Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவையும், அதன் தேசிய விமான சேவையையும் புறக்கணிக்கும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

srilankan-airlines.jpg

நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது.

செலவுகளைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பயணிகளுக்கான உணவு வசதிகளை குறைக்கவுள்ளதாக சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“ஆசனப்பதிவுகள் குறைந்து போனதால், லண்டன் உள்ளிட்ட ஐரோப்பாவுக்கான பல பயணத் திட்டங்களை நாம் நிறுத்தியுள்ளோம்.

முன்னர் வாரத்தில் 12 சேவைகளை நடத்தி வந்தோம் தற்போது அது 7 சேவைகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவும் குறைக்கப்பட்டுள்ளன.

உதாரணத்துக்கு கொழும்பு- சென்னை - கொழும்பு விமானப் பயணத்தின் போது முன்னர், மதுசாரம் அடங்கிய அல்லது மதுசாரம் இல்லாத பானங்களுடன் சூடான முழுமையான உணவு வழங்கப்பட்டது.

ஆனால் தற்போது ஒரேயொரு சிற்றுண்டியும், கேட்டால் மட்டும் பானமும் வழங்கப்படுகிறது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் இருந்து சிறிலங்காவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறியளவு சரிவு காணப்பட்டது.

ஆனால் தூரகிழக்கு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமான சேவையின் ஆசனப்பதிவுக்கான கேள்வி திடீரெனக் குறைந்து, அதன் சேவைகளும் வசதிகளும் மட்டுப்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவையும், சிறிலங்காவின் தேசிய விமான சேவையையும் புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

http://www.puthinapp...?20120412105981

பொதுவாகவே விமான சேவைகள் அதிகளவு இலாபம் தரும் முதலீடு இல்லை. அத்துடன் உலகப்பொருளாதாரம் சரிந்து வருதல், சிங்களத்தின் ஊழல் மற்றும் எமிரேட்ஸ் விமான சேவையின் முதலீடு என்பன சிங்கள விமான சேவையை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லும். புலம்பெயர் தமிழரும் புறக்கணித்தால் அந்நாள் விரைவில் வரும்.

புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிப்பார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிப்பார்களா?

இலவச மதுசாரம் இல்லை என்றவுடனையே புறகணிப்பு போராட்டம் தொடங்கிவிட்டதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் இருக்கும் எம்மவர்கள் பலர் 2009க்கு பிறகு விழுந்தடிச்சு சுற்றுலா சென்றார்கள். கனகாலம் தாயகத்தினைப் பார்க்காததினால் உறவுகளைப் பார்க்க 2009,2010ல் சென்றார்கள். தாயகத்தினைப் பார்த்தாச்சு தானே ,அடிக்கடி போக காசும் தேவை என்று போகிற சனத்தின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

srilankan-airlines.jpg

நட்டத்தில் இயங்கும் சிறிலங்காவின் தேசிய விமான சேவையான சிறிலங்கன் எயர்லைன்ஸ், ஐரோப்பாவுக்கான தனது சேவைகளையும் விமானத்தில் வழங்கப்படும் பயணிகளுக்கான வசதிகளையும் குறைப்பதாக அறிவித்துள்ளது.

......................................................................................................................................

........................................................................................................................................................................

...........................................................

......................................................................................................................................

........................................................................................................................................................................

...........................................................

இது, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவையும், சிறிலங்காவின் தேசிய விமான சேவையையும் புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

http://www.puthinapp...?20120412105981

இப்பிடியுமா யோசிப்பிங்க? ..........

பாவமையா வாசகர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் இருக்கும் எம்மவர்கள் பலர் 2009க்கு பிறகு விழுந்தடிச்சு சுற்றுலா சென்றார்கள். கனகாலம் தாயகத்தினைப் பார்க்காததினால் உறவுகளைப் பார்க்க 2009,2010ல் சென்றார்கள். தாயகத்தினைப் பார்த்தாச்சு தானே ,அடிக்கடி போக காசும் தேவை என்று போகிற சனத்தின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

இதுதான் உண்மை

போனவர்கள் காசுகளை அள்ளி எறிந்து முறிந்து போய் தற்போது ஒழித்துவிட்டார்கள் :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பாவில் இருக்கும் எம்மவர்கள் பலர் 2009க்கு பிறகு விழுந்தடிச்சு சுற்றுலா சென்றார்கள். கனகாலம் தாயகத்தினைப் பார்க்காததினால் உறவுகளைப் பார்க்க 2009,2010ல் சென்றார்கள். தாயகத்தினைப் பார்த்தாச்சு தானே ,அடிக்கடி போக காசும் தேவை என்று போகிற சனத்தின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.

உண்மைதான்,

கந்தப்பு சேர்த்து வைத்த காசையெல்லாம் முடிச்சாச்சு ............... திரும்பத்திரும்ப போவதற்கு காசுக்கு எங்கு போறது

2009 இன் பின்னர் ஸ்ரீலங்கா சென்றவர்கள் பெரும்பாலானோர் வெளிநாடு வந்ததற்கு எப்போதும் ஸ்ரீலங்கா போகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இன்னொரு உண்மையும் இருக்கு

தாயகத்தை உண்மையில் நேசித்தவர்கள் சமாதான காலத்தில் ஊருக்கு போனார்கள். உண்மையான தாயகத்தையும் போராளிகளையும் தரிசித்தார்கள்.

அதை வேடிக்கை பார்த்தவர்களும் வெறுத்தவர்களும் 2009 க்கு பின் போனவர்களில் அடங்குவர்.

நீங்கள் சொல்வது 100 வீதம் உண்மை,

இவர்களில் சிலர் புலிகள் எப்படா இல்லாது போவார்கள் என்று பார்த்து காத்துகிடந்து, ஸ்ரீலங்கா போனார்கள் காரணம் ஊரில் இருந்து வெளிநாடு வரும்போது அங்குள்ள மக்களுக்கு ஏதாவது துரோகம் செய்து போட்டு வந்து............. தாங்கள் நல்லவர்களாகவும் புலிகள் கொடியவர்கலாகவும் சொல்லிக்கொண்டு இருந்தவர்கள்................... அதிலும் சிலர் அமைதியாக இருந்து கருவறுத்தவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.