Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  13,273
 • Joined

 • Days Won

  73

Everything posted by புங்கையூரன்

 1. வணக்கம், அன்புத்தம்பி..! உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களில்,நானும் ஒருவன் என்னும் வகையில் சில கருத்துக்களை முன் வைக்க விளைகின்றேன்! கீதை என்பது வேதமன்று! அது ஒரு வேதாந்த நூல் மட்டுமே! அதாவது வேதத்தின் சில சாராம்சங்களை எடுத்துச் சொல்கின்றது! அதற்குப் பல உரைகள் எழுதப்பட்டுள்ளன! சில வேளைகளில், உரைகள் மூலத்தைத் திரிபு படுத்துகின்றன! காலப் போக்கில் அதுவே...கீதையாகி விடுகின்றது! உதாரணத்துக்குப் பிராமணரைக் கீதை மிக உயரத்தில் வைக்கின்றது! சில உரைகளில், பிராமணன் என்னும் ஸ்தானம், பிறப்பால் மட்டும் வருவதாகக் குறிப்பிடப் படுகின்றது! சில உரைகளில், கல்வி அறிவால், ஒருவர் செய்யும் உயரிய செயல்களால் பிராமணன் என்னும் ஸ்தானம் அடையப் படுவதாகக் குறிப்பிடப் படுகின்றது! மேற்குறிப்பிடப்பட்ட பகுதி எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது! எல்லா அறங்களையும் விட்டு ..விட்டுத் தன்னை வணங்கும் படி அவன் கூறுவதாக நினைவில்லை! நீ நல்லவனாக வாழ்ந்தாயோ இல்லையோ...மரணத் தறுவாயில் உன்னிடம் இருக்கும் மனநிலையே உனது அடுத்த பிறப்பைத் தீர்மானிக்கின்றது என்று தான் கூறுகின்றான்!நீயும்,நானும் வேறு, வேறு அல்ல! உனது ஆன்மாவின் அருகிலேயே நான் இருக்கின்றேன் என்று தான் அவன் கூறுகின்றான்! அதாவது உனது ஆன்மாவானது எனது விம்பம் என்று தான் கூறுகின்றான்! தொடர்ந்தும் எழுதுங்கள்...!
 2. முழுவதும் பார்த்து முடித்தேன், ஈழப்பிரியன். நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
 3. மீண்டும் கண்டது மகிழ்ச்சி, வன்னியர்! உங்கள் வலியைப் புரிந்து கொள்கின்றேன்! கவனமாக இருங்கள்..!
 4. அவுஸில் மட்டும் இதுவரை நூற்றித் தொண்ணூறு குழந்தைகள் , அவர்களைக் கொண்டு வர ஆட்களில்லாமல் இருக்கின்றன! தாய்களும், தகப்பன்களும் இந்தக் குழந்தைகளை தாத்தா, பாட்டிகளுடன் வளர விட்டுள்ளனர்! இப்போது அவர்களைக் கொண்டு வர வேண்டும் என அரசாங்கத்தை நெருக்குகின்றனர்! பிள்ளை வளர்ப்பில் காசு சேமிக்கப் போய், இப்படி ஒரு நிலை..! அவுஸ் இப்போது வடிகட்டித் தான் , இவர்களை உள்ளே விடுகின்றது! இவர்கள் படும் பாட்டைப் பார்க்கும் போது, இந்தியா வல்லரசு தான் என்பது மேலும், மேலும் உறுதியாகின்றது! கேவலம் கெட்ட தேசம்...!
 5. மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் ...இந்திய அரசு மீது சுமத்தப் பட்டுச் சம்பந்தப் பட்டவர்கள் அனைவருக்கும் , கொரோனா வைரஸ் ஊசி மூலம் ஏற்றப்பட வேண்டும்!
 6. நெத்தன்யாகுவால், ஒரு நிலையான அரசைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் அமைக்க முடியாமல் போனதால், இந்தப் புத்த சாசன விளையாட்டு ஆரம்பித்தது என்று ஒரு கதை....! இந்த மனிதாபிமான அழிவின் பின்னர் அவர் காட்டில் இனி '"அடை மழை 'தான்...!
 7. உரத்துக் கொக்கரிக்கும், என் தீவகத்தின் சேலைக் கரையே...! உனது அழு குரல், அந்தச் செவிட்டுப் புத்தனின் காதுகளில், காந்தீயக் குல்லாய்கள் மறைக்கும் கண்களில், விழுமென்றொ அல்லது படுமென்றோ.., இன்னும் நம்புகின்றாய்? முப்பத்தாறு வருடங்கள் உருண்டாலும்.., இப்போதும் உனது அலகளின் ஓசை, அந்த மரணித்தவர்களின் பெயர்களைத் தான்.., திரும்பத் திரும்ப உச்சரிக்கின்றது....! நினைவூட்டல் கவிதைக்கு நன்றி, கோபி...!
 8. தமிழ் சிறியர், சனிக்கு மட்டும் அடிச்சால் காணுமெண்டு நான் சொல்லுறன்! நீங்களும் ஆமோதிக்கின்றீர்கள் தானே? இந்த நேரத்தில சனியைத் தான் சனம் கட்டிப் பிடிச்சு அழும்...!
 9. இந்தப் போராட்டத்தைக் கையாண்ட விதம் காரணமாக, எதிரி அதற்கான விலையைக் கொடுக்க எப்போதோ ஆரம்பித்து விட்டான் என்பது தான் எனது கருத்து! இந்தப் போராட்டத்துக்கான சரியான தீர்வைச் சரியான நேரத்தில் வழங்கியிருந்தால், சீனாவிடம் இப்போது பல்லைக் காட்டிக்கொண்டு,நிற்க வேண்டி வந்திருக்காது! இராணுவ ஆட்சி என்று பிரகடனப் படுத்தப் படாத ஒரு இராணுவ ஆட்சிக்குள் இலங்கை சென்றிருக்காது! இந்தியா என்ற ஒரு தேசம், கடல் வழங்களைக் கண்ணுக்கு முன்னேயே சூறையாடும் போது, எந்த வித நடவடிக்கையும் எடுக்கவியலாது பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்காது! சீருடையணிந்த ராச தந்திரிகளை (?) மற்ற நாடுகள் உரசிப் பார்க்கும்நிலையும் வந்திருக்காது! இந்து சமுத்திரத்தின் முத்து, தனது முதுகைத் தானே தட்டிக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! ஆனால் ஒரு வெளிநாட்டவனின் பார்வையில்....இன்னும் அது ஒரு மூன்றாம் உலகநாடு தான்! இந்தியாவுடன் ஒப்பிடாமல், சிங்கப்பூருடன், மலேசியாவுடன், இந்தோனேசியாவுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! தென் திசையை நோக்கி....வெகு வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றது...இந்த முத்து..!
 10. இந்தக் Green House Effect எண்டு சத்தம் போடுறாங்களே, ஜேர்மனி பக்கம் சத்தமில்லையோ? நிலக்கரி பாவனை, காடுகளை அழித்தல் எல்லாம் ஆகாயத்தை ( காற்றை) அழிக்கும் காரியங்கள் தானே?
 11. இதைத் தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்,நிழலி...! இதற்கான விடை...எமது இனத்தில் பெரும்பான்மையோருக்கு...விடுதலை தேவையில்லை! அதற்கான பக்குவம், இன்னும் பலருக்கு ஏற்படவில்லை!
 12. எனக்கும் இப்படிக் கன சாரம் சேர்ந்து போச்சுது..! இப்ப திறந்து பார்த்தால்....சிலது தைக்காமலே புதுசா இருக்குது! இங்கு ஒரு நண்பனிருந்தார்! ஒரு நாள் அவரது கார் இடையில நிண்டு போச்சு...உடன ஓடி வாங்கோ எண்டு போன் அடிச்சார்! நானும் ஓடிப் போக....எங்கடா காரைக் காணோம் எண்டு தேடினால்....நண்பர் ஒரு சிவப்புச் சாரத்தோட ....பிரதான வீதியொன்றின் ஓரத்தில்....போனட்டைத் திறந்த படி நிற்க....அவர் நின்ற கோணத்தில்...சூரியனும், அவரைக் கூர்ந்து பார்க்க....சனம் எல்லாம் கோர்ண் அடித்த படி ...அந்தக் காட்சியைக் காணக் கோடிக் கண் வேண்டும்! நான் சாரம் அதிகம் கட்டுவதில்லை! காற் சட்டை வசதி கூடின மாதிரி எனக்குத் தெரியுது..!
 13. ஒருவனது வாழ்க்கை அவனிடமிருந்து பலவந்தமாகப் பறிக்கப் படுவதற்கு, நட்ட ஈடு ஒரு நாளும் தீர்வாகாது என்பது எனது கருத்தாகும்! முதலில் அந்த நட்ட ஈடு, இழந்தவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை! இரண்டாவது குற்றம் புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து தப்பிக் கொள்வதுடன்,நட்ட ஈடு கொடுத்து விட்டோம் தானே என்று குற்ற உணர்விலிருந்தும் தப்பித்துக் கொள்கின்றார்கள்! சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்களுக்கு உரிய பாதுகாப்புகள் சலுகைகளாக அன்றி...உரிமைகளாக வழங்கப்ப்டுவது தான் நிரந்தரமான தீர்வாக அமையும்..! நன்றி...பிரபா! இவர்களுடன் ஓரளவுக்குப் பழகியிருக்கின்றேன்! அப்போதெல்லாம் ஊரில் உள்ள உறவுகளுடன் பழகுவது போலவே...உணர்ந்திருக்கின்றேன்! அப்போது அவர்களில் ஒருவன் கூறினான். நீ இங்கு பிறக்கவில்லை! எனினும் உன்னிடம் அவுஸ்திரேலிய குடியுரிமை இருக்கின்றது! நான் இந்த மண்ணில் பிறந்தவன்! எனக்குக் குடியுரிமை இல்லை! எனக்குப் பதில் கூற முடியவில்லை..!
 14. மிகவும் சிந்தனையைத் தூண்டிய விடயம்..! அவர்களின் வருங்காலத்தை அவர்களே தேடிக் கொள்வார்கள்! அதற்கான அடித்தளத்தை,நீங்களே அமைத்துக் கொடுத்துள்ளீர்கள்! இனம், மதம், மொழி எல்லாவற்றையும் தாண்டிய ஒன்று உள்ளது..! அது தான் மனிதம்..! அது அவர்களிடம் நிறையவே உள்ளது என்று நினைத்து ஆறுதலடையுங்கள்...!
 15. விசுகு அண்ணா,நான் சொன்னது எனக்கு ஐம்பது வயசு என்று இல்லை! ஐம்பது வயசுக்கு மேல போன ( அதாவது வட்டுக்குள்ள வயசு போன ஆட்களுக்கு), அஸ்ரா செனிக்கா மட்டும் தான் போட முடியும்!
 16. எனது வாழ்வின் மிக முக்கியமான கட்டங்களில் இந்த முட்டை தான் எனக்குக் கை கொடுத்துள்ளது! ஆபிரிக்காவில் இருந்த காலத்தில் தூரப்பயணங்களின் போது, சுத்தமான,நம்பகமான உணவு கிடைப்பது கடினம்! சிறு குழந்தைகள் தலைகளில் அவித்த உடைக்காத முட்டைகளை விற்பார்கள்! இவை கொதிநீரில் அவிக்கப் படுவதால், உள்ளதுக்குள்ளையே வள்ளிசான உணவாகப் பல தடவைகள் இந்த முட்டை கை கொடுத்துள்ளது!
 17. மெக்சிக்கோ, தென்னாபிரிக்கா, இந்தியா, ஈரான்,நைஜீரியா, பெரிய பிரித்தானியா போன்ற நாடுகளிலுள்ள எல்லாக் கொரோனாவையும் கொல்லுற மாதிரி ஒரு வக்சீன் வரும் வரையும் பாத்துக் கொண்டிருக்கிறன்! சிம்ரானுக்கு ஏதும் நடந்தால்....உதவிக்கு ஓடி வர ஆயிரம் பேர் வருவினம்! நமக்கு அப்படியா? அது தான் யோசிக்கிறன்...!
 18. தவறு.....! இந்து மதம் அதைச் சொல்லவில்லை..! அதனுள் வலிந்து உள் வாங்கப்பட்ட சைவ மதம் தான்...நீங்கள் குறிப்பிட்டதைக் கூறிகின்றது! இந்து மதம் தான் வருணாச்சிர தர்மத்தை, வளர்த்தெடுத்தது!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.