Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அதுவே இந்தியாவின் முடிவை மாற்றியதாம்

Featured Replies

CNN-IBN which is part of the Global CNN television network will be airing the Channel 4 Sri Lanka's Killing Fields - War Crimes Unpunished documentary tonight in India at 9pm. This is very important as a campaign of awareness all over India.

Please also note that Channel 4 may (I say may because, news priorities may change) be reporting on a short news piece on an initiative that the Global Tamil Forum has started here in the UK, tonight at 7pm.

Global Tamil Forum

நல்லது முழுமையாக ஒளிபரப்பப்படவேண்டும்.

  • Replies 57
  • Views 3.5k
  • Created
  • Last Reply

இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு மன்மோகனுக்கு சோனியாவே உத்தரவிட்டார்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியே உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் பிரிட்டனின் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்ட இலங்கை குறித்த வீடியோத் தொகுப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுவதனைப் பார்வையிட்ட சோனியா காந்தி அதனால் மிகவும் விரக்தி அடைந்த நிலையிலேயே இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்தியுள்ளாரென காங்கிரஸ் கட்சியின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட புகைப்படங்கள் சில இந்தியாவிலுள்ள சகல தமிழ் ஊடகங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டதுடன் அது இலங்கை மீதான கவனத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

அத்துடன் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகியன கட்சி ஆதரவாளர்களின் விருப்பத்துக்கு அமைவாகவே செயற்பட வேண்டி இருந்ததுடன் அக்கட்சிகள் அவ்வாறு செயற்பட்டால் காங்கிரஸ் கட்சியும் தூர விலகி நிற்க முடியாது.

இதேவேளை மார்ச் 22 இல் ஜெனீவாவில் வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு சில தினங்கள் இதே நிலையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கப் போவதில்லையென உறுதியாகக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் தமிழ் எம்.பி.க்கள் இலங்கை குறித்த சில புகைப்படங்களை சோனியா காந்திக்கு காண்பித்து, இலங்கைக்கு எதிராக இந்தியா ஒருபோதும் வாக்களிக்கமாட்டாதென குழப்ப நிலையில் உள்ளனரெனக் கூறியுள்ளனர்.

இதனை அடுத்தே இவ்விடயம் தொடர்பாக தான் உறுதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக தமிழக எம்.பி.க்களிடம் உறுதியளித்துள்ளார் சேனியா காந்தி.

இதன் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கை உடனடியாகத் தொடர்பு கொண்ட சோனியா இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாதென்ற நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளாரென பெயர் குறிப்பிடாத காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

சோனியா காந்தியின் கணவர், முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உத்தரவால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்ட புகைப்படத்தை பார்த்து அவர் இவ்வாறான தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதும் அதனால் இந்திய இலங்கை உறவில் திருப்பம் ஏற்பட்டுள்ளமையும் தான் விதியாக அமைந்ததெனவும் அவர் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/news/all-news/india/11972-2012-03-30-20-40-05.html

இது முற்றிலும் கட்டுக்கதை...

இந்தியாவும் ,, தமிழகமும் வேறுநாடுகள்தான்...

ஈழத்தமிழர் விஷயத்தில்!

அதுதான் சொன்னீங்களே ,,, இயர் 91” சம்பவம் அவங்களுக்கு புடிகல்லைனாலும்...

அப்புறம் மனச மாத்திகிட்டாங்கன்னு!

சட்டசபை தீர்மானம்,,, மத்திய அரசுக்கு நெருக்கடி...தீகுளிப்பு...

சாலைமறியல்,, இத எல்லாத்தையும் செய்வது,,, அதே இந்தியகுடியரசு டீல்ல வாழுற,,

ஈழதமிழ் ஆதரவு தமிழன்! வேறுதான்!

547971_333278226730146_119198598138111_913782_1661004866_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதனை 21ம் நூற்றாண்டின் விகடமென்பதா? பலத்த அடிவாங்கிவரும் காங்கிரஸ் தமிழ்நாட்டிலும் அதே நிலையை நெருங்கி ஒரு இடத்தைக் கூடப்பெறமுடியாத சூனியமாகிவிடுமோ என்ற நிலையில் அவிழ்த்துவிடப்படும் கட்டுக் கதையா? கட்டுக் கதையேதான்!

இன்றைய தகவல் யுகத்திலே இனியும் இதுபோன்ற பொய்களும் புனைவுகளும் எடுபடாதென்பதை நவயுக பெண்கிட்லரான சோனியாவின் ஆலோசகர்களோ உளவாளிகளோ தெரிவிக்கவில்லைப்போலும். ஈழத்தமிழர் விடயத்திலே கிந்தியாவின் கொள்கை மாறாது. மாறுவதாயின் நந்திக்கடலிலே ஈழத்தமிழரது குருதிவழிந்து அது கிந்தியாவின் கரைகளைத் தொட்டு அதிலே கையலம்பி மகிழும் தலைவிகளாக சோனியாவோ, மன்மோகன்சிங்கியோ இருந்திருக்கமாட்டார்கள். ஏனெனில் அப்போது உலகத் தெருக்கள்முதல் தமிழகம்வரை தினமும் நடக்கும் கொடுமைகளுக்கெதிராகத் தீக்குளிப்பு ஈகம் முதல் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அதாவது வடவர்களுக்கு தமிழரின் அழிவென்பது பெரியவிடயமே இல்லை. அதற்கு எடுத்தகாட்டாகத் தமிழக மீனவரின் கொலை. இது குறித்தே நடவடிக்கை எடுக்காத வடவர்கள் எப்படி எமக்காகத் தமது கொள்கையை ஒரேநாளில் மாற்றிவிடுவார்கள் என்பதை ஏற்கமுடியுமா? ராஜீவின் குடும்பம் அரசியிலில் இருக்கும்வரை தமிழருக்காக எந்த ஒரு துகளையும் நகர்த்தாது என்பதே உண்மையாகும். ஆனால் ஒட்டுமொத்தத் தமிழகமும் சரியாகத் தனது காய்களை நகர்த்துமாயின் நீண்ட முயற்சிகளின் பயனாய் சில மாற்றங்கள் வரலாம். ஆனால் எமது இலக்கினை ஏற்காது என்பது திண்ணம்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு நளினியைச் சந்தித்து விட்டு வந்த பிரியாங்காவின் செய்தியை தமிழக ஊடகங்களில் பாராட்டாக வெளியிட்டு தமிழக தமிழர்களை ஏமாற்றிய சோனியா காங்கிரசின் இன்னுமொரு ஏமாற்று செய்தி.

சென்ற கிழமை வந்த குமுதம் ரிப்போட்டர் பத்திரிகையில்( மார்ச் 29) 13ம் பக்கத்தில் ஒருவிளம்பரம் - பொய்மை தோற்றது உண்மை வென்றது" . தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கை மீதான கண்டன தீர்மானத்தினை ஆதரிக்க முடிவு செய்த பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கும் , தியாகச் சுடர் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கும் தமிழக காங்கிரசின் குரலை ஒலிக்கச் செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அவர்களுக்கும் மத்திய அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எங்களது பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் - அன்புடன் திரு.வி சண்முகம்( உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி) என்று படங்களுடன் ஒரு பக்க விளம்பரம் வந்தது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தமிழக வாக்காளர்களை கவர சோனியா காங்கிரஸ் இப்பொழுதே தயாராகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றவாளிகள் என்று வரும்போது, இந்திய போர்க்குற்றவாளிகள், சிங்களப் போர்க்குற்றவாளிகள் என்ற தளம்பல் நிலை இருக்கக் கூடாது!

எனது பார்வையில், இவர்கள் எல்லோருமே போர்க்குற்றவாளிகள்!

அரசியல் என்பதும், நீதி என்பதும் வேறு வேறானவை!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.