Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம்.

Featured Replies

ஐரோப்பாவில் இருப்பவை பெட்டிக் கடைகளே ஒழிய கோவில்கள் அல்ல.ஒரு சரக்குகள் களஞ்சியப் படுத்தும் இடத்தை மிகக் குறைந்த குத்தகைக்கு எடுக்கிறார்.பின்னர் அதைக் கோவில் எண்டு விளம்பரம் செய்கிறார்.ஒரு விக்கிரகத்தை வைக்கிறார், உண்டியலை வைக்கிறார்.மக்கள் வருகிறார்கள் உண்டியல் நிரம்புகிறது.பின்னார் உண்டியலின் வருமானத்திற்கு அமைய மீண்டும் அந்தக் கோவிலை அது தான் பெட்டிக் கடையய், கூடிய விலையில் இன்னொருவருக்கு குத்தகைக்கு குடுக்கிறார்.குறைந்த முதலில் கூடியா லாபம் பெறும் தொழில் இது ஒன்றே ஆகையால்,

கடை நடாத்தியவர்கள்,பெற்றோல் நிலையம் நடாத்தியவர்கள்,மதுபானக் கடை நடாத்தியவர்கள் எல்லோரும் இதைத் தான் கடசியாகச் செய்வார்கள்.

  • Replies 57
  • Views 9.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுண்டல் இங்கை வந்து அரோகரா போடாதையும் கோயிலடியிலை போய் போட்டாலும் அன்ன தானமாவது கிடைக்ககும் :P :P இதை படிக்க ஒண்டு விழங்கிது சும்மா கிடக்கிற பிரச்சனையை ஒரு வானொலி ஊதி பெரிசாக்கிது கடைசியிலை பிரச்சனை பெரிசாகி கொயிலை அவுஸ்ரேலியா அரசு இழுத.;து சாத்தாமல் விட்டால் சரி அதுசரி இதிலை சுண்டல் எந்த வானொலி 1 அல்லது 2 :wink: :wink:

சும்மா கிடக்கிற பிரச்சனை என்டு விட்டா புூனைக்கு யார் தான் மணி கட்டிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா இவையெல்லாம் நாம் புகுந்த இடங்கள். இதிலே எது பெரிது எது சிறிது என்று நாம் வாதிப்பதும், பெருமை கொள்ளவதும் பொருத்தமற்றது. அவுஸ்திரேலியா பெரிய நாடு. அங்கே எல்லாமே பெரியன. அதோடு ஐரோப்பாவை ஒப்பிடுவதும், கிண்டலடிப்பதும் எமக்குத் தேவையா?

"செய்யும் தொழிலே தெய்வம்" என்று தமிழில் ஓர் அருமையான பழமொழி இருக்கின்றது. கடை நடாத்துபவர்கள், பெற்றோல் நிலையம் நடாத்துபவர்கள், மதுபானக்கடைகள் வைத்திருப்பவர்கள் என்று அவர்களின் தொழிலைக்கொண்டு தரம்பிரித்தல் நாம் இன்னமும் முன்னேறவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

எம் முன்னோர் விட்ட தவறுகளை இளைஞர்கள் மீண்டும் விடாமல் இருக்கவேண்டும். தாயக வளர்ச்சிக்கும், உறவுகளின் முன்னேற்றத்திற்கும் புலம் பெயர்ந்த எம்மால் நல்லன எதுவும் செய்யமுடிந்தால் அதனை முழுமனத்தோடு அனைவரும் செய்யவேண்டும். இதுவே எனது அன்பான வேண்டுகோள்.

இக்கோவில் கொடியேற்ற நிகழ்வின் தொகுப்பு இன்று சிகரம் தொலைக்காட்சியில் பிற்பகல் 7மணி தொடங்கி 8மணி வரை காண்பிக்கப்படும்.வரும் திங்கள் மாலை 3.30 மணியிலிருந்து 4.30 வரை மீண்டும் மறுஓளிபரப்பாகும்.

கொடியேற்றப்படங்களினை முருகன் கோவில் இணையத்தளத்தில் காணலாம். படங்களினைப்பார்க்க கீழே உள்ள இணைப்பிற்குச் செல்லவும்.

http://www.sydneymurugan.org.au/gallery/gallery.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கோயில்களில் இந்தியன் பாடகர்களை அழைத்து சீடி, டீவீடி வெளியிடுகின்றார்கள். எப்பதான் இவர்கள் திருந்துவார்களோ தெரியாது . பொறுத்திருந்து பார்ப்போம்.

இங்கேயும் இதை மாதிரி தான் இந்தியா பாடகர்கள் அட்டகாசம் இருக்கு.ஒரு கண்துடைப்புக்கு தான் ஈழத்து கலைஞர்கள்.

தம்பி அது சரி இங்கேயுள்ளவனுக்கு கட்டாயம் அன்னதானம் தேவையா??????

ஊரிலே அன்னதானம் கோவிலில் வாங்கி சாப்பிட்டால் ஒரு மாதிரி பார்கிற ஆட்களும் உண்டு.இங்கே அவர்களும் சேர்ந்து அன்னதானம் வாங்க வரிசையில் நிற்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் பிரதான வீதியொன்றின் ஓரம் கோபுரத்துடன் விசாலமாக அமைந்திருக்கும் இக்கோயில் கோயில் சென்று வணங்க விரும்புகின்றவர்களுக்கு ஏற்ற இடம்

எழுதியது சயந்தன்

தம்பி அந்த கோயில் இருக்கும் இடத்தின் பெயர் வைகாசி குன்றுமுருகன் பெற்றோரிடம் சண்டை பிடித்து உலகம் சுற்றும் போது இங்கு தான் இளப்பாரி பிறகு கதிர்காம்த்துக்கு சென்றவர்.வெள்ளைகாரன் பிடித்த பிறகு தான் இதனை May hills என்று மாற்றிவிட்டார்கள்,

ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா இவையெல்லாம் நாம் புகுந்த இடங்கள். இதிலே எது பெரிது எது சிறிது என்று நாம் வாதிப்பதும், பெருமை கொள்ளவதும் பொருத்தமற்றது. அவுஸ்திரேலியா பெரிய நாடு. அங்கே எல்லாமே பெரியன. அதோடு ஐரோப்பாவை ஒப்பிடுவதும், கிண்டலடிப்பதும் எமக்குத் தேவையா?

"செய்யும் தொழிலே தெய்வம்" என்று தமிழில் ஓர் அருமையான பழமொழி இருக்கின்றது. கடை நடாத்துபவர்கள், பெற்றோல் நிலையம் நடாத்துபவர்கள், மதுபானக்கடைகள் வைத்திருப்பவர்கள் என்று அவர்களின் தொழிலைக்கொண்டு தரம்பிரித்தல் நாம் இன்னமும் முன்னேறவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.

எம் முன்னோர் விட்ட தவறுகளை இளைஞர்கள் மீண்டும் விடாமல் இருக்கவேண்டும். தாயக வளர்ச்சிக்கும், உறவுகளின் முன்னேற்றத்திற்கும் புலம் பெயர்ந்த எம்மால் நல்லன எதுவும் செய்யமுடிந்தால் அதனை முழுமனத்தோடு அனைவரும் செய்யவேண்டும். இதுவே எனது அன்பான வேண்டுகோள்.

செல்வமுது அவர்களுக்கு ஒரு விளக்கம்,

நான் கடை வைதிருப்பவரையோ அன்றி பெற்றோல் நிலயம் வைதிருப்பவரையோ குறைத்து எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை, இவற்றைப் போன்றது ஒரு வியாபாரமாகவே அதுவும் மிகவும் லாபம் தரும் வியாபாரமாக ஐரோப்பாவில் கோவில்கள் இருகின்றன என்பதயே சொன்னேன்.இவை ஒரு பொதுவான பொது அமைபின் கீழ் வர வேண்டும் என்று பிரித்தானியாவில் எடுக்கப் பட்ட முயற்ச்சிகளுக்கு சில கோவில்களில் என்ன நடந்தது என்பது எலோருக்கும் தெரிந்த விடயம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் வியாபாரத்திற்கும் இங்கே நல்ல கிராக்கி,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி சைவ நாயனார்கள் மீது சீற்றம் அடைந்துள்ளார்கள் பா சுவாமியின் சீடர்கள்.

இதற்கு காரணம் அண்மையில் வெளியான் சைவமாநாட்டு மலரில் ஒரு சிட்னி சைவநாயனார் எழுதிய ஆக்கம் தான் காரணம்.அவர் பின்வருமாரு தன் ஆக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதில் அவர் மனிதனாய் பிறந்தவனை கடவுளாக கும்பிடுவது தப்பு என்றும்.வாயில் இருந்து லிங்கம்,நகைகள்,கடிகாரம்,விபூ

புத்தன்

அப்படியே நம்ம பக்க வீரப்பிரதாபங்களையும் கொஞ்சம் எடுத்து விடுவோமா??

1) கோயில் கூடாது அது மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றது என்று அறிக்கை விடுவது. நாம் எந்த சமயத்தையும் ஆதரிக்க மாட்டோம் என்பது.

2) ஆனால் திருமணத்தின் போது கோயிலுக்கு சென்று இந்து முறைப்படி தாலி கட்டுவது.

3) கோயில்களில் நல்ல வருமானம் கிடைப்பதால் அவற்றை எல்லாம் தாமே நடத்த வேண்டுமென்று முன்னிற்பது. (அப்போது மட்டும் மூடநம்பிக்கை என்னாச்சு என்ற கேள்வி கேட்கக் கூடாது)

அடுத்தவனைக் குறை சொல்லும் முன் நாம் சரியாக நடந்து காட்ட வேண்டாமா???? :roll: :?: :idea: :arrow:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவனைக் குறை சொல்லும் முன் நாம் சரியாக நடந்து காட்ட வேண்டாமா????

வசம்பு எழுதியது

அது சரிதான்

  • கருத்துக்கள உறவுகள்

சாமியார் வியாபாரத்திற்கும் இங்கே நல்ல கிராக்கி,

ke ke ke அதான் நீங்களும் புத்தன் என்டு பேர் வைச்சிட்டிங்களா? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

3 வருடங்களுக்கு முன்பு இக்கோவில் திருவிழாவுக்குத் தென்னிந்தியாவில் இருந்து தான் நாதஸ்வரகோஸ்டியினர் வரவழைப்பார்கள். இப்பொழுது சில நிறுவாகிகள் ஏன் ஈழத்தில் இருந்து கலைஞர்களினை அழைக்ககூடாது என்று கேட்க ஈழத்திலிருந்து நாதஸ்வரக்கலைஞர்கள் அழைக்க ஆரம்பித்துள்ளார்கள்.

சிட்னியில் கட்டப்படும் அம்மன் கோவில் நிர்வாகத்தினர் தென்னிந்தியாப் பக்திப்பாடகர்களினை அழைத்துக் கச்சேரி செய்வதுண்டு. ஈழத்தில் புகழ் பெற்ற வர்ணராமேஸ்வரன் போன்றவர்களை இவர்களுக்குத் தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தேர்த்திருவிழா. திங்கள் கிழமையாக இருந்தும் பலர் வேலையிலிருந்து லீவு எடுத்து கோவிலுக்கு சென்றிருந்தார்கள்.

இக்கோவில் சைவ ஆகம முறைப்படி கட்டிய கோவில். சைவ சமயத்தில் இல்லாத இராமர், அனுமார், அய்யப்பனுக்கு இக்கோவிலில் சிலைகள் இல்லை. இங்கு கோவிலில் நடைபெறும் பஜனைகளில் சாயிபக்தர்கள், ராமரினையும்,அனுமாரினையும், முருகனுக்குப்பாடும்போது இடையே சாயி முருகா என்று பாட, பஜனைகளில் சாயி,ராமா, அனுமா என்று பாடுவது கோவில் நிற்வாகத்தினரால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சில தீவிர சாயி பக்தர்கள் கோவில் நிற்வாகத்தின் மீது கோபம் கொண்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நேற்றைக்கு சாப்பாடு எப்படி???எல்லோரும் அதற்கு வந்தவர்கள் போல சாமி இறக்க முன் சாப்பாட்டுக்கு வரிசையில நின்றவை கந்தப்பு தாங்கள் எப்படி????

  • கருத்துக்கள உறவுகள்

வசதி படைத்த இக்கோவில்(முருகன் கோவில்) வருடத்திற்கு 10000 டொலர் மட்டுமே ஈழத்துக்குச் செலவுசெய்கிறது உண்மையில் கவலையினத்தருகிறது.

புதிதாகக்கட்டப்பட்டு வரும் அம்மன் கோவில், வன்னியில் ஒரு நிறுவனமொன்றினை நிறுவி பல அனாதைப்பிள்ளைகளுக்கு உதவி செய்து வருகிறது. இக்கோவிலில் மாவீரர்களுக்குப்பூஜைகள் வருட வருடம் செய்யப்பட்டுவருகின்றன.

ஈழத்தமிழர்களினால் சைவசமயத்தில் இல்லாத அய்யப்பனுக்கும் கோவில் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலில் கட்டப்படும் கடவுள்களின் பெயர்கள் பாலமுருகன்,சிறிராமன்,அனுமார்

சிதா,லட்சுமனன், கருப்பனாசுவாமி...... யாரவது கருப்பனாசுவாமி என்று கேள்விபட்டிருக்கிறிர்களா? . வெகுவிரைவில் கேள்விப்படாத கடவுள்களுக்கும் புலம்பெயர்னாட்டுக்கோவில்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்நோபகவான் என்றொரு புதுக்கடவுள் சைவ சமயத்தில் தோன்ற இருக்கிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு என்னய்யா கூத்து உது பஜனையிலை சாயி முருகா ராம முருகா எண்ட எப்பிடி படிக்கலாம்??முருகனுக்கும் இவைக்கும் குடும்ப உறவுகூட இல்லை (கதைகளின்படி பார்த்தால்) அதைவிட முருகன் தமிழரார் கும்பிட படும் கடவுள் இராமரோ கட்டுகதை கடவுள் சாயி கள்ள கடவுள்: இதெல்லாத்தையும் போட்டு குழப்பி எங்கடை சனமும் குழம்பி அய்யோ அய்யோ.....அதுசரி நிழல்கள் ரவி என்ன சைவ பெரியாரா அல்லது இந்து மத காவலரா அவரை கோயில் சார்பா அழைக்க ???பேசாமல் இந்த வருடம் தேருக்கு நயன்தாராவை கூப்பிட்டு நாதஸ்வரம் வாசிக்க விடலாமே நல்லா இருக்கும் : :P :P :twisted: :twisted: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு என்னய்யா கூத்து உது பஜனையிலை சாயி முருகா ராம முருகா எண்ட எப்பிடி படிக்கலாம்??முருகனுக்கும் இவைக்கும் குடும்ப உறவுகூட இல்லை (கதைகளின்படி பார்த்தால்) அதைவிட முருகன் தமிழரார் கும்பிட படும் கடவுள் இராமரோ கட்டுகதை கடவுள் சாயி கள்ள கடவுள்: இதெல்லாத்தையும் போட்டு குழப்பி எங்கடை சனமும் குழம்பி அய்யோ அய்யோ.....அதுசரி நிழல்கள் ரவி என்ன சைவ பெரியாரா அல்லது இந்து மத காவலரா அவரை கோயில் சார்பா அழைக்க ???பேசாமல் இந்த வருடம் தேருக்கு நயன்தாராவை கூப்பிட்டு நாதஸ்வரம் வாசிக்க விடலாமே நல்லா இருக்கும் : :P :P :twisted: :twisted: :cry: :cry:

அப்பிடி என்டா நானும் போய் இருப்பனே......... :(:D :oops:

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் நாதஸ்வர கச்சேரி கேக்க அலையாதையும் உமக்காக நான் முடிந்தால் காத்திமதியை கேட்டு பாத்து சிறப்பு விருந்தினரா அனுப்பி விடுறன் அவா வாசிப்பா :P :wink:

  • கருத்துக்கள உறவுகள்

அட அவா last yr வந்திட்டாவே கந்தப்பு சொல்லலியா..........

  • கருத்துக்கள உறவுகள்

அட அவா last yr வந்திட்டாவே கந்தப்பு சொல்லலியா..........

சுண்டலினைச் சந்திக்கவாரவர்களினைப்பற்றி எனக்குச் சத்தியமாய்த்தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலினைச் சந்திக்கவாரவர்களினைப்பற்றி எனக்குச் சத்தியமாய்த்தெரியாது.

:(:D:lol: :oops:

சாத்திரி எழுதியது:

சுண்டல் நாதஸ்வர கச்சேரி கேக்க அலையாதையும் உமக்காக நான் முடிந்தால் காத்திமதியை கேட்டு பாத்து சிறப்பு விருந்தினரா அனுப்பி விடுறன் அவா வாசிப்பா :P :wink:

அட சாத்திரிக்கு காந்திமதி வாசிச்சால்த் தான் பிடிக்குமா?? :roll: :roll: :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் வசம்பு அது அந்த காலத்து வாசிப்பு ஒரு லயத்தோடை ஒரு சேவை மனபான்மையோடை இருக்கும் இப்பவெல்லாம் கசுக்காக அவசரத்ததிலை வாசிச்சிட்டு பேபாகினம் இதெல்லாம் எங்கை உமக்கு விழங்க போகுது :P :P :wink: சரி கந்தப்புகடவுளை பற்றி கதைக்கிற இடத்திலை நாங்கள் நாதஸ்வரத்தை பற்றி கதைச்சு கொண்டிருந்ததா அவருக்கு கோபம் வந்திடும் அவரை தொடர விடுவம் :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.