிச் சென்றது. கீழே அனைவரும் மூச்சடக்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள். மரத்தின் உச்சியில் இருந்த கொம்பேறி மூக்கன் அந்தப் புகையை உணர்ந்தது. கீழே ஏதோ எரிகிறது; புகை வருகிறது என்பதை அது பார்த்தது. "எரிச்சுட்டாங்க போல" என்று நினைத்ததோ என்னவோ அந்தப் பாம்பு மெதுவாக நகரத் தொடங்கியது. "இறங்குது! பாம்பு இறங்குது!" என்று கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுத்தார். பாம்பு ஒவ்வொரு கிளையாக இறங்க இறங்க ஓரமாகப் படுத்திருந்த செல்லையாவின் இழுபறி கொஞ்சம் குறைவது போலத் தோன்றியது. பாம்பு பாதி மரத்தைத் தாண்டி கீழே வந்து கொண்டிருந்தது. திடீரென்று காற்று திசைமாறி வீசியது. புகை கலைந்து சென்றது. பாம்பு சட்டென்று நின்றது. கீழே எரிவது மனித உடல் அல்ல, குப்பைகள் என்பதை அது கவனித்துவிட்டதோ? அல்லது கீழே சலசலக்கும் மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுவிட்டதோ? அது மீண்டும் மேலே ஏறத் திரும்பியது. "ஐயோ! அது ஏமாறல! திரும்பவும் ஏறுது!" என்று ரகு கதறினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமு தன் கையில் வைத்திருந்த 'கவணை'(கெற்றப்போல்) எடுத்தான். சின்ன வயதில் குருவி, ஓணான் அடித்த கை பழக்கம். தரையில் கிடந்த ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கவணில் பொருத்தினான். குறி தவறக்கூடாது. தவறினால் பாம்பு உச்சிக்குப் போய்விடும்; செல்லையா கதை முடிந்துவிடும். மூச்சிரைக்கக் குறி பார்த்தான். பாம்பு மேல் கிளைக்குத் தாவத் தயாரானது. ‘விர்ர்ர்’ கவணில் இருந்து புறப்பட்ட கல் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. சரியாகப் பாம்பின் தலைப்பகுதிக்குக் கீழே அதன் கழுத்தில் 'நச்'சென்று தாக்கியது. பாம்பு நிலைதடுமாறியது. பிடி நழுவியது. சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து ஒரு கயிறு அறுந்து விழுவது போல அந்தப் பாம்பு தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அது சுதாரிப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் கம்பு, தடிகளால் அதை அடித்தார்கள். அதே நேரம் அங்கே ஓரமாகப் படுத்திருந்த செல்லையா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களைத் திறந்தார். "அப்பா!" என்று ரகு ஓடிப் போய்க் கட்டிக்கொண்டான். பாம்பு செத்துவிட்டது. அதன் உடல் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. பெரியவர் கனகசபை செல்லையாவின் கையைப் பிடித்துப் பார்த்தார். நாடித் துடிப்பு சீராக இருந்தது. "தப்பிச்சுட்டான். அந்தப் பாவி கீழ இறங்கினதால தான் இவன் பிழைச்சான். ஆனா அதுவா இறங்கேல்லை. நாங்கள் இறக்கினோம்!" என்றார். செல்லையா மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். அவர் கண்கள் அந்தப் பலா மரத்தின் உச்சிக்கிளையையே பார்த்துக்கொண்டிருந்தன. மருத்துவ ரீதியாக அது பயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது அந்தப் பாம்பு குறைந்த அளவு விஷத்தையே கக்கியிருக்கலாம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கு இன்றும் ஒரு நம்பிக்கை உண்டு. "கொம்பேறி மூக்கன் ஏறினால் விஷம் ஏறும்; அது இறங்கினால் தான் உயிர் தங்கும்." அன்று முதல் அந்தப் பலா மரத்தில் யாரும் ஏறுவதில்லை. காற்றில் அதன் இலைகள் அசையும்போதெல்லாம் அந்தப் பாம்பின் ஆவி இன்னும் அங்கே உச்சிக்கிளையில் உட்கார்ந்து யாராவது கடி வாங்குவார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு பயம் அந்த ஊரில் இன்றும் இருக்கிறது. நண்பனின் முகநூலிருந்து.....
-
உலகை அதிர வைத்த கோப்புகளை கொண்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் யார்?
என்னப்பா இது? 😂 எப்ஸ்டீன கண்டவன், பக்கத்தாலை போனவன், கலோ சொன்னவன், கை குடுத்தவன், எனக்கு அவர தெரியும் எண்டவன், எப்ஸ்டீன்ர காத்து பட்டவன், கூட நிண்டு படம் எடுத்தவன் எல்லாருக்கும் அரோகரா போல கிடக்கு...🤣