Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by புங்கையூரன்

  1. வாசிக்க இதமாக இருக்கின்றது…! தொடருங்கள், அக்கினி….!
  2. ஏக்கத்தைப் பிரதி பலிக்கின்றது கவிதை…! விரலுக்கு அதிகமாக வீங்குகிறோம் என்று தெரிந்தே வீங்கியது சிங்களம்…! அனுதாபம் வரவில்லை! ஆத்திரம் தான் வருகின்றது..! மக்கள் தான் பாவம்..! புத்தன் ஏதாவது பார்த்துச் செய்தால் தான் சிங்களத்துக்கு மீட்சி…!
  3. நன்றி...நிலாக்கா...! கவிதை எழுத நினைச்ச போது....பத்து நாள் தான் முடிஞ்சிருந்தது...!😁
  4. உண்மை தான் யாயினி...! வரவுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி....! எனக்கும் அது தான் பிரச்சனை..! அதுக்காகத் தான் இப்பவெல்லாம் அடக்கி வாசிக்கிறது...! நன்றி....ஈழ்ப்பிரியன்...! பன்னாடையில் பிரச்சனை இல்லை, சிறியர்...! அதன் பார்வையின் தான் கோளாறு உள்ளது...! உக்ரெயினில் ஐ.நா.பன்னாடை செய்யவேண்டியதெல்லாம்....ஒழுங்காத் தானே செய்யுது...!
  5. நன்றாக உள்ளது, கொழும்பான்…! தொடர்ந்தும் எழுதுங்கள்…!
  6. அக்கினியின் கதையெண்டாலே கொஞ்சம் வேப்பிலையும், விபூதியும் பக்கத்தில வைச்சுக் கொண்டு தான் வாசிக்க வேணும்…! தொடருங்கோ… அக்கினி…!
  7. யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!
  8. அருமையான கவிதை, நிழலி…! ஒருவரது பார்வையைப் பொறுத்துக் கவிதையைப்வ்பல நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி ரசிக்கலாம் என்பது கவிதையின் தனிச் சிறப்பாகும்…! ஒரு விதமான பயத்தையும், இயலாமையையும், வெறுமையையும் கவிதை அழகாக விபரிக்கின்றது…! தொடர்ந்தும் இது போன்ற கவிதைகளைத் தாருங்கள்…! வாழ்த்துக்கள்…!
  9. பார்க்கவே உடல் புல்லரிக்கின்றது...! இணைப்புக்கு மிக்க நன்றி.....வன்னியர்...!
  10. நன்றி... நிழலி...! நீங்கள் கூறிய படியே...நாமெல்லாம் கூட, எம்மையறியாமலே மூளைச் சலவை செய்யப் பட்டுக் கொண்டேயிருக்கின்றோம் என்பது தான் உண்மை...! யாழ் களத்தில் இப்போது எழுதுவது, மிகவும் இலகுவாக உள்ளது...! தொடர்ந்து எழுதலாம் என உத்தேசித்துள்ளேன்! யாழுக்கு வெறும் வயது மட்டும் போகவில்லை..! அவள் தன்னைத் தானே, மேலும்...மேலும் மெருகூட்டிய படியே வளர்கின்றாள்..! இதற்கான பெருமை முழுவதும்...மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும், தினமும் வந்து போகின்ற கள உறுப்பினர்களுக்கும், அதன் அடித்தளமாக உள்ள வாசகர்களுக்கும் உரியது என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது...!
  11. பொறுத்திருந்து பார்ப்போமே....உடையார்...! அந்தக் காலத்தில் வாழக்கிடைத்தது ஒரு அரிய பாக்கியமே...! நன்றி, உடையார்....!
  12. வணக்கம் சசி..! தமிழர்கள் போரின் வலியை நன்றாக உணர்ந்தவர்கள்...! இருப்பினும் வலிக்குக் காரணமானவர்களை இலகுவாக மறந்து விட மாட்டார்கள்! நிச்சயம் மன்னிப்பார்கள் எனினும் மறந்து விட மாட்டார்கள்! ஏனெனில் அவர்களும் மனிதர்கள்...! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...! நன்றி, குமாரசாமி அண்ணா...! மேட்டுக்குடித் தனம் என்பது பொருத்தமான வார்த்தை தான்..! உண்மை தான், பாஞ்ச்...! அண்மையில் ஒரு காணொலி பார்த்தேன்! அதை இங்கு இணைத்தால் பொருத்தமாக இருக்கும்! ஆனால் அதில் வரும் சில வார்த்தைகள் யாழ் கள விதிகளை மீறுவதாக உள்ளன! மிக்க நன்றி, பாஞ்ச்....!
  13. தனிக்கும், கொழும்பானுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக…!
  14. உண்மை தான், சுவியர்…! பாரதமும் எமது பழியைத் தேவையில்லாமல் தேடிக்கொண்டது…! வரவுக்கு நன்றி…! நன்றி, ஓணாண்டியார்…! நீங்கள் பதிந்த பிராமணன் மச்சம் சாப்பிட்ட கதை இன்னும் தலைக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றது..! வருகைக்கும் , ஊக்குவித்தலுக்கும் நன்றி, தோழர்….!
  15. வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...! அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...! இது கொஞ்சம் வித்தியாசமானது...! மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...! மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...! மண்டலாவை வடித்த போது..., கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..! மகாத்மாவை வடித்த போது, கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...! அரேபிய அகதிகளுக்கு..., அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,! பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்..., தன் காதுகளை முழுதாக மூடியது...! முள்ளி வாய்க்காலில்..., முகத்தையே மூடியது..! பன்னாடைக்கு என்ன நடந்தது...? எல்லோரும் தேடினார்கள்...! மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...! ஒன்று...இரண்டல்ல..., பத்து வருடங்கள்..! வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..! போர்க் குற்றமா..? எங்கே நடந்தது...? புதினம் கேட்டது, பன்னாடை..! உக்ரெயினில் யுத்தமாம்..! ஓடோடி வந்தது...பன்னாடை..! தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....! அங்கத்தின் நிறமோ, வெள்ளை...! கண்களின் நிறமோ....மரகதம்..! கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...! உக்ரெயின் யுத்தம் தொடங்கி..., இன்னும் பத்து நாள் ஆகவில்லை...! நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...! ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..! எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..! அகதி முகாமில் பிறந்த குழந்தயை..., ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...! அந்தக் குழந்தயை...., பன்னாடை வடிகட்டாது...! ஏனெனில்.., அவள் ஒரு ஈழத்து அகதி...!
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், இணையவன்….!
  17. வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!
  18. பகலவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
  19. மிக்க நன்றி, நீர்வேலியான்…! ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!
  20. இந்தியாக்காரனை ‘ஹிந்தியன்’ என்று எல்லோ அழைப்பார்கள்!😂
  21. தொடருங்கள், ஈழப்பிரியன்…! இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!
  22. நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...! மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....! இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....! கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...! நல்ல ஒரு படிப்பினைக் கதை...!
  23. நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த பகுதி எப்போது வரும் என ஆவலுடன் ஏங்க வைத்த்ச் ஒரு தொடர் கதை…! அரங்கனின் மார்பில் தவளும் ஆண்டாளின் மாலையாக….! வரிகளை ரசித்தேன்…! வைர முத்துவுக்குக் கேட்டுவிடப் போகின்றது..பரவாயில்லை…! சங்கிகள் காதில் விழுந்தால் தான் பிரச்சனை…!
  24. கதை நல்லாயிருக்குத் தான்…! மூட்டைப் பூச்சி இல்லையென்றால் கடிச்சது என்ன? மனிசன் நுள்ளி விளையாடுது போல….!
  25. பணமும், குணமும் ஒன்றாகப் பயணிப்பது மிகவும் அரிது...! பணம் எனும் அச்சாணியைச் சுற்றித் தான் வாழ்க்கை எனும் சக்கரம் சுழலுகின்றது போலும்...! சாமினாதன் மிகவும் பொறுமைசாலி போல உள்ளது! வெளி நாட்டு வாழ்க்கை முதலில் பழக்குவது பொறுமையைத் தான்...! அதனால் படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை....!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.