Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் இன்று அதிபர் தேர்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

france-election-220412-150.jpg

பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபராக பதவி வகிக்‌கும் நிகோலஸ் சர்கோஸி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் சோஸலிஸ்‌ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர்.

இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் அதிகளவு ஓட்டுக்கள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு ‌செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதியானவர்களாக அறிவிப்பர். இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

http://www.seithy.co...&language=tamil

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: கடும் போட்டி நிலவுகிறது

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் அந்நாட்டு மக்கள் தற்போது வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் யூரோவைப் பயன்படுத்தும் நாடுகளின் பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள தொழில் பிரச்சனைகளுக்கு மத்தியில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் இன்று நடக்கிறது.

மத்திய வலதுசாரிக் கட்சியான யூஎம்பி வேட்பாளரான நிக்கோலா சார்க்கோஸி மீண்டும் அதிபராவதற்கு முயற்சிக்கிறார்.

சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான ஃபிரான்ஸுவா ஒலாந்திடமிருந்து சார்க்கோஸி கடுமையான போட்டியை சந்தித்துள்ளார்.

120422100258_hollande_afp_304x171_afp_nocredit.jpg

ஃபிரான்ஸுவா ஒலாந்த்

மொத்தமாக 10 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை வென்றெடுக்கத் தவறினால், முதல் இரண்டு வேட்பாளர்களுக்கும் இடையில் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு வரும் மே 6ம் திகதி நடத்தப்படும்.

2007ம் ஆண்டிலிருந்து பதவியிலிருக்கின்ற அதிபர் சார்க்கோஸி, மீண்டும் அதிபரானால் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ள துண்டுவிழும் தொகையையும் வரி அறவீடுகளையும் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

கடவுச்சீட்டுத் தேவைப்படாத செங்கன் வலயத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள், ஐரோப்பியர் அல்லாத குடியேறிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால் அந்த வலயத்திலிருந்து பிரான்ஸ் விலகிக் கொள்ளும் என்றும் சார்க்கோஸி தேர்தல் வாக்குறுதியில் எச்சரித்துள்ளார்.

பதிலுக்கு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஃபிரான்ஸுவா ஒலாந்த், பெரிய நிறுவனங்கள் மீதான வரியை அதிகரிக்கவும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச சம்பளத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

இம்முறை பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சம்பளம், ஓய்வூதியம், வரிகள், வேலை வாய்ப்பின்மை போன்ற விடயங்களே வாக்காளர்களின் கவனத்துக்குரிய விடயங்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.bbc.co.uk/tamil/global/2012/04/120422_francehe.shtml

  • கருத்துக்கள உறவுகள்

சர்கோசி வெல்ல வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்கோசி வெல்ல வாழ்த்துகள்.

பிரான்ஸ் உறவுகள் ஒருவரையும்... இன்று யாழ் களத்தில் காணவில்லையாதலால்...

எல்லோரும் வாக்குச்சாவடிக்கு போய் விட்டார்கள் போலுள்ளது. :D

  • கருத்துக்கள உறவுகள்

சர்கோசி வென்றால் தேங்காய் உடைப்பதாகப் பலர் கோவிலில் நேர்த்தி

அதனால் லாச்சப்பல் கடைகளில் தேங்காய்த் தட்டுப்பாடு :D

  • கருத்துக்கள உறவுகள்

சர்கோசி வென்றால் தேங்காய் உடைப்பதாகப் பலர் கோவிலில் நேர்த்தி

அதனால் லாச்சப்பல் கடைகளில் தேங்காய்த் தட்டுப்பாடு :D

விசுகின், கொம்புயூட்டர் கடையில்... தேங்காய்கள் மூடை,மூடையா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது, வாத்தியார். :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகின், கொம்புயூட்டர் கடையில்... தேங்காய்கள் மூடை,மூடையா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது, வாத்தியார். :icon_idea::lol:

:lol::D

தேங்காய்கள் கவனம். தேர்தல் முடியும் வரை பாதுகாக்கவும்.

s-FRANCE-ELECTION-RESULTS-2012-large.jpg

France Election Results: Hollande Beats Sarkozy In French Election's 1st Round

PARIS -- Slow and steady wins the race.

French Socialist Francois Hollande has taken his plodding, undynamic campaign to become France's next president to within spitting distance of victory over the "hyper-president" Nicolas Sarkozy, finishing first in Sunday's initial round of voting.

The bespectacled 57-year-old career politician, who says he dislikes the rich and considers the world of high finance his enemy, will carry the momentum of this win into the final two weeks of campaigning against Sarkozy, who finished second in Sunday's vote.

Like the tortoise in Aesop's fable, Hollande maintained a slow and steady pace ever since he won his party's primary last October, never seeming to rally much enthusiasm behind his campaign even while maintaining a solid lead in the polls.

The contrast in character between Hollande, an affable, soft-spoken and witty longtime party boss, and his chief rival Sarkozy has been one of the main distinguishing features of a race that has largely focused on style over substance.

Where Hollande projected a calm, relaxed persona even through the final day of campaigning Friday, Sarkozy, true to form, was a manic ball of energy, lashing out at what he considers a biased media and unveiling one new campaign pledge after another.

Hollande says he wants to be a "normal" president, tapping into what polls show is a strong demand among the French to turn the page after five years of Sarkozy.

Hollande has built his reputation as a manager and consensus-builder more than a visionary. He's virtually unknown outside France, has never held ministerial function, and critics say he has limited international experience to head the nuclear-armed nation.

Simply not being Sarkozy may have won him support among voters wanting above all else to see the back of the incumbent.

It's a criticism Hollande has tried of late to counter, saying at a rally last week that his campaign was "not just a sanction" of Sarkozy, "but an elevation" of his own project.

That project calls notably for a pullout of French troops from Afghanistan by the end of this year, higher taxes on the very wealthy, and a major new hiring of teachers.

Hollande is also promising to reopen negotiations over the hard-won European budgetary stability pact, with the aim of stressing economic growth over austerity.

Sunday's victory comes as a form of revenge for Hollande, who led the Socialist Party during its last two presidential defeats in 2002 and 2007.

Hollande's former partner Segolene Royal – the mother of his four children – was the Socialists' last presidential nominee. Their relationship unraveled during the 2007 campaign, and they later separated. She ran again this year, but lost badly in the first phase of the primary last October.

Hollande's program calls for reversing cuts in education by Sarkozy's government, a new work contract to encourage companies to hire young people, and focus on reducing France's high state budget deficit. It says little about international affairs, other than calling for an unspecified "pact" with Germany, the EU's economic engine, to spur on the now-troubled European project.

Hollande has a topflight educational pedigree, with degrees from the reputed HEC business school, Sciences Po political institute, and the finishing school for French political and management elites known as ENA.

A popular French satirical TV show, Les Guignols de l'Info, had recently depicted Hollande as a sort of goofy simpleton with a dopey laugh, a marked contrast to its scheming, self-important puppet of Sarkozy.

Political wags this year noted that Hollande's weight loss and new use of frameless eyeglasses coincided with his rise in the polls.

Sarkozy and Hollande have squared off electorally before: Each led their party's list for the 1999 European parliament elections.

சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரான ஃபிரான்ஸுவா ஒலாந்தே, மத்திய வலதுசாரிக் கட்சியான யூஎம்பி வேட்பாளரான நிக்கோலா சார்க்கோஸி, இருவரும் அடுத்த கட்ட போட்டிக்கு , (இரண்டாவது சுற்று) . தெரிவாகியுள்ளனர்.

முதலாவது சுற்றில் ஃபிரான்ஸுவா ஒலாந்தே, கூடிய வாக்குகளை பெற்றுள்ளார் !

  • கருத்துக்கள உறவுகள்

விசுகின், கொம்புயூட்டர் கடையில்... தேங்காய்கள் மூடை,மூடையா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது, வாத்தியார். :icon_idea::lol:

:lol: :lol: :lol:

குடிவரவாளர்களுக்கு எதிரான கொள்கை கொண்ட வலதுசாரி கட்சிகள் கூடிய அளவில் வாக்குகளை பெற்றுள்ளது நீண்டகால அடிப்படையில், பொருapளாதாரம் சரியும் இடத்தில், இந்தகட்சிகள் கூடிய பலம் பெரும் என 'அஞ்சப்படுகின்றது'.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல் - முதற்கட்ட வாக்களிப்பில் சர்கோசியைத் தோற்கடித்தார் இடதுசாரி வேட்பாளர்!

hollande-230412-150.jpg

பிரான்ஸில் நேற்று நடைபெற்ற அதிபர் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவில், அதிபர் நிக்கோலஸ் சர்கோசியை தோற்கடித்து பிரான்காய்ஸ் ஹாலண்ட் வெற்றி பெற்றுள்ளார்.வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த சர்கோசி கடந்த 2007ல் பிரான்ஸ் அதிபரானார். இவரது பதவிக்காலம் மே 15ல் முடிகிறது.

இவர் 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கும் பிரான்ஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பிரான்காய்ஸ் ஹாலண்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

நேற்று நடந்த முதல்கட்ட தேர்தலில், ஹாலண்டுக்கு 28 வீத வாக்குகள் கிடைத்தன. சர்கோசிக்கு 26 வீத வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து இவர்கள் இருவரும் மே 6ம் தேதி இறுதிகட்ட தேர்தலில் கடுமையாக மோதுகின்றனர்.

இறுதி கட்ட தேர்தலில் சர்கோசிக்கு தோல்வியைத் தழுவுவார் என்றும், ஹாலண்ட் புதிய அதிபர் ஆவார் என்றும் பல்வேறு கருத்து கணிப்புகள் கூறியுள்ளன. அவ்வாறு சர்கோசி தோற்றால் கடந்த 30 ஆண்டுகளில் இரண்டாம் முறை போட்டியிட்டு தோற்ற முதல் அதிபர் இவராகத் தான் இருக்கும். அதுபோல், 25 ஆண்டுகளுக்குப் பிறகு சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அதிபராவார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=59021&category=WorldNews&language=tamil

அமெரிக்காவின் இன்றைய கடுமையான பங்கு சந்தை சரிவை, சார்க்கோசிக்கு தேர்தலில் கிடைத்த சறுக்கல் என்று அமெரிக்க பத்திரிகைகள் வருணிக்கின்றன. தேர்தலில் சார்க்கோசி தோற்றால்...... இப்பவே கொஞ்சம் கொஞ்சம் அரிசி, பருப்பு, கான் பூட் சேகரித்தால்தான் தேர்தலின் பின் வாழ்க்கை போகும் போலிருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகின், கொம்புயூட்டர் கடையில்... தேங்காய்கள் மூடை,மூடையா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, தகவல் கசிந்துள்ளது, வாத்தியார். :icon_idea::lol:

தமிழீழத்துக்கான தேர்தல் என்று வரும்போது நிச்சயம் இது நடக்கும்.

இது

பிரெஞ்சு மக்கள் தமது தலைவரைத்தெரிவ செய்வது. அதன்படி நானும் அவர்களுக்கான ஒரு தலைவரையே தெரிவு செய்யணும். செய்வேன். பிரெஞ்சுவா கொலண்டுக்கு எதிர்பார்ப்பு இருந்தாலும் இவரது ஆளுமையற்ற தன்மையை கட்டையின் சுழித்தல் வேகம் மிஞ்சிவிடும் என்பதே எனது கணிப்பு.

ஆனாலும் எனது வாக்கு கட்டையை மாற்றவேண்டும் என்பதற்கே.

மற்றும்படி தீவிர வலதுசாரியான மரின் லு பென்னுக்கு விழுந்த வோட்டுக்களும் இந்த இரு கட்சிகளுக்குமான அதிப்தியே.

அமெரிக்காவின் இன்றைய கடுமையான பங்கு சந்தை சரிவை, சார்க்கோசிக்கு தேர்தலில் கிடைத்த சறுக்கல் என்று அமெரிக்க பத்திரிகைகள் வருணிக்கின்றன. தேர்தலில் சார்க்கோசி தோற்றால்...... இப்பவே கொஞ்சம் கொஞ்சம் அரிசி, பருப்பு, கான் பூட் சேகரித்தால்தான் தேர்தலின் பின் வாழ்க்கை போகும் போலிருக்கு.

இன்றைய பொருளாதார காலகட்டத்தில் பங்குச்சந்தை பிரான்சில் மாற்றத்தை விரும்பவில்லை. அத்துடன் ஏனோ ஹாலன்டையும் விரும்பவில்லை. என பிரான்சு மக்களுக்கு சந்தை கூறியுள்ளது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இன்று இரண்டாவது கட்ட அதிபர் தேர்தல்!

FRANCE-ELECTION-060512-150.jpg

பிரான்ஸ் நாட்டில், இன்று இரண்டாவது கட்டமாக அதிபர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில், சர்கோசி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, சோஷலிஸ்ட் கட்சி சார்பில், பிராங்காய்ஸ் ஹோலண்ட் போட்டியிடுகிறார். பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசியின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி, கடந்த மாதம் 22ம் தேதி முதல்கட்ட அதிபர் தேர்தல் நடந்தது.

முதல் கட்ட தேர்தலில் வேட்பாளராக, 10 பேர் களத்தில் இருந்தனர். முதல் கட்டத் தேர்தலில், 50 சதவீத ஓட்டுகள் யாருக்கும் கிடைக்காத நிலையில், இன்று இரண்டாவது கட்டத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் சர்கோசியும், பிராங்காய்ஸ் ஹோலண்டும் களத்தில் உள்ளனர்.

பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வரி விதிப்பு, ஓய்வூதியம் குறைப்பு மற்றும் மறுப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் ஹோலண்ட் பிரசாரம் செய்தார். "மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும்' என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார்.

கடந்த தேர்தலின்போது சர்கோசி, லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியிடமிருந்து, 353 கோடி ரூபாய் அளவுக்கு தேர்தல் நிதி பெற்றதாக கூறப்படுகிறது. இதை லிபியாவின் முன்னாள் அமைச்சர்களும் உறுதிப் படுத்தியுள்ளனர்.

இரண்டாவது கட்டத் தேர்தல் நடக்கும் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் சர்கோசிக்கு சங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலில் இவர் ஹோலண்டை விட பின் தங்கியிருந்தார் என்பதால், இன்றைய தேர்தல் ஹோலண்டுக்கு மேலும் வெற்றி வாய்ப்பை அதிகமாக்கும் என கூறப்படுகிறது.

http://www.seithy.com/breifNews.php?newsID=59698&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கான தீர்வு என்ற ஒன்று முன்னெடுக்கப்படுமாயின் சோசலிசக்கட்சி அதனை முழுமையாக ஆதரித்து ஊக்கப்படுத்தும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அவருக்கு வாக்களித்துள்ளேன். மற்றும்படி இருவருக்கும் எதிரானதே எனது வாக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கான தீர்வு என்ற ஒன்று முன்னெடுக்கப்படுமாயின் சோசலிசக்கட்சி அதனை முழுமையாக ஆதரித்து ஊக்கப்படுத்தும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக அவருக்கு வாக்களித்துள்ளேன். மற்றும்படி இருவருக்கும் எதிரானதே எனது வாக்கு.

விசுகு பிரான்சின் அரசியல் எமக்கு தெரியாது ஆனால் உங்களைப்போன்ற பிரான்சில் வசிக்கும் எமது சகோதரர்களுக்கு நன்கு புரியும் எவர்வந்தால் ஈழதமிழனுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்பதினை கவத்தில்கொண்டு அந்தகட்சிக்கு வாக்களித்து நாமும் பிரான்சில் பெரிய வாக்குவங்கியாக அரசியல்வாதிகள் உணரவைக்கவேண்டும் இதன் ஊடாகவே எமக்கான அரசியல் ஆதரவை இவர்களிடம் பெற்று எமது இலட்சியத்தை எட்ட முடியும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.