-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
அப்படி இல்லை. இப்போது வேடிக்கையாக தோன்றினாலும், அவர், ரஜனி உச்சத்தில் இருந்த போது, தன்னைப் பிரபலபடுத்திக் கொண்டார். அது கை மேல் பலன் கொடுக்கிறது. என்னதான் சொன்னாலும் வாக்கு விழுகிறது. போடுபவர்கள் முட்டாள்கள் என்று சொன்னால், நாம் தான் முட்டாளாவோம், இல்லையா?
-
பாஸ், இதெல்லாம் பகிடியா ரசிச்சுட்டு போகனும். தவிர, தம்மைப் பிரபலப்படுத்தி, அதன் மூலம் பல வியாபாரங்கள் செய்வது இவர்கள் கெட்டித்தனம். உள்ளூராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை மக்கள் நம்பவே செய்வர்.
-
@suvy @தமிழ் சிறி @ஈழப்பிரியன் (Only Kantharmadam Gang 😎) யாழ் நகர் மனோகரா தியேட்டரில்(1974). யாழ் நகரத்துத் திரையரங்குகள் அன்று - மறக்க முடியாத மனோஹரா! : மனோகரா படமாளிகை 1951 செப்டம்பர் 12 அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் திரையிடப்பட்ட முதலாவது திரைப்படம் "பிச்சைக்காரி" படமாளிகையைத் திறந்து வைத்தவர்: தமிழறிஞரும், அன்றைய அரசியல்வாதியுமான சு. நடேசபிள்ளை. யாழ் திரையரங்குகளில் என் பிரியத்துக்குகந்த நண்பனைப்போல் விளங்கிய திரையரங்கு மனோஹரா. இங்குதான் அதிகமாக நான் திரைப்படங்கள் தமிழ், ஆங்கிலம் என்று பார்த்தது. இதற்கு முக்கிய காரணம் இதற்கண்மையில்தான் யாழ் இந்துவில் படிக்கையில் தங்கிப்படித்த ஆச்சி வீடிருந்தது. யாழ் இந்துக்கல்லூரியில் எட்டாம் வகுப்பில் சேர்ந்தது முதலே மனோஹராவில் திரைப்படம் பார்ப்பது தொடங்கிவிட்டது. அப்பொழுதெல்லாம் மனோஹராவில் பழைய படங்கள் திரையிடுவார்கள். கலரி என்றால் முழு டிக்கற் 65 சதம். அரை டிக்கற் 35 சதம். அவ்விதம் பார்த்த திரைப்படங்களில் சில: பாகவதரின் 'புது வாழ்வு', சிவாஜி , பானுமதி நடித்த 'அறிவாளி', வாத்தியாரின் 'மாடப்புறா', 'பாசம்', 'கொடுத்து வைத்தவள்'. இவ்விதம் பார்த்த பழைய திரைப்படங்கள் பல. இன்னுமொரு சமயம் யாழ் மனோஹராவில் அதிகமாக ஆங்கிலத் திரைப்படங்களைத் திரையிட்டார்கள். அப்பொழுது பார்த்த திரைப்படங்களும் பல. அந்தனி குயீனின் தி ஹன்ச் பாக் ஒஃப் எ நோட்ர டாம் (The Hunchback of Notre Dame) . இன்னொரு சமயம் மனோஹராவில் புதுத்திரைப்படங்கள் வெளியாக ஆரம்பித்தன. வாத்தியாரின் 'இதயக்கனி', 'உலகம் சுற்றும் வாலிபன்', ஜெய்சங்கரின் 'உயிர் மேல் ஆசை' , 'வெள்ளிக்கிழமை விரதம்', 'மேனாட்டு மருமகள்'.. இவை மனோஹராவில் நான் பார்த்த , இன்னும் நினைவில் நிற்கும் புதுத்திரைப்படங்கள். இவற்றில் 'இதயக்கனி' நூறு நாள்களைக் கடந்து ஓடியது. இது தவிர ராஜேந்திரகுமார், மாலாசின்ஹா நடிப்பிலுருவான 'கீத்' (Gheet) மறக்க முடியாத ஹிந்தித்திரைப்படம். மனோஹராவில் நீண்ட காலம் ஓடிய திரைப்படமாக நினைவில் பதிந்துள்ளது. அதில் வரும் 'மேரே மித்துவா' பாடலை மறக்க முடியாது. இங்கு பார்த்த இன்னுமொரு ஹிந்தித்திரைப்படம் ஷம்மி கபூர் நடிப்பில் வெளியான 'பிரம்மசாரி'. இதுவே பின்னர் தமிழில் சிவாஜி நடிப்பில் வெளியான 'எங்க மாமா'. 'உலகம் சுற்றும் வாலிபன்' திரையிட்டபோது ஆரம்பத்தில் மனோஹராவிலும், ஶ்ரீதரிலும் மாறி மாறித் திரையிட்டதாக நினைவு. முதல் நாள் நள்ளிரவே மனோஹராவில் முதற் காட்சி ஆரம்பமாகிவிட்டது இன்னும் நினைவிலுள்ளது. திருவிழா மாதிரி சனக்கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. வாத்தியாரின் திரைப்படங்களில் புகழ்பெற்றவை இவ்விதமே முதல் நாள் நள்ளிரவே முதற் காட்சி ஆரம்பமாகிவிடுவது அக்காலகட்டத்தில் வழக்கமாகவிருந்தது. மனோஹரா தியேட்டருக்கு உரிமையாளர்களாகப் பலரிருந்தனர் என்று கேள்வி. அவர்களில் ஒருவர் குழந்தை என்று அழைக்கப்படும் ஒருவரிருந்தார். அங்கு பணிபுரிந்த அண்ணாமலை என்பவரை மறக்கவே முடியாது. அவர் உரிமையாளர்களி லொருவரின் சகோதரர் அல்லது உறவினராகவிருக்க வேண்டும். ( மனோஹராவின் உரிமையாளர்கள் பற்றி அறிந்தவர்கள் அவ்விபரங்களை இங்கு பகிர்ந்துகொள்ளாலாம். ) அவரின் பெயர் அண்ணாமலை. நல்ல குரல் வளமுள்ளவர். அக்காலகட்டத்தில் திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் லவுட் ஸ்பீக்கர் பூட்டிய காரில் நகரில் வெளியாகும் திரைப்படம் பற்றி ஒலிபரப்பிக்கொண்டு வருவார்கள். அவ்விதம் வருகையில் அத்திரைப்படம் பற்றிய 'நோட்டீ'சுகளை எறிந்துகொண்டு வருவார்கள். அவ்விதம் விளம்பரக் காரில் ஒலிபரப்பிக்கொண்டுவருவார் அண்ணாமலை. அவர் ஒருமுறை ஒலிபரப்பிக்கொண்டுவந்த சிங்களப்படமொன்றின் விளம்பரம் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பெயர் 'பாரா வலலு'. நடித்திருப்பவர்கள்: காமினி பொன்செகா & மாலினி பொன்செகா. அண்ணாமலை அப்படத்தை விளம்பரத்திக்கொண்டுவருகையில் ' ஸ்டைலா'க விளம்பரத்துவதாக எண்ணிக்கொண்டு "காமினி கொன்செகரா , மாலினி கொன்செகரா நடித்த பாரா வலலு" என்று விளம்பரத்திக்கொண்டு வந்தது அழியாத கோலங்களிலொன்றாக அடிமனத்தில் பதிந்து விட்டது. என் பதின்ம வயதுகளில் என் வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருந்த சூழலாக மனோஹரா திரையரங்கு, நாவலர் வீதி, சாந்தையர் மடப்பிள்ளையார், சந்திரா கபே, அருகிலிருந்த கந்தசாமி மாஸ்டரின் டீயூசன் கிளாஸ், கந்தசாமி மாஸ்டரின் டியூசன் கிளாஸ் நடக்குமிடத்தில் சிறிது காலம் நடந்த சிவஞானசுந்தரம் மாஸ்ட்டரின் பல்கலைக்கழகப்புகுமுக வகுப்புக்கான கணிதப்பாடத்துக்கான இரை மீட்டல் வகுப்பு, ஐந்து சந்தியிலிருந்த பிளவுஸ் உணவகம், மொக்கங் உணவகம், ஆசாத் உணவகம் , அண்ணா அறிவகம் ஆகியவை அமைந்திருந்த சூழல் விளங்கியது. மனோஹரா திரையரங்கைப்பொறுத்தவரையில் இன்னுமொரு விசேடமென்னவென்றால்... அங்கு ஒரு காலத்தில் நாடகங்களும் மேடையேறின என்று கூறினார்கள். அதனை நிரூபிப்பது போல் திரை அமைந்துள்ள மேடையின் கீழ் நடிகர்கள் மேக் அப் போடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த சிறு சிறு அறைகள் விளங்கின. பதின்ம வயதுகளில் எம் கனவுலகத் திரையரங்காக விளங்கிய மனோஹராவின் அண்மைக்காலத் தோற்றத்தினையே இங்குள்ள புகைப்படத்தில் காண்கின்றீர்கள். போனவருடம் போய்ப் பார்த்தபின்புதான்.. "வந்திருக்கக்கூடாது, உன்னைப்பார்த்திருக்கக் கூடாது, .பார்க்காமலே உன் நினைவுகளுடன் வாழ்ந்திருக்கலாம்" எனச்சொன்னது மனசாட்சி. அந்தக்காற்றுவெளி. அரசமரம். அந்த ரசிகர். அனைத்தையும் இழந்து கதைசொல்ல முடியாமல் தவிக்கும் பாலைவனம் எங்களின் மனோஹரா. நன்றி வ.ந.கிரிதரன் அவர்களுக்கு
-
வடக்கிற்கு 500 பேருடன் வருவேன் : மேர்வின் சில்வா எச்சரிக்கை!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வடிவேலு ஸ்ரைலில, அட வாப்பா, நம்ம ஏரியாவுக்கு வா... என்று சொல்லத்தான் இருக்குது!! -
குரங்குகளின் கர்ப்பத்தைத் தடுக்க லூப் கருத்தடைகளை பயன்படுத்த நடவடிக்கை
Nathamuni replied to கிருபன்'s topic in செய்தி திரட்டி
இவர்களுக்கு கிறுக்குப் பிடித்து விட்டதா? ஒவ்வொரு பெண்குரங்காப் பிடித்து, லூப் போடுறது, சாத்தியமா? அதிலும் பார்க்க ஆண் குரங்கைப் பிடித்து, ஆணுறை போடலாமே? எதுக்கும் நம்ம உடான்சரிடம் ஜடியா கேட்பமே! @goshan_che 🫨🤔😎 -
பகிடி விடுறியள். மார்கற்றிங்! அது தெரியாம, உங்க கணபேர், ஐபிசிக்கும், ஒரு பேப்பருக்கும், நோட்டீஸ் அடிக்கவும் காசை கொட்டியும் ஓட்டு விலேல்ல. இலண்டண் பாபாவின்ட இரண்டொரு ரசனி பாட்டு, பட்டைய கிளப்ப, மனிசியோட கரோ கவுண்சில்ல ஒக்காந்திருக்கிறார். ஏலு மெண்டால் அசைச்சுப் பாரூங்கோவன்! என்ற ஓட்டு யாருக்கு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம். 🤣😁 சீமான் ஆதரவாளர், ஓட்டு டீம்காவுக்கு விழாது எண்டு நெனச்சா, நான் ஒண்டுமே செய்யேலாது! 😂🤣 இப்ப ஓணாண்டியாருக்கு விசர் வரப்போகுது. *** இளமையில் உழைத்தவன் முதுமையில் சிரிக்கிறான். இளமையில் படுத்தவன், முதுமையில் தவிக்கிறான்.
-
ஆளை காணோமா? உங்க ஹரோ பக்கம் வந்தீங்கள் எண்டா கையில பிடிச்சு தரலாம். சுரேஷ் கிருஷ்ணாவும் மனிசியும் ஹரோ கவுன்சிலர்ஸ்..🤣
-
வயசும்... அப்படி!!! 🤣😂
-
அட நீங்க வேற. இப்பெல்லாம், ரஜனிக்கு முந்திமாதிரி, படத்தில், சண்டை பிடிக்கவோ, ஆடவோ முடியாது. ஒவ்வொரு movement டும் மிக slow வாக எடுக்கிறார்கள். ஆகவே இப்படி ஒரு ஆள் இருந்தால், உதவும். கோடிக்கணக்கில் நடக்கும் வியாபாரம். எதுவுமே உதவும். உண்மையில, முதலில் செய்தியுள் போகாம படத்தினைப் பார்த்து, பாரட்டை என்ன இப்படி கழுசானோடே நிக்குதே என்று நினைத்தேன். பிறகுதான் இவர் வேற எண்டு தெரிந்தது.🤣😁
-
ஆளை, பரட்டயரை, பார்த்து வையுங்கோ. அடுத்த ரஜனி படத்தில, இவரை டூப் போட வைப்பார்கள். 🤪
-
🤣😁 கடைசீல பிங்கர் ஸ்லிப் ஆயிருச்சு இதென்னப்பா இது, இந்திராகாந்தி மாதிரி இருப்பா எண்டு பார்த்தா, விக்கு வைச்ச ஆம்பிளை மாதிரி இருக்குது. ஒருவரின் தரம், அவரின் தெரிவுகளில் இருக்கும். வீட்டுக்கு அலுமாரி டெலிவரி கொடுக்க வந்தவர், வீட்டுக்காரர் ஆனால், இவர் எப்படி நாட்டினை ஆள முடியும் என்று கேள்வி வருகிறது. இது தனிநபர் விமர்சனம் இல்லை. ஆனால், தாய் மனிசி, இந்த முறையும் மகனை இறக்கிப் பார்த்து, சரி வராவிடில், இவரை, இந்திராகாந்தி என்று இறக்க போறாவாம். 🙄
-
நம்ம, சைவ சமய கதைகளில் ஒன்று. ஒருவர், காசு படைத்தவர். எச்சில் கையால் காகத்தினைக்கூட துரத்த மாட்டார். அவருக்கு ஏத்த மணைவி. வெள்ளிக்கிழமை, நல்ல அறுசுவை சமையல், சாப்பிட வீடு வருகிறார். கணவர். அந்த நேரம் பார்த்து சிவனடியார் ஒருவரும் வருகிறார் பசியில். மூக்கில் அடித்த சமையல் வாசனையை பிடித்து, வந்து நிக்கிறார் சாப்பாடு கேட்டு. கணவன், மனைவிக்கோ கொடுக்க விரும்பவில்லை. அடியேய், ஏண்டி சமைக்கவில்லை. பாரு, அடியார் வந்திருக்கிறார். கொடுக்க முடியவில்லையே என்று பெரிய தடியை எடுத்து வந்து அடிக்கிறார். மாணவியும், அழுது, குய்யோ, முறையோ என்று அழுகிறார். சிறிதுநேரத்தில், வெளியே வந்து பார்த்தால், அடியாரை காணோம். உள்ளே போய், போடு இலையை என்று அமர்கிறார். ஓயாமல், நானும், அடித்தேனே என்கிறார், சிரித்தபடி.... ஓயாமல் நானும் அழுதேனே என்று மணைவியும் சொல்லி சிரிக்கிறார். ஓடாமல் நானும் இருந்தேனே அய்யா என்று, உள்ளே வந்து பக்கத்தில் அமர்கிறார் சிவனடியார். வேறென்ன, சோறு போட வேண்டிய நிலைமை தான். அந்த சிவனடியார் தான், சீனா. கணவன், மனைவி தான் சிங்களவர்கள், அவர்களும், ஆளும், எதிர்க்கட்சிகளும், அதாவது இந்தியாவுக்கு சீனர்கள் மேல் கஞ்சத்தனம் காட்டுவது போல நடிப்பவர்கள்.. இதில இந்தியா எங்க எண்டு கேட்க்கிறேல்ல.
-
bake பண்ணின பானை, திருப்பி bake பண்ணினால், பல்லு தப்புமே?😰🙄
-
என்ன பிச்சைக்கார காசு கொடுத்தியிருப்பினம்... சீனா மாதிரி டொலரில அள்ளி எறிந்திருப்பினமே? சீனா எண்டோன்ன, எள் எண்டால் எண்ணெய் மாதிரி உருகி நிக்கினமே, மகிந்தா முதல், ரணில் வரை. ரணில் போனகிழமை தான் சீனா போய் வந்தார். அந்த துணிவிலை தன உங்கண்ட ஊர்ல, டீவில பேசினாரே பார்க்கவில்லையா? இவையள் மோடிக்கு கடிதம் எழுதவே யோசிக்கினம். சந்திக்க முடியாதே.
-
இவருக்கு ஒரு இழவு அரசியலும் விளங்காம இந்தியா எண்டு கொண்டு நிக்கிறார். சீனா, முழு சிங்கள எம்பிமாரையும் காசை அடிச்சு வாங்கிப் போட்டார்கள். மாலைதீவிலும் இதுதான் நிலை. இவரும் சீனா தான் எல்லாம் என்றால், வடிவேலு பேக்கரி டீலிங் மாதிரி காசு பார்க்கலாம். சும்மா, தனக்கே உதவாத இந்தியா என்று கொண்டு நிண்டால், வேலைக்காவாது கண்டியளே... இந்தியா, தானும் தின்னாது, தள்ளியும் இராது, எம்மையும் தின்ன விடாது எண்டதை 80 களில் இருந்து பார்த்துவருகிறோம். இதுக்கு பிறகும், அதை பத்தி கதைப்பதே நேரவிரயம்.
-
இது தவறுதான், நியாயப்படுத்த முடியாது. ஆனால், உண்மையில், பிட்டும், தேங்காய்ப்பூவுமாக இருந்த தமிழ் பேசும் மக்களை, மிக நுட்பமாக, மத ரீதியில் பிரிந்தவர், கிழட்டு நரி என்று சொல்லப்பட்ட ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனே. அவர் கபடத்துக்கு இரையானவர், அஸ்ரப். தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்து கிளப்பப்பட்டு, முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினை உருவாக்க பணமும் கொடுத்து, அமைச்சரும் ஆக்கினார். அதுபோலவே, ஜிஜி பொன்னம்பலம், திருசெல்வம், மலையகத்தின் தொண்டைமான் இணைந்து முப்பெரும் தமிழர் தலைவர்களாக இணைந்த போது, தொண்டைமானை அதே பாணியில் பிரித்து அமைச்சராக்கினார் JRJ. ஆனால், இந்த நரித்தனமான வேலையால் நாட்டினை நடுத்தெருவில் இழுத்து விட்டு, நாசமாக விட்டு சென்றார் அந்த கடைந்தெடுத்த இனவாதி.