Everything posted by புங்கையூரன்
-
நடுவீதி...
விசுகர், இதில் வெட்கப் பட எதுவுமில்லை. சிவனே மகனிடம் வாய் பொத்தி நின்று, பிரணவத்தின் விளக்கம் கேட்டான். நானும் பல விசயங்கள் இவ்வாறு தான் அறிந்து கொண்டேன். புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் ‘நீதவான்’ என்று ஒரு மனநிலை சரியில்லாதவர் இருந்தது நினைவிருக்கிறதா? உங்கள் அப்பா கட்டாயம் கண்டிருப்பார். மனநிலை யாருக்கு எப்போது தளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. தளம்பலுக்கும், தளம்பா நிலைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு மட்டுமே..!
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
உதய்ன்…, கவிதையைப் பல தடவைகள் படித்தேன்..! கவலை மட்டுமே மிஞ்சியது…! வெளிச்சம் வரும் என்று நம்புவோமாக! நண்றி…!
-
படம் கூறும் கதைகள்
கண்ணீர்ப் பூக்களும், காகிதப் பூக்களும்…! என்பது மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்…!
- திரும்பும் வரலாறு!
-
மடகஸ்கார் பயண அனுபவம்
நன்று, நில்மினி…! மிக அரிய விசயங்களை அறிந்து கொண்டேன்…! லெமூர்களைப் போலத் தான் டோடோ பறவையும் மனித்ர்களை ஒரு காலத்தில் நம்பியது. விளைவு? உலகில் மிகவும் சுயனலம் கொண்ட இனமே மனித குலம்…! இயற்கை எதையும் மாற்ற எப்போதுமே தயங்கியதில்லை..! அது பிரளயமாகவும் இருக்கலாம்…!
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நில்மினி உங்கள் தோட்டத்தில் நிற்கும் பொன்னொச்சி மரம் சிட்னியில் ஒரு ஆற்றங்கரையில் வரிசையாக வளர்ந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கும். ஊரின் நினைவுகள மீட்டுத் தருவதால், அங்கு அடிக்கடி செல்வதுண்டு..! பி.ஈ; இன்னும் கோவில் காரருக்குத் தெரியாது..!😅
-
தையல்கடை.
சீட்டும் கூட ஒரு போதை தான் போல் உள்ளது. கதை கடைசி வரையும் தொய்வே இல்லாமல் சென்றது…! இந்தச் சுடச் சுட பிரியாணி இல்லாவிட்டால், உலகமே இயங்காது போல…! அவனின்றி ஒரு அணுவும் அசையாது…! அவளின்றி ஒரு அவனும் அசையாது..! நன்றி, சுவியர்…!
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
இந்தச் சிலை சிவனின் சிலை இல்லை. இது அர்த்தனாரீஸ்வரர் என்னும் சிவனின் இன்னொரு வடிவமாகும். சிவனும், உமையும் சேர்ந்த வடிவமாகும். சிறியர், எனது ஊரிலும் ஒரு அழகிய ஆல மரத்துக்கு, யாரோ சேவெடுத்துக் கேவலமாக்கியிருக்கிறார்கள். எமது அடையாளங்களும் சிதைக்கப் படுகின்றன.
-
தையல்கடை.
சுமதி பாஸாகி விட்டாள் போல உள்ளது…! தொடருங்கள் சுவியர்…!
- மனிதா உன்னைத்தான்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், சிறியர்…!
-
தையல்கடை.
அண்ணலும் நோக்கினார், அவளும் நோக்கினாள்…! அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…! கம்பன் தோற்றான் போங்கள்…! சுபியர்…!😅 சுவியர்…!
-
படம் கூறும் கதைகள்
மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…! பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!
-
தையல்கடை.
சுவியருக்கு வாழ்க்கை நிறைய அனுபவங்களை அள்ளி இறைத்திருக்கின்றது போல கிடக்குது..! ஏன் சுமதி இவ்வளவு அப்பாவியா இருக்கிறாவோ தெரியாது..! நான் மட்டும் தான் ஒரு அப்பாவி என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்..! தைக்கட்டும்…!
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வேண்டாம் தமிழ்சிறி..! நாய் கடிக்கிறது..! அது அதன் சுபாவம்! நீங்களும் நாயின் தரத்துக்கு இறங்க வேண்டாம்! அவனது மனச் சாட்சியே அவனது தீர்ப்பை எழுதட்டும்..!
-
தையல்கடை.
ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தும் போது வதும் பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்திருக்கின்றீர்கள். அதுவும் மூளை கூடிய எமது இனத்தவரைக் கொண்டு நடத்துவது இன்னும் கஷ்டம். தொடருங்கள்…!சுமதி நன்றாகக் கையாள்கிறார்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
தையல்கடை.
அவர்கள் தைக்கிறது இருக்கட்டும், சுவியர்…! உங்களுக்கு எப்படி இவ்வளவு பெண்களின் உடல் வாகு தெரியும்?😁 தொடருங்கள்….!
- திரும்பும் வரலாறு!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
யாரும் எதிர்பாராத முடிவு …! ஆல கால விஷத்தையும் நம்பலாம்…!!!!?
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
கதை வலு சீரியசாகப் போகத் தொடங்குது போல கிடக்குது..! கோப்பியைக் குடிச்சிட்டு வந்து தொடருங்கோ..! இண்டைக்கு லீவு தானே…!😀
-
தையல்கடை.
கதை சூடுப்பிடிக்கின்றது போல கிடக்குது…! தொடருங்கள், சுவியர்….!
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததை ஒரு பெரும் சாதனையாகவே நான் பார்க்கிறேன்! தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
த்யவு செய்து தொடரும் என்பதைப் பொறித்த இடங்களில் போடாதீர்கள் எண்டு நான் சொன்னால் கேட்கவா போகின்றீர்கள்? தொடருங்கள்…!
-
தையல்கடை.
எனக்குத் தெரிஞ்சிருந்த கொஞ்ச நெஞ்ச சாதக அறிவையும் கதை உடைச்சுப் போட்டுது…! மிகவும் முக்கியமான மனுசன் குரு பகவான்! அவரே ஆறாமிடத்தில மறைஞ்சு போனால் சாதகி எங்கே போய் மறைவதாம்? சரி…தொடருங்கள், சுவியர்…!