Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட முடியாது : முஸ்லிம் காங்கிரஸ்

Featured Replies

தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட முடியாது : முஸ்லிம் காங்கிரஸ்

தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் முடிவுக்கு கட்சியின் உயர் பீடமும் இன்று அங்கீகாரம் வழங்கியதாகவும், அவர் குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

அதேவேளை தமது கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள், குறிப்பாக நிசாம் காரியப்பர் போன்றவர்கள், கட்சியின் முழுமையான இணக்கப்பாடு இல்லாமல் தான்தோன்றித்தனமாக இது போன்ற விடயங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் தமது கட்சிக் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸை அரசுக்கு வெளியே தள்ளிவிட வேண்டும் என்று தருணம் பார்த்திருக்கும் சக்திகளுக்கு இவை இடமளித்துவிடும் என்றும் அவர் கூறினார்.

http://www.bbc.co.uk...conmosque.shtml

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசலை ஒருபோதும் அகற்றக்கூடாது.

இறுதிவரை அதற்காக அத்தனை முஸ்லீம்களும் போராட வேண்டும்.

முடிந்தால் கூட்டமைப்பின் உதவியுடன் சகல தமிழ் மக்களையும் ஒருங்கிணைத்து

இன்னும் மிகப்பெரிய போராட்டமாக நடாத்தவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லமுடிவு

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசலை ஒருபோதும் அகற்றக்கூடாது.

இறுதிவரை அதற்காக அத்தனை முஸ்லீம்களும் போராட வேண்டும்.

முடிந்தால் கூட்டமைப்பின் உதவியுடன் சகல தமிழ் மக்களையும் ஒருங்கிணைத்து

இன்னும் மிகப்பெரிய போராட்டமாக நடாத்தவேண்டும்

உது தேள்வையில்லாத வேலை. அவையளுக்குள்ள ஆயிரமிருக்கும். நாம் ஏன் பிறத்தியார்போய் சும்மா மூக்கை நீட்டிக்கொண்டு நியாயம் பேசிக்கொண்டு கூட்டுச்சேர்ந்து போராட வெளிக்கிடவேணும். அவையள அவையின்ர பாட்டில விடுங்கோ. அதுதான் இலங்கைக்கு நல்லது.

  • தொடங்கியவர்

முஸ்லிம் காங்கிரஸை அரசுக்கு வெளியே தள்ளிவிட வேண்டும் என்று தருணம் பார்த்திருக்கும் சக்திகளுக்கு இவை இடமளித்துவிடும் என்றும் அவர் கூறினார்.

ஒரு மாதிரி மகிந்தாவை கட்டிப்பிடித்து மீண்டும் அந்த வேதாளத்தில் ஏறும் கதைதான். பார்க்கலாம் வரலாற்று சந்தர்ப்பத்தை முஸ்லீம் காங்கிரஸ் பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் நீதிக்கு போராடுமா இல்லையா என்று.

தமிழர் போராடுவதற்கான நிறையத் தேவைகள் இருக்கின்றன. ஹக்கீம் தனது முடிவைச் செயற்படுத்தலாம். முஸ்லிம்கள் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை. ஆதலால் இப்போதைக்குத் தமிழர்கள் மௌனமாகவிருப்பதே சிறந்தது.

தமிழர் போராடுவதற்கான நிறையத் தேவைகள் இருக்கின்றன. ஹக்கீம் தனது முடிவைச் செயற்படுத்தலாம். முஸ்லிம்கள் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை. ஆதலால் இப்போதைக்குத் தமிழர்கள் மௌனமாகவிருப்பதே சிறந்தது.

தமிழர் இதில் போராட வேண்டுமா? எதுக்கு? சிங்களத்துக்கு எதிரானது என்பதாலா அல்லது இன்னொரு சிறுபான்மை என்பதினாலா?

முதல்ல எங்களுடன் சேர்ந்து எங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள அவர்கள் தயாரா?

தமிழர் இதில்  போராட வேண்டுமா? எதுக்கு? சிங்களத்துக்கு எதிரானது என்பதாலா அல்லது இன்னொரு சிறுபான்மை என்பதினாலா?

முதல்ல எங்களுடன் சேர்ந்து எங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள அவர்கள் தயாரா?

தமிழர்கள் தங்களுக்காகப் போராடுவதற்கு நிறையத் தேவைகள் இருக்கின்றன. இப்படித்தான் எனது கருத்து இருக்க வேண்டும். பிழையாக எழுதப்பட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழ் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் வன்னியசிங்கம் இராசவரோதயம் போன்ற ஒரிரு தலைவர்களுக்குப் பின்னர் முழுமையான வடக்கு கிழக்கு மாகாணம் சமூக அரசியல் பற்றியும் முஸ்லிம் மக்கள் பற்றியும் அறிவும் தெளிவுமுள்ள தலைவராக நான் சம்பந்தனைத்தான் காண்கிறேன். சம்பந்தன் அவர்கள் முஸ்லிம் மக்களது போராட்டத்துக்கு தமிழர் கூட்டமைப்பின் சார்பாக ஆதரவு தெரிவிதிருக்கிறார். தமிழ் முஸ்லிம் உறவையும் வடகிழக்கு இணைப்பையும் மீழ உருவாக்குவதன் அடிப்படையில் திரு சம்பந்தன் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்போம்.

வடகிழக்கு இணைப்பும் தமிழ் முஸ்லிம் நல்லுறவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

sory

Edited by poet

ஆதரவு அறிக்கைகளை மட்டுமே இப்பேதைக்கு மேற்கொள்ளலாம். போராட்டங்களில் தமிழர்கள் ஈடுபடமாட்டார்கள். வடகிழக்கு இணைப்பென்பது வலிந்து செய்யப்பட வேண்டிய ஒன்று. அது தமிழ் மக்களாலோ முஸ்லிம் மக்களாலோ இணைந்து செய்யப்பட முடியாதது.

சிறிலங்கா அரசிற்கான முழு அழுத்தங்கள் அல்லது படைப்பிரயோகங்களால் மட்டுமே அதனைச் சாதிக்க முடியும். இவைகள் தமிழரிடமோ முஸ்லிம்களிடமோ இல்லை. நான் எதிர்பார்ப்பதெல்லாம்????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.