Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள்

விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற சிறுவர் இல்லங்களில் வளர்ந்த பல பிள்ளைகள் தற்போது பிற இல்லங்களிலும் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறவினர்கள் எனச்சொல்லிக் கொள்ளவோ ஆதரவு கொடுக்கவோ ஆட்களில்லாத பிள்ளைகள் நிரந்தரமாக பல பராமரிப்பில்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்க உறவினர்கள் உள்ள பிள்ளைகள் பலர் தங்களது உறவினர்களுடன் வாழ்கிறார்கள்.

இல்லங்களில் வாழ்கிற பிள்ளைகள் போன்று வெளியில் வாழ்கிற பிள்ளைகளை பராமரிக்கிற உறவுகளால் இந்தப்பிள்ளைகளிற்கான கல்வியையோ அல்லது வசதியையோ வழங்க முடியாத நிலமையில் இருக்கின்றனர். இத்தகைய நிலமையில் உள்ள பிள்ளைகளை இனங்கண்டு நேசக்கரம் தன்னாலான ஆதரவினை வழங்கிவருகிறது.

அண்மையில் கிழக்கு மாகாணத்தின் ஊரொன்றில் இருந்து 3செஞ்சொலையில் வளர்ந்த பிள்ளைகளும் 2காந்தரூபன் அறிவுச்சோலையில் வளர்ந்த பிள்ளைகளும் எம்மிடம் உதவிக்கு வந்திருந்தனர். இப்பிள்ளைகளைப் பராமரிக்கும் உறவுகள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலமையில் இருப்பதால் சாதாரண தரம் உயர்தரம் கற்பதற்கான சிறந்த பெறுபேறுகள் கிடைத்தும் இப்பிள்ளைகளால் பாடசாலைக்குப் போகவோ படிக்கவோ முடியாத நிலமையில் இருக்கிறார்கள்.

மேற்படி 5பிள்ளைகளுக்குமான அடிப்படை வசதிகளும் பள்ளி சென்றுவர சயிக்கிள்களும் தேவையான உடுப்புகளும் முதற்கட்டம் வழங்கி பிள்ளைகள் பாடசாலை போவதற்கான ஒழுங்குகளும் செய்து கொடுத்துள்ளோம். முதல்கட்ட தேவையாக இலங்கைரூபா 80ஆயிரம் வழங்கி மேற்படி ஒழுங்குகளை செய்து கொடுத்துள்ளோம்.

P180412_1650.jpg

இந்தப்பிள்ளைகளின் அவரச தேவைகளை நிறைவேற்றிய எம்மால் தொடர்ந்த கல்வியை வழங்கவும் அவர்களது எதிர்காலத்தை சிறப்புறச் செய்யவும் உறவுகளாகிய உலகத்தமிழர்களிடம் உதவிகளை வேண்டுகிறோம். ஓவ்வோரு பிள்ளையை ஒவ்வொருவர் பொறுப்பேற்று அவர்களது எதிர்காலம் சிறக்க உதவுவீர்களென நம்புகிறோம்.

சிறுவர் இல்லங்களுக்கு உதாரணமாக அமைந்திருந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களில் வளர்ந்த பல பிள்ளைகள் தங்களுக்கு பழைய மாதிரி ஜெனிப்பெரியம்மாவோடும் மாமாவோடும் வாழ வேண்டுமென்ற கனவுகளோடே வாழ்கின்றனர். ஜெனிப்பெரியம்மாவும் மாமாவும் இந்தப்பிள்ளைகள் எல்லோரும் உலகுக்கே உதாரணமாக வாழ வேண்டுமென்பதே. அவர்களது கனவுகள் நனவாக இந்தப் பிள்ளைகள் வாழ்வு சிறக்க உறவுகளே உதவுங்கள்.

பெற்ற உதவிக்கு பிள்ளைகள் எழுதிய கடிதங்கள் :-

jeevarani.jpg

jejymathy1.jpg

vijayalaxmi1.jpg

vijayalaxmi2.jpg

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க தொடர்புகளுக்கு :-

உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய தலைவரின் கருணைப் பார்வையின் கீழ் வாழ்ந்த இந்தக் குழந்தைகளின் இன்றைய நிலை.. பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது. இவர்களை இன்று பலரும் தமக்கான பகடைக்காய்களாக பாவித்து வரும் நிலையில்.. இந்தச் செய்தி எவ்வளவு உண்மையானது...????!

இப்படியும் ஒரு செய்தி வெளியாகியுள்ளதே..???!

KP, Gotabhaya eye on Tamil children by hijacking LTTE institution names

[TamilNet, Friday, 27 April 2012, 01:24 GMT]

Following a court order to close down two KP-run centres for war orphans in Vanni for their mismanagement, Selvarasa Pathmanathan alias KP, functioning in the custody of Gotabhaya Rajapaksa, and the SL Defence Establishment plan returning with their ‘child management’ activities by exploiting the names of the former social institutions of the LTTE, news sources in Vanni said. By using the names, they also aim at claiming funds from international donors and attracting money from gullible sections in the diaspora, the news sources further said. The district judge of Mullaiththeevu, Mr. Prabhakaran has recently ordered the closure of the KP-run orphanages after finding serious mismanagement and fearing abuse of children. But on Thursday, backed by SL Military, KP opened another orphanage at Mu’l’liyava’lai, in the name of a former LTTE facility.

Two KP-run orphanages in Jaffna and Point Pedro were also closed down earlier and the children were transferred to other safe centres after courts found them mismanaged. The orders were made despite threats from sources close to SL Defence Establishment.

The two KP-run centres closed down in Vanni were repeatedly warned about their lack of basic facilities and over-crowded accommodation. But the management of the centres, citing its close connections with the SL Defence Establishment, used to threaten the civil welfare officials pointing to such issues.

Even when a case was filed at the Mullaiththeevu District Court, the management of the centres failed to answer queries. The district judge, finding valid reasons, ordered the closure of the orphanages.

In retaliation, KP now thinks of reviving his activities through opening new centres, using the names of the former LTTE institutions for children and elderly, such as Bharathi Chi’ruvar Illam, Kaantharoopan A’rivuch Choalai, Chegnchoalai, Punitha Poomi etc.

He plans six to ten such centres, news sources in Vanni said.

The SL Defence Establishment that usually frowns at any traces of the LTTE has given special permission to KP to revive these names, the sources further said.

http://www.tamilnet....=13&artid=35129

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு என்னால் இணைக்கப்பட்ட பிள்ளைகள் எந்த அரசியல்வாதியுடனும் அரசியல் செய்யவில்லை. சிறுமிகள் இவர்கள் தமது உறவினர்களுடன் வாழ்கின்றனர். நல்ல பெறுபேறுகள் கிடைத்தும் கல்வியை தொடர முடியாத நிலமையில் அவலப்பட்டார்கள். அவர்களை இனங்கண்டு அவர்களுக்கான முதற்கட்ட உதவியினை தனித்து செய்துள்ளேன்.

செய்தியில் குறிப்பிட்டுள்ளேன் உறவினர்கள் இல்லாத வேறெங்கும் செல்ல முடியாத பிள்ளைகளே இக்கட்டான நிலமையில் சிக்கியுள்ளார்கள். நெடுக்காலைபோவானும் நெடுக்காலைபோவானின் கருத்தை ஏற்றுக்கொள்கிற கருணையாளர்களும் தலைவரின் கனவை மெய்யாக்க ஒவ்வொரு பிள்ளைக்கான வாழ்வை பொறுப்பேற்று வழங்கினால் அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும்.

சிறு அணிலாய் எனது பங்கை செய்திருக்கிறேன். மீதியான இப்பிள்ளைகளின் வாழ்வை மாற்றியமைக்க மனிதநேயமிக்க யாராவது வருவார்கள் என்ற நம்பிக்கையில் இச்செய்தியையும் தந்துள்ளேன் முடிவு மனிதநேயர்கள் கையில்.

தக்க தருணத்தில் கிடைக்காத உணவும் பாதுகாப்பும் எத்தனை வீரங்களாலும் வெல்ல முடியாதது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் அண்ணா மாதிரியான ஆட்கள் தாங்கள் உதவி செய்ய மாட்டார்கள் செய்யிற மத்த ஆட்களையும் செய்ய விட மாட்டினம் என அக்கா.அது சரி அக்கா ஏனக்கா நீங்கள் கொண்டு வந்து போடுற கடிதம் எல்லாம் ஒரே மாதிரி கையெழுத்தாய் இருக்குது கேட்டனான் என்டு கோபிக்காதிங்கோ சரியா

நெடுக்காலபோவான் அண்ணா மாதிரியான ஆட்கள் தாங்கள் உதவி செய்ய மாட்டார்கள் செய்யிற மத்த ஆட்களையும் செய்ய விட மாட்டினம் என அக்கா.அது சரி அக்கா ஏனக்கா நீங்கள் கொண்டு வந்து போடுற கடிதம் எல்லாம் ஒரே மாதிரி கையெழுத்தாய் இருக்குது கேட்டனான் என்டு கோபிக்காதிங்கோ சரியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோகுலன் இந்த 3பிள்ளைகளும் தனித்தனியாகவே கடிதம் எழுதியுள்ளார்கள். இதில் எப்படி ஒரேமாதிரியாக கையெழுத்து உங்கள் கண்ணுக்கு தெரிகிறதென புரியவில்லை. வேணுமெண்டா பிள்ளையளோடை கதைச்சு தெளிவை கேட்கிறீங்களோ ?

உதவி பெற்றுக்கொள்கிறவர்கள் ஒவ்வொருவரின் தொடர்பையும் தருகிறேன் கோகுலன் உங்கள் சந்தேகத்தை அவர்களிடமே நேரடியாக கேட்டால் உங்களுக்கும் மனம் அமைதியடையும் கதைக்கிறீங்களோ ?

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கும் தங்கள் சேவைக்கும் சாந்தியக்கா.

ஆனால் பெண் பிள்ளைகளின் படத்தை போட்டது சரியாகப்படவில்லை.

மற்றும் யாழ் கள உறவுகள் அனைவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை செயற்படுத்தணும் என்று எனக்கு ஆசை.

முடிந்தால் ஆரம்பியுங்கள்.

எனது ஆதரவு என்றும் உண்டு.

நெடுக்காலபோவானின் கேள்வி தேவையில்லாத சந்தேகங்களுக்கு இடமில்லாமல் செய்திருக்கின்றது.

சரியான வழிமுறைகள் மூலம் உதவி செய்வது உதவிசெய்வதற்கு ஈடாக முக்கியமானது.

தொடர்ந்தும் உதவுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறுதுளி பெருவெள்ளம்.

எமது சிறார்களின் கல்வியை மேம்படுத்துவதன் ஊடாக அவர்களதும் அவர்கள் சார்ந்த அனைவரதும் பிரச்சினைகளைக்களையமுடியும்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருடன் பேசியபோது..

தனது வீட்டுக்கு உடுப்புத்தோய்க்க வரும் ஒருவர் தன்னிடம் ஒரு உதவி கேட்டாராம்.

எனது பெண் பிள்ளை ஒன்றை உங்கள் தயவில் நல்ல பாடசாலையில் சேர்த்துவிடுங்கள் என்று. தானும் அதைச்செய்து விட்டதாக. இன்று அந்தக்குடும்பத்தில் எல்லோருமே பெரிய படிப்பு படித்தவர்கள் மட்டுமல்ல அதில் ஒருவர் தன்னுடனேயே இன்று பேராசிரியையாக பணி புரிகிறார் என்று.

புலம் பெயர்ந்த நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை.

ஒருவரை படிப்பித்து விடுங்கள் என்றார்.

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் யாழ் கள உறவுகள் அனைவரும் சேர்ந்து ஒரு திட்டத்தை செயற்படுத்தணும் என்று எனக்கு ஆசை.

முடிந்தால் ஆரம்பியுங்கள்.

எனது ஆதரவு என்றும் உண்டு.

நன்றிகள் விசுகு உங்கள் கருத்திற்கு. ஏற்கனவே பல திட்ட முன்னெடுப்புகள் ஆரம்பித்ததும் வருகிற ஆதரவு வாக்குகள் செயற்பாட்டிற்க வருகிற போது ஆட்கள் காணாமற்போய்விடுகிற அனுபவங்கள் நிறைய கடந்த காலங்களில்.

ஆயினும் உங்கள் வேண்டுகோளின்படி இப்போதே கையில் உள்ள 100பிள்ளைகளுக்கான கல்வியுதவியை நடைமுறைப்படுத்துவோமா ? அதற்கான ஆதரவினை கள உறவுகளும் இதனை வாசிக்கும் வாசகர்களும் இணைந்து செய்வீர்களாயின் அதனை முன்னெடுப்போம்.

கல்வியுதவியை வேண்டிநிற்கிற 100பிள்ளைகளும் மாவீரர்களின் பிள்ளைகள் , சிறைகளில் வாடுகிற போராளிகளின் பிள்ளைகள் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லீம் மலையக உறவுகளின் பிள்ளைகளும் இத்திட்டத்தில் அடங்குகின்றனர்.

இவர்களில் ஒருவருக்கான மாதாந்த கல்விச்செலவு சாதாரண தரம் வரையான பிள்ளைகளுக்கு 10€ உயர்தரம் கற்கிற பிள்ளைகளுக்கு 15€ தேவை. இதனை பொறுப்பேற்கிற உறவுகள் அவரவர் நேரடியாகவே வழங்கி பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டினை உயர்த்தலாம்.

நாங்கள் விரும்புகிற விடயங்களை நமது பிள்ளைகளின் கல்வி மே;பாட்டின் மூலமே உயர்த்தலாம். அதற்கான அடிக்கற்கள் இந்த மாணவர்கள். இவர்களை சரியான முறையில்சரியான கல்வியை வழங்கி நமது இலக்கை எட்டுவதற்கான படிகளை சென்றடையலாம்.

நீண்டகாலம் சிறைகளில் வாழ்கிற தந்தையர்களின் பிள்ளைகளின் கல்வி நிலமை மிகவும் மோசமாக உள்ளது. இவ்வுதவியை ஒவ்வோருவரும் முன்வந்து செய்யுங்கள் என இத்தால் வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Itula oraloda padipukku evlavu mudiyum?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Itula oraloda padipukku evlavu mudiyum?

SUNDHAL,

இவர்களில் ஒருவருக்கான மாதாந்த கல்விச்செலவு சாதாரண தரம் வரையான பிள்ளைகளுக்கு 10€ உயர்தரம் கற்கிற பிள்ளைகளுக்கு 15€ தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

Sari...... Ithula neengal sollura oraloda poruppa edukkuran.........

வவுனியாவில் மேரி மற்றும் இமல்டா என்ற சிஸ்டர் இடம் 180 செஞ்சோலை பிள்ளைகள் வைத்து பரமறிகின்றனர் இதை நீங்கள் கேள்வி பட்டிர்களா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவது டன்பொஸ்கோ நிறுவனத்தின் பொறுப்பில் உள்ளவர்கள். இல்லத்தில் இருக்கிற பிள்ளைகளுக்கு கல்வியும் வசதிகளும் கிடைக்கிறது. இதர சிலகாரணங்களாலும் உறவினர்களுடன் போய் வாழ்கிற பிள்ளைகள் பலரது நிலமை மிகுந்த துயரத்துக்கு உரியதாக உள்ளது. அதுவும் குறிப்பாக பெண்பிள்ளைகளின் நிலமை.இம்மூன்று பிள்ளைகளும் நீங்கள் குறிப்பிடுகிற இடத்தில் இருந்துதான் வெளியேறி உறவினர்களுடன் இணைந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் வளர்ந்த விஜெயலக்சுமியையும் அவரது தம்பிகளையும் கனடாவிலிருந்து ****என்ற உறவு பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல எம்மிடம் கல்வியுதவிகோரியிருக்கும் ஒரு குடும்பத்தின் பிள்ளையொன்றினை கள உறவு சுண்டல் பொறுப்பேற்றுள்ளார்.

லண்டனிலிருந்து நந்தன் என்ற உறவு தனது நண்பர்களையும் இணைத்து 5பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ளார். (5பிள்ளைகளும் மாவீரர்களின் பிள்ளைகள்)

இதுவரை 9பிள்ளைகளுக்கான கல்வியுதவியை முன்வந்து பொறுப்பேற்ற சயந்தன்(கனடா) சுண்டல், நந்தன் (பிரித்தானியா) ஆகியோருக்கு இதயம் நிறைந்த நன்றிகள். இன்னும் 91 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கருணையுள்ளம் கொண்டோரே எங்களுக்காக வாழ்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்வியொளி ஏற்றுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான் அண்ணா மாதிரியான ஆட்கள் தாங்கள் உதவி செய்ய மாட்டார்கள் செய்யிற மத்த ஆட்களையும் செய்ய விட மாட்டினம் என அக்கா.

கோகுலன் ஒரு கருத்தோடை நிப்பாட்டீங்கள். சரி ஒரு பிள்ளைக்கு 10€ உதவி செய்வீங்களெண்ட நம்பிக்கையில உங்கடை மெயிலுக்காக காத்திருக்கிறேன். கோகுலன் சொல்லைவிட செயலை மட்டும் நம்புபவர் என்பதனை புரிந்தமையாயே எழுதுகிறேன்.

ஒரு குழந்தையின் எதிர்காலம் கோகுலன் உங்கள் உதவிக்காக காத்திருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் வளர்ந்த விஜெயலக்சுமியையும் அவரது தம்பிகளையும் ************என்ற உறவு பொறுப்பேற்றுள்ளார்.

அதேபோல எம்மிடம் கல்வியுதவிகோரியிருக்கும் ஒரு குடும்பத்தின் பிள்ளையொன்றினை கள உறவு சுண்டல் பொறுப்பேற்றுள்ளார்.

லண்டனிலிருந்து நந்தன் என்ற உறவு தனது நண்பர்களையும் இணைத்து 5பிள்ளைகளை பொறுப்பேற்றுள்ளார். (5பிள்ளைகளும் மாவீரர்களின் பிள்ளைகள்)

இதுவரை 9பிள்ளைகளுக்கான கல்வியுதவியை முன்வந்து பொறுப்பேற்ற சுண்டல், நந்தன் (பிரித்தானியா) ஆகியோருக்கு இதயம் நிறைந்த நன்றிகள். இன்னும் 96 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

கருணையுள்ளம் கொண்டோரே எங்களுக்காக வாழ்ந்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்வியொளி ஏற்றுங்கள்.

செஞ்சோலையில் வளர்ந்த விஜெயலக்சுமியையும் அவரது தம்பிகளையும் பொறுப்பேற்று உதவுவதாக முன்வந்த உறவு வன்னிமாவட்டத்திற்கு மட்டுமே உதவ தான் விரும்புவதாக இப்பிள்ளைகளுக்கு உதவ மறுத்துவிட்டார். யாராவது மாவட்ட பேதமின்றி உதவக்கூடியவர்கள் உதவுங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆதரவு என்றும் உண்டு.

உங்கள் ஆதரவினை வேண்டுகிறேன் விசுகு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.