Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  13,286
 • Joined

 • Days Won

  73

Everything posted by புங்கையூரன்

 1. சொல்லின் செல்வர் சுவியருக்கு...எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
 2. கவிதைக்கு நன்றி... கோபி...! உழைப்பவனும், அவனது உழைப்பைச் சுரண்டுபவனும் இருக்கும் வரை, மே தினமும் இருக்கும்!
 3. ஆபிரிக்க மரவள்ளிக் கிழங்கு வாங்கும்போது...ஆபிரிக்காவின் எந்தப் பகுதியிலிருந்து வருகின்றது என்று அறிய முடியுமா என்று பாருங்கள்..! மேற்கு ஆபிரிக்கா எனின் கிழங்கு ..உரும்பிராய்க் கிழங்கு மாதிரியே இருக்கும்..! அதே மாதிரி....றால்களும் சவூதி அரேபியாப் பக்கமிருந்து வருகின்றதா என்று கேட்டு வாங்குங்கள்! அவுஸ்திரேலியாவில்...எங்கெங்கு இருந்து...இந்த உணவுப்பொருட்கள் என்று லேபல்களில் குறிப்பிடப் பட வேண்டும் என்று சட்டம் உள்ளது என்று நினைக்கிறேன்..! வியட்னாம், கம்போடியா போன்ற இடங்களிலிருந்து வருகின்ற..மீன்களை நான் வாங்குவதில்லை! ஆளை விடுங்கய்யா....மரவள்ளியும் வேண்டாம், றாலும் வேண்டாம் எண்ட மன நிலை வந்திருக்க வேண்டுமே?
 4. மனிசி என்ற நமது நாட்டு வழக்குப் பெயரையும் காணவில்லை...! எடியேய்...என்ற செல்லப் பெயரையும் காணவில்லை..!
 5. வறட்டுக் கௌரவம் என்ற ஒன்று தான்....! புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது ரகம்..!
 6. நல்ல ஒரு குட்டிக் கதை, புத்தன்...! கொரோனாவைக் கிருஷ்ண பகவானின், கலியுக அவதாரம் எண்டு கதைக்கிறாங்கள் உண்மை தானா? தர்மம் நலிந்து அதர்மம் வளரும் போது நான் மீண்டும் வருவேன்...! இப்படிக்கு....கிருஷ்ண பகவான்....!
 7. நல்ல ஒரு கதையுடன் மீண்டும் வந்திருக்கிறீர்கள், தோழி..! உங்கள் உவமானத்தை மிகவும் ரசித்தேன்...!எங்களுக்கு இந்த முறை கோடை காலமே இல்லை! எமது கோடை காலத்தை, மழைக்கால்ம் தின்று விட்டது! மரங்கள் பூப்பதா அல்லது பூக்காமல் விடுவதா என்று குழம்பியதை அவதானித்திருந்தேன்..! தொடர்ந்தும் எழுதுங்கள்...!
 8. அன்புத் தோழருக்கு....எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
 9. எனக்கு மிகவும் பிடித்த செய்தியாளர், இவர்...! அவரின் ஓய்வு காலம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்....!
 10. இந்து மதம் காமம், கலவியைக் கொண்டாடவில்லை! அதை ஒரு மறை பொருளாக வைத்திருப்பதனால், ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காக...மனித வாழ்வின் ஒரு அங்கமாக அதை ஏற்றுக் கொள்கின்றது! அதே வேளை சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது..!
 11. எனக்கு இந்தியா மீது எந்த வித அனுதாபமும் வரவில்லை...! பதிலாகக் கோபம் தான் வருகின்றது..! தனது மக்களைப் பாதுகாக்கவியலாத கேவலமான ஒரு தேசம் என்று தான் நினைக்கத் தோன்றுகின்றது! கும்ப மேளா படங்களைப் பார்க்கும் எவருக்குமே, இந்தியா மீது அனுதாபம் வரவே வராது..!
 12. வணக்கம், அறுவடை நிலவு...! நல்ல அறிவூட்டல் ஆக்கம்..! தொடர்ந்தும் பதிவுகளைத் தாருங்கள்...!
 13. காலங்கள் கடந்திடினும், ஆழப் புதைந்த.நினைவுகளைக்.. கிழறிப் பார்க்கின்றது, கவிதை ! கற்றாளை இதயங்கள்..., சொரிந்திடும் கண்ணீர், வற்றாத.நதியாகி...,, குறைப் பிரசவக் காதல்களின், கல்லறைகளை.நனைக்கட்டும்!
 14. இந்தியாவில இருந்து வாற படியால்...நிச்சயம் மோட்சா தான்...!
 15. சொல்ல வந்த செய்தி.....இந்தியன் ஆமி முக்கியமான விசயங்களை விட்டிட்டுப் புறாப் பிடிக்கிறதில, எவ்வளவு அலேர்டாய் இருக்குது எண்டது தான் எண்டு நான் நினைக்கிறன்...!
 16. குழந்தைகளுக்குக் காஜலிஸம் பழக்காதீர்கள்...!
 17. வணக்கம், சுகந்தமாறன்...! உங்களது எழுத்து நடையையும்,நகைச்சுவை உணர்வையும் கண்டு வியந்து போகின்றேன்! அடிக்கடி உங்கள் எழுத்துக்களை...எம்முடன் பகிர்ந்து கொள்வீர்கள் என்னும் நம்பிக்கை நிறையவே என்னிடம் உண்டு! தங்கள் வரவு நல் வரவாகட்டும்....!
 18. சீனனுக்குப் புத்த மதத்தில நல்ல விருப்பமுள்ளது..! என்னை நம்பா விட்டால், தலாய் லாமாவிடம் கேட்டுப் பார்க்கவும்...! புத்தனின் புனித தந்தப் பேழையைச் சுமந்த யானையின்....தோற்றம்..! இந்தப் பாவம்....தேரர்களைச் சும்மா விடாது...! வாயில்லாத சீவன்..!!!
 19. தங்கள் வரவு,நல்வரவாகுக....! தங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்..!
 20. நான் பத்திப் பார்த்திருக்கின்றேன்..! ஆனால் இலங்கையில இல்லை....லண்டனில எண்டு சொன்னால் நம்பவா போறீங்கள்? பங்களா தேசிகளின் கடைகளில் விப்பார்கள்! ஒரு பம்பலுக்குக் கொஞ்சப் பேர் சேர்ந்து பத்திப் பார்த்தோம்! பீடி மணம் மனசிலையிருந்து போக ஒரு கிழமை எடுத்தது எண்டால் பாருங்கோவன்!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.