Jump to content

வணக்கம் யாழ்கள உறுப்பினர்களே


Recommended Posts

Posted

வருக , வருக மகம்..

வாருங்கள் தமிழின & தமிழீழ விடுதலைக்காக உழைப்போம்...

Posted

வைகோ மற்றும் மகம் இருவருக்கும் வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைகோ மற்றும் மகம் இருவருக்கும் வணக்கம்.

வைகோ,மகம் இருவரும் ஓரே ஆள் தான் இல்லா விட்டால் அரிச்சுவடியில் எத்தனை புது உறவுகளது பதிவு இருக்க எதற்காக தேடிப் போய் பழைய திரியை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் சொல்லுங்கோ பார்ப்போம் :lol::D:icon_idea:

Posted

வரவேற்பு வழங்கிய அன்பர்கள் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த நன்றிகள்!

கருத்துகளின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடமுடியாது. எண்ணம்> சொல்> செயல் என்பற்றில், எண்ணம்[கருத்து] முதலாவதாக, மூலமாக,

எல்லாவற்றிற்கும் ஊற்றாக அமைகின்றது. கருத்துகளைத் துப்பாக்கிக்குண்டுகளாலும் துளைக்கமுடியாது என்பர்.. கிரேக்கஞானி சோக்கிரதர்,

யேசுகிறிஸ்து என்பவர்களின் கருத்துகளைக் கொல்வதற்காகவே அந்தக் கருதுக்காவிகளைக் கொன்றார்கள். எனினும் அவர்களின் கருத்துகள்

இன்றும் நிலைத்திருந்து உலகை ஆட்டிப்படைக்கின்றன.

"எண்ணங்கள்தான் மனிதர்களை உருவாக்குகின்றன. எனவே எவற்றை எண்ணுகிறோம் என்பதுபற்றிக் கவனமாக இருங்கள் " என்றார் சுவாமி

விவேகானந்தர் [ We are what our thoughts have made us. So take care of what you think ]. தலைவர் பிரபாகரனிடமும் போராடவேண்டும் என்ற

எண்ணம்தான் முதலில் வலுப்பெற்றிருக்கும். அமைப்புகளும் ஆயுதங்களும் பின்பு வந்தவையே. எனவே உன்னதகருத்துகளை எம்முள்ளே

கண்ணீர் ஊற்றி வளர்ப்போம். கண்ணீர் ஊற்றி வளர்ப்பவை உண்மையானவையாகவும் உரமானவையாகவும் அமையும்.

" வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் " [ திருக்குறள்:661 ]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கருத்து மகம், தொடர்ந்து இணைந்திருங்கள்

  • 2 weeks later...
Posted

வணக்கம்! வாங்கோ!

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுற / கடுங்காயமடையக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

* 146,000 இற்கு மேற்பட்ட தமிழர் காணாமல் போவதற்குக்,

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.