Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by புங்கையூரன்

  1. சாந்திக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
  2. இதைச் சின்ன வயதில் 'பெத்தப்பா"என்று எமதூரில் அழைப்பார்கள்! சிவ பெருமானின் வெத்திலைத் துப்பல் என்றும் பெரியவர்கள் கூறுவார்கள்..! இப்போதெல்லாம் இவற்றை அதிகம் காணக் கிடைப்பதில்லை என்று கூறுகின்றார்கள்!
  3. பாரதி வழமையான கம்பீரத்தைத் தொலைத்து நிற்கின்ற படியால், யாழ்ப்பாணத் தமிழாராய்ச்சி மகா நாட்டின் போது நிறுவப்பட்ட சிலைகளில் ஒன்றாக இருக்கலாம்! இல்லாதவிடத்து மட்டக்களப்பிலிருக்கலாம்!
  4. வன்னியர், தலையை மொட்டையடிப்பதும் இப்போதைய ஃபேசன் என்பதையும் கவனத்தில் எடுக்கவும்...!😀
  5. மீண்டும் கண்டது மகிழ்ச்சி, வன்னியர்! உங்கள் வலியைப் புரிந்து கொள்கின்றேன்! கவனமாக இருங்கள்..!
  6. இந்தக் Green House Effect எண்டு சத்தம் போடுறாங்களே, ஜேர்மனி பக்கம் சத்தமில்லையோ?🙃 நிலக்கரி பாவனை, காடுகளை அழித்தல் எல்லாம் ஆகாயத்தை ( காற்றை) அழிக்கும் காரியங்கள் தானே?
  7. சொல்லின் செல்வர் சுவியருக்கு...எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
  8. கவிதைக்கு நன்றி... கோபி...! உழைப்பவனும், அவனது உழைப்பைச் சுரண்டுபவனும் இருக்கும் வரை, மே தினமும் இருக்கும்!
  9. அன்புத் தோழருக்கு....எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
  10. எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நிலாக்கா...!
  11. புலவருக்கு எனதிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...!
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், மிஸ்ரர் பாஞ்ச்.....!
  13. ஊக்கப் புள்ளிகள் வழங்கிய அனைத்து உறவுகளுக்கும், கருத்துப் பதிந்து ஊக்கபடுத்திய சொந்தங்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளும்.....வாழ்த்துக்களும்...!
  14. முறுக்கு நல்லாயிருக்கு....! அதை விட உரல் வடிவாயிருக்கு! வாழ்த்துக்கள்...!
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாதவூரான்...!
  16. வணக்கம், தானா சீனா! புத்தரினது மரணமானது 'குஷினகர்" என்னும் இடத்தில் நிகழ்ந்தது! மரணிக்கும் போது அவரது வயது எண்பது எனக் கூறப்படுகின்றது! மகாயானம், தேரவாதம் ஆகிய பிரிவுகளின் கருத்துப் படி, இரு விதமான கருத்துக்கள் பகிரப்படுகின்றன! மகாயானத்தினரின் கருத்துப் படி, புத்தர் நஞ்சாகிய காளானை உண்டதால் மரணித்தார் என்று கூறப்படுகின்றது! தேர வாதத்தினரின் கருத்துப்படி...புத்தர் நஞ்சாகிப் போன பன்றி இறைச்சியை உண்டதால் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்! அதே போல தேர வாதத்தினரின் கருத்துப் படி...புத்தர் விசாகப் பௌர்ணமியில் மரணித்தார் என்று கூறுகின்றார்கள்..! எனினும் புத்தர் புரட்டாதி, ஐப்பசி போன்ற மாரி காலத்திலேயே இறந்ததாகக் கூறப்படுகின்றது! எவ்வாறு இருப்பினும் மரணத் தெய்வமான 'மாரா' புத்தருக்கு இன்விற்றேசன் அனுப்பியதாகவும், புத்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது! இதிலிருந்து புத்தர் அந்தக் கால கட்டத்தில், மரணத்தை எதிர் பார்த்திருக்கவில்லை என்று அறியப் படுகின்றது! புத்தருக்கு நிறைய எதிரிகள் இருந்தார்கள்..! முக்கியமாகப் புத்தரது கருத்துக்கள் வருணாச்சிர தர்மத்தை தூக்கிப் பிடிப்பவர்களுக்கு எதிராகவேயிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது! உயிருள்ள மிருகங்களை வேள்வித் தீயில் போட்டு..அந்த ஊணவை, வேதாந்திகள் உண்டார்கள். அப்போது கொல்லாமையைப் போதித்த புத்தர் அவர்களிடம்...எதற்காக மிருகங்களைப் பலியிடுகிறீர்கள் எனக் கேட்டார்! அப்போது வேதாந்திகள், நாங்கள் அவற்றைக் கொல்லவில்லை...அவற்றை மோட்சத்துக்கு அனுப்பிகின்றோம் என்று பதில் கூறினார்கள்! அவர்களை நோக்கிய புத்தர் அப்ப்டியானால், நீங்கள் எதற்காகப் பூசை புனஸ்காரம் என்று மினக்கடுகிறீர்கள்? மிருகங்களைப் போலவே, நீங்களும் வேள்வித் தீயில் விழலாமே என்று கூறவும்....மிருகங்கள் மட்டும் தான் அவ்வாறு செய்ய முடியும் என்று வேதாந்திகள் வாதிட்டார்கள்! இறுதியில் புத்த மதம் இந்தியாவில் வேரூன்றாதவாறு பார்த்துக் கொண்டார்கள்! இருப்பினும், புத்தரின் சில திரிபிடகங்கள் இலங்கைக்குக் களவாகக் கொண்டு வரப்பட்டு, அவை தப்பிப்பிழைத்தன! இலங்கையிலிருந்து தான் சீன யாத்திரிகர் மூலம் புத்தம், ஆசியாவின் மற்றைய பகுதிகளுக்குப் பரவியது! அதனால் தான் புத்த மதம் தப்பிப் பிழைத்ததில்..இலங்கைக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளதாகக் கூறுகின்றார்கள்!
  17. இலங்கை செய்யும் அரசியலில் எந்தவிதமான தூர நோக்குகள் எதுவுமில்லை....! ஒரு அழகிய இயற்கை வளம் கொழிக்கும் ஒரு தேசம், வெறும் மதம், மொழி என்ற ஒரு கோட்பாட்டுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு, மனித வளத்தையும்.....இயற்கை வளத்தையும் வீணே அழித்துக் கொண்டிருக்கின்றது! ஒரு காலத்தில்...சிங்கப்பூர் இலங்கையை அண்ணார்ந்து பார்த்த காலமொன்றிருந்தது! இன்று மிகவும் வேகமாக இந்தியா போன்ற ஒரு நிலைக்கு இலங்கை என்னும் தேசம் சென்று கொண்டிருக்கின்றது! இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்று எல்லாமே நன்றாகத் தானிருந்தது! பௌத்தம் இலங்கையைத் தின்று விட்டது! பௌத்தமதத்தை உலகுக்கு அளித்தவன்...காசியில்..இரந்து சாப்பிட்ட விஷ உணவால் இறந்து போனான்! எனினும் இலங்கையில் பௌத்த மதத்தை வளர்ப்பதாகக் கூறுபவர்களைப் பார்த்தால்...பிச்சை எடுப்பவர்களாகத் தெரியவில்லை! கொழுப்பேறிய உடம்புகளுடன் தான் திரிகின்றார்கள்! பௌத்தம் வளருதோ இல்லையோ, நிச்சயமாக அவர்களும்...அவர்களுக்குத் தினவேத்தும் அரசியல் வாதிகளும் மட்டும் வளர்ந்து வருகின்றார்கள்..!கொழுத்துப் போன உடல்களில் உண்மையான பௌத்தம் ஒரு நாளும் வளரப் போவதில்லை! நல்ல சிந்தனைகளும் வளரப் போவதில்லை! இது தான் வரலாறு கற்பிக்கும் பாடம்! ஒரு விபச்சாரியின் நிலையில்.. சிங்கள தேசம் இப்போது இருக்கின்றது! எவர் அதிக விலை கொடுக்கின்றார்களோ...அவர்கள் சிங்களத்தை வாங்க முடியும்! ஒய்யாரக் கொண்டையாம்... தாழம் பூவாம்...உள்ளே இருப்பது, ஈரும் பேனும்...! இது தான் இலங்கையின் உண்மையான நிலை..!
  18. சாமானியனின் பதிவு கொஞ்சம் வித்தியாசமாக ஆனால் உண்மையாக உள்ளது! எனக்கும் இந்தப் பிரச்சனை உள்ளது...! ஆராவது இந்தியாக்காரர் அல்லது சீனாக்காரர் கார் ஓடும் போது குறுக்காக வெட்டி ஓடினால் ...அல்லது அதி வேகப் பாதையில் வேகம் குறைத்து ஓடினால் எனக்குள் அவர்களைத் திட்டிய படி ஓடுவதுண்டு! இதற்காகப் பல தடவைகள் ஏச்சு வாங்கினாலும்....இந்தப் பழக்கம் இன்னும் தொடர்கின்றது...! தொடருங்கள், சாமானியன்!
  19. இன்றைய நாளில் பிறந்த நாள் காணும் சுமேரியருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!
  20. நானும் எவ்வளவோ கதைகள் வாசித்திருக்கிறேன்...! ஆனால்...ஒரு கதைக்கு எந்த இடத்தில்...'தொடரும்..." போட வேண்டுமென்று, அக்கினியிடம் தான் படிக்க வேண்டும் போல உள்ளது! தொடர் அருமையாக...அதே நேரம்...திகிலாகவும் போகின்றது! தொடருங்கள்.....அக்கினி!
  21. உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா, ஈழப்பிரியன்! நாங்கள் கஸ்தூரியார் வீதியால, இரவில மதில் பாய்ஞ்சு படம் பாத்திட்டு வாற நேரம்...அவ்வளவு நாய்களும் எங்களைப் பத்திரமாய்க் கூட்டிக் கொண்டு வந்து ஹொஸ்டலிலை விடுவினம்! பிரச்சனை என்னவெண்டால்....மாணவ மேற்பார்வையாளரையும் எழுப்பி விட்டிருவினம்! நாங்கள் மதில் பாய...அவர் நாங்கள் கீழே விழுந்து விடாத படி...பத்திரமாய் இறக்கி விடுவார்! நாங்கள் சும்மா ஆக்களா? அவரின்ர தம்பிக்கும் ரிக்கற் எடுத்துக் கொடுத்து. எங்களோட கொண்டு போற ஆக்களெல்லோ!😀 பெரிசுகளைச் சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்..! புங்கையிரின் சொந்தக் கதை....ஒரு சோகக் கதை...! யாழின் இருபத்தி நாலாவது பிறந்த நாளுக்கு அவிட்டு விட யோசிக்கிறன்...!
  22. வணக்கம், யாயினி...! நான் முடிவை எழுதும் போது கொஞ்சம் குளம்பியது...எப்படி உங்களுக்குத் தெரிந்தது என்று இன்னும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்! கருத்துக்கு மிக்க நன்றி...!
  23. யாயினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  24. பக்கத்துத் தோட்டம்....புடலங்காய்த் தோட்டமாக இருக்கும் சாத்தியங்களும் இல்லாமல் இல்லை, கிருபன்....!🤪

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.