Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜெயலலிதாவின் முடிவினால் புதுடில்லி அதிர்ச்சி - கடைசி நேரத்தில் குழுவின பயணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

JAYALALITHA150DD.jpg

இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள இந்தியா நாடாளுமன்றக் குழுவில் இருந்து அதிமுக திடீரென விலகிக் கொண்டது, புதுடெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தக் குழுவின் பயணம் தொடர்பான முடிவில் மாற்றம் ஏற்படலாம் என்று இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் போருக்குப் பிந்திய சூழ்நிலைகள் குறித்து அறிந்து வருவதற்காக, அனைத்துக்கட்சி குழுவை அனுப்ப இந்திய அரசு அண்மையில் எடுத்திருந்தது. இதன்படி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வரும் 16ம் நாள் இலங்கை செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த குழு அமைக்கப்பட்டதிலேயே பல்வேறு குழப்பங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குழுவில் யார், யார் இடம்பெறுவர் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதிகாரபூர்வமாக பெயர்கள் வெளியிடப்படா விட்டாலும், கடந்தவாரமே சில பெயர்கள் கசிந்தன.

பொதுவாக இலங்கை குறித்த பிரச்சினைகளை, தீவிரமாக கையிலெடுத்து, ஆணித்தரமாக குரல் எழுப்பும் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றால் நாடாளுமன்ற கீழவையில் கணேசமூர்த்தி மற்றும் மேலவையில் டி. ராஜா போன்றவர்கள் தான். ஆனால், இவர்கள் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை.

நாடாளுமன்ற அமைச்சகத்தில், இதுபற்றி அவர்கள் கேட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதாக பதில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால், கடந்தமுறை இலங்கை சென்ற குழுவில் திருமாவளவனுக்கு, எந்த அடிப்படையில் இடம் கிடைத்தது என்ற கேள்விக்கு பதில் இல்லை.

காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐந்து பேரில் நான்கு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள். பா.ஜ.க சார்பில் இலங்கை விவகாரங்கள் குறித்து ஓரளவு தெளிவாக புரிந்து வைத்திருப்பவரும், இந்த விடயத்தை அந்தக் கட்சி சார்பில் கையாண்டு வருபவரும் வெங்கையா நாயுடு தான்.

இலங்கை விவகாரங்களுக்கு பா.ஜ.கவில் பொறுப்பு வகிப்பவர் யஸ்வந்த் சின்கா. இவர்களுக்கு இடம் அளிக்காமல் பல்பீர்புஞ்ச் என்பவர் செல்லவுள்ளார். இலங்கை பிரச்சினையில் வடமாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதிகளவில் ஆர்வம் காட்டியதில்லை.

ஆனால், அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். nஇந்தக் குழுவின் அதிகாரபூர்வ நிகழ்ச்சி நிரல்களும் கூட, இலங்கை அரசாங்கத்தின் விருப்பதிற்கு ஏற்ற வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

மீள் குடியேற்றத்திற்காக, இந்தியா வழங்கிய, 500 கோடி ரூபா பற்றியும், அதன் செலவு குறித்தும் ஆராய்வதே, இந்தக் குழுவின் மையமாக வைக்கப்பட்டுள்ளது.

முள்வேலி முகாம்களில் உள்ள தமிழர்களை சந்திப்பதோ, சிங்கள குடியேற்றங்கள் பற்றியோ, தமிழர்கள் பகுதிகளில் நடக்கும் திடீர் தாக்குதல்கள் பற்றியோ, அரசியல் தீர்வு பற்றியோ, அங்குள்ள தமிழ்க்கட்சிகளை சந்தித்து ஆலோசிப்பதோ பற்றியெல்லாம் இந்த குழுவின் பயணத் திட்டத்தில் எதுவும் இல்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு சங்கடம் அளிக்கும், எந்த விடயத்தையும் உள்ளடக்காத வகையிலேயே இந்தப் பயணத் திட்டம் தயாராகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான், தனது கட்சி இந்தக் குழுவில் இடம்பெற நாடாளுமன்ற உறுப்பினர் ரபி பெர்னார்ட் பெயரை அளித்திருந்த தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா, திடீரென விலக்கிக் கொண்டு விட்டார்.

இது இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள பிற கட்சிகளுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, நேற்று புதுடெல்லியில் தகவலறிந்த வட்டாரங்கள் கூறும்போது, இலங்கைக்கு குழு செல்லும் விடயத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகின்றன.

எனவே கடைசி நேரத்தில் குழு பயணம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை என்றன.

http://www.seithy.co...&language=tamil

கவலை பட வேண்டாம் . இன்னும் இரண்டு வருடம் கழித்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது போல இருக்கிறது . அப்போது அம்மா கை ஓங்கினால் மிகப்பெரிய ஆப்பு காங்கிரஸ் கட்சிக்கும் இலங்கை அரசுக்கும் காத்து இருக்கு.

சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி ரீவைண்ட் ப்ளீஸ்

((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

நான் கை காட்டும் ஆட்சி அமைந்தால் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ் ஈழம் அமைப்பேன்---- அம்மா .

வெளி நாடுகளுக்கு ராணுவத்தை எந்த அடிப்படையில் அனுப்புவேன் என்று கூறுகிறார் என புரியவில்லை, அது நடக்காது ----கபில் சிபல்,

இந்திரா காந்தி எந்த அடிப்படையில் பங்களாதேசிற்கு அனுப்பினாரோ அந்த அடிப்படையில் அனுப்புவேன் - அம்மா

))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு ............ வரவேற்க தக்கது !

என்னை பொறுத்தவரையில் கலைஞரும் ஜெயலலிதாவும் ஈழ தமிழர் விடயத்தில் ஒன்றுதான்,

இப்போது ஜெயலலிதாவின் எடுக்கும் முடிவுகளை பார்க்கும் சற்று மாறுதல் தெரிகின்றது ................ பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். :)

நீண்ட காலத்தின் பின்னரேயே மேற்கொள்ளப்பட்ட இப்பயணத்திற்கு, உண்மையில் இலங்கை அரசு சம்மதித்ததன் காரணங்கள் புதியவையாகும்.

அண்மைக்காலமாக இலங்கை அரசிற்கு அமெரிக்கா உட்பட மேற்குலகம் அறிக்கை அழுத்தத்திலிருந்து, நடைமுறை அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கி இருந்தது. இந்நிலையில் இவ்வழுத்தங்களை சிறியளவாவது தணிப்பதற்காகவே இலங்கை ஜனாதிபதி இதற்கு சம்மதித்திருந்தார். இந்தியாவிலிருந்து ஒரு சர்வகட்சி நாடாளுமன்றக் குழு இலங்கைக்கு வருகின்றபோது, அவர்களின் பயண நிகழ்ச்சி நிரல்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து சாதகமான விடயங்களை மாத்திரம் அவர்களுக்கு காட்டி, அதன் மூலம் சாதகமான அறிக்கை ஒன்றினை அவர்கள் மூலம் விடச் செய்யலாம் எனக் கருதியே இதற்கான சம்மதத்தினை அவர் தெரிவித்திருந்தார்.

இந்த முடிவினை இவர் தனித்து எடுக்காமல் இந்திய உளவுப்பிரிவுடன் இணைந்து எடுத்திருப்பதற்கே வாய்ப்புகள் உண்டு.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=100922

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவின் நீண்ட கால பிரதமர் ஆசைக்கு நாம் உதவலாம்.  

கொங்கிரஸ் இந்த முறை எவ்வளவு ஊழல் செய்து வெல்லுமோ?

சிதம்பரம் கடைசி தேர்தலில் வெண்டவனா?  கள்ள நரிகள். 

தமிழகமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா டெல்கிக்கு நல்ல அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.

அதன் விளைவுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

முதலமைச்சர் பதவியில் ஜெயலலிதா வந்ததன் பின் எடுக்கும் சில முடிபுகள் ... குறிப்பாக எமது பிரட்சனை தொடர்பாக ... இந்திய மத்திய அரசு, இதுவரை காலமும் கருணாநிதியை வைத்து நடத்திய நாடகங்களை, நடாத்த முடியாத நிலை ! ? .... தொடர்ந்து உறுதியாக இருப்பார் என நம்புவோம்! ... நம்பிக்கையே வாழ்க்கை!

580481_2975312108179_1423116401_32386562_517901370_n.jpg

ஜெயலலிதா அம்மையாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல தலைவர்களிடமிருந்தும் தடுமாற்றமும், குழப்பமும் நிறைந்த பதில்கள் வரவிருக்கிறது. எல்லாமே இன்னமும் "ட்றாப் மோட்"த்தான் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம். சினீக் ப்றிவூவில் பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். ஃபைனல் டறாப்டில் திருத்தப்படும்.

"தமிழர்களின் தலைமை பதவிக்காக தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்த இந்த தானைத்தலைவன், இலங்கைத் தமிழ் உடன்பிறப்புக்களுக்காக கடற்கரையில் உண்ணாவிரமிருந்தபோது வாடை என்னும் காற்று வந்து வாட்டிட வாடியவன், முள்ளிவாய்க்காலில் சிங்களம் வென்றபோது வற்றாத காண்ணீரை சிந்தியவன் இந்த கருணாநிதி. அவனுக்கு இதுவரையில் யாரும் ஒரு தடவை கண்களைத்துடைத்து விடவில்லை. அம்மையார் இப்போதுதான் காங்கிரசுடன் கருணாநிதி சேர்ந்து கண்துடைப்பதாக கூறுகிறா. நாம் முள்ளிவாய்க்காலில் கண்ணீர் சிந்திய தமிழர் கண்களையா துடைப்பு செய்கிறோம்? ஆனந்த கண்ணீர் விடும் சிங்களத்தின் கண்களை அல்லவா துடைத்துவிடுகிறோம். இதை குற்றம் என்னும் அ.தி.மு.க தலைவிக்கு அடுத்த தேர்தலில் தமிழ்மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். ஏன் எனில் நாம் காங்கிரசுடன் சேர்ந்து இலங்கையின் வரவேற்பை ஏற்று இலங்கை செல்வதாக அவர் கூறியது தப்பு. இலங்கை அழைக்காமலேதான் கனிமொழி போய் அதிபர் ராசபக்சாவுக்கு பரிசில்கள் கொடுத்தார் என்பது எல்லோருக்கும் நினைவில் இருக்கிறது. நாம் காங்கிரசுடன் கூட்டுவைக்க எனக்கு என்ன பைத்தியமா?"

குறிப்பு: யாருக்காவது மேலே தயாரிப்பில் இருக்கும் தலைவர் கருணாநிதியின் பதில் விளங்காவிட்டால் பொறுமை காக்கவும். தயாரித்து வெளிவிட்டபின், ஊடகவியலாரின் கேள்விகளுக்கு தலைவர் பதில் அளிப்பார்.

பொன்சேக்காவும் பதில் தாயரித்துக்கொண்டிருக்கிறார்." நான் நாட்டுக்கு எவ்வளவு பெரிய சேவை செய்தனான் என்பதை எனக்கு மகிந்தா தரும் இலவச உணவிலும், உடுப்பிலும் இருந்து எல்லாரும் ஊகித்து கொள்ளாம். ஆனாலும் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் பகிடிகளும், அதிடரடி அரசியல் stun show க்களும் என்னை இங்கே தமாஷாக பொழுது போக்க வைத்திருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது."

சம்பிக்கவினதை பார்த்தவர்கள் இதைத்தான் சொன்னார்கள். "இந்தியாவின் இலங்கையை கைப்பற்றும் திருட்டு திட்டமாக சுஸ்மா மடி நிறைய யுறேனியம் கடத்திவர முயற்சிப்பதாக அறிகிறோம். பலதடவைகள் JVP யின் ஆர்ப்பாட்டங்களை வெற்றிகரமாக தண்ணீர் பாச்சி அடித்து விரட்டிய எமது தீ அணப்புப்படை எதற்கும் தயாராக இருக்கிறது. இவரை நாம் பறக்கும் விமானத்தில் வைத்தே சோதித்து தெரிந்து கொள்வோம். அதற்காக வேண்டிய ஆளணிகளும், சோதனைக்கருவிகளும் மன்னார் கடல் கரைக்கு அனுப்பபட்டுவிட்டது "

விமல் வீரவன்சாவை ஊடகவியலார் கேட்டபோது "நான் கிங்ஸ் பியர் குடிப்பதில்லை, அதில் கிக் இல்லை. கல்லோயா இரட்டை வடிப்பில் நாடு இறக்குமதியை தவிர்க்கிறது " என்று கூறினார். மேலும் "பஸ்மதியோ, சம்பாவோ சாப்பிடுவது நானில்லை, அது புலம்பெயர் தமிழ் புலிகள் மட்டும்தான். நான் சாப்பிடுவது சைனாவின் ஜாஸ்மீன் ரைஸ் " என்றார். ஊடகவியாலார், தாங்கள் கேட்பது இந்திய பாராளுமன்றக்குழுவை பற்றியல்லவா என்று நினைவூட்டிய போது, "நான் கட்டுமான மந்திரி மட்டுமே, பசில்தான் பொருளாதார, சுற்றுலா மந்திரி என்று அதிரடியாககூறி நிறுத்திவிட்டார்.

வழக்கு சம்பந்தமாக டெல்கி பறக்கவிருந்த கனிமொழியிடம் 2G பற்றிக்கேட்ட போது "என்னையா இதெல்லாம் இப்போ மினிஸ்கூல் ஆகப்போய்விட்டது. இப்போது நாம் 4G2 க்குபோய்விட்டோம்" என்றார். டெல்கியா, கொழும்முவா flight போகுது என்று கேட்டதற்கு. "இளங்ககோவனின் நாக்கை பிடிங்கிவிட்டேன். எதற்கும் பயப்படாதீர்கள். அவர் வந்து கண்டது எதையுமே சொல்ல முடியாது" என்று கையைக் காட்டிவிட்டு பிளைபண்ணிவிட்டார்.

மீரா பாரதி - பகல் மீட்டிங்குக்கு போனவர். மீட்டிங்குக்கு போன எல்லாப்பெண்களும் வெளியே வந்துவிட்டார்களாம். ஆனாலும் "றூம்சேர்விஸ்" இன்னமும் "எம்டி பொட்டில்ஸ்"யை கிளின் பண்ணவில்லையாம். எல்லாம் கையளித்தபின்னர்தான் வெளியில் வந்து கருத்து கூறுவாராம்.

கோபத்தபையாவின் பேச்சுகளை பதிந்த அமெரிக்க தூதரகத்திற்கு இன்று வேலைக்கு போய்வந்த அலுவலக தொழிலாளிகள் பேசிக்கொண்டது "காரியவாசம், எனக்கு சுஸ்மாவை, குழந்தையாக இருந்தபோது தாய்தகப்பன் அழைத்த செல்லப்பெயர், பள்ளியில் சகமாணவர்கள் தெளித்த பட்டபெயர்கள், ஆபிஸ் "ஸோட் நேம்ஸ்", காதலனின் அன்புப் பெயர், பத்திரிகைகளில் வரும் பட்டப்பெயர்கள்,....................., எல்லாம் 12 மணித்தியாலங்களுக்குள் வேண்டும்" என்று கண்டிப்பாக கட்டளையிட்டிருக்கிறாராம். அவரின் அறிக்கை, பெயர்களின் விபரம் வந்தபின் தான் தயாராகுமாம்.

கோத்தாவின்ரை ஆயத்தமில்லை என்றால் நீங்கள் மகிந்தவின்ரைக்கு என்ன நடந்தது என்று கேட்க போகிறீர்கள். மகிந்தா சுஸ்மாவிக்கு பால் ***(பொங்கல்) கொடுப்பதற்ககா"அழுத்தவுறுதை" எப்படி டிலே பண்ணமுடியும் என்று ஆராய தேரர்களை அலரி மாளிக்கைக்கு அழைத்திருந்தார். அவர்கள் வந்து சேர்ந்துவிட்டர்கள். ஆனால் யார், யாரின் காலில் விழுந்து கும்பிடுவது என்பதில் இழுபறி போய்கொண்டிருக்கிறது. ஊடகவியலார் இரண்டு பக்கமுமே பீதி கலந்த கண்களுடந்தான் காணப்படுகிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். அவரின் அறிக்கை இப்போது வெளிவராது. பீரியெட்.

தவறவிட்ட தலைவர்களின் பதில்களுக்கு மன்னிக்கவும். கிடைத்தவர்கள் இணைத்துவிடலாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

img1110427017_1_1.jpg0.jpg

யாருக்கு, என்ன மாறுபட்ட கருத்து இருந்தாலும்...

தமிழக முதலைமச்சர் செல்வி ஜெயலலிதாவின் முடிவு தீர்க்கதரிசனமானது. வரவேற்கத்தக்கது.

அதற்கு மத்திய அரசு, அதிர்ச்சி அடைந்தால்.... கோமா நிலைக்கு போய் விடும். கவனமப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மா பிரதமர் ஆவதற்கு ஒரு வெளிநாடு பிரச்சினையும் தேவை.

மற்றும் கடைசி தேர்தலில் அம்மாவை சோனியா ஊழல் காந்தி புறக்கணித்து விசனம் ஏற்றினார். 

பழிக்கு பழி... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

img1110427017_1_1.jpg0.jpg

யாருக்கு, என்ன மாறுபட்ட கருத்து இருந்தாலும்...

தமிழக முதலைமச்சர் செல்வி ஜெயலலிதாவின் முடிவு தீர்க்கதரிசனமானது. வரவேற்கத்தக்கது.

அதற்கு மத்திய அரசு, அதிர்ச்சி அடைந்தால்.... கோமா நிலைக்கு போய் விடும். கவனமப்பு.

ஈழ தமிழர்கள் விடயத்தில் ஏற்க்கனவே மத்திய அரசு கோமாநிலைக்கு போய் பல ஆண்டுகளாகி விட்டது ! இறந்து புடும் என்று பார்க்கின்றீர்களா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.