Everything posted by புங்கையூரன்
-
மனிதாபிமானப் பன்னாடை
உண்மை தான், சுவியர்…! பாரதமும் எமது பழியைத் தேவையில்லாமல் தேடிக்கொண்டது…! வரவுக்கு நன்றி…! நன்றி, ஓணாண்டியார்…! நீங்கள் பதிந்த பிராமணன் மச்சம் சாப்பிட்ட கதை இன்னும் தலைக்குள் ஓடிக் கொண்டிருக்கின்றது..! வருகைக்கும் , ஊக்குவித்தலுக்கும் நன்றி, தோழர்….!
-
மனிதாபிமானப் பன்னாடை
வெறும் கள் வடிக்கும் பன்னாடை அல்ல இது...! அது வெறும் பூச்சிகளை மட்டும் வடிக்கும்...! இது கொஞ்சம் வித்தியாசமானது...! மனிதர்களை மட்டும் வடிக்கும் வல்லமை கொண்டது...! மேலைத் தேசங்களின் மகத்தான கண்டு பிடிப்பு...! மண்டலாவை வடித்த போது..., கறுப்பன் இவன்...அரைக் காச்சட்டை போதுமென்றது..! மகாத்மாவை வடித்த போது, கொஞ்சம் வெளிர் நிறம்..முழுக்காச்சட்டை போடு என்றது...! அரேபிய அகதிகளுக்கு..., அதன் வடி கண்களை இறுக்கிப் பிடித்தது,,,! பாலஸ்தீனக் குழந்தைகள் அழுகையில்..., தன் காதுகளை முழுதாக மூடியது...! முள்ளி வாய்க்காலில்..., முகத்தையே மூடியது..! பன்னாடைக்கு என்ன நடந்தது...? எல்லோரும் தேடினார்கள்...! மனித உரிமைகள் சபையில் குந்தியிருந்தது...! ஒன்று...இரண்டல்ல..., பத்து வருடங்கள்..! வேலையில்லாத ஒரு பட்டதாரியைப் போல..! போர்க் குற்றமா..? எங்கே நடந்தது...? புதினம் கேட்டது, பன்னாடை..! உக்ரெயினில் யுத்தமாம்..! ஓடோடி வந்தது...பன்னாடை..! தங்கத்தின் நிறத்தில்..தலை மயிர்....! அங்கத்தின் நிறமோ, வெள்ளை...! கண்களின் நிறமோ....மரகதம்..! கச்சிதமாக வடி கட்டி எடுத்தது, பன்னாடை...! உக்ரெயின் யுத்தம் தொடங்கி..., இன்னும் பத்து நாள் ஆகவில்லை...! நாலாயிரம் அகதிகள் வருகிறார்களாம்...! ஆயிரம் பேர் வந்தும் விட்டார்களாம்..! எவ்வளவு வேகமாகிறது, பன்னாடை..! அகதி முகாமில் பிறந்த குழந்தயை..., ஆயிரம் கேள்விகள் துளைக்கின்றன...! அந்தக் குழந்தயை...., பன்னாடை வடிகட்டாது...! ஏனெனில்.., அவள் ஒரு ஈழத்து அகதி...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், இணையவன்….!
-
அந்த மனிதன்
வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
மிக்க நன்றி, நீர்வேலியான்…! ஆங்கிலேயர்களிலும் பார்க்க ஸ்பானியர்களின் காலனித்துவம் இலாபத்தையும், மதம் பரப்பலையும் நோக்கமாகக் கொண்டது..!அவர்களின் அக்கிரமங்கள் அதிகமாக இருந்தாலும், அடிமகளை ஓரளவுக்கு மனிதராக மதித்தார்கள் என்று தான் கூற வேண்டும்! ஆங்கிலேயர் அடிமைகளை savages ஆகத் தான் கருதினார்கள்.இதுநாள் அடிமைகள் ஆங்கிலேயர்களை விடவும் ஸ்பானியர்களை விரும்பினார்கள்!
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
இந்தியாக்காரனை ‘ஹிந்தியன்’ என்று எல்லோ அழைப்பார்கள்!😂
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
தொடருங்கள், ஈழப்பிரியன்…! இடங்களின் பெயர்கள் சான் என்று தொடங்குகின்றன. இவை ஸ்பானிஸ் பெயர்களா? ஏன் என்று அறிந்து சொல்லுங்கள்….!
-
இலைச் சருகுகள்.
நிலாக்கா, உங்கள் கதையை வாசித்த போது...ஒரு சினிமாப் பாடல் தான் நினைவுக்கு வந்தது...! மனிதன் நினைப்பதுண்டு...வாழ்வு நிலைக்கும் என்று....! இறைவன் நினைப்பதுண்டு...பாவம் மனிதனென்று....! கூட்டைத் திறந்து விட்டால்....குருவி பறந்து விடும்...! நல்ல ஒரு படிப்பினைக் கதை...!
-
பார்வை ஒன்றே போதுமே.......!
நீண்ட நாட்களின் பின்னர் அடுத்த பகுதி எப்போது வரும் என ஆவலுடன் ஏங்க வைத்த்ச் ஒரு தொடர் கதை…! அரங்கனின் மார்பில் தவளும் ஆண்டாளின் மாலையாக….! வரிகளை ரசித்தேன்…! வைர முத்துவுக்குக் கேட்டுவிடப் போகின்றது..பரவாயில்லை…! சங்கிகள் காதில் விழுந்தால் தான் பிரச்சனை…!
-
அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
கதை நல்லாயிருக்குத் தான்…! மூட்டைப் பூச்சி இல்லையென்றால் கடிச்சது என்ன? மனிசன் நுள்ளி விளையாடுது போல….!
-
பார்வை ஒன்றே போதுமே.......!
பணமும், குணமும் ஒன்றாகப் பயணிப்பது மிகவும் அரிது...! பணம் எனும் அச்சாணியைச் சுற்றித் தான் வாழ்க்கை எனும் சக்கரம் சுழலுகின்றது போலும்...! சாமினாதன் மிகவும் பொறுமைசாலி போல உள்ளது! வெளி நாட்டு வாழ்க்கை முதலில் பழக்குவது பொறுமையைத் தான்...! அதனால் படிப்புக்கும் செய்யும் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை....!
-
பார்வை ஒன்றே போதுமே.......!
கதையில் நிறைய ஊர் வாசனை வருகின்றது…!கதை சொல்லி சிம்பிளாகவும், அதே நேரம் கருப்பொருளில் கவனமாகவும் கதையை நகர்த்தும் விதம் அழகு..! தொடருங்கள்…!
-
பார்வை ஒன்றே போதுமே.......!
தொடருங்கள், சுவியர்…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
-
,எஸ்கியூஸ் மீ மூருகா
புத்தனுக்கு என்று தனிப்பட்ட ஒரு எழுத்து நடை எப்போதும் உண்டு...! அதே நேரம் சிட்னி முருகனுடன் ஒரு தனகலும் கட்டாயம் இருக்கும்! கன காலம் முருகனைக் காணவில்லை..! புத்தன் நினைவு படுத்தலுக்கு நன்றி..! சிட்னி முருகனுக்குக் கப்பறாளை பூசை செய்யும் உவமானத்தை மிகவும் ரசித்தேன்! முருகன் நிச்சயம் சிங்களவனல்ல! வசதியாக வாழத் தெரிந்த ஒரு மறத் தமிழன்...!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அகஸ்தியனுக்கும், நுணாவுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாலி…!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கினியஸ்திராவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்…!
-
தொங்குடா.. தொங்கு..!
பெரிய பட்டங்களுக்கு மொச்சை கட்டுவதற்கு நல்ல அனுபவம் வேணும்! வாலின் நீளமும் சரியான அளவில் இருக்க வேண்டும்.
-
தொங்குடா.. தொங்கு..!
எனக்கும் நல்ல அனுபவமுண்டு. சிவலிங்கப் புளியடியில் இருந்து எட்டு மூலைப் பட்டம் ஏத்துவார்கள். நூல் கட்டையும், மூங்கில் நாரும் கொண்டு தான் விண் கட்டுறது. பட்டம் இரவு பகலாக பறக்கும். விண் போயிங் சத்தத்தில கூவும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நிழலி…!
- இன்று மாவீரர் தினம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்…!