Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by புங்கையூரன்

  1. இன்று பதின்மூன்று வயதில் காலடி பதிக்கும். அன்புத் தம்பி தமிழ் சிறிக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!😁
  2. என்னுடன் மட்டக்களப்பு நண்பரொருவர் கல்லூரிக் காலத்தில், ஒன்றாகப் படித்தார்...! அவரது பெயர் போடியார் என்று குறிப்பிட்டார்! தனது குடும்பத்தில் அனைவரும் போடியார் என்று தான் அழைக்கப் படுவதாகக் கூறினார்! வன்னிப் பகுதிகளில் நாச்சியார் என்று அழைக்கப் படுவது போல...வன்னி மன்னர்களின் ஆதிக்கம், கிழக்கில் விரிந்த போது இந்தப் பெயர்கள் அங்கு வழக்கத்துக்கு வந்திருக்கவும் கூடும்..! இந்தியாவில் எல்லா தலைப்பாகைகளின் குடும்பப் பெயர் சிங் என்பது போலவும் இருக்கலாம்! பஞ்சாப் மாகாணத்தின் 'ஆதாமாக" மிஸ்டர் சிங் இருந்திருப்பாரோ?😜
  3. போனால் கிடைக்காது, பொழுது பட்டால் கிட்டாது என்று யாழ்ப்பாணம் பஸ் தரிப்பிடத்தில் ஒருவர் எப்போதும் ஸ்வீப் ரிக்கற் வித்த படி இருப்பார்! ஒவ்வொரு கிழமையும் எனது தகப்பனாரும் வாங்கிக் கொள்வார்! பின்னர் வானொலியில் முடிவுகளைக் கேட்கும் போது...., அட! இரண்டு நம்பரால சறுக்கிப் போச்சுது என்ற படி.... ரிக்கற்றைக் கிழித்து எறிவார்! இதைப் பார்த்துப் பார்த்து.....நான் ரிக்கற்றே வாங்குவதில்லை..!😄
  4. புத்தன்.....என்று தணியும் இந்த முருகனின் தாகம்?😄 சிட்னி முருகன் ....எல்லோரையும் கவர்ந்து கொள்வதன் மர்மம் என்ன என்று பல தடவைகள் சிந்தித்தது உண்டு..! அடையாளங்களைத் தொலைத்த எமது இனத்துக்கு, அவன் ஒரு அடையாளமாக இருக்கிறான் என்று நினைக்கிறேன்...! கதையின் கருப்பொருள், காலத்தின் தேவை...! விண்ணை வென்று விட்டதாகப் புலம்பும் மனிதனை.....ஒரு கண்ணுக்குக் கூடத் தெரியாத கொறோனா வைரஸ் எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது? கதை....அருமை....!!!
  5. என்ன வளவன் இப்ப்டிச் சொல்லுகின்றீர்கள்? யாழ் என்பவள் பெண் என்று நீங்கள் ஏற்றுக் கொண்டால்....அவளுக்கு இப்போது இருபத்து மூன்று வயது தானே? அவளுக்கு ஐம்பது வயது வரும்போது நாடி ....நரம்புகளைப் பற்றி யோசிப்போமே...!😀
  6. இனவாதம்....பிக்கு மாருக்கு வயிறு வளர்க்க உதவுகின்றது! அதை விடுவம்...! மாணிக்க வாசகர் இன்ரென்ஸிவ் வாட்டில எண்டு கேள்வி..! அப்படி என்ன தான் அந்த மெஸ்ஸேஜில இருந்திருக்கும்?😮
  7. சுமே, ஒருவரது மொழி என்பது அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப உருவாகின்றது. வெப்ப வலையத்தில் வாழும் எமது மொழியின் முதல் எழுத்தே ‘அ’ வில் தொடங்குகின்ரது. குளிர் காலனிலையில் வாழும் வெள்ளையன் பெரிதாக வாயைத் திறந்து மொழியைப் பேச முடியாது. அதிக வெப்பத்தை அவன் இழக்க வேண்டியிருக்கும். வாயிலுள்ள சுருட்டை வெளியே எடுக்காமலே வின்ஸ்டன் சேர் சிலால் ஒரு பிரசங்கமே நடத்த முடியும். நமது மொழியில் அது கடினமானது. ஒரு கிளி பேசப் பழகுவது போலத் தான், எமது பெயர்களை அவர்கல் பரிச்சயப் படுத்திக் கொள்கிறார்கள்...!
  8. இலங்கையை விட்டு வெளிக்கிட்ட நாள் முதலாய்.....எனது முதல் பெயர் அப்பாவின் பெயர் தான்...! அப்பாவின் பெயர் என்னுடன் இருக்க வேண்டும் என்று தானே அவர் ஆசைப்பட்டிருப்பார்? அவர் பெயரையே என் பெயர் ஆக்கி விட்டதால்....எனக்குக் குற்ற உணர்வு எள்ளளவும் வரவேயில்லை! இப்போது ஒரு குடும்பப் பெயர் உண்டு..! அதனால் பிரச்சனைகள் இல்லை! ஆனால் உண்மையான பிரச்சனை....நீளமான எங்களது பெயர்கள் தான்! உதாரணத்துக்கு.....கைலாயபதிவாசன் அல்லது சிவஞானசுந்தரம்..! பாவம்...வெள்ளைக்காரன் என்ன பாடு படுவான்..! உங்கள் பதிவு பல சிந்தனைகளைத் தூண்டிவிட்டது! த்மிழர்களுக்குக் குடும்பப் பெயர்கள் ஒரு காலத்தில் இருந்தன! இப்போதும் மட்டக்களப்புப் பகுதிகளில் அவை உபயோகத்திலிருக்கின்றன! போடியார் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன! பதினைந்தாம் நூற்றாண்டின் பின்னர், சாதீயம் தென்னிந்தியாவில் புகுத்தப் பட்ட பின்னர் தான் இந்தக் குடும்பப் பெயர்கள் இல்லாமல் போயிருக்க வேண்டும்! ஆதித் தமிழர்கள் குடும்பப் பெயர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்! தாழிகளில் புதைப்பதும்,நடுகல் நடுவதும் அவர்களது வழக்கமாக இருந்திருக்க வேண்டும்! பிராமணர்கள் தான்...எரிப்பது, உடன் கட்டையேறுவது போன்ற முறைகளை அறிமுகப் படுத்தினார்கள்! இதன் முக்கிய நோக்கம் தமிழர்களின் வரலாற்றுத் தடையங்களை இல்லாமல் செய்வதேயாகும்..! தங்களுக்கு ஏற்றவாறு விதிகளை மாற்றினார்கள்! ஒரு பிராமணப் பெண் உடன் கட்டையேறத் தேவயில்லை! அவள் தலைமயிரை வழித்துக் கொண்டால், அது உடன் கட்டையேறியதற்குச் சமனாகும்! தமிழரின் சில நல்ல வழக்கங்களை நாம் பாராட்டவே வேண்டும்! பிராமணர்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்! எனது தந்தையாரின் தந்தையார் அவர் சின்னக் குழந்தையாய் இருக்கும் போதே இறந்து விட்டார்! அவரின் தாயாருக்கு...மறுமணம் அந்தக் காலத்திலேயே செய்து வைக்கப் பட்டது! அதுவும் சமூகப் பெரியவர்களால் முன்னின்று நடத்தி வைக்கப் பட்டது! இதை நான் இங்கே எழுதுவதன் நோக்கமானது, இப்போதய சமூக வழக்கங்களை வைத்து..எமது கலாச்சாரத்தை,நாம் குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது என்பதற்காகத் தான்! அவை எம்மீது திணிக்கப் பட்டு. இப்போது எமது கலாச்சாரம் என அடையாளப் படுத்தப் படுகின்றன! இதே போலத் தான் எமது மதமான சைவமானது இப்போது இந்து மதமாகத் திணிக்கப் படுகின்றது! இணுவிலில் அனுமாருக்குக் கோயில் என்ற போது என்னால் முதலில் நம்ப முடியவில்லை! அனுமாரை...எப்பவாவது கடவுளாகக் கும்பிட்டநினைவு எனக்கு இல்லை! வெறும் இராம தூதுவனாகத் தான் எனக்குத் தெரியும்..!
  9. எங்கட சனத்திலை இருக்கிற இந்தப் படங் காட்டிற குணம் ஒரு நாளும் போகாது என்பதை உங்கள் கதை தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளது! இடம், பொருள், ஏவல் என்பவற்றை அவர்கள் ஒரு நாளும் கணக்கெடுப்பதேயில்லை! இப்ப சிட்னி முருகனும் நல்லாத் தனிச்சுப் போனார்! ஆனால் கவலைப் படவேயில்லை! சனம் தான் வாங்கின சாறிகளையும், நகைகளையும், புதுக் கார்களையும் ஊருக்குக் காட்ட ஏலாமல் தலையைச் சொறிஞ்ச படி இருக்கினம்! காவலூர் கண்மணியின் கதையோட்டம் பற்றி விமர்சிக்க எனக்கு அருகதையில்லை! தொடர்ந்தும் எழுதுங்கள்...!
  10. தயவு செய்து மகிந்த கூட்டத்துக்கு இந்தக் கதையைச் சொல்லிப்போடாதீர்கள், தானாச் சீனா!🤭
  11. மிக்க ந்ன்றி, மோகன் அண்ணா. எடிற் பட்டன் இடம் மாறி இருந்ததை இப்போது தான் அவதானித்தேன்!
  12. வணக்கம், நிர்வாகம்! தயவு செய்து எனது எடிற் வசதியைத் திரும்பவும் தாருங்கள்! நன்றி...!
  13. நுணாவுக்கும் , அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  14. அண்ணோய், ஒரு விசயம் உங்கட காதுக்குள்ளை சொல்லுறன்..! நானும் முந்தி உங்களை மாதிரித் தான் நினைச்சனான்..! பிறகு தான் தெரிய வந்தது...பூசாரியாருக்கு எங்களைப் போல.....விற்றமின் D அவசியமில்லையாம்!
  15. வணக்கம், ரஞ்சித்...! தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசிக்கின்றேன்! எல்லாச் செய்திகளுமே...எமது காலத்தில் தான் நடந்திருப்பினும், தனித் தனியாக வாசித்த போது அவற்றுக்கு உள்ளே இருந்த உட் கருத்து தெளிவாகப் புரியவில்லை! இப்போது வாசிக்கும் போது நடந்த சம்பவங்கள் ஒரு கோவையாப் பொருந்தி வருகின்றன! இந்த ஒரு காரணத்துக்காகவாவது நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்...! தொடருங்கள்!
  16. வன்னியருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......அக்கினி!
  18. ஏராளனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
  19. நிழலிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....!
  20. ரகுவுக்கும், வல்வை சகாறாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.