Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கெதிராக இமானுவேல் தேரரை தூண்டிவிடும் மகிந்த.

Featured Replies

தம்புள்ளையில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிப்பதற்கு எதிராக இமானுவேல் சுமங்கள தேரரை மகிந்த ராஜபக்ஷ தூண்டிவிட்டுள்ளதாக தெரியவருகிறது. மகிந்தரின் ஆலோசனையின் பேரிலேயே பள்ளிவாசல் நிர்மாணிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு இனுமானுவேல் தேரர் தீர்மானித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு, அரசாங்கத்தின் முழுமையான வளத்தைப் பயன்படுத்துமாறும் மாத்தளை மாவட்ட பிரேச செயலாளருக்கு ஜனாதிபதி செயலகத்திலிருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

\

இமானுவேல் சுமங்கள தேரர் மகிந்த ராஜபக்ஷவிற்கு மிக நெருக்கமானவர் என்பதுடன், அரசாங்கத்திலிருந்து பல்வேறு சலுகைகளையும் சுமங்கள தேரர் பெற்று வருகிறார். ஜனாதிபதியின் விசேட வரப்பிரசாதத்தின் கீழ் தேரருக்கு தொலைக்காட்சி, வானொலி அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மகிந்தவிற்காக இந்தத் தேரர் எந்த வகையிலான அறிக்கைகளையும், கருத்துக்களையும் வெளியிடுவதற்கு ஒருபோதும் தயங்குவதில்லையென அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

http://thaaitamil.com/?p=16303

Sri Lankans Protest Mosque in Buddhist Sacred Area

Thousands of Buddhist monks and lay supporters have protested the construction of a mosque and a Hindu temple being built in an area designated as a Buddhist sacred zone.

Local journalist Kanchana Ariyadasa says about 2,000 protesters, including 300 monks, shouted slogans and waved the Buddhist flag Friday in the central town of Dambulla.

Associated Press

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan mosque forced to abandon prayers by protesters.

_59759147_mosque.jpg

A mosque in Sri Lanka has been forced to abandon Friday prayers amid community tensions in the central town of Dambulla.

About 2,000 Buddhists, including monks, marched to the mosque and held a demonstration demanding its demolition.

http://www.bbc.co.uk...d-asia-17781372

Edited by nedukkalapoovan

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணியாக வந்த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாசலைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை தம்புள்ளையிலுள்ள பிரபல விகாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்

சம்பவ இடத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதிலும் அவர்களது கட்டுப்பாட்டையும் மீறியே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று வெள்ளிக்கிழமை வழக்கமாக இடம்பெறும் ஜும்ஆ பிரசங்கமும் தொழுகையும் இடம்பெறவில்லை எனவும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தசமயமே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையிலும் பள்ளிவாசலைப் பாதுகாக்கும் நோக்கிலும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களைக் கோரியுள்ளது. அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கோரி உலமா சபையினால் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இச் சம்பவத்தைக் கண்டித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அரசாங்கத்தின் ஆதரவுடனே முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை இச் சம்பவத்தைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் இலாபம் தேட முனைவதாகக் குறிப்பிட்ட மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, இது தொடர்பில் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

“ஜும்ஆ தொழுகையும் இடம்பெறவில்லை, மிகுந்த கவலையடைகிறோம்” – பாதிக்கப்பட்ட நபர்

பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் தாக்குதல் காரணமாக ஜும்ஆ தொழுகையை மேற்கொள்ள முடியவில்லை என பாதிக்கப்பட்ட பிரமுகர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

“பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் சுமார் 900 முஸ்லிம்கள் கலந்துகொள்கிறோம். தம்புளைக்கு வர்த்தக நோக்கத்துக்காக வருகைதரும் முஸ்லிம்களும் இங்குதான் தொழுகைக் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இச்சம்பவம் எம்மை வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

இப்போது எமக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் மீண்டும் பிரச்சினை எழலாம் என்ற அச்சமே முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகிறது.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37692

மகிந்தவின் மானத்தை காத்ததற்கு கைமாறாக பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது- றம்ழான்!

ramlan-150x150.jpgஜெனிவாவில் உலக நாடுகள் இலங்கைக்கு எதிராக நின்ற வேளையில் மகிந்த ராசபக்சவினதும் இலங்கை அரசாங்கத்தினதும் மானத்தையம் மரியாதையையும் காக்க துணிந்து நின்று செயற்பட்ட முஸ்லிம்களுக்கு கைமாறாக தம்புள்ள நகரிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயல் பேரினவாதிகளினால் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களும் உடனடியாக விழித்தெழுமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே.றம்ழான் கேட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தம்புள்ள நகரில் நீண்ட காலமாக உள்ள முஸ்லிம்களின் ஜும் ஆ பள்ளிவாசலை உடைப்பதற்கு கடந்த சில தினங்களாக முயற்சித்து வந்த பெரும்பான்மை சமூகத்தைச்சேர்ந்த சிலர் இன்று வெள்ளிக்கிழமை அங்கு ஒன்று கூடி பள்ளிவாயலை உடைத்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனின் அவலத்தில், சிங்களவனுடன் சேர்ந்து... முட்டுக்கொடுத்த முஸ்லீம்களுக்கு இது தான் சரியான நடவடிக்கை.

"முற்பகல் செய்யின்... பிற்பகல் விளையும்"

"வினை விதைத்தவன், வினை அறுப்பான்... தினை விதைத்தவன், தினை அறுப்பான்"

"அரசன் அன்றறுப்பான்... தெய்வம் நின்றறுக்கும்"

போன்ற பழமொழிகளை முஸ்லீம்கள், இனியாவது கவனத்தில் எடுக்க வேண்டும். மற்றவனின் துன்பத்தில்.... குளிர்காய நினைக்கப் படாது.

Edited by தமிழ் சிறி

முஸ்லிம்கள் தமது உரிமையை பாதுகாப்பதற்கு ஜெனீவா செல்லவேண்டியிருக்கும்: முஜிபுர் ரஹ்மான்

தம்புள்ளையில் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டமைக்கு கண்டம் தெரிவித்த மேல் மாகாண சபை ஐ.தே.க உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்கள் தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக ஜெனீவாவுக்கு செல்ல வேண்டியிருக்கும் எனக் கூறினார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்பள்ளிவாசல் தகர்ப்பு நடவடிக்கைக்கு எதிராக அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்யப்போகிறார்கள் எனவும் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

'அரசாங்கத்தில் 29 முஸ்லிம் எம்.பிகள் உள்ளனர். இவ்விடயம் குறித்து அவர்கள் மௌனமாக இருக்கப் போகிறார்களா?' என அவர் கேள்வி கேள்வி எழுப்பினார்.

இதேவேளை ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் கருத்துத் தெரிவிக்கையில், பள்ளிவாசல்கள் பலவந்தமாக உடைக்கப்படுவது தொடர்ந்தால், முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இலங்கை இழந்துவிடும்' என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/39648-2012-04-20-13-34-14.html

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.