-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
அதுசரி பாக்கி என்ற (அவ)சொல்லை பயன்படுத்த ஏலுமோ? ஏலும் எண்டு நினைக்கிறேன். அது பத்தி நிர்வாகத்துக்கு தெரியாது. UK காரருக்கு மட்டும் தான் தெரியும். 🤣😁
-
நிழலி, இந்த விடயத்தில், நீங்கள் களத்தில் ஒரு பொது கருத்தாடல் செய்து அதன் முடிவினை விதியாக சேர்க்கலாம். இது அவப்பெயர் என்று சொல்வதை ஏற்றுகொள்ள முடியுமா என்று கேள்வி எழுகின்றது. அதுபோல, கறுவல் என்ற சொல்லும் அவச்சொல்லாக நிர்வாகம் கருதுகிறது என்றே கருதுகிறேன். இந்த சொல், சாதாரணமாக ஊரில், பாவிக்கப்படும் சொல். உதாரணமாக, அவன் மூத்தவன் தகப்பனை போல கறுவல், இளையவன் தாயை மாதிரி சிவலை என்பார்கள். காளை மாடுகளுக்கு கூட, கறுவல், செவலை என்று சொல்வார்கள். நான் இதனை பயன்படுத்தியபோது, நீக்கப்பட்டது. இதுக்கும், கறுப்பின மக்களுக்கும் என்ன தொடர்பு என்று விளங்கப்படுத்த முடியுமா? காப்பிலி எனும் சொல் பற்றி நல்ல விளக்கம் தரப்பட்டுள்ளது என்பதையும், கவனித்திருப்பீர்கள். நன்றி.
-
கடவுள் உரிமை கோரவில்லை இணையவன். விநாயகர் சிலையை பிடித்து உயிர் தப்பினார், அவ்வளவு தான் சாராம்சம். இறை நம்பிக்கை உள்ளோர் அதை கடவுள் செயல் என்பர். இல்லாதோர் பகுத்தறிவு பேசுவர். அவ்வளவுதான்!
-
ம்.... ம்ம் சமக வலைத்தளம் எண்டால், நம்மள மாதிரீ பல ரசிகர்கள் இருப்பினம் எண்டத மறந்து போட்டார் போல!
-
மூல தமிழ் இணைப்பில் மரக்கதையே இல்லை. பக்திப் பரவசமாக எழுதியிருந்தார்கள். கடலில் முழுவதுமாக கரைப்பதால் மரம் இணைப்பதில்லை. justify பண்ண பின்னர் மரக்கதை வந்திருக்கலாம், தெரியாது. அதை சாதாரணமாண செய்தியா நம்ம ஸ்ரைலில எழுத, பென்ரிகோஸ் கோஸ்டிகளுக்கு பிடிக்கல்ல போல!! தந்தி வீடியோ செய்தி இணைத்தும், இல்ல, நான் வாசிச்சது தான் சரி அடம் பிடிக்கினம்.
-
அலம்பறை??? அடுத்தவர் நம்பிக்கைக்குள் உடுக்கடிக்க மும்மரமா இருக்கும் அறப்படித்த உங்களுடன் தொடர்ந்து பேசுவதில் அர்த்தமில்லை. கிரந்த, நக்கல், நளின கதைகளை இறந்து புதைத்து மூன்றாம் நாள் எழும்பினவர் குறித்தும் சொல்லி 'புண்படுத்த' ஏலும். விட்டால், மனித உடலுக்கு எப்படி ஆணைத் தல? கப்சா தானே எண்டுவியல் போல கிடக்குது. 👇 இதீல உங்கட கருத்து, ஏதாவது? ஒன்றுமே இல்லை. ஆனா, உங்க மட்டும்???
-
நான் படபடக்கவில்லை, சும்மா பகிடிக்கு என்று, ஸ்மைலி ஐகோன் போட்டேன். அதாலை நீங்கள் படபடக்காதீங்கோ. நான் ஏன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நம்பவேணும்? விடீயோவில சொல்லி இருக்கே தெளிவா... நான் தெளிவாக சொல்லி விட்டேன்... எனது மூலம் தமிழ் செய்திகள் தான். ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதமாக சொல்கின்றன. அது சரி. உங்கள் அதீத ஆர்வம்... ஏன் என்று யோசிக்க வைக்கிறது. இது ஒரு நம்பிக்கை. அவ்வளவுதான். நீங்கள் நம்பவேண்டும் என்று நான் எதிர்பார்க்க முடியுமா, என்ன? எது வித்தியாசமாக அல்லது தவறாக சொல்லி இருக்கோ, அதனை மட்டுமே கொண்டு வந்து ஒட்டி, வேறு மதத்தவர் நம்பிக்கையினை புண்படுத்துவது சரியானதா, படித்த மனிதரே?
-
உண்மைதானே. இவருக்கேன் உந்த வேலை. செய்யிறதையும் வடிவா எல்லோ செய்யவேணும்.🤣 பிள்ளையார் எண்டோன்ன, ஒரு சேட்டை போல தான்...😅 இயேசு ரட்சிக்கிறார் என்று சுத்துமாத்து ஆட்களின் வீடியோ போட்டால், தலையே காட்டார்.🤣😁 உந்த லிங்கில என்ன சொல்லுது எண்டு பாருங்கோவன். https://www.timesnownews.com/ahmedabad/immersed-ganpati-idol-saves-gujarat-teen-after-being-swept-away-in-high-tide-miraculously-survives-article-104131985 https://timesofindia.indiatimes.com/city/surat/miracle-boy-from-surat-who-swept-away-in-high-tide-found-alive-in-sea-after-24-hours/articleshow/104078902.cms?from=mdr https://www.latestly.com/india/news/ganpati-saves-surat-boy-14-year-old-lakhan-devipujak-who-drowned-in-arabian-sea-miraculously-survives-found-alive-floating-on-immersed-ganesh-idol-platform-5456223.html முக்கியமா இதைப் பாருங்கோ... அப்புறம், விடுங்கோ, பிள்ளையார் பார்த்துக்குவார்... 😎 எனது மூலம் ஒன் இந்தியா தமிழ்... தேடினேன், கிடைக்கவில்லை. மினக்கெட நேரமில்லை. கிடைத்தால் இணைப்பேன். மேலே உள்ள லிங்குகளில் ஒவொன்றும் ஒவொரு கதை. அதுக்கு பிள்ளையார் பொறுப்பு எடுக்க ஏலாது பாருங்கோ.
-
மிதந்த காலும்... வந்த படகும்..... 🙏
-
விநாயகர் சதுஸ்டி அன்று மும்பை கடலில் பிள்ளையார் சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். கூட்டத்தில் இரு சிறுவர்களும் இருந்தார்கள். தாம் கொண்டு வந்த பிள்ளையாரை தள்ளிக்கொண்டு சென்ற கூட்டத்துடன் இவர்களும் சேர்ந்து சென்று விட்டார்கள். பிள்ளையாரை பிடித்துக் கொண்டே சென்றதால், கால்கள் நிலத்தில் படாத நிலையில், கடலிலினுள் ஆழம் கூடிய பகுதி வரை சென்றதை கவனிக்கவில்லை. பெரியவர்கள் திருப்ப, மறுபக்கம் பிடித்துக்கொண்டு நின்ற சிறுவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை. கரையில் எங்கே சிறுவர்கள் என்றும் அவர்களுடன் வந்தவர்கள் தேடத்தொடங்கிய போது, இருவரும் கரை வரவில்லை என்று புரிய, தேட தொடங்கினர். சிறிது நேரத்தில், அலையுடன், மயங்கிய நிலையில் ஒரு சிறுவன் கரை ஒதுங்கினான். அடுத்த சிறுவன் எங்கே என்று, இரவு நேரம் முழுவதுமாக, கரையில் பலர் கவலையுடன் காத்து இருந்தனர். அவர்களுடன், அங்கே செய்தி கேட்டு ஓடி வந்த, தகப்பன் பதறியபடியே இருந்தார். ஆனாலும் மகன் வருவான், வருவான் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். விடியும் போது, பலர் நம்பிக்கை இல்லாமல் நகர்ந்து போய், விட்டனர். கடலை வெறித்த படியே, தகப்பன் காத்திருந்தார். தூரத்தில் ஒரு சிறு படகு. மீன் பிடி படகு. இரவு மீன் பிடிக்க சென்று கரை திரும்பும் படகு. அதனை பார்த்து விட்டு, அக்கறை இல்லாமல் வேறு பக்கமாக பார்த்தனர் எல்லோரும். ஆனால் தீடீரென, படகில் இருந்து சிறுவன் கையசைக்க, தகப்பன் துள்ளி எழும்பி கடலுக்குள் ஓடி, படகை நெருங்கி, மகனை தூக்கி, உச்சி முகர்கிறார். கரைக்கு, வந்து, விநாயகருடன் போனவன், எப்படியும், விநாயகர் அருளால் வருவான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். நம்பிக்கை வீண் போகவில்லை என்றார், பிள்ளையாரை பிடித்து கொண்டிருந்த சிறுவன், பிள்ளையாரின் ஒவ்வொரு பகுதியாக கரைய, கடைசியாக மிதந்து கொண்டிருந்த ஒரு காலை மட்டுமே பிடித்து கொண்டு இருந்திருக்கிறான். அப்போது, விடிந்து விட்டதால், கரை திரும்பிக் கொண்டிருந்த படகு, தத்தளிக்கும் சிறுவனை கண்டு, மீட்டு இருக்கிறது. சிறுவன் படகில் ஏறிய சிறிது நேரத்தில், அதுவரை அந்த நோக்கத்துக்காக காத்திருந்தது போலவே, அந்த காலும், கடலில் மூழ்கிப் போனது. விநாயகர் சதுஸ்டி அன்று, விநாயகரினால் காக்கப்பட்ட சிறுவன், இன்று ஏரியா ஹீரோ.
-
கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை ஒன்று நினைவில் வருகிறது. கொம்பை மறந்த மாடுகள், ஆயிரம் ஆண்டுகளாக பொதி சுமக்கின்றன. 65% பெரும்பான்மையாக இருந்து கொண்டு, அடிமை வாழ்வு. என்னத்தை சொல்வது... ஆனாலும், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி என்னும் தாழ்த்தப்பட்ட பெண், வெளியே வந்து முதலமைச்சரானார். ஆனால் ஊழலால் தூக்கி வீசப்பட்டார்.
-
சரத் மட்டுமல்ல, உதயவும் இனவாதம் பொழிந்தார். ஆனால் சரத் போல, உதய முட்டாளாக இருக்கவில்லை. மேர்வின் டீ சில்வா, தலையை வெட்டுவேன், களனியில் போடுவார் என்றார்.... அவரும் தப்பி விட்டார்.
-
டிக்கற்றை போடுங்க எனக்கும் சேர்த்து. யாழ்ப்பாண செலவு உங்கண்ட😄 பனம்சாராயம் எண்ட செலவு 😅
-
தனது ஆரூடம் பலித்துள்ளதாக அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டு
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
உந்தாளிண்ட அலம்பறைய... வீட்டை துடைச்சு களவெடுத்துக் கொண்டோடின திருடன், கதவில அந்தப் பூட்டு போட்டா சரிவராதே எண்டு சொல்லுறது போல..... -
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
யாழில். மீற்றர் பூட்டாத 800 முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
போடட்டா போட்டி தான் கட்டுப்படுத்தும். Monopoly தான் இதுக்கு காரணம். இன்னொரு கம்பனி வர, சேர்ந்தே price fixing செய்வார்கள். Price fixing மேற்கே சட்டவிரோதமானது. கடைசீல, அட நல்ல காசு பார்க்கலாம் போல என்று போட்டியாளர்கள் வர monopoly இல்லாது போக better pricing வரும். இதுவே சந்தை செயல்பாடு. ஆட்டோகாரர்கள், லோக்கல் ஆக்களுக்கு ஒரு ரேட். அங்க போய், கூலங் கிளாஸ், அரை காற்சட்டையோட போய் ஆட்டோ பிடியாமல், சாரம் அல்லது வேட்டி, நெத்தீல துண்ணூறு, சந்தனம் வைச்சு, எங்கண்ட உடான்ஸ்சு சாமியார் போல, போய், 'அண்ண/தம்பி, புலோலி சந்திக்கு போகவேணும், எம்மளவு' எண்டு கேளுங்கோ. 'பார்த்துச் சொல்லண்ண / என்னடா தம்பி பொல்லால அடிச்ச காசு கேக்கிறியள்/கேக்கிறாய், வசு லேட்டாகுமாம் எண்டு தான உங்க வந்தனான்' எண்டு நில்லுங்கோவன்!! லோக்கல் ரேட். -
பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது
Nathamuni replied to ஏராளன்'s topic in விளையாட்டுத் திடல்
கருணா அம்மான் தானே அக்காவின் அண்ணா??