Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடியத் தலைநகரில் - தமிழர்களை நோக்கி அணிவகுத்த கனடியப் பாராளுமன்ற உறுப்பினர்கள்

Featured Replies

ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் றொபேட் இவென்ஸ் அவர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருந்தார். இவர்களோடு, டேவிட் சுந்தா என்ற அரசியலில் கலாநிதிப் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவரும் கலந்து தமது பங்களிப்புகளை வழங்கினர். முன்னைய பதிவில் இவர்களின் பெயர்கள் விடுபட்டு விட்டது. இவர்கள் அனைவருக்குமான செலவுகளை நாடுகடந்த அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டது.

  • Replies 83
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தவறுகளை ஏற்கும் பக்குவம்?? எல்லாவற்றையும் இழந்த பிற்பாடு...

முன்பு உங்களிடம் கதைத்த ஒரு விடயம் தான். மாவீரர் தினம் நடத்துவது தொடர்பான கணக்குவழக்குகள்?? இன்று வரை காட்டிவிட்டார்களா என்ன?? அந்தந்த நேரத்தில் சமாளிப்பதினூடாக மறக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்..

தெரியாமல் தான் கேட்கின்றேன். ஒட்டாவாவிலும், சரி ரொரன்ரோவிலும் சரி செய்த நிகழ்வுகளுக்கு மற்றய அமைப்புக்களுடன் சேர்ந்து நின்று இயங்கும் பக்குவம் உங்களின் கருத்துப்படி வந்திருக்கின்றதா என்ன?? அப்போது எப்படி ஒன்றாக நடந்து செல்லலாம் என எண்ணுகின்றீர்கள்..

நாடு கடந்த அரசின் சார்பில் (செலவில்) இங்கிலாந்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ரையன், சட்டவல்லுநர் கேரன் பார்க்கர், பேராசிரியர்கள் போல் நியூமன், மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு, தமிழர்களுக்கான ஆதரவைத் திரட்டும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்கான அனைத்துச் செலவுகளையும் நாடு கடந்த அரசாங்க உறுப்பினர்களே பொறுப்பெடுத்துக் கொண்டனர்.

அந்த 25,000 டொலர்களும் மக்களின் பணம் என்பதை ஒத்துக் கொள்வீர்களா அகூதா? அந்த 25,000 டொலர்களும் ஐ.நா. மனித உரிமை அவையின் செயற்பாட்டிற்காகத் தான் செலவிடப்பட்டதா?

தூயவன், நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். ஒருவர் மட்டுமே சொல்லும்போது, அது பக்கச்சார்பானதாகப் பார்க்கப்படும். மக்களை விழிப்படையச் செய்வதே இப்போதைய முக்கிய தேவை.

ஐரோப்பிய பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் றொபேட் இவென்ஸ் அவர்களும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டிருந்தார். இவர்களோடு, டேவிட் சுந்தா என்ற அரசியலில் கலாநிதிப் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் மாணவரும் கலந்து தமது பங்களிப்புகளை வழங்கினர். முன்னைய பதிவில் இவர்களின் பெயர்கள் விடுபட்டு விட்டது. இவர்கள் அனைவருக்குமான செலவுகளை நாடுகடந்த அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்த அமைப்புக்கள் யாவும் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு அமைய பதியப்பட்டு மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டன. வருடாந்த பொதுக்கூட்டத்தில் அங்கத்துவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கணக்காளர் நிறுவனத்தால் வரவு - செலவுகள் வெளியிடப்படல் வேண்டும். அதை உறுப்பினர்கள் உறுதி செய்யவேண்டும்.

இவர்கள் செய்வது சரியாக இருக்கும்பட்சத்தில் நாம் ஏன் எதிர்க்கப்போகிறோம்? எமக்குத் தேவை அங்கு வாழும் மக்களுக்கான விடிவு. அதை நோக்கியே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். எமது சுயலாபத்திற்காக அம்மக்கள் வாழும் சூழ்நிலையைப் பயன்படுத்தி எம்மை செம்மைப்படுத்தக்கூடாது. இவர்கள் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் சுயலாபத்திற்கானதாகவே இருக்கிறது. சமீபத்தில் நடத்திய மாநாட்டில்கூட நிதியே முக்கிய குறியாக இருந்ததை மறந்து விட்டீர்களா? அதனைத் தொடர்வதற்கான கண்துடைப்பு நாடகமே நேற்றைய ஆர்ப்பாட்டம்.

தவறுகளை ஏற்கும் பக்குவம்?? எல்லாவற்றையும் இழந்த பிற்பாடு...

முன்பு உங்களிடம் கதைத்த ஒரு விடயம் தான். மாவீரர் தினம் நடத்துவது தொடர்பான கணக்குவழக்குகள்?? இன்று வரை காட்டிவிட்டார்களா என்ன?? அந்தந்த நேரத்தில் சமாளிப்பதினூடாக மறக்க வைப்பதில் வெற்றி கண்டுள்ளார்கள்..

உண்மை. பொதுவாக எல்லா நாடுகளிலும் உள்ள பிரச்சனை இது. பெரும்பாலான மக்கள் யாராவது இந்த புனித நிகழ்வை செய்யவேண்டும் என எதிர்பார்கிறார்களே தவிர கணக்குகளை கேட்பதில் அதிகளவு அக்கறை செலுத்துவதில்லை.

தெரியாமல் தான் கேட்கின்றேன். ஒட்டாவாவிலும், சரி ரொரன்ரோவிலும் சரி செய்த நிகழ்வுகளுக்கு மற்றய அமைப்புக்களுடன் சேர்ந்து நின்று இயங்கும் பக்குவம் உங்களின் கருத்துப்படி வந்திருக்கின்றதா என்ன?? அப்போது எப்படி ஒன்றாக நடந்து செல்லலாம் என எண்ணுகின்றீர்கள்..

இவ்வளவு அழிவுக்கும் பின்னரும் தாயகத்திலும் சரி புலத்திலும் சரி ஏன் இந்த யாழ்க்களத்திலும் கூட நாம் எல்லோரும் ஒரே அலைவரிசையில் குரல் கொடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் தேசியக் கொடியையோ ...கூடுத்லான மாணவர் களையோ காணாதது அதிர்சி தான்...நான் எப்பவுமே தேசியச் சின்னங்களை மதிப்பவன் ..போற்றிப்

பாதுகாப்பவன்.....அவற்றை அங்கு இல்லாமை எனக்கு கவலைதான்...அங்கு பேசிய ..ராதிகா ..ஒற்றுமை எம்மிடையே வேணும் என்று பேசினார்....எதிர் பாராத

பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதையிட்டு ...மகிழ்சி அடைந்தாலும்....கனடா செய்த உதவிக்கு நன்றி செலுத்தினேன் என்ற திருப்தியோடு வீடு

திரும்பினேன்....என்னைப் பொருத்தவரை...கனடாவில்...போட்டிகள் கூடிவிட்டது...இதனால் தேசியத்தை மதிக்கும் என் போன்றோர் ஏமாற்றப் படுகின்றணர்

என்பதே உண்மை....இதற்காக நான் சோர்வடையப் போவதில்லை...என் தலைவனுக்காகவும்...என்னுயிர் போராளிகளுக்காகவும்...உயிர் னீத்த எம்மினத்துக்காகவும்.

உயிரினும் மேலான தமிழ் மொழிக்காகவும் எந்த நிகழ்வு நடந்தாலும் ..என்னுடைய வசதிக் கேற்ப கலந்து கொள்வேன்.....

இவர்கள் செய்வது சரியாக இருக்கும்பட்சத்தில் நாம் ஏன் எதிர்க்கப்போகிறோம்? எமக்குத் தேவை அங்கு வாழும் மக்களுக்கான விடிவு. அதை நோக்கியே எமது செயற்பாடுகள் அமைய வேண்டும். எமது சுயலாபத்திற்காக அம்மக்கள் வாழும் சூழ்நிலையைப் பயன்படுத்தி எம்மை செம்மைப்படுத்தக்கூடாது. இவர்கள் செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் சுயலாபத்திற்கானதாகவே இருக்கிறது. சமீபத்தில் நடத்திய மாநாட்டில்கூட நிதியே முக்கிய குறியாக இருந்ததை மறந்து விட்டீர்களா? அதனைத் தொடர்வதற்கான கண்துடைப்பு நாடகமே நேற்றைய ஆர்ப்பாட்டம்.

நானறிந்தவரையில் அனேகமானோர் நல்ல எண்ணத்துடனேயே செயல்பட வருகின்றனர்.

சுயலாபம் என்பது பொதுவாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டால் அதை விமர்சனம் செய்யலாம் என்பது எனது கருத்து.

நேற்று நடந்தது வித்தியாசமான 'ஆர்ப்பாட்டம்' - கனடாவுக்கு நன்றி தெரிவித்து. மக்களும் பணம் செலுத்தியே சென்றனர் என எண்ணுகின்றேன்.

எனக்கும் தேசியக் கொடியையோ ...கூடுத்லான மாணவர் களையோ காணாதது அதிர்சி தான்...நான் எப்பவுமே தேசியச் சின்னங்களை மதிப்பவன் ..போற்றிப்பாதுகாப்பவன்.....அவற்றை அங்கு இல்லாமை எனக்கு கவலைதான்...அங்கு பேசிய ..ராதிகா ..ஒற்றுமை எம்மிடையே வேணும் என்று பேசினார்....எதிர் பாராதபாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதையிட்டு ...மகிழ்சி அடைந்தாலும்....கனடா செய்த உதவிக்கு நன்றி செலுத்தினேன் என்ற திருப்தியோடு வீடுதிரும்பினேன்....என்னைப் பொருத்தவரை...கனடாவில்...போட்டிகள் கூடிவிட்டது...இதனால் தேசியத்தை மதிக்கும் என் போன்றோர் ஏமாற்றப் படுகின்றணர் என்பதே உண்மை....இதற்காக நான் சோர்வடையப் போவதில்லை...என் தலைவனுக்காகவும்...என்னுயிர் போராளிகளுக்காகவும்...உயிர் னீத்த எம்மினத்துக்காகவும்.

உயிரினும் மேலான தமிழ் மொழிக்காகவும் எந்த நிகழ்வு நடந்தாலும் ..என்னுடைய வசதிக் கேற்ப கலந்து கொள்வேன்.....

அல்வாயன்,

எமக்குள் இருக்கும் பிரச்சனைகளையும் மீறி நாம் ஆவது ஐ.நா. மனித உரிமை தொடரில் எமக்கு சாதகமாக ஒரு நிலையை சர்வதேசம் எடுக்கவேண்டும் என்ற இலக்கை நோக்கி நகரவேண்டியவர்களாக உள்ளோம். இது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

எமக்கென ஒரு அரசியல் தீர்வை பெறுவதன் மூலம் மட்டுமே நாளைய தலைமுறை தாயகத்தில் வாழ வழிசமைக்கலாம். அதற்கு இப்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதே நன்மை தரும் என நம்புகிறேன்.

நன்றிகள்.

அகூதா, நீங்கள் அவதாராக வைத்திருக்கும் நாடகத்தின் கணக்கு காட்டப்பட்டு விட்டதா? அந்த கணக்கு விபரங்களை மக்கள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் நேற்றைய ஆர்ப்பாட்டம்.

ஒன்றும் செய்யாமல் விளம்பரம் செய்வதை எதிர்க்கலாம். பரிகசிக்கலாம். செய்வதை விளம்பரப்படுத்துவது எனக்கு ஒன்றும் தவறாகப் படவில்லை. செய்வதை விளம்பரப்படுத்தாமல் மற்றவர்களை எப்படி செயற்படத் தூண்டுவது அல்லது செயற்பாட்டில் இணைப்பது? ஒன்றுமே செய்யாமல் இருக்கும் எத்தனையோ ஆயிரம் ஈழத்தமிழர்களை விட எந்த இடத்தில் தன்னால் முடிந்ததை செய்ய நினைப்பவர் குறைந்துபோயுள்ளார்? செயற்பாட்டில் இருப்பவர்களையும் விளம்பரத்துக்காக செய்கிறார்கள், பதவிக்காக செய்கிறார்கள், சுயலாபத்திற்காக செய்கிறார்கள் என்று சொல்லி அவர்களைச் சோர்வடையச்செய்து செயற்பாட்டிலிருந்து ஒதுக்கி என்ன செய்யப்போகிறோம்?

தூயவன் சொல்லும் சில கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை இங்குள்ள எந்த அமைப்பும் நூறுசதவீதம் நேர்மையானவை என்று சொல்லமுடியாது. யார் உண்மையானவர்கள் யார் பொய்யானவர்கள் என்ற தெளிவில்லாத நிலையில் நாம் செய்யக்கூடியது அமைப்புகளை பார்க்காமல் அவர்களின் செயற்பாடுகளை விமர்சிப்பது. நல்லவையென்றால் ஊக்குவிப்பதும் எமது நலன்களுக்கு எதிரானவையென்றால் கண்டிப்பதும்தான் நாம் இப்பொழுது செய்யக்கூடியது. அந்தவகையில் இப்பொழுது நடந்த இந்த நன்றிகூறும் ஒன்றுகூடல் ஒரு காத்திரமான முன்னெடுப்பே!

Edited by அறிவன்

அகூதா, நீங்கள் அவதாராக வைத்திருக்கும் நாடகத்தின் கணக்கு காட்டப்பட்டு விட்டதா? அந்த கணக்கு விபரங்களை மக்கள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் நேற்றைய ஆர்ப்பாட்டம்.

அறிந்து இன்னும் ஆறு நாட்களுக்குள் உங்களுக்கு தனிப்பட்ட மடலில் தெரிவிக்கிறேன்.

அகூதா, நீங்கள் அவதாராக வைத்திருக்கும் நாடகத்தின் கணக்கு காட்டப்பட்டு விட்டதா? அந்த கணக்கு விபரங்களை மக்கள் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் நேற்றைய ஆர்ப்பாட்டம்.

நானறிந்தவரையில் இந்த நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்து. நன்கொடை வாங்கினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தநிகழ்வின் கணக்கு ஏன் மக்களுக்கு காட்டப்படவேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா

நீங்கள் அவர்கள் சார்பாகப் பதிலளிக்கின்றீர்கள் என்றால் முழுமையான பதிலாகத் தர வேண்டும். இல்லை, எனக்குச் சம்பந்தமில்லை என்பதில் விட்டு விட வேண்டும். நழுவுகின்ற மீனாகவே உங்களின் பதில் தென்படுகின்றது.

--------

எல்லா அமைப்புகளிலும் உண்மையான உணர்வாளர்களும் தேசியத்தை முழுமையாக நேசிப்பவர்களும் இருக்கின்றார்கள். அதை உணர்ந்துகொள்ளாமல் அவர்கள் செய்கிறார்கள் என்று சொல்லி நீங்களும் ஒரு அமைப்பையே தாக்குவது எந்தவகையில் எமது போராட்டத்தை முன்னகர்த்தப்போகின்றது என்பது எனக்குத் தெரியவில்லை.

நானறிந்தவரையில் இந்த நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்து. நன்கொடை வாங்கினார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இந்தநிகழ்வின் கணக்கு ஏன் மக்களுக்கு காட்டப்படவேண்டும் என்று எனக்கு விளங்கவில்லை.

உண்மை, ஆனால்:

காரணம் ஒன்று: மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பகிரங்கமான அமைப்பு

காரணம் இரண்டு : நமபத்தன்மையை வளர்க்கும். தேவையில்லாத சந்தேகங்களை தவிர்க்க உதவும்.

இது பாரிய செலவில் நடாத்தப்பட்ட நிகழ்வு என்பதால் முழு கணக்கு வழக்குகளையும் முடிப்பது சில மாதங்களே எடுக்கலாம். ஆனால், முடிப்பது அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு கொடி பிடித்தல் தொடர்பான கேள்வியில் இருந்து திசை திருப்பப்பட்டள்ளது....

அகூதா

நீங்கள் அவர்கள் சார்பாகப் பதிலளிக்கின்றீர்கள் என்றால் முழுமையான பதிலாகத் தர வேண்டும். இல்லை, எனக்குச் சம்பந்தமில்லை என்பதில் விட்டு விட வேண்டும். நழுவுகின்ற மீனாகவே உங்களின் பதில் தென்படுகின்றது. --------

அவர்கள் சார்பாக பதிலளிக்க எனக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் இங்குள்ள சகல அமைப்புக்களுடனும் வெளிப்படையாக ஆதரவையும் உள்ளக தொடர்புகளையும் கொண்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Gary Anandasangaree Legal Counsel for Canadian Tamil Congress (CTC) on behalf of Lawyers Rights Watch Canada (LRWC) made the following intervention at the UN Human Rights Council meeting today (March 2nd 2012) after the Sri Lankan government's permanent representative to the UN made her statement.

http://www.canadiant...=eng&cat=&id=34

ஆமாம். வாணி என்பவரும் வழக்கறிஞர் சபை ஊடாகத் தான் சென்றிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா...நீங்கள் என் பெயர் குறிப்பிட்டு சொன்ன கருத்தை நான் ஆதரிக்கின்றேன்...எம்மினத்திற்கு விடிவு வரும்வரை என்னால் ஆன பங்களிப்பை எந்த இடத்திலும்

என் வசதிக்கு ஏற்ப செய்ய தயாராக உள்ளேன்....அதற்காக இங்குள்ள எந்த அமைப்பையும் சார்ந்து நிற்க விரும்பவில்லை....நம்பிக்கையும் கிடையாது....என் தேசத்தின்

விடிவே என்னுடைய இலட்சியம்....தலைவன் என்னுடைய கட்வுள்....

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டாவா நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை. இதைத் தானே யுத்தம் நடக்கும்போது பலர் சொன்னார்கள். கொடியே பிடிக்காதீர்கள். வெளியில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரமாட்டார்கள் என்று. அன்று கவனயீர்ப்பு எதற்காகச் செய்தோம்?? வன்னியில் மக்கள் படுகொலையைத் தடுப்பதற்காகத் தானே?? அப்போது ஞான உதயம் வரவில்லையா? இன்று அகூதா கற்பிக்கின்ற நியாயம் உற்பட, பல விடயங்களைப் பிறர் சொன்னார்கள். அவர்களை இவர்கள் வர்ணித்த விதம் எப்படியா??உலகத் தமிழர் தடை செய்யப்பட்டபோது, குறித்த பிரிதொரு அமைப்பின் அலுவலகத்தில் தான் இவர்கள் கூட்டங்கள் வைத்தார்கள். அன்று, அந்த அமைப்பு, கொடி பிடிக்க வேண்டாம். மக்களைக் காப்பாற்றுவோம் என்று சொன்னதற்காக, அந்த அமைப்பின் அலுவலகத்தில் இவர்கள் அலுவலக நேரத்தில் பிற்பாடு கால் வைத்ததில்லை.( அலுவலக நேரம் என்று சொன்னது புரியவில்லை எனில் தனிமடல் போடுங்கள்.)உண்மையில் நேற்றுத் தான் கொடி பிடித்திருக்க வேண்டும். யார், இதற்கு நன்றி சொல்கின்றார்கள் என்பதைக் காட்டுவதற்காக.... யார் குத்தினாலும் அரிசியானச் சரி எனலாம். ஆனால் இவர்கள் குத்துவது கொஞ்ச். வீணாக்குவது பல மடங்கு!!

மிகச்சரியான கேள்வி..! இங்கே சில நிகழ்வுகளைத் தரவாக முன்வைக்கிறேன்..!

  • மக்கள் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் எவரும் எட்டிப்பார்க்கவில்லை.
  • ஒரு நாள் கொடியில்லாமலும் ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தனர். கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் எவரும் எட்டிப்பார்க்கவில்லை.
  • மறைந்த ஜாக் லெய்ட்டன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வந்து பேசிவிட்டுப் போனார்.
  • அமெரிக்கா போரை நிறுத்த இலங்கையை இறுதிநேரத்தில் வற்புறுத்தியது.
  • சிவசங்கர் மேனர் ஓடிச் சென்று இம்முயற்சியைத் தடுத்தார்.

மக்கள் போராட்டம் நடைபெற்றது போரை நிறுத்தவே.. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் தெரிந்ததே.. ஆனால் கொடி பிடித்திருந்தாலும் பிடித்திராவிட்டாலும் மேனன் அஎரிக்காவின் முயற்சியைத் தடுத்தேதான் இருப்பார் என்பது இப்போது தெரியவருகிறது..

அன்று அவர்கள் கொடி பிடிக்காதே என்று சொல்லும்போது எமக்காக எதையும் தந்துவிட்டுக் கேட்கவில்லை..! தடைகளை மட்டுமே போட்டார்கள்..!

இன்று சர்வதேச அளவில் சில மாற்றங்களைக் கொண்டுவந்து எமக்கான சமிக்கைகள் தென்படும்போது, நாமும் சிறிது நெருங்கி வருதல் நன்மையே..! :rolleyes:

இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே..! யாழுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் கொடி இல்லாமல் என்பதை முழுமையாக ஏற்கமுடியவில்லை. அங்கே கொடி இடையிடையே தூக்கிப் பிடிக்கப்பட்டதும், பின்னர் பலத்த இழுபறி, வாக்குவாதம் நடந்ததும் உண்மை. ஒரே மக்கள், கொடியோடு நின்றார்கள். அதே மக்கள் அடுத்தநாள் கொடி இல்லாமல் நின்றார்கள். எவ்வகையான மாற்றத்தை இதில் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தி விடப் போகின்றது.

இதே இந்தியா அன்று அமெரிக்காவின் முயற்சியைத் தடுத்தது என்கின்றீர்கள். இன்றும் பின்னுக்கு நின்று அமெரிக்காவின் பிரேரணையை மலினப்படுத்த முயன்றதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. அப்படி எனில் இது பிரியோசமில்லை என்கின்றீர்களா?

உங்களுக்குப் புரிய வைக்க்ககூடியது இது தான். கொடி பிடிக்காவிடின் வாய்ப்புக் கிடைக்கும் என அன்று சொன்னபோது, அதைத் துரோகம் என்று வாதாடியவர்கள், இன்று கொடியில்லாமல் நிற்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?? அதைச் சாட்டி, எத்தனை பேரை நிகழ்வுகளில் இருந்தும், சமூகத்தில் இருந்தும் ஒதுங்க வைத்தார்கள்.

----------------

முதலவாதாக ஒட்டவாவாவில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், வன்னிச் சங்கம் சார்ந்த கூட்டமைப்பாக இருக்கலாம். அன்று அவர்கள் கொடி பிடிக்கவில்லை. வீதியில் இறங்கவுமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.