Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவள் ஒரு தேவதை.. கனவாகிப் போனவள்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது அழகைப்பார்த்தோ அந்தஸ்த்தைப் பார்த்தோ

பணக்காரன் ஏழை என்பதைப் பார்த்தோ வருவதில்லை.

அது வரும்போது தானாக வரும்.

ஏன் எதற்கு அப்படி வருகின்றது என்பதற்கு உண்மையான

காதலர்களிடம் கூட விளக்கம் இல்லை.

எனக்கென்னவோ.. உந்த கார்மோனின் வழியில்.. மதி இன்றி.. செல்வதிலும்....

நியூட்டனின் வழி.. ஜே சுவின் வழி.. விவேகானந்தரின் வழி.. அன்னை தெராசா வழி.. ஏன் மண்ணுக்காய் தம் வாழ்வு தொலைத்து.. உயிர் தந்த போராளிகளின் வழி.. (எந்த தேசத்தை சார்ந்த போராளிகளாயினும்.. அந்த தியாக மனப்பான்மை..பிடித்திருக்கிறது.. இதனை இங்கு தயவுசெய்து விவாதப் பொருளாக்க வேண்டாம்..) பிடித்திருக்கிறது..! அங்கு தொல்லைகளற்ற கூடிய சுதந்திரமும் இருக்கிறது..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 58
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதே மாதிரி காதலிக்கும் போது தங்களுக்கு ஏற்ற பொண்ணாய் பார்த்து காதலிக்க மாட்டார்கள் தங்களை விட அழகான பெட்டையைத் தான் காதலிப்பார்கள் அந்த பெட்டையளில் சிலர் இவர்களை கழட்டி விட்டுட்டு வேற வடிவான பெடியங்களை தேடிப் போறது வேற விசயம் :D [உடனே யாழில் வந்து கவிதை,கட்டுரை எழுதத் தொடங்கிடுவார்கள் :lol: ].

நான் நெடுக்ஸ்சுக்கு மாத்திரம் எழுதவில்லை யாழில் காதல் தோல்வியால் அவதிப்படுகின்ற அனைத்து ஆண்களுக்கும் தான் சேர்த்து எழுதினேன்...கவிதையின்/சுபேசுசின்/குட்டியின் திரியின் எழுதுவோம் என்டு பார்த்திட்டு கடைசியில் வேண்டாம் நெடுக்கரின் திரியில் ஈஸ் இந்த அழகைப் :rolleyes: பற்றி எழுதியதால் இதில் வந்து எழுதினேன்.

காதலில் தோல்வியுற்ற ஆண்களே உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் உங்களை விட அழகில் குறைந்த பெண்ணைக் காதலித்து அவள் உங்கள் காதலை ஏற்காமல் விட்டுருக்காளா?...ஆணோ/பெண்ணோ மனசைப் பார்த்து காதலித்து அந்தக் காதல் அதற்குப் பிறகு அந்த ஆணாலோ/பெண்ணாலோ பிரிந்திருக்கா?

அக்கா நான் பேரழகனோ.. பெரும் சினிமா நடிகனோ அல்ல. சாதாரண மனிதன். நான் யாரையும்.. என்னைக் காதலின்னு கெஞ்சிக் கொண்டதும் இல்லை. அவர்களா காதலிக்கிறம் என்றாங்க.. அப்புறம் அவங்களாகவே காதலிக்கல்லை என்றும் சொல்லுறாங்க. நான் அவற்றை எல்லாம் காதலாக உணர்ந்ததும் இல்லை. அதனால்.. அதற்காக எல்லாம் வருத்தப்படும் முட்டாளும் நான் கிடையாது. அதேபோல்.. அவங்க ஏன் காதலிக்கிறம் என்றாங்க... ஏன் இல்லை என்றாங்க என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்வதில்லை. அது அவங்கட பிரச்சனை என்றுவிட்டு போய்விடுவேன். அப்படிச் செய்பவர்களை பழிவாங்கும் எண்ணமும் என்னிடம் இல்லை. அவர்களின் தவறுக்கு அவர்களை நான் உடனவே மன்னித்துவிடுவேன். காரணம் அவர்களின் காதலும் சரி நடத்தையும் சரி என்னை ஈர்க்கும் வகையில் இருப்பதே இல்லை. அவர்கள் என்னை மன்னிக்கிறார்களோ இல்லையோ.. அதைப்பற்றி எல்லாம் நான் அலட்டிக் கொள்வதில்லை. நான் என்னளவில் நியாயமா இருக்கிறேனா என்பதைத் தான் உறுதி செய்ய முடியும். மற்றவர்களின் நடத்தைகளை நான் தீர்மானிக்கவோ மாற்றவோ முடியாது. அறிவுரை சொல்வதைத் தவிர..!

நிச்சயமாக என் எண்ணத்தை கருத்தை இயல்பை ஈர்க்கக் கூடிய குறைவிலா அன்பை.. அரவணைப்பை.. தரக் கூடிய.. காதல் உணர்த்தப்படின் நிச்சயம் அதை ஏற்றுக் கொள்ளவேன்..! மற்றும்படி.. கண்டதும் காதல்.. கனவில் காதல் இதை எல்லாம் நம்பும் சராசரி காதல் பித்தன் அல்ல நான்..!

அதுவரை.. நான் எப்போதும் எனக்கென்றான அதே குறும்போடு.. என் பாட்டில் போய்க்கிட்டே இருப்பேன். அந்த வகையில் அமைவதே கதைகளும் கவிதைகளும்..! என் நியாயத்தை விட என் குறும்பே என் ஆக்கங்களில் அதிகம்..! :):lol:

நான் எனக்கு என் வசதிக்கு ஏற்ப.. அழகா இருக்கிறேனா என்பதை மட்டுமே என்னளவில் உறுதி செய்து கொள்ள முடியும். அது மற்றவர்களுக்கு அழகற்று இருப்பதும்.. அழகாக இருப்பதும்.. அது அவரவர்களின் ரசனை.. மற்றும் மூளைச் செயற்பாடைப் பொறுத்தது..! அதற்காக எல்லாம் நான் ஏன் அதிகம் அளட்டிக்கனும்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

உங்கள் கருத்துடன் பொதுவாக உடன்பட்டாலும், இரண்டு விடயங்களில் முரண்படுகிறேன். ஒன்று இப்பவுள்ள அதிகமான பொடியன்கள் எதிர்கால வாழ்க்கையில் கவனமாக இருக்கிறார்கள். படித்த பெண்களை வீட்டில் வைத்திருக்காமல் வேலைக்கு அனுப்பி வசதியான வாழ்வு வாழ்வதையே விரும்புகிறார்கள். மற்றது, திருமணத்தின் பின் சேர்ந்து வாழ்வது அழகில் மாத்திரம் தங்கியில்லை.

பெண்கள் வேலைக்குப் போவது கூடுதலாக நடுத்தர,கஸ்டப்பட்ட குடும்பத்தில் நடக்கிறது...எத்தனையோ பெரிய படிப்பு படித்த பெண்கள் அடுப்படியில் தான் குந்தியிருக்கிறார்கள்...படித்த பெண்ணோ,படிக்காத பெண்ணோ கடைசியில் போவது குசினிக்குத் தானே[இதில் அவமானமில்லை] அப்படியிருக்கும் போது ஏன் ஆண்கள் கல்யாணம் பேசும் போது படித்த பெண் தான் வேண்டும் என சொல்கிறார்கள் இது தான் எனது கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி கவிதை,கட்டுரை எழுதுவதை நான் குறை சொல்லவில்லை.எல்லோரும் வாழ்க்கையில் ஒரு விதத்தில் தோல்வியடைந்து தான் இருப்பார்கள்...அனுபவங்களில் இருந்து தான் பாட‌ம் கற்க வேண்டும்...எங்கள் மன ஆறுதலுக்காக எழுதுவதில் தப்பேயில்லை...நான் முதல் எழுதிய கருத்து அப்படி பொருள்பட‌ இருந்ததென்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

ஒருவருக்கு இன்னொருவர் மீது காதல் வருவதற்கு வெளிப்புறத் தோற்றம் தான் முக்கிய கார‌ணம் அதற்குப் பிறகு தான் மற்ற குணங்கள் தங்களுக்குள் பொருந்தி வருகின்றா எனப் பார்க்கிறார்கள்...நான் முதலாவது பதிவில் கடைசியாக கேட்ட இரு கேள்விக்கும் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றே நினைக்கிறேன்...பெற்றோரால் பேசி செய்யும் திருமணங்களின் போது ஆண்கள் தங்களை விட‌ அழகில் குறைவான பெண்களைக் கட்டி பலர் சந்தோச‌மாகவும் சிலர் கஸ்ட‌ப்படுகின்றார்கள்...ஆனால் காதலித்து செய்யும் திருமணங்களில் 1% குறைவான ஆண்களே தங்களை விட‌ அழகு குறைந்த பெண்ணைக் கட்டியுள்ளனர் அதாவது மனசைப் பார்த்து கட்டியுள்ளார்கள்...அழகான பொண்டாட்டி கிடைத்த ஆண்கள் தான்

மற்ற பெட்டையளை கூட‌ சைட் அடிப்பார்கள் :lol:

//இதனை முழுமையாக அறிவதற்கு ரதிக்கு வாழ்க்கை அனுபவம் இன்னும் வேணும் என்று நினைக்கிறன்!//

இது என்டால் உண்மை தான் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் வேலைக்குப் போவது கூடுதலாக நடுத்தர,கஸ்டப்பட்ட குடும்பத்தில் நடக்கிறது...எத்தனையோ பெரிய படிப்பு படித்த பெண்கள் அடுப்படியில் தான் குந்தியிருக்கிறார்கள்...படித்த பெண்ணோ,படிக்காத பெண்ணோ கடைசியில் போவது குசினிக்குத் தானே[இதில் அவமானமில்லை] அப்படியிருக்கும் போது ஏன் ஆண்கள் கல்யாணம் பேசும் போது படித்த பெண் தான் வேண்டும் என சொல்கிறார்கள் இது தான் எனது கேள்வி?

நல்லா படிக்காத பெண்களும் வேலைக்குப் போறாங்க அக்கா.

அதுஇருக்க எம்மவர் ஒரு காலத்தில் படித்த மாப்பிள்ளை தேடினார்கள். காரணம்..அவருக்கு நல்ல வேலை.. வருவாய் இருக்கும்.. தங்கள் பெண்ணை நல்லா கவனிப்பார்கள் அவளும் செல்வச் செழிப்போடு வாழ்வாள் என்று. (அப்போதும் பெண்கள் நோகாமல் வீட்ட இருந்து வசதியோட வாழத்தான் வழி பார்த்தார்கள்.. இப்போதும் அதே..! ஆனால் வடிவம் தான் மாறியுள்ளது..! எமது பெண்களை சோம்பேறியாக்குவது.. எமது சமூக நடத்தைகளே ஆகும். பெண்களில் அநேகரும் இதனை விரும்பி ஏற்றுக் கொண்டு.. அப்புறம் விரும்பாத மாதிரி.. கதை கட்டுரை மட்டும் எழுதுகிறார்கள்.. போலிப் புரட்சி வாதம் பேசி.. தங்களை வெளி உலகில் நாலு பேர் பெயர் சொல்ல வைக்க முயல்கிறார். அது பெருமை என்ற போலி எண்ணத்தை வளர்த்துக் கொள்கிறார்கள்..!)

இன்று எம்மவர்கள் பார்ப்பது.. மாப்பிள்ளையின் விசாத் தகுதி. வெளிநாட்டில் நிரந்தர வதிவுரிமையோடு ஒரு மாப்பிள்ளை கிடைத்தால் போதும் கட்டி அனுப்பி விடுவார்கள். அகதிகளாக வந்து நிரந்தர வதிவுரிமை பெற்ற அநேகர் (எல்லோரும் அல்ல) ஊரில் சாதாரண தரமோ.. உயர் தரமோ அல்லது அதற்கு குறைவாகவே தான் படித்துவிட்டு வந்திருப்பார்கள். ஆனால் ஊரில் இருந்த பெண்கள் பலர் கல்வி கற்று பல்கலைக்கழக அல்லது வெளிவாரிப் பட்டங்கள் பெற்றுள்ளனர்.

மேலும்.... வெளிநாடுகளில்.. ஊரில் நிகழ்வது போல.. பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பினால் மட்டும் போதாது. பிள்ளையை பள்ளிக்கு கூட்டி வருதல்.. மீண்டும் அழைத்துச் செல்லுதல்.... பள்ளிச் செயற்பாடுகள் குறித்து ஆசிரியர்களோடு கலந்துரையாடல் செய்தல்.. என்று பல செயற்பாடுகளைச் செய்ய வேண்டி உள்ளது.

இதில்.. ஊரில் இருந்து ஒரு குறித்த அறிவோடு வந்துள்ள ஆண்களால் வினைத்திறனாகச் செயற்பட முடியாதுள்ளது. அதனால் தான் விசாவுக்காக இங்க வாறாள்.. சரி படித்த பொம்பிளையா இருந்தா பிள்ளைகளின் கல்வி நடவடிக்கையிலாவது உதவுவாள் என்று கூப்பிடினம் போல.

நான் இங்கே மேற்கு நாடுகளில் அவதானித்த அளவில் அநேக வீடுகளில் தாயே பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளோடு அதிகம் மிணக்கடுவதை காண்கிறேன். தந்தையர்.. வேலை வேலை.. ( வேலை என்னென்று கேட்க வேண்டாம்.. ஏதோ சம்பளம் வாற வேலை..) ஓடி வீடு வரும் போது.. பிள்ளைகள் தூங்கி விடுவார்கள். இந்த நிலையில் படித்த பொம்பிளை என்பது அநேகம் படிக்காத மாப்பிள்ளைகளுக்கு மிக முக்கியம்..! அதுதான் அப்படி கேட்கிறார்கள்.

எமது சமூகத்தில் திருமணம் என்பது ஒரு சமூக வியாபாரம்..! இதுதான் யதார்த்தமான உண்மை..! இந்தச் சமூகத்தில் திருமணம் செய்து வாழ்வதிலும் வாழா வெட்டியா இருப்பது மேல்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

அழகான பொண்டாட்டி கிடைத்த ஆண்கள் தான்

மற்ற பெட்டையளை கூட‌ சைட் அடிப்பார்கள் :lol:

நான் பார்த்த மட்டில் இது உண்மை.

அண்மையில் கூட தெரிந்த ஒருவரின் குடும்பத்திலும் இது நடந்தது. அவரிற்கு ஒரு தவறான ஒரு தொடர்பு ஏற்பட்டது. மனைவி மிக அழகி. தொடர்பு வைத்த புதிய பெண் அழகில்லாதவர்.

எமது சமூகத்தில் திருமணம் என்பது ஒரு சமூக வியாபாரம்..! இதுதான் யதார்த்தமான உண்மை..! இந்தச் சமூகத்தில் திருமணம் செய்து வாழ்வதிலும் வாழா வெட்டியா இருப்பது மேல்..! :):icon_idea:

எமது சமூகத்தில் திருமணம் என்பது சமூக வியாபாரம் என்பது உண்மை. இந்தத் தவறான வழிமுறையை மாற்ற உங்களைப் போன்ற சுய சிந்தனையுள்ள படித்த இளைஞர்கள் முன் வர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில் திருமணம் என்பது சமூக வியாபாரம் என்பது உண்மை. இந்தத் தவறான வழிமுறையை மாற்ற உங்களைப் போன்ற சுய சிந்தனையுள்ள படித்த இளைஞர்கள் முன் வர வேண்டும்.

நாங்க ஒரு சிலர் சமுதாயத்தை மாற்றவோ திருத்தவோ முடியாது. ஆனால் நாங்கள் இவர்களின் இந்த சமூக வியாபார ஒழுங்கிற்குள் கட்டுப்படாமல் வாழ்ந்து காட்டலாம்..! கேட்கிறார்களோ இல்லையோ.. இவர்களின் இந்த சமூக வியாபாரம் தொடர்பாக விழிப்புணர்வூட்டக் கூடிய கருத்துக்களைச் சொல்லலாம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

குட்டி கவிதை,கட்டுரை எழுதுவதை நான் குறை சொல்லவில்லை.எல்லோரும் வாழ்க்கையில் ஒரு விதத்தில் தோல்வியடைந்து தான் இருப்பார்கள்...அனுபவங்களில் இருந்து தான் பாட‌ம் கற்க வேண்டும்...எங்கள் மன ஆறுதலுக்காக எழுதுவதில் தப்பேயில்லை...நான் முதல் எழுதிய கருத்து அப்படி பொருள்பட‌ இருந்ததென்டால் அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

இதில எனிடம் மன்னிப்புக் கேட்குமளவிற்கு எதுவும் இல்லை ரதி!

ஒருவருக்கு இன்னொருவர் மீது காதல் வருவதற்கு வெளிப்புறத் தோற்றம் தான் முக்கிய கார‌ணம் அதற்குப் பிறகு தான் மற்ற குணங்கள் தங்களுக்குள் பொருந்தி வருகின்றா எனப் பார்க்கிறார்கள்...

வெளிப்புறத் தோற்றத்தைப் பார்த்ததும் முதலில் வருவது காதல் என்று சொல்ல முடியாது, அது வெறும் ஈர்ப்பாகவே இருக்குமென நினைக்கிறன்...

நான் முதலாவது பதிவில் கடைசியாக கேட்ட இரு கேள்விக்கும் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை என்றே நினைக்கிறேன்...பெற்றோரால் பேசி செய்யும் திருமணங்களின் போது ஆண்கள் தங்களை விட‌ அழகில் குறைவான பெண்களைக் கட்டி பலர் சந்தோச‌மாகவும் சிலர் கஸ்ட‌ப்படுகின்றார்கள்...ஆனால் காதலித்து செய்யும் திருமணங்களில் 1% குறைவான ஆண்களே தங்களை விட‌ அழகு குறைந்த பெண்ணைக் கட்டியுள்ளனர் அதாவது மனசைப் பார்த்து கட்டியுள்ளார்கள்...

மற்றவர்களைப் பற்றி எனக்கு முழுக்கத் தெரியாது, என்னைப் பொறுத்த வரையில் எனது தகுதிக்கு ஏற்ற அளவில் மட்டுமே நான் யோசிப்பது... தகுதிக்கு மேலானோரோடு பழகினாலும் என்னை எந்த இடத்தில வைத்திருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும்... (விரலுக்கு ஏற்ற வீக்கம் இருந்தால் தான் அந்த வலியை ஓரளவேனும் உள்வாங்க முடியும் என்று எனக்குத் தெரியும்... :) அதில be careful! என்னைச் சொன்னன் :lol: :D)

நீங்கள் கணக்குப்போட்ட 1 % க்கும் குறைவான ஆண்கள் பலர் உள்ளனர்... குறுகிய வட்டத்திற்குள் எங்கட சனங்களோட மட்டும் பழகாமல் எல்லாரோடும் பழகுங்கள் நிறைய தெரிந்து கொள்ளுவீர்கள்...

ஏன் பெண்கள் மட்டும் என்னவாம்? எத்தின % பெண்கள் மனசைப் பார்த்துக் காதலிக்கிறார்கள்?? :rolleyes:

படிப்பு, வேலை, கார்- (கார் என்றால் நாலு சில்லோட மட்டும் இருக்கக் கூடாது...) அது விலை உயர்ந்த காரா இருந்தால் தான் ஏறுவினமாம்..., :lol: வருசத்திற்கு 2 தரமாவது கோலிடேய்ஸ்.... காரே ஓடத் தெரியாத ஒரு பொடியனை எவளாச்சும் விரும்புவினமா? :huh:

அழகான பொண்டாட்டி கிடைத்த ஆண்கள் தான்

மற்ற பெட்டையளை கூட‌ சைட் அடிப்பார்கள் :lol:

கிளி மாதிரி ஒரு பொண்ணாட்டி இருக்க குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டிக்கு சில ஆண்களின் மனம் ஏனோ அலைவது உண்மை தான்... :rolleyes:

//இதனை முழுமையாக அறிவதற்கு ரதிக்கு வாழ்க்கை அனுபவம் இன்னும் வேணும் என்று நினைக்கிறன்!//

இது என்டால் உண்மை தான் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.