Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ளை பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டது!

Featured Replies

தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை பொலிஸாரினால் மீண்டும் திறக்கப்பட்டது.

அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, றிசாட் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் முஸ்லிம் மீடியா போரம் தலைவருமான என்.எம். அமீன் ஆகியோர் கொண்ட குழு இன்று காலை இப்பள்ளிவாசலை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களையும் சந்தித்து பேசினர்.

இக்குழுவினர் பள்ளிவாசலை அடையும் முன்னர் பள்ளிவாசல் திறக்கப்பட்டு தூய்மையாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக என்.எம்.அமீன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

தம்புள்ளையில் வசிக்கும் பல்லின மக்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றும் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய வசந்த குமார நவரட்ண என்பவர் தான் 47 வருடங்களாக தம்புள்ளையில் வசிப்பதாகவும் இப்பள்ளிவாசல் அங்கிருப்பதை தனது சிறுவயது முதல் அறிந்திருந்ததாகவும் கூறினார்.

தம்புள்ளை மக்கள் இப்பள்ளிவாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 5 சதவீதமானோர் மாத்திரமே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களே.

உள்ளூர் அரசியல்வாதிகள் இருவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தனர். புனித பிரதேசம் என்ற பெயரில் இங்குள்ள மக்களை வெளியேற்றுதற்கு திட்டமிடப்படுகிறது. அதற்காக பள்ளிவாசலை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.’ என்றார்.

மக்களிடம் தான் கேட்டறிந்த கருத்துக்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என அமைச்சர் பௌஸி கூறினார். புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தின்போது பள்ளிவாசல் குறித்த ஏனைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

http://thaaitamil.com/?p=16505

சிலைகளை உடைப்பு, தமிழர் வீடுகள் எரிப்பு - முஸ்லீம்கள் மௌனம் சாதித்தனர். தமிழர் அரசியல் தரப்பு முஸ்லீம்கள் அடக்குமுறை விடயத்தில் அரசியல் காரணங்களுக்காக ' ஒரு கண்டன' இல்லை 'அனுதாப' செய்தியை வெளியிடவேண்டும்/

இது இரண்டுகரையும் சேர்ந்து விடுகிற நடிப்பு.

இதற்காக மகிந்தாவின் ஒரு மந்திரி இரண்டொருநாளில் வந்து கெட்ட அரசியல்வாதிகள் பள்ளிவாசல் உடைப்பை தங்கள் பிரசாரத்திற்கு பாவிக்கிறார்கள் என்பார். மற்றவர் இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்போவதாக வாக்குறுதி கொடுப்பார். முன்றாமவர் கடைசியில் வந்து தான் முஸ்லீம் மக்களுக்குக்காக எப்படி கஸ்டப்பட்டு மகிந்தாவிடம் பள்ளி உடைப்பு நடந்ததை தெரிவித்ததாயும் மகிந்தா அதை கேள்விப் பட்டவுடனே கமிசன் வைத்து விசாரிக்க கட்டளையிட்ட பெருந்தன்மையையும் பற்றிக்கூறுவார்

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சகோதரர்களுக்கு முதுகில் அடிபோட்டிட்டு தடவியும் குடுப்பார் மகிந்தர்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

குர்ரானில் உள்ள சகோதரத்துவத்தை இந்த பள்ளியிலாவது முஸ்லிம்கள் கற்றுகொள்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.

சிலைகளை உடைப்பு, தமிழர் வீடுகள் எரிப்பு - முஸ்லீம்கள் மௌனம் சாதித்தனர். தமிழர் அரசியல் தரப்பு முஸ்லீம்கள் அடக்குமுறை விடயத்தில் அரசியல் காரணங்களுக்காக ' ஒரு கண்டன' இல்லை 'அனுதாப' செய்தியை வெளியிடவேண்டும்/

பௌத்தமதம் ஒருபோதும் இனவாதத்தை போதிக்கவில்லை பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு TNA கண்டனம்.

21 ஏப்ரல் 2012

tna1_CI.jpg

உலகில் பல நாடுகளில் பௌத்தமதம் இருக்கின்றபோதும் அந்தநாடுகளில் 'எல்லா மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற'புத்தபெருமானின் போதனைகளை மிகச்சரியாக கடைப்பிடித்து வருகின்றனர் ஆனால் இலங்கையில் மட்டும் புத்தரின் பெயரை வைத்துக்கொண்டு மதத்தலைவர்களும், அரசியல் வாதிகளும் இனவாதம் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என தம்புள்ளை பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல்களுக்கு பௌத்த மதத்தை போதிக்கும் மதத்தலைவர்களே தலைமைதாங்கியதை கேள்வியுற்று மிகுந்த வேதணை அடைகின்றோம்.

இன்று உலகில் பல நாடுகளில் பௌத்தமதம் இருக்கின்றபோதும் அந்தநாடுகளில் 'எல்லா மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என்ற'புத்தபெருமானின் போதனைகளை மிகச்சரியாக கடைப்பிடித்து வருகின்றனர் ஆனால் இலங்கையில் மட்டும் புத்தரின் பெயரை வைத்துக்கொண்டு மதத்தலைவர்களும், அரசியல் வாதிகளும் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

நேற்றைய தினம் தம்புள்ளையில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது பௌத்த மதத்தலைவர்கள் அடங்கிய குழுவினர் பள்ளிவாசலை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பௌத்த மதத்தலைவர்களின் மேற்படி நடவடிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறுவதற்கு அரசாங்கம் அனுமதிக்க கூடாது என கேட்டுக்கொள்கின்றோம்.

தம்புள்ளை பிரதேசத்தை பௌத்த புனிதப் பிரதேசமாக மாற்றவேண்டும் என்று கூறும் சில பௌத்த மதத்தலைவர்கள் முஸ்லீம்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை அதுவும் முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் இலங்கை சிறுபான்மை இன மக்களின் மத உரிமைகளை மீறுகின்ற செயலாகும். இதே போன்று காத்தான்குடியிலோ அல்லது மட்டக்களப்பிலோ முஸ்லீம்களின் அல்லது தமிழர்களின் புனிதப்பிரதேசமாக மாற்றவேண்டும் என்று கூறி சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மதத்தலைவர்கள் இங்குள்ள பௌத்தமதத்தலங்களை அகற்ற முற்பட்டால் அதனை இலங்கை அரசாங்கம் அனுமதிக்குமா? நிச்சயமாக அனுமதிக்காது எனவே இந்த நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஒரு நீதி சிறுபான்மை இனத்தவர்களுக்கு இன்னுமொரு நீதியென்கின்ற நிலைப்பாடு மாற்றப்படவேண்டும். அவ்வாறான மாற்றம் ஏற்படும் போதுதான் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மையின மக்கள் உண்மையான சமாதானத்தை அனுபவிக்க முடியும். எனவே மேற்படி பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன் இது போன்று இனியும் நடைபெறக்கூடாது என்பதையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இத்தனை இந்து கோவில்கள் இடிக்கபட்டபோது...........

எந்த கண்டனமும் இல்லை. விட்டுகொடுப்பு அரசியலை மொத்தமாக படித்து விட்டால் எந்த தொல்லையும் இல்லை. இப்படி விட்டு விட்டு படிப்பதால்தான் மனுசருக்கு இரத்த கொதிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.