Everything posted by புங்கையூரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிரிந்து செல்ல முடியுமா..?
இந்திய சுதந்திரப் போரின் போது....மகாத்மா காந்திக்குப் பணம் கொடுத்தவர்களும் ..அவரது பத்திரிகைக்குச் சந்தா தாரர்களும்...தமிழ் நாட்டில் தான் அதிகம் இருந்தார்கள்! ஏனெனில் தென்னாபிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்களில் அநேகமானோர் தமிழர்களாக இருந்தமை தான் காரணம்! இரண்டாவது உலக மகா யுத்தத்தில் பிரித்தானிய பேரரசுக்கு...போர் விமானம் வாங்கி...அன்பளித்து மகிழ்ந்தவர்கள்...சிங்கப்பூர் தமிழர்கள்! அந்த விமானத்துக்கு...அவர்கள் வைத்த செல்லப் பெயர்....Jaffna. இலங்ககைக்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்களில்...லண்டனுக்குக் கப்பலில் சென்று...முன்னிடத்தில் நின்றவர் சேர். பொன். இராமநாதன் அவர்கள்! அவரைத் தேரில் வைத்துத் தோளில் காவி மகிழ்ந்தது சிங்களம்! எல்லாமே....இந்தியா என்ற நாதாரி தலை எடுக்கும் வரை தான்....நிலைத்தது! ஆதாரமேயில்லாத இராமாயணத்தில் வரும் குரங்குகள் எனவும்....வேதங்களில் விபரிக்கப் படும்...அரக்கர்கள் எனவும்...கறுப்பு நிறம் கொண்ட...தூய கலப்பில்லாத...இந்திய கண்டத்தின் மூத்த குடிமக்களைத் திட்டமிட்டு...யாக குண்டத்தில் தள்ளி விட்டு...எக்காளமிடுகின்றது.....இந்திய தேசம்! இதனால்....இந்தியாவைத் தள்ளிப் படுக்க வைப்பதில்....வெற்றி கொண்டால் மாத்திரமே....தமிழனால் 'தனியாகப் பிரிந்து செல்ல முடியும்! இந்தியா என்னும் தேசம் உருவாகாது இருந்திருந்தால்....ஆசியக் கண்டம்...அமைதி பொங்கும் தேசங்களினால்...அலங்கரிக்கப் பட்டிருக்கும்! இதில்...சிங்களமும் உள்ளடக்கம்!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான்....மண்ணில் பிறக்கையிலே...! அது நல்லவராவதும்....தீயவராவதும்...அன்னை வளர்ப்பினிலே !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்துக்கள், விசுகர் !?
-
நடந்தாய் வாழி காவேரி..
காவிரியே..! தமிழ் மண்ணின் தாயே! நீ நடை பயிலும் பாதையெல்லாம்...,, வளம் கொழிக்கும்! உன் மடி மீது.., பாபத்தின் குழந்தைகள் தவழ்கின்றனவே! அவர்களின் பாவங்களைக் கழுவி விடு! அவர்களின் பழிகளையும் சுமந்து விடு! அதுவும் இயலா விட்டால்.., அவர்கள் அப்படியே விழுங்கி விடு! இல்லாவிட்டால்..., அகத்திய முனியைப் போல.., உன்னையும் ஒரு நாள் .. முழுமையாகக் குடித்தே விடுவார்கள்!., குடிக்க இயலா விட்டால், நிச்சயமாய்...., மாற்றான் ஒருவனுக்கு..., விற்றே விடுவார்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
வர வர வன்னியரின் எழுத்துக்களில் யாழ்ப்பாணத் தமிழ் கொஞ்சி விளையாடுவது கண்டு மிக்க மகிழ்ச்சி! காய் பேய்க் காய் ....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சா. அண்ணருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
சிரிக்க மட்டும் வாங்க
வெறி நாய் கடிச்ச படியால தான் இப்படி>..! அல்சேசன் நாய் கடிச்சிருந்தால்...இன்னும் கொஞ்சம் மேல போயிருக்கும்! அரை குறை இல்லாமல்....முழுப் பௌர்ணமியாக இருந்திருக்கும்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
மூவெட்டில் நாங்கள் வடிவா முகச்சவரம் செய்யவே பழகேல்ல...! நீங்க எப்படி....? ஒன்பதெட்டில் கிடைக்காத சந்நியாசமும்.....பயனில்லை!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
தமிழரசு...நீங்கள் இணைத்த படத்தைப் பார்க்க...மிகவும் கவலையாகப் போய் விட்டது! இதற்கு .....நேற்றும்...நாளையும் என்று தலைப்பு வைத்தால் என்ன என்று நினைக்கிறேன்! நேற்றைக்கும்...நாளைக்கும் உள்ள ஒரே வித்தியாசம்......தைக்கப் பட்ட....உடை மட்டும் தான்! நேற்றைக்கு...காலில் போடச் செருப்பாவது உள்ளது! நாளைக்குச் செருப்புக் கூட இல்லை! ஏழை நாடுகளில்....இந்த நிலைமை மட்டும் தான் நிரந்தரம் போல உள்ளது!
-
குட்டிக் கதைகள்.
அட....அது இணைப்பா? எங்களுக்கு Bild konnte enthaltan : Text எண்டு தான் காட்டுது!
-
குட்டிக் கதைகள்.
es ist sehr kalt heute
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! கோழி அடித்துக் கொண்டாடினால் சொல்லியனுப்புங்கள்! கட்டாயம் வருவேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் கிருபனுக்கு...எனதினிய வாழ்த்துக்கள்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நம்ம ஏரியாப் பக்கம்...அது தான் அவுஸ் பக்கம்...ஒரு பிரச்சனையும் இல்லைப் போல உள்ளது! யாழ் வழமை போல வேலை செய்கின்றது!
-
முதல் தமிழீழ தற்கொடையாளர், தியாகி பொன். சிவகுமாரன் வீர வணக்க நாள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவனுக்கு...எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பூனையை மூடி வைப்பதே...சரியான தீர்வாக அமையும்! மீன் ஏற்கனவே மூடித் தானே இருக்கு..! கொஞ்சம் வால் மட்டும் தான் தெரியுது...அதுக்கே இந்தக் கருவாட்டுப் பார்வை!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கண்ணீரிலும்...செந்நீரிலும்..., கரைந்து போன எனது ஈழக்கனவே ! கர்ணனின் சங்காரத்தைப் போலவே..., உன்னையும் பல பேர் கூடியே.. கொன்று குவித்தனர்! அநாதரவாய்...., ஆதாரமில்லாமல் அலைந்தவர்கள், உனது பெயரைச் சொல்லி,,,,, தங்களுக்கான வாழ்வைத் தேடிக் கொண்டனர்! உனது பெயரால்...., சேமிக்கப் பட்ட செல்வங்களால்..., தங்களுக்கெனத் தனி விலாசங்கள், தேடிக் கொண்டார்கள்! ஏதிலிகள் என நாமம் சுமந்தவர்கள்..., ஏதிலியாக ஆக்கியவர்களுடன்...., இரு கரங்கள் கோர்த்து.., விருந்துண்டது தான் எமது சரித்திரமா? ஆகுதியானவர்கள்..., அங்கங்களை இழந்தவர்கள்...., அனாதைகள் ஆனவர்கள்..., எல்லாமே எம்மவரின்.., மூலதனங்களாக... மாறிப் போன அதிசயம் தான் ..., நாறிப் போன நமது சரித்திரமா? எனது ஈழக் கனவே..! எல்லோரும் அப்படியல்ல..! இருப்பினும் பெரும்பகுதி அவ்வாறே! கோவில் கோபுரங்களின்.. தங்கக் கலசங்களும்..., அவர்கள் கழுத்துக்களில் தொங்கும், அந்தப் புலிப்பல்லுச் சங்கிலிகளும்.., அவர்கள் வீரம் சொல்லி நிற்கட்டும்! முள்ளி வாய்க்காலின் ..., சாம்பல் மேடுகளும், வாழ்வைத் தொலைத்த இளசுகளின், வெற்றுக் கழுத்துக்களும்.., வரலாற்றின் சுவடுகளாய்...., எமக்காக இருக்கட்டும்! எனது ஈழக்கனவே...! நீ கனவாக இருக்கும் வரை.., காளான்களாய் முளைக்கின்ற விகாரைகளும்..,., செத்துப் போன புத்தனின்.., கல்லறைகளாகவே இருக்கும்! நீயும்....., உனக்காக மரணித்தவர்களின்.., ஈர நினைவுகளும்.., மரணம் கடந்த நிலையில்..., என்றும் வாழ்ந்திருக்கும்..! வீர வணக்கங்கள்! ,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கும்..புரட்சிக்கும் எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! துருச்சாமி புகழ் சுவியருக்கும்...உரிமையுடன் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு எனது மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்சுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!
until