Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் இருந்து தப்பியோட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

index.jpg

லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவின் “தி கார்டியன்“ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55ஆவது டிவிசனுக்கும், 59ஆவது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்குற்றம் இழைத்த இவர் மீது பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரவை கோரியுள்ளது.

போர்க்குற்றங்களுக்கு காரணமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, லண்டனின் குடும்பத்தினருடன் தங்கியுள்ள போதும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்கு எதிராக, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்கிக்கு எதிராக உலகத் தமிழர் பேரவை சட்ட நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளது.

அத்துடன் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனு ஒன்று ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையிடமும் கையளிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஈஸ்டர் காலம் என்பதால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இரண்டு வாரங்களாகும் என்று சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், பிரித்தானியாவில் தாம் விசாரிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தினால், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா லண்டனில் இருந்து விரைவில் வெளியேறவுள்ளார்.

இதுகுறித்து அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் 18 மாதகால பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில் அவர் நாடு திரும்பவுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கமான மாற்றத்துக்கும் உலகத் தமிழர் பேரவையின் சட்டநடவடிக்கைக்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.vannionli...g-post_278.html

தோற்றவர்கள்தான் விரட்டப்படுவார்களென்றால் இவர்கள் வென்றவர்களாம். ஏன் விரட்டப்பட வேண்டும்? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவருடைய குடும்ப கூத்துகளுக்கு மாதம் இருபதாயிரம் பவுண்ட்ஸ். 

ஜெனோசைட் புரபசர், இதை பற்றி எழுதமாட்டாரா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டா ...... முள்ளிவாக்காலில் இறந்த எங்கள் உறவுகளின் சாபம் சும்மா விடுமா ?

தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் கை எடுத்து வணங்கும் தெய்வங்கள் நீங்கள் செய்த கொலைக் குற்றத்துக்கு தண்டனை கட்டாயம் வழங்கியே தீர்வார்.

தர்மம் என்னும் சாகவில்லை !

545951_2590317096260_1804594262_1581899_670128003_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்டா ...... முள்ளிவாக்காலில் இறந்த எங்கள் உறவுகளின் சாபம் சும்மா விடுமா ?

தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் கை எடுத்து வணங்கும் தெய்வங்கள் நீங்கள் செய்த கொலைக் குற்றத்துக்கு தண்டனை கட்டாயம் வழங்கியே தீர்வார்.

தர்மம் என்னும் சாகவில்லை !

அதே தெய்வங்கள் முள்ளிவாய்க்காலில் எமது இனம் அழிக்கப்பட்ட போது வெள்ளி பார்த்துக் கொண்டிருந்ததா?.

அதே தெய்வங்கள் முள்ளிவாய்க்காலில் எமது இனம் அழிக்கப்பட்ட போது வெள்ளி பார்த்துக் கொண்டிருந்ததா?.

அது ஏன் புதனைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அது ஏன் புதனைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது? :rolleyes:

வெள்ளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும் :D

அது ஏன் புதனைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது? :rolleyes:

வெள்ளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும் :D

வெள்ளி என்பது நட்சத்திரத்தையும் குறிக்கும் :D

சில நாட்களாக நீங்கள் போடும் கருத்துக்கள் இருமுறை பதியப்படுகின்றது ? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.