Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் - ஹக்கீம்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அரசாங்கத்திற்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தம்மிடம் கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக் கொள்வதற்கும் முயற்சி எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கோரிக்கைக்கு சாதகமான பதிலை வெளியிடுவார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகிக்குமாறு இந்திய எதிர்க்கட்சித் தலைவி, முஸ்லிம் காங்கிரஸிடம் கோரியமை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிலேயே இந்த விடயம் பற்றி அறியக் கிடைத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

http://globaltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

இது கடைசியில குரங்கு அப்பம் தின்ற கதையாத்தான் முடியப் போகுது. சர்வதேச மத்தியஸ்தம் வைச்சே ஒன்றும் கிழிக்க முடியல்ல.. இவர்.. மத்தியஸ்தம் வகிக்க முதல் தன்ர சமூகப் பிரச்சனைக்கு முதலில முக்கியத்துவம் கொடுக்கட்டும்..! அப்புறம் பிறகு பார்க்கலாம்..! :lol:

சர்வதேச மத்தியஸ்தம் இன்றிய கூட்டமைப்பின் எல்லா முயற்சிகளும் தோற்பது உறுதி..! :icon_idea:

ஹக்கீம் என்ற திருட்டுப் பேர்வழி குரங்கின் கையில் ஆப்பத்தைக் கொடுத்து பங்கு போடுமாறு கேட்குமளவுக்கு சம்பந்தரையும் கொலைகார சிங்கள அரசையும் மூடர்களாக எண்ணிக் கொண்டிருப்பது புலப்படுகிறது.

இந்த இரண்டு மூடர்களும் இசுலாமிய ஏமாற்றுப் பேர்வழிகளின் வலையில் சிக்குவார்களா?

இது கடைசியில குரங்கு அப்பம் தின்ற கதையாத்தான் முடியப் போகுது. சர்வதேச மத்தியஸ்தம் வைச்சே ஒன்றும் கிழிக்க முடியல்ல.. இவர்.. மத்தியஸ்தம் வகிக்க முதல் தன்ர சமூகப் பிரச்சனைக்கு முதலில முக்கியத்துவம் கொடுக்கட்டும்..! அப்புறம் பிறகு பார்க்கலாம்..! :lol:

சர்வதேச மத்தியஸ்தம் இன்றிய கூட்டமைப்பின் எல்லா முயற்சிகளும் தோற்பது உறுதி..! :icon_idea:

ஒரே நேரத்தில் இருவரின் மனதிலும் ஒரே எண்ணம் தோன்றியுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய வீட்டுப் பிரச்சினையே தீர்க்கமுடியாத தொப்பி.....அதைமறைக்க சம்பந்துவை வச்சு விளையாட னினைக்கிறான்....இது சுவிசில் வந்த நேரம்..அங்குள்ள இரண்டு மூன்று முதலமைச்சர் நினைப்பில் உள்ள சிலரின் யோசனையோ தெரியாது.....அம்மா மார் இப்பவே பிரச்சாரம் தொடங்கியாச்சாம் என்றும் கேள்வி...

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண முதலமைச்சராக நினைக்கிற எண்ணத்திலிருந்தே முஸ்லீம் காங்கிரஸ் எப்படிச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்கும் விடயத்தில் இவர்களை மத்தியஸ்தத்திற்கு விட்டால் எமது கதி அதோகதிதான். தோற்றுப்போய்ச் சுருண்டு கிடக்கும் சமூகம்தானே என்ற இளக்காரத்தில் இவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தைக் காட்ட வெளிக்கிடுகிறார்கள். பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பின் நிலையில் இருந்துகொண்டு அழைப்பு விடுக்கிறார்கள். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெற வைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது எதற்காக இனப்பிரச்சனைக்கான பேச்சு வார்த்தையில் ஹக்கீமின் மத்தியஸ்தம் என்பது தெரியவில்லை.

முஸ்லீம் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்து தமிழின அழிப்புக்கு அரசுடன் துணைபோய்க்கொண்டிருக்கும் ஹக்கீமைப் போன்றவர்களிடம் போய்க் கைகட்டி நின்று மத்தியஸ்த்தத்தை வேண்டி நிற்பது தமிழனுக்கு மானக்கேடு. அதைவிடச் சிங்களவர்கள் யாரையாவது உதவும்படி கேட்கலாம்.

முஸ்லீம் அரசியலும் அவர்களின் குரோத மனநிலையும் எப்படிப்பட்டதென்பதை வடக்கு மக்கள் பெரிதும் அறியமாட்டார்கள். கிழக்கு மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாரைவாழ் தமிழர்களே நன்கறிவார்கள். அப்பாவித் தமிழர்களைக் கொல்ல வந்த சிங்களப்படைகளுக்குக் குளிர்பானம் வழங்கி அவர்களை ஊர்களுக்குள் கூட்டிவந்து ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று குவிக்கத் துணைபோனதுமல்லாமல் அவர்களும் சேர்ந்து வெட்டித் தள்ளினார்கள். காரணமெதுவுமில்லாமலேயே அவர்களின் தமிழின விரோதச் செயற்பாடுகள் தொடங்கின. பிறகுதான் தமிழர்களும் வெகுண்டௌவேண்டியேற்பட்டது.

சமீபத்தைய காந்திசிலை, விவேகானந்தர்சிலை, விபுலானந்தர் சிலை உடைப்புக்களிலும் இராணுவத்துடன் இயங்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் கைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகின்றது. ஏன் தம்புள்ளைப'; பள்ளிவாசல் உடைப்பும் அரசாங்கத்தினதும் முஸ்லீம்களினதும் ஏதோ ஒரு கூட்டு அரசியல் ராஜதந்திர நடவடிக்கையென்றே எண்ணத் தோன்றுகின்றது. அயோத்திப் பள்ளிவாசல் உடைப்பையொத்த இந்த நிகழ்வினால் சில ராஜதந்திர நன்மைகளைப்பெற பெற அரசு முயல்வதுபோலவே தெரிகின்றது. ஹக்கீம் போன்றவர்கள் அதற்கு மறைமுக உடந்தையாக இருக்கக்கூடும்.

Edited by karu

லிபியா சிரியா போன்ற நாடுகளில் சென்று உங்கள் விளக்கை பிடியுங்கள் இலங்கையில் வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.