Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'லைகா மொபைல்' நிறுவனத்தின் பாரிய வரிஏய்ப்பு - நிறுவனப் பதிவிலிருந்து நீக்கப்படும் அபாயம்! கார்டியன் நாளேடு அம்பலமாக்கியது!!

Featured Replies

தொலைபேசி சேவை மூலம் பெருமளவு வருமானத்தைப் பெற்றுவரும் ஈழத்ததமிழரின் நிறுவனமான 'லைகா மொபைல்' பாரிய வரி ஏய்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற அதேநேரம் பிரித்தானிய கொன்சவேடிவ்கட்சிக்கு பெருமளவு நிதி அன்பளிப்புச் செய்திருக்கும் விடயத்தை பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் பிரபல நாளேடான கார்டியன் தனது இணையப் பதிப்பில் (www.guardian.co.uk) அம்பலப்படுத்தி இருக்கின்றது.

கொன்சவேடிவ் கட்சிக்கான நிதி அன்பளிப்பு வரிசையில் மூன்றாவது இடத்திலுள்ள நிறுவனம் மூன்று வருடங்களாக வரி கட்டவில்லை Tories' third largest donor is company that paid no tax for three years என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 180 பவுண்ஸ் (£136,180) பிரித்தானிய கொன்சவேடிவ் கட்சிக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கார்டியன் பத்திகை வெளியிட்டுள்ள செய்தி:

கொன்சவேடிவ் கட்சிக்கு பாரிய நன்கொடை வழங்கியுள்ள நிறுவனம் ஒன்று கடந்த மூன்று வருடங்களாக வரி கட்டாது இருப்பதுடன், கடந்த வருட கணக்கை இதுவரை சமர்ப்பிக்காது இருப்பதனால், நிறுவனங்களை நிர்வகிக்கும் கம்பனி கவுசினால் (company house) தடை செய்யப்படும் நிலையில் இருக்கின்றது.

வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களை விற்பனை செய்யும், வெளிநாட்டு நிறுவனமான 'லைகா மொபைல்', கொன்சவேடிவ் கட்சிக்கு ஒரு இலட்சத்து 36 ஆயிரத்து 180 பவுண்ஸ் (£136,180) நிதியை இந்த காலாண்டில் வழங்கியுள்ளது. இது கொன்சவேடிவ் கட்சிக்கு இந்த காலாண்டில் வழங்கப்பட்ட மூன்றாவது பெரிய தொகையாகும்.

ஆனால் அண்மையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் 'லைகா மொபைல்' 2008 முதல் 2010வரை எந்தவித வரியையும் செலுத்தவில்லை. ஆனால் 47 முதல் 88 மில்லியன் மொத்த வருமானத்தை இந்தக் காலப் பகுதியில் அது பெற்றிருக்கின்றது.

கடந்த வருடத்திற்கான கணக்கை இதுவரை சமர்ப்பிக்காத காரணத்தினால், 'லைகா மொபைல்' நிறுவனம்'' நிறுவனப் பதிவில் இருந்து நீக்கப்பட்டு, வர்த்தகம் மேற்கொள்ள தடை செய்யப்படுவதற்கான எச்சரிக்கையை ''கம்பனி கவுசிடம்'' இருந்து கடந்த மாதம் பெற்றுள்ளது. இருப்பினும் கடந்த மாதம் 'லைகா மொபைல்' எடுத்த முயற்சியினாலும், நிறுவனத்தை வளர்க்கின்றோம் எனக் காரணம் கூறியதாலும் இந்தத் தடை ஏற்பாடு தடுக்கப்பட்டுள்ளது.

கட்சிகளுக்கு வழங்கப்படும் நன்கொடை தொடர்பாக பரப்புரை மேற்கொண்டுவரும் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மான் (John Mann) இது பற்றிக் கூறுகையில், கொன்சவேடிவ் கட்சிக்கு நிதி வழங்க முடியும் என்றால், ஏன் வரி செலுத்த முடியாது எனக் கேள்வி எழுப்பியதுடன், கொன்சவேடிக் கட்சியேனும் வரி அறவிடும்இன்லான்ட் றெவெனியூவிற்கு (Inland Revenue) பணத்தைக் கொடுக்கலாம் எனச் சுட்டிக்காட்டினார்.

லண்டனில் டொக்லன்ட் பகுதியில் அமைந்துள்ள 'லைகா மொபைல்' நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ஆளும் அரசாங்கத்திலுள்ள அபிவிருத்தி அமைச்சர் அன்றூ மிச்சேல் (Andrew Mitchell), வர்த்தக அமைச்சர் வின்ஸ் கேபிள் (Vince Cable) ஆகியோருடன் எடுத்த நிழற்படங்கள் அவரது இணையத்தளத்தில் இடப்பட்டுள்ளன.

லண்டனின் தொழிற்கட்சி நகரபிதா வேட்பாளர் கென் லிவிங்ஸ்ரனுக்கு (Ken Livingstone) நிதி சேகரிப்பதற்காக கடந்த மாதம் மேபெயார் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்வில் 'லைகா மொபைல்' நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்த அதேவேளை, அவருக்கு ஒரு இலட்சம் (£100,000) பவுண்ஸ் நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்திருந்தனர். ஆனால் இவ்வாறு எந்தவித நிதியும் அவருக்கு வழங்கப்படவில்லை.

இந்த நிறுவனம் 2010ஆம் ஆண்டு 88 மில்லியனும், 2009ஆம் ஆண்டு 47 மில்லியனும், 2008ஆம் ஆண்டு 2.7 மில்லியன் பவுண்ஸ்சும் பிரித்தானியாவில் மொத்த வருமானமாகப் பெற்றிருக்கின்றது. ஆனாலும் இந்நிறுவனம் நட்டக்கணக்கை சமர்பித்த காரணத்தினால் வரி விலக்குப் பெற்றிருந்தது. 2008ஆம் ஆண்டு எட்டாயிரம் (£8,000) பவுண்ஸ்களை வரியாகச் செலுத்தி இருந்த போதிலும், இந்தத் தொகை அடுத்த ஆண்டில் மீளளிக்கப்பட்டிருந்தது.

அல்லிராஜாவின் கட்டுப்பாட்டில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களை விற்பனை செய்யும் 'லைகா ரெல்' என்ற இன்னொரு நிறுவனமும் இருப்பதுடன், 2008ஆம் ஆண்டு முதல் 2010வரை இந்த நிறுவனம் 260 மில்லியன் பவுண்ஸ்களை மொத்த வருமானமாகப் பெற்றிருக்கின்றது. ஆனால் இந்த நிறுவனமும் எந்தவித வரியையும் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டாருடன் பேசுவதற்கு மலிவான வெளிநாட்டு தொலைபேசி அழைப்புக்களைத் தேடி நாடும், வெளிநாட்டு வேலையாட்கள் மத்தியில் தொலைபேசி அழைப்பு விற்பனை பெரியளவில் இடம்பெறுகின்றது.

கடந்த ஜூலை மாதம் 'லைகா மொபைல்' வெளியிட்ட - இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசிற்கான அழைப்புக்கள் ஒரு பெனி (1p) என்ற விளம்பரம் பிரித்தானிய விளம்பரக் கட்டுப்பாட்டாளர்களால் (The Advertising Standards Authority - ASA) தடை செய்யப்பட்டது. கொள்வனவாளர்களுக்கு பிழையான தகவலை வழங்குவதாகவும், 15 நிமிடங்களின் பின்னர் கட்டணம் அதிகரிப்பதாகவும் கூறியே இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 'லைகா மொபைல்' வெளியிட்ட வெளிநாடுகளுக்கு அரைப்பெனி (1/2p) என்ற விளம்பரமும் தடை செய்யப்பட்டது. (இதேபோன்று கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 'லைகா மொபைலின்' மற்றொரு நிறுவனமான ஜி.ரி மொபைலின் (GT Mobile) விளம்பரமும் தடை செய்யப்பட்டது.)

இது பற்றிக் கருத்துக்கூறிய 'லைகா மொபைல்' நிறுவனத்தின் பேச்சாளர், தாம் அனைத்து வரிகளையும் செலுத்தி விட்டதாகக் கூறினார். 2009-2010 வரை 'லைகா மொபைல் யூ.கே விமிட்டட்' தனது வர்த்தகத்தை விருத்தி செய்த காரணத்தினால், வரி செலுத்துமாறு தம்மிடம் கேட்கப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார். கடந்த வருடத்திற்கான கணக்கை ஏர்னஸ்ட் அன்ட் யங் (Ernst & Young) கணக்காளர்கள் அவதானமாகச் செய்வதால் சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

கென் லிவிங்ஸ்ரனின் நிதி சேகரிப்பு நிகழ்விற்கு சென்று, நன்கொடை வழங்குவது பற்றி பேசியமை தொடர்பாகக் கருத்துரைத்த அவர், பல்லாயிரக் கணக்கானவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் யாராவது அரசியல் நிகழ்வுகளுக்கு, அல்லது பொது நிழ்விற்குச் செல்வது வழக்கம்தானே என பதில் வழங்கினார்.

லைகா மொபைல் நிறுவனம் பிரித்தானியாவில் மட்டுமன்றி பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தனது வர்த்தகத்தை நடத்திவருவது தெரிந்ததே

நன்றி-பொங்கு தமிழ் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் வருமானத்தைப் பெறும் தமிழ் நிறுவனம், நாணயமான முறையில் வரியை கட்டி தொழிலை மேம்படுத்துவதை விடுத்து,

அரசியல் கட்சிகளுக்கு பணத்தைக் கொடுத்து ஏன் குறுக்கு வழியில் போகின்றார்கள்.

கார்டியனில் இந்தச் செய்தி வந்ததன் மூலம், அவர்கள் சேர்த்து வைத்த நம்பகத் தன்மையை... கேள்விக்குறியாக்கி விட்டார்களே.

  • தொடங்கியவர்

என்ன செய்வது பணத்தாசை யாரை விட்டது.

Edited by ukkarikalan

www.guardian.co.uk இணையத் தளத்தில் இது தொடர்பான தகவல்களைக் காண முடியவில்லை. இவ்விணையத் தளத்தில் Lyca, lycamobile போன்ற சொற்களில் தேடுதல் செய்தபோது எந்தச் செய்தியும் வரவில்லை.

நன்கொடை கொடுத்திருக்கிற கட்சியை பாரு...

எங்கட விசயத்தில மட்டும் வெளிநாட்டுக்காரன் "இடதுசாரி" அரசியலை பின்பற்ற வேணும். ஆனா எங்கட விசயம் முடிஞ்ச பிறகு நாங்கள் "வலதுசாரியள்" மாதிரி சிந்திப்பம்.

நான் படிக்கின்ற காலத்தில என்னுடைய ஆசரியர் சொன்ன ஒரு வசனம் நினைவிற்க்கு வருகிறது.

ஒரு வெளிநாட்டவனக்கு எதிரி இன்னொரு வெளிநாட்டவன் தான். நாங்கள் உள்ள வரலாம்.வந்த பிறகு வேற ஒருத்தன் உள்ளவர அனுமதிக்கமாட்டோம்.

www.guardian.co.uk இணையத் தளத்தில் இது தொடர்பான தகவல்களைக் காண முடியவில்லை. இவ்விணையத் தளத்தில் Lyca, lycamobile போன்ற சொற்களில் தேடுதல் செய்தபோது எந்தச் செய்தியும் வரவில்லை.

http://www.guardian.co.uk/politics/2012/apr/23/tories-third-largest-donor-tax?INTCMP=SRCH

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே USA இல் ஒரு மொபைல் கம்பனியே வரி கட்டவில்லை ஒரு விசாரணைக்கு கூப்பிடிருக்கிரார்கள். உண்மையில் இந்த தொலைபேசி, கேபிள் என்பன, சாராயம் சிகரட் மாதிரி அரசாங்கங்களுக்கு நல்ல வருமானம் கொடுக்கும் துறைகள். அமைச்சர்களுக்கும்- ராசா ...................

என்ன செய்வது கடைசில் எங்களைமாதிரி-பொது மக்கள் - ஆக்கள்தான் எல்லத்திர்ற்கும் படி அளக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வருமானவரி, விற்பனைவரி செலுத்தாமல் அதிக நாட்களுக்கு வர்த்தகம் செய்யமுடியாது.

மிகப்பெரிய நிறுவனங்கள் இங்கே வரி ஏய்ப்பில் முன் நிற்பது நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும்

சாதாரண குடிமக்களிடம் அறவிடும் வருமானவரிக்கே அதைச்செலுத்தத் தவறினால் தண்டப்பணம் அறவிடுபவர்கள இவர்களை விடுவார்களா??

  • கருத்துக்கள உறவுகள்

லைகா மொபைல் வைத்திருப்பவர்களுடன் ஏனையவர்கள் தொடர்பு கொள்ளும்போது அதிக பணம் அறவிடப்படுகின்றது. லைகா ரு லைகாவுக்கே அந்த மொபைல் லாயக்கு. நான் தெரியாமல் ஒருவருடன் கதைத்து அனியாயமாக பணத்தை இழந்ததுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

லைகா மொபைல் வைத்திருப்பவர்களுடன் ஏனையவர்கள் தொடர்பு கொள்ளும்போது அதிக பணம் அறவிடப்படுகின்றது. லைகா ரு லைகாவுக்கே அந்த மொபைல் லாயக்கு. நான் தெரியாமல் ஒருவருடன் கதைத்து அனியாயமாக பணத்தை இழந்ததுதான் மிச்சம்.

கரு,

இது, எல்லா தொலைபேசி நிறுவனங்களும் வழமையாக கடைப்பிடிக்கும் நடைமுறை தான்.

இங்கு ஒரே... நிறுவனத்தை சேர்ந்த, கைத்தொலை பேசிக்கு அழைப்பு ஏற்படுத்தும் போது மூன்று சதமும், மற்றைய நிறுவனத்தின் அட்டையை பாவிப்பவர்களுக்கு பன்னிரண்டு சதமும் அறவிடப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரங்களை நம்பி ஏமாறுபவர்கள் பலர்.

உள்ளே நிறைய விடயங்களை வைத்துக் கொண்டு மேலோட்டமாக

விளம்பரம் செய்வார்கள்.

எல்லாவற்றையும் சோதித்துத் தான் வாங்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.