Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அக்னி 5

Featured Replies

.

இந்தியா அக்னி 5 என்னும் நீண்ட தூர ஏவுகணையை இன்று இரவு 7 மணிக்கு பரிசோதனை செய்ய உள்ளது. இது 5000 கிலோமிட்டர் வீச்சுக் கொண்டது.

இப்பரிசோதனை வெற்றி அளிக்கும் பட்சத்தில் ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உரிமைகொண்ட நாடுகளிற்கு இராணுவத்தொழில்நுட்பத்தில் சமமான நிலையை இந்தியா அடையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

இது ஒன்றிற்கு மேற்பட்ட அணுவாயுதங்களைக் காவிச்செல்லக் கூடிய பல்லிலக்கு ஏவுகணையாகும். விண்வெளியில் 800 கிலோமீட்டர் உயரத்தில் பறந்து செல்லும்.

இந்த ஏவுகணை செய்மதியைக் கொண்டுசெல்லக்கூடியவாறும் மாற்றப்படக்கூடியது.

ஒரிஸ்ஸாவின் சிறிய தீவொன்றில் இருந்து ஏவப்படவுள்ளது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைமூலம் இந்தியா ஆசியாமுழுவதையும், ஐரோப்பா, ஆபிரிக்க என்பவற்றையும் தன் தாக்குதல் எல்லைக்குள் கொண்டுவரலாம்.

Agni.jpg

agni_weaponsystem.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1002003.JPG

பார்க்க மிசைல் மாதிரித்தான் இருக்கு ஆனால் சென்று தாக்கும் வல்லமை கொண்டதோ ?! :icon_idea:

வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட அக்னி 5 சோதனை

புவனேஸ்வர்,ஏப்.18: மோசமான வானிலை காரணமாக, இன்று நடத்தப்பட இருந்த அக்னி 5 ஏவுகணை சோதனை, வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest News&artid=584393&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்ட அக்னி 5 சோதனை

  • கருத்துக்கள உறவுகள்

இது சிவகாசியில் தயார் ஆனது. இதை சின்னனாக இருக்கும் போது தீபாவளி ரைத்தில் வானத்தில் நானும் விட்டிருக்கேன்..!!

இது சிவகாசியில் தயார் ஆனது. இதை சின்னனாக இருக்கும் போது தீபாவளி ரைத்தில் வானத்தில் நானும் விட்டிருக்கேன்..!!

புரட்சி,

என்ன இருந்தாலும் இப்படி ஒரு அணு ஆயுத வல்லரசை நக்கல் பண்ணக்கூடாது :D

  • கருத்துக்கள உறவுகள்

1002003.JPG

பார்க்க மிசைல் மாதிரித்தான் இருக்கு ஆனால் சென்று தாக்கும் வல்லமை கொண்டதோ ?! :icon_idea:

தாக்குமாம்.. ஆனால் எங்கே எண்டு சரியா சொல்லேலாதாம்... :D

பகிஸ்தானுக்கு அடிக்க முடியாது, சீனாவை நினைத்தே பார்க்க முடியாது. இலங்கை? இலங்கைக்கும் அடிக்க முடியாது சீனாக்கு அடிப்பது போல் .அப்போ யாருக்கு?

பகிஸ்தானுக்கு அடிக்க முடியாது, சீனாவை நினைத்தே பார்க்க முடியாது. இலங்கை? இலங்கைக்கும் அடிக்க முடியாது சீனாக்கு அடிப்பது போல் .அப்போ யாருக்கு?

தனக்கு சீனாவும் பாகிஸ்தானும் அடிக்காமல் பாதுகாக்க :rolleyes:

Agni_V.jpg

இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான அக்னி-5, இன்று வியாழக்கிழமை காலை 8.05க்கு வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. இந்திய பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஏவுகணை, ஒரு டன் எடையுள்ள ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்ததுடன், அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் வசதியுடையது. ஒலியை விட 24 மடங்கு வேகத்தில் பாய்ந்து குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை கொண்டது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில், 5000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கும் வகையில் உள்ள இந்த ஏவுகணையைப் பரிசோதித்ததன் மூலம், அதிநவீன ஏவுகணை வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

குறிப்பாக இந்த ஏவுகணை சீனாவின் பீஜிங், ஷாங்காய் போன்ற பெரு நகரங்கள் உட்பட நாட்டின் எந்த பகுதியையும் இலக்குகளாக தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய ஏவுகணையாகவும் தனித்துவம் பெற்றிருக்கிறது.

இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம்(விட்டம்), 50 டன் எடை கொண்டது. முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதால், வரும் 2014-2015ம் வருடத்தில் முழுவதுமாகத் தயாராகி ராணுவத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5000 கி.மீ. தொலைவு என்பதால், சீனா, கிழக்கு ஐரோப்பா, வடகிழக்கு மற்றும் கிழக்கு ஆபிரிக்கா ஆகிய வலயங்களும் இலக்கு எல்லைக்குள் வருகின்றன.

இந்தியாவுக்கு சொந்தமான அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து ஏவப்படுவதாயின் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் இதன் பரப்பு எல்லைக்குள் வரும். ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் இத்தகையை ஏவுகணைகள் உள்ளன. முன்னதாக, இந்த ஏவுகணை நேற்று புதன்கிழமை மாலை 7 மணிக்கு ஏவுவதாக இருந்தது. வானிலை சரியில்லாத காரணத்தால், இன்று காலை ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில்; இது போன்ற ஏவுகணைகளை அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா நாடுகள் மட்டுமே சோதனை செய்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றியடைவது மூலம் இந்தியாவும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இடம்பெறுகிறது. 17 மீ, உயரமும், 50 டன் எடையும் உள்ள அக்னி 5 ஏவுகணை, ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும், பயணிகள் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை உடையது. மேலும் இந்த ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணு ஆயுதங்களை கொண்டு செல்லும் திறனுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கடந்த நவம்பரில் 3 ஆயிரம் கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட அக்னி 4 ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேவேளை அக்னி-V ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். நமது நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் கடுமையாக பாடுபட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் இதர அமைப்புகளின் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். அக்னி-V ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது நமது பாதுகாப்பின் மீதுள்ள நம்பகத்தன்மையை மேலும் அதிகரித்துள்ளது என பிரதமர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் விகே.சரஸ்வத்தை பிரதமர் தொடர்புகொண்டு அவருக்கும், அவரது குழுவினருக்கும் தனிப்பட்ட முறையில் வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

http://www.4tamilmedia.com/newses/india/4727-agni-v-india-s-first-icbm-test-fired-successfully

  • கருத்துக்கள உறவுகள்

'அக்னி-5' சோதனையைத் தடுத்தது காலநிலை!

agni-5-190412-150.jpg

மோசமான வானிலை காரணமாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் 'அக்னி-5' ஏவுகணை சோதனை கடைசி நேரத்தில் நேற்று திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஐந்தாயிரம் கி.மீ, தொலைவில் உள்ள இலக்கை சென்று தாக்கும், "அக்னி-5' ஏவுகணை சோதனை நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஒடிசாவின் வீலர் தீவில் தயார் நிலையில் இருந்தன.

இந்த சூழலில், கடைசி நேரத்தில், ஏவுகணை சோதனை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "சோதனை நடைபெறவிருந்த பகுதிகளில் நிலவிய மோசமான வானிலை மற்றும் பாதுகாப்பு கருதி, ஏவுகணை சோதனையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது' என்றார். இந்த சோதனை இன்று நடக்கும் எனக் கூறப்படுகிறது.

17 மீ., உயரமும், 50 டன் எடையும் உள்ள அக்னி 5 ஏவுகணை, ஒலியை விட 24 மடங்கு வேகத்திலும், பயணிகள் விமானத்தை விட 30 மடங்கு வேகத்திலும் சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை உடையது. மேலும் இந்த ஏவுகணை ஒரு டன் எடையுள்ள அணுஆயுதங்களை கொண்டு செல்லும் திறனுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த ஏவுகணை அமெரிக்காவை தவிர மற்ற உலகின் மற்ற பகுதிகளில் தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை இயக்கிய பின்னர் இதனை நிறுத்த முடியாது. துப்பாக்கி புல்லட்டை விட வேகமாக செல்ம் திறன் கொண்டது. சாலைப் பகுதிகளிலிருந்து கூட ஏவும் சக்தி கொண்டது.

ஏவுகணை இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பின்னர், நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என்ற பெருமை அக்னி 5 ஏவுகணைக்கு கிடைக்கும். அக்னி 5 ஏவுகணை சிறிய செயற்கைகோள்களையும் தாக்கும் திறன் உடையது. அக்னி 5 ஏவுகணை பிரதமரின் நேரடி உத்தரவின் பேரில் தான் தாக்க முடியும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=58839&category=IndianNews&language=tamil

அக்னி-5 என்னும் ஏவுகணை, இந்தியாவால் தற்சார்பாக ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட நடுத்தரத் தூர எறிவிசை ஏவுகணையாகும். 5000க்கு அதிகமான கிலோமீட்டர் தொலைவு செல்லக் கூடிய அதனால், முழு ஆசியா, ஐரோப்பாவின் சில பகுதிகள் உள்ளிட்ட பிரதேசங்களை எட்டித் தாக்க முடியும்.

இப்படியான ஆயுதங்கள் இருந்து சோவியத்யூனியன் உடைந்தது. பார்க்கலாம் !

இந்திய ஏவுகணையை அமெரிக்கா விமர்சிக்காதது ஏன்?

இந்தியா தனது நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைத் தொடரில், 5000 கிலோமீட்டர் தொலைவு சென்று தாக்கக்கூடிய அக்னி 5 என்ற ஏவுகணையை பரீட்சார்த்த ரீதியாக ஏவியிருக்கும் நடவடிக்கையை சீன ஊடகங்கள் விமர்சித்திருக்கின்றன. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த ஏவுகணை நடவடிக்கையை விமர்சிக்கவில்லை.

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி ஒருவர், புதன்கிழமை , வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கா பெரிதும் கவலை கொள்ளவில்லை என்று கூறினார். ஏனெனில், இந்தியா, அணு ஆயுதப்பரவல் விஷயத்தில், நல்ல வகையில் செயல்பட்டிருக்கிறது என்று அவர் கூறினார்.

வடகொரியா, இரான் போன்ற நாடுகள் இதே போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதைக் கண்டிக்கத் தயங்காத அமெரிக்கா, இந்தியா அதைச் செய்யும்போது, அதே போன்ற நிலைப்பாட்டை எடுக்காதது , அதன் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக இருப்பதாக சில விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இந்த விமர்சனங்கள் சரியல்ல என்று கூறும் இந்திய வெளிவிவகாரத்துறையின் முன்னாள் செயலர், நீலகண்டன் ரவி, இந்தியாவை, இரான் , வடகொரியா போன்ற நாடுகளோடு ஒப்பிடுவது தவறு என்கிறார்.

1957லிருந்தே இந்தியா அணுஆயுதப்பரவலை எதிர்த்து வந்திருக்கிறத என்று கூறும் ரவி, இந்தியாவின் உள் நாட்டு சட்டங்கள் சர்வதேச அணு ஆயுதப்பரவல் சட்டங்களை விட கடுமையானவை என்றார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு இரட்டை அளவுகோலை அடிப்படையாக் கொண்ட்து என்ற விமர்சனத்தில் ஓரளவு உண்மை இருக்கலாம் என்ற அவர், ஆனால், இந்திய அமெரிக்க உறவுகள் கடந்த 2000ம் ஆண்டிலிருந்தே, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் பலமடைந்து வந்திருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டு, இந்தியாவை, அமெரிக்கா ஒரு சரிசமமான நட்பு நாடாக கருதுவதாகவும் கூறினார்.

ஆனால் இந்தியாவை , சீனாவுக்கெதிராக ஒரு “சமநிலைப்படுத்தும் சக்தியாக” அமெரிக்கா பயன்படுத்த நினைக்கிறது என்ற கருத்தை மறுத்த அவர், இந்தியா ஒரு பழமை வாய்ந்த நாடு, பெரிய நாடு, எந்த ஒரு நாடும் அதை பயன்படுத்த முடியாது என்றார் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.