Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமராவுக்குப் பதிலாக ரவிநாத ஆரியசிங்க ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமணம் பெற்றார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thamara-Ravinath-15-seithy.jpg

ஜெனிவாவில் ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக கலாநிதி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜூலை முதலாம் திகதியிலிருந்து இவர் ஐ.நாவுக்கான தூதுவராக பணியாற்றுவார்.

இதுவரை ஜெனிவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பணியாற்றிய தமரா குணநாயகம், கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை தான் பொறுப்பேற்கப்போவதில்லை என அவர் முன்னர் தெரிவித்திருந்தார்.

ஐ.நா. நிரந்தர பிரநிதியாக 2011 ஆம் ஆண்டில் பதவியேற்பதற்கு முன்னர், 2009 முதல் 2011 ஆம் ஆண்டுவரை கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக தமரா குணநாயகம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை பிரிட்டனுக்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராக பணியாற்றி ஓய்வுபெற்ற பீ.எம்.ஹம்ஸா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.. காலில் விழுந்து சேவகம் பண்ணியும் ஒரு நன்மையில்லை.. :rolleyes:

தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை இளிச்சு இளிச்சு கதைத்தும் கடைசியில் சிங்களவன் தன் குணத்தை காட்டிவிட்டான் நான் நினைக்கின்றேன் துரோகத்துக்கு கிடைத்த சரியான சன்மானம். :icon_mrgreen:

க திர்மாகர்களுக்கும் இடமில்லை இன்றைய சிங்களத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

தமரா குணநாயகம் கியூபாவிற்கான தூதுவராக நியமிப்பு

ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக செயற்பட்டுவந்த தமிழரான தமரா குணநாயகம் கியூபாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் இலங்கைக்கு தோல்வி ஏற்பட்டதை அடுத்து தமரா குணநாயகம் கியூபாவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் கசிந்தன.

தமரா குணநாயகம் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

எனினும் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த தமரா குணநாயகம், வெளிவிவகார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

(அத தெரண)

தமராவுக்குப் பதிலாக ரவிநாத ஆரியசிங்க ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமணம் பெற்றார்!

அய்யய்யோ..................

ரவிநாத ஆரியசிங்க எனன எல்லாவற்றையும் தகர்த்தெறியக் கூடிய ஆளா? இவரும் இறுதியில் ஆட்டம் காணத்தான் போறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.