Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13561
  • Joined

  • Days Won

    74

Everything posted by புங்கையூரன்

  1. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா, ஈழப்பிரியன்! நாங்கள் கஸ்தூரியார் வீதியால, இரவில மதில் பாய்ஞ்சு படம் பாத்திட்டு வாற நேரம்...அவ்வளவு நாய்களும் எங்களைப் பத்திரமாய்க் கூட்டிக் கொண்டு வந்து ஹொஸ்டலிலை விடுவினம்! பிரச்சனை என்னவெண்டால்....மாணவ மேற்பார்வையாளரையும் எழுப்பி விட்டிருவினம்! நாங்கள் மதில் பாய...அவர் நாங்கள் கீழே விழுந்து விடாத படி...பத்திரமாய் இறக்கி விடுவார்! நாங்கள் சும்மா ஆக்களா? அவரின்ர தம்பிக்கும் ரிக்கற் எடுத்துக் கொடுத்து. எங்களோட கொண்டு போற ஆக்களெல்லோ!😀 பெரிசுகளைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்..! புங்கையிரின் சொந்தக் கதை....ஒரு சோகக் கதை...! யாழின் இருபத்தி நாலாவது பிறந்த நாளுக்கு அவிட்டு விட யோசிக்கிறன்...!
  2. வணக்கம், யாயினி...! நான் முடிவை எழுதும் போது கொஞ்சம் குளம்பியது...எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்று இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்! கருத்துக்கு மிக்க நன்றி...!
  3. யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  4. பக்கத்துத் தோட்டம்....புடலங்காய்த் தோட்டமாக இருக்கும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை, கிருபன்....!🤪
  5. ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளூக்கு முன்பே, கணியன் திருப்பூங்கனார் கூறியது, யாதும் ஊரே....யாவரும் கேளிர் எம்மைச் சுற்றி வட்டங்களை நாங்கள் போடவில்லை! மற்றவர்களே போட்டார்கள்! உலகம் முழுவதும் விதைக்கப் பட்டிருக்கிறோம்! அறுவடை காலமும் அண்மித்து வருகின்றது! ஏக்கம் சுமந்து வரும் கவிதை! நன்றி....!
  6. பகிர்வுக்கு மிக்க நன்றி, சுவியர்! இந்த வரிகள் இன்னும் அப்படியே நினைவிலிருக்கின்றன! ஒருத்தியின் அழகில் மயங்கி வருகின்ற 'ரத்ன வாசா' காதல்கள் ஒரு வகை! ஒருவரது செயல்களாலோ அல்லது அவர்களது கருணை மனதால் கவரப்படுவதாலோ உண்டாகும் காதல் இன்னொரு வகை! அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள்...அருகினில் வந்த முனிவனும் நோக்கினான் போன்ற காதல்கள் நமக்கு வரச் சாத்தியமேயில்லை! ஒரு வில்லை ஒடிக்கும் வலிமை மட்டும் அல்ல...அந்த வில்லை நினைத்துப் பார்க்கும் வலிமை கூட இல்லை! எனவே சில காதல்கள் மறக்க முடியாதவை தான்...! "வைடூரியத்தின் நடுவே ஓடும் சுவர்ணரேகைபோல்" உங்கள் உவமானங்களுக்காகவே, நீங்கள் நிறைய எழுத வேண்டும் என்பது எனது ஆவல்...!
  7. வணக்கம், சாந்தி...! துணிச்சல் புங்கையூருக்கு வந்திட்டுது என்பதை விடவும்...காலம் துணிச்சலைக் கொடுத்து விட்டது என்பதே அதிகம் பொருத்தமாக இருக்கும்! மூன்று நாட்களுக்குத் தலயை உடைத்துக் கொண்ட பின் முடிவு ஒரு மாதிரி மனதில் தோன்றி விட்டது! ஞாபகங்கள் தொடரும்....!
  8. நல்ல ஒரு கதை நிலாக்கா! பொதுவாக எல்லோருக்கும் மாலதி போல...மாமியார்கள் கிடைத்து விடுவதில்லை! பெண்கள், பெண்களைப் புரிந்து கொண்டாலே....பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து போ விடுமென்பது தான் யதார்த்தம்!
  9. ஒரு கதையை அல்லது ஒரு கவிதையை எழுதிச் செல்லும் போது, இடைக்கிடை ஆராவது வந்து ஏதாவது ஒரு கருத்தை அது நல்லதோ அல்லது கெட்டதோ எதுவாக இருந்தாலும் சொல்லிச் செல்லும்போது அது எழுதுபவனுக்கு ஒரு உந்து சக்தியை அழிப்பதுண்டு! அந்த விதத்தில் உங்கள் கருத்துக்களின் பெறுமதி அளவிட முடியாதது! நீங்கள் குறிப்ப்பிபிட்டது போலவே, நினைவு மீட்டல்கள் மிகவும் இனிமையானவை! அவற்றுள் சில பொத்திப் பாதுகாக்கப் பட வேண்டியவை! சில ஓரளவுக்குப் பகிர்ந்து கொள்ளத் தக்கவை! இன்னும் சில கல்லறை வரைக்கும் காவிச் செல்ல வேண்டியவை! நன்றி....விசுகர்..! உண்மை தான், சுவியர்! எங்கேயிருந்து இந்த உவமானங்களை எடுக்கிறீர்களோ தெரியாது! அந்த வலி எப்படியிருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்! நன்றி சுவியர்...!
  10. நல்ல ஒரு அனுபவப் பகிர்வு, சுமே! ஒவ்வொருவரது உடல்களும் வெவ்வேறு வகையானவை! அவர்கள் தான் ...நிலைமைகளுக்கு ஏற்ற மாதிரி முடிவுகளை எடுக்க வேண்டும்! உங்கள் வீடியோ பதிவில் ஒரு 'பொறுப்புத் துறத்தல்" எச்சரிக்கை ஒன்றைப் போட்டால் நல்லது என்று நினைக்கின்றேன்! இந்தப் பதிவால்...நாளைக்கு ஒரு பிரச்சனை வரக்கூடாதெல்லோ? 😃
  11. தனிக்காட்டு ராஜாவுக்கும், கொழும்பானுக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!
  12. நன்றி....சுவைப்பிரியன்! வணக்கம், யாயினி! உங்கள் ஊக்கமும், ஆக்கமும் என்றும் குறைந்ததேயில்லை! மிக்க நன்றி....!
  13. பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
  14. எனக்கும் ஆரோ பிடரியில தட்டின மாதிரி இருந்தது! திடுக்கிட்டுத் திரும்பினால் தானாச் சீனா!😝
  15. அனைத்தும் அழகு....! பாடலின் கருத்தும் உள்ளடக்கம்! வாழ்த்துக்கள்....!
  16. வணக்கம், தோழி...! ரோஜாப் பூவை உங்கள் கதையின் நாயகன் சந்திக்காமலே போனது நல்லது போலவே உள்ளது! இப்படியான கூட்டுப் புழுத் தனமான வாழ்வு இப்போது அதிகரித்த படி செல்கின்றது! கால அட்டவணை போட்டு வாழ்வதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை! தொடர்ந்தும் உங்கள் சிறு கதைகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
  17. இணையவனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
  18. ஒரு ரூபாய் இருந்தால் மொக்கங் மன்னிக்கவும், ஹமீதியா கபேயில எட்டுப் புட்டும் (நாற்பது சதம்), ஒரு குறுமாவும் ( அறுபது சதம்) சாப்பிடலாம்! ஆணம் இலவசம்! இடைகிடை மொக்கனைக் கூப்பிட்டு அலுப்படிச்சால்...அவரது மூளை தாங்காது! வெளியால வரேக்குள்ள...அண்ணை எவ்வளவு? தம்பி...ஒரு ரூபாய்..!😄
  19. எல்லாருக்கும் விளங்கிற மாதிரி.....நீராவியடிப் பிள்ளையார் கோயில் எண்டு சொன்னால் என்னவாம்? நாங்கள் எங்களுக்குள்ள கலரி எண்டு சொன்னால் கெளரவப் பிரச்சனை எண்டு சொல்லிக் காந்திக் கிளாஸ் என்று தான் எங்களுக்குள் அழைத்துக் கொள்வோம்! ஈழப்பிரியன்...அனுபவங்களைக் கொஞ்சம் நீட்டினால் என்ன?😄
  20. இந்த வரிகளுடன் முழு உடன்பாடு எனக்கு உண்டு, கோபி...! கடலிலை நீந்தப் போறவனைச் சுறா மீன் கடிச்சால்..அவன் சுறாவைக் குற்றம் சாட்டுகின்றான்! சுறா எந்த ஐ.நா. சபையில் போய் முறையிடுவது? அப்படி முறையிட்டாலும் சீனா வீட்டோ பண்ணாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?😄
  21. யாழ்கவிக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாமே, புத்தன்..!😄 புத்தன், கனநாளைக்குப் பிறகு யாழில எழுதிற படியால், கொஞ்சம் சுறாவையும் புட்டையும் கொடுத்து சமாதானப் படுத்த நினைத்தேன்! அண்டைக்கு ஒருநாள் ரூங்கப்பியிலையும் ஒரு மீன் கடையொன்டைக் கண்டனான்! ஒருக்கா அங்கையும் வாங்கிப் பாக்க வேணும்! வரவுக்கும் கருத்துக்கும் ,நன்றி..!
  22. கதை...ஒரு முக்கிய திருப்பத்திலை நுழையப் போகின்றது போல உள்ளது..! தொடருங்கள், அக்னி..!
  23. இனிய பிறந்தனாள் வாழ்த்துக்கள், பகலவன்....!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.