Everything posted by Sasi_varnam
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்…!
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
வெளிநாட்டில நம்மட (சில) தமிழ் ஆட்கள் மகள்மாரிண்ட மஞ்சள் நீராட்டு விழாவுக்கே இதை விட மாடர்ன் ஆனா ஹெலிகாப்டரை தான் பிடித்து ஏற்றி இறக்கி விழா செய்கிறார்கள் கண்டியலே
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
பொறுமையாக கேட்டு கலந்துரையாடலில் பேசப்பட்ட கருத்துக்களை தமிழில் பிசகாமல் மொழிபெயர்த்து எழுதியமைக்கு மிக்க நன்றிகள் ரஞ்சித். 🙏 நாங்களும் தான் சற்று தெரிந்து, தெளிந்து கொள்கிறோம் கப்பிதான் எமது தமிழ் தலைவர்கள் ராமநாதன் அருணாசலம் காலத்தில் செய்த தவறுகளை பட்டியலிடுங்கள் பார்ப்போம். அவர்களின் தவறுகள் பற்றி தெரிந்த உங்களுக்கு D.S சேனநாயக்கா போன்ற சிங்கள தலைமைகளின் "தேசாபிமானம்" பற்றியும் தெரிந்திருக்கும் என்றும் நம்புகிறேன்
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இதுவரையிலும் நான் கேட்ட பார்த்த தமிழர் மற்றும் அவர்கள் பிரச்சினை குறித்த சிங்களவர்களின் உரையாடலில் இது மிகவும் சிறப்பு என்று கூறலாம்
-
"வன்முறைகளில் வனிதையர்"
வனிதாமணி வண்ணமோகினி வந்தாடு 😀
-
"கார்த்திகை தீபம்" [கவிதை]
நிதர்சனமான வரிகள் சகோதரர் 👌
-
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
விடுப்புதான் அன்றி வெறொன்றும் இல்லை பராபரமே. சந்தர்ப்பம் இருந்தால் சிங்கத்திடம் ரெண்டு கேள்விகள் கேட்கலாம் என்ற நினைப்பில் தான் போனேன். அதுவும் தவிர கனடாவில் வசிக்கும் மனோரஞ்சன் எனப்படும் முன்னாள் ENTLF நபரை (புலிநீக்க அரசியல் சூத்திரதாரிகளில் இவரும் ஒருவர்), இவரையும் நேர்ல பார்க்க சந்தர்ப்பம் இருந்த படியால் போனேன். அனுரகுமார வழமையான அரசியல்வாதிபோல் சிங்களத்துக்கான அரசியலை பேசினார். தமிழருக்கு அரசியல் பிரச்சினை இருக்கா? அப்படி இருந்தால் கிலோ எத்தனை ருபாய் என்பது போலத்தான் அவரின் பேச்சு இருந்தது. சிங்களம் ஆராவாரமாய் கைதட்டியது. மனோரஞ்சன் அனுரகுமாராவை விட அழகான நேர்த்தியான சிங்கள மொழியில் அனுராவுக்கு புகழாரம் சூட்டி செம காமெடி பண்ணி இருந்தார். தமிழர்கள் சார்பில் கேட்கப்பட்ட இன்றைக்கும் தொடரும் அநீதிகள் தொடர்பான இரண்டு கேள்விகளுக்கும் சிங்கனிடம் பதில் இல்லை. வெறும் சடையில் தான் இருந்தது. ஒன்றுபட்ட ஐக்கிய இலங்கையில் சகோதரத்துவ சக ஜீவன சுகவாழ்வு பற்றி சிங்கம் பேசப் பேச ... வந்திருந்த சிங்களம் அவரை ஆபத்பாந்தவராக கைநீட்டி, உச்சம்குளிர்ந்து ஜயவேவா...ஜயவேவா கோசம் போட்டது. போங்கடா நீங்களும் உங்க அரசியலும் என்று விழா ஒருங்கிணைப்பாளரை பார்த்து நக்கலாக சிரித்து, உருத்தும் படி சில விடயங்களை சொல்லிவிட்டு நான் பார்க்கிங் லாட் நோக்கி நடையை கட்டினேன். எதிரில் தெரிந்த எல்லா சிங்களவரும் எதிரியை போல தெரிந்தார்கள்!!!
-
பதின்மூன்றை வெட்டித்தள்ளும் ரணில் 1,000 விகாரைகள் இலக்குடன் சஜித் ”எலியட்ட தாண்ட”அணியில் அனுர
அதீத கற்பனையோடு வில்லங்கத்தையும் விதைத்து எழுதிய வரிகள் . நானும் அந்த நிகழ்வுக்கு போனவன் என்ற உண்மையோடு
-
யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!
அந்த லூசு மண்டையன் அருண் 'செத்தார்'த்தன் குழுவோடு சேர்ந்து கொண்டு நேரடியாக சொல்லுகிறான்... இதையே சிலர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியதைப்போல சொல்கிறார்கள் கபித்தான் .
-
இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் காலமானதாக செய்தி !! 😥 செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது... இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை பெற்றாராம் . இது உண்மையா தெரியவில்லை ...
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
கந்தையா அண்ணா ... கவனம் பொடியனுவல் பக்கம் 9க்குள்ள உங்கள கொண்டு போக ட்ரை பண்ணுறாங்கள்!! 😂
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
சமன் பிரசன்ன இவர் பாதாள கோஷ்டி நடத்துனர், தவிர ஒரு பெயர் தெரியாத சிங்கள அரசியல் கட்சியின் தலைவர் (அப்பே ஜன பல பக்க்ஷய) . சில வருடங்களுக்கு முன்னர் சுயேட்சையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியும் போட்டவர். ஒரு சில கொலை வழக்குகள் இன்னும் அப்படியே நிலுவையில் இருக்கிறது.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ஆ... ஆ... ஆ.... அஸ்கு புஸ்கு அமால் டுமால்!! நீங்க 9ஆவது பக்கத்துக்கு ட்ரை பண்ணுறீங்க!!! இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை பாஸ். இதை கேட்டு சந்தோசமா இருப்போம் பாஸ்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
8 பக்கத்துக்கு நீட்டி, நீட்டி எழுதியதில் இருந்து சறுக்கி முதல் பக்கத்துக்கு வந்துள்ளீர்கள் . நல்ல மாற்றம்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
2009 இறுதி யுத்த முடிவின் பின், 15 வருட புலிகள் இல்லாத இந்த காலகட்டத்தில் போரை வென்ற, அடுத்தடுத்து பதவிக்கு வந்த "சிங்கள அரசியல்" இந்த நாட்டு சிங்கள மக்களுக்கு (தமிழர்களை விடுங்களன்) இன்றுவரைக்கும் செய்தது எதை? போராட்ட காலத்தில் வீட்டில் இருந்தவன் இப்போது ரோட்டில் பிச்சையெடுக்கிறான். தான் பதவிக்கதிரையில் அமர்வததற்கே 2019 இல், 263 பொது மக்களை தேவாலயம், நட்சத்திர ஹோட்டல், புனித நாள், பெருநாள் பார்க்காமல் குண்டு வைத்து தகர்த்து, சிதைத்த அரசியல் மாட்சி உள்ளவன், தமிழனுக்கு வெள்ளி தட்டில் வைத்து விடிவு, ஞாயம் வழங்கியதை போலவும் அதை எதோ நம்மவர்கள் புறங்கையால் தட்டி ஒதுக்கியதை போலவும் இங்கே கூவி கூவி 8 பக்க உரையாடலை நிகர்த்தியவர்களை நினைத்தேன். சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. புலிகளை விமர்சனம் செய்வதில் தவறு கிடையாது, ஆனால் அதில் நேர்மையாக இருக்க வேண்டும், அதற்கும் அப்பால் அந்த விமர்சனத்தின் நோக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
விடுதலை புலிகளின் 40 வருட செயல் பாடுகளை தோல்வியில் முடிந்ததை போல திரைக்கதை வசனம் அமைக்கும் மாக்கள் கூட்டம் இதையும் தான் கொஞ்சம் கேட்கலாமே. தலைவர் கணிப்பின்படி ஒரு இளைய சமூகம் சரியாகவே சிந்திக்கிறது.
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
வாங்கடா... வாங்கடா... வந்து வரிசையில வந்து அடிங்கடா... ஆனா ஒன்னு முடிவுல மாற்றமில்லை. SPB ஐயா , Y1, Charan, இப்படியானவர்கள் மேடைக்கு பின்னால் காட்டும் பந்தா நாங்கள் பார்க்காதாதா. நன்றி வணக்கம்!! 🤭
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
இந்த பாட்டையெல்லாம் கேட்டதற்கு பின்பு, இப்போது வரும் எந்த பாட்டை கேட்டாலும் மனசில் ஒட்டவில்லை. காதோடு நுழைந்தது காதோடு போய்விடுகிறது !!! என்னுடைய இந்த மண்ணாங்கட்டி பிறப்புக்கு சிறப்பு சேர்த்த ஒருசில விடயங்கள் என நான் நினைப்பது. தமிழன் என்ற அடையாளம். ஈழ விடுதலை போராட்ட காலத்தில் உன்னதமான ஒரு தலைவனை, ஒப்பற்ற போராளிகளை சாட்சியமாய் பார்த்து வாழ்ந்தது. வள்ளுவன், பாரதி இப்படி சில படைப்புகளை நுனிப்புல் மெய்தது. இசைஞானி இளையராஜா, MSV ஐயா படைப்புகளில் கரைந்து போனது.
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
இளையராஜா மிக கீழ்தரமான மனிதர். உங்கள் பார்வையில் "மேல்தரமான மனிதர்கள்" எப்படி எல்லாம் இருக்க வேண்டும்? எதாவது வரையறை, அளவுகோல் இருக்கிறதா? மேடை நிகழ்ச்சிகளில், டீவி ஊடகங்களில் மட்டும் "மேல்தரமாக" இருந்தால் போதுமா?
-
கர்வம் - அதை எல்லாம் எப்போதோ தூக்கி எறிந்துவிட்டேன்.. இளையராஜா பேச்சு..!
ஐயா இளையராஜா .. உங்கள் பாடல்களை கேட்கும் எனக்கே கொஞ்சம் கர்வம் வருகிறது. ஆகவே உங்கள் பன்முக திறமைக்கு நீங்கள் எவ்வளவு கர்வமாக இருந்தாலும் உங்கள் ரசிகர்களுக்கு கவலை இல்லை. ஏனெனில் நாங்கள் உங்களிடம் இருந்து ரசிப்பது உங்கள் மெட்டமைக்கும், இசை அமைக்கும் விந்தையை, அது காலங்கள் கடந்து எங்கள் மனதுக்குள் நீங்கா இடம் பெரும் விந்தையை!!!
-
துவாரகா உரையாற்றியதாக...
இவர் சொல்லும் கருத்துக்கள் சரியாக இருந்தாலும், நான் நினைக்கிறன், நிராஜ் சொல்லவரும் சங்கீதா அண்ணா கேணல் சங்கீதனாக 2009 இல் மாவீரராகிவிட்டார். இணைப்பை பார்வையிடவும் https://eelamhouse.com/?p=2701
-
துவாரகா உரையாற்றியதாக...
Technical details
-
துவாரகா உரையாற்றியதாக...
நன்னிச் சோழன் உங்கள் கருத்துக்களில் இப்போதெல்லாம் ஒருவித வன்ம, காழ்ப்பு பாணி இருப்பதை போல தெரிகிறது. நீங்கள் எதோ ஒரு ஆர்வத்தில் அப்படி பதிவிட்டாலும், உங்கள் தாயகம், தேச விடுதலை நோக்கிய செயல்பாடுகளுக்கு சற்றே நெருடலாக இருக்கிறதை போல நான் உணர்கிறேன். தவறாக எதுவும் சொல்லி இருந்தால் மன்னிக்க.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. ம்ம்ம் அந்த சப்பிளை அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊
- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.