Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரியவில்லை..........

Featured Replies

  • தொடங்கியவர்

கவிதை புனையப்பட்ட விதம் அழகு.

ஆனாலும் எனக்கும் உங்கள் கருத்துடன் முழுமையாக உடன்பட முடியவில்லை.

(ஆனா போற போக்கிலை ஆண்களை வைச்சுப் பூட்டாமல் இருந்தால் அதுவே பெரிய விசயம்)

உங்கள் கருத்துக்களுக்கு முதலில் நன்றி மணிவாசகன் . அத்துடன் புலத்தில் ஆண்களின் நிலை என்ன ?

  • Replies 55
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்வைகள் பார்க்கின்றேன்

தொலைதூர இருள் வானில் .

சிலசமயம் ,

சுவர்களையும் சுவாரசியமாய்

ஊடுருவிக் காண்கின்றேன்.

என் கையின் ரேகைகள்

ஏனோ இன்னும் புரியவில்லை ...........

ஆண்கள் பெண்களை

காவல் புரிவதால் ,

பெண்மை தாழ்ந்தது இல்லை .

வன்மை இரும்புப்பெட்டி

மென்மை தங்கத்தை ,

என்றும் காப்பாற்றுகிறது.

தங்கம் தாழ்ந்ததென

கருதுகிறதா உலகம் ????????

புரியவில்லை இன்னும்

ஏனோ புரியவில்லை..........

****** எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது .

கோமகன்,

உங்களுடைய கவிதை என்ன சொல்லவருகிறது என்று புரியவில்லை. இருந்தாலும் இங்கு பதிவிட்டவர்கள் அனைவருக்கும் ஏதோ சளைக்காமல் பதில் எழுதுகிறீர்கள்.

வன்மை, மென்மை, இரும்பு , தங்கம் இவையெல்லாம் காலங்காலமாக கவிஞர்கள் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற போதை மிக்க வார்த்தைகள் இதற்கு நானும் விதிவிலக்கல்ல..... உடல் ஒன்றுதான் இந்தக்குறியீட்டுச் சொற்களால் விளிக்கப்படக்கூடியது. மனோவலிமை, செயல்திறன் என்பன இருபாலாருக்கும் சமமானதாகவே இருக்கிறது. பெண்கள் முன்னுக்கு வரவில்லையே தவிர அவர்களுக்கான அந்தச்சந்தர்ப்பங்கள் உருவங்களைக்கடந்து அவர்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில் சமஅளவில் எல்லாவகையிலும் அவர்களின் பயணிப்பு இருக்கும். நானும் அநேக இடங்களில் அவதானித்திருக்கிறேன். இவளுக்கு ஒன்றும் தெரியாது என்று தாயை, மனைவியை, பெண் பிள்ளைகளை அசட்டை செய்யும் ஒரு இனமாகத்தான் நம்மவர்களைக்காண்கிறேன். இது இன்று நேற்றல்ல பண்டைக்காலத்திலிருந்தே பெண்ணைப் போகப்பொருளாக உருவகித்து அழகியலோடு மட்டும் நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை காலங்களுக்கு ஏற்றபடி பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெண்கள் என்ற விடயத்தில் மாற்றங்கள் அவ்வளவு இலகுவாக வரவில்லை.... அல்லது உருவாக்க விரும்பவில்லை... திறனாய்வு செய்து பார்த்தால் இவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஆண்களே எல்லா புற அலுவல்களையும் தாமே பார்ப்பதால் தாம் முடக்கப்படுவதை உணராமலேயே பெண் முடங்கிப்போகிறாள்.... இந்த முடங்கலில் ஏற்படும் சோம்பேறித்தனத்தின் சுகம் அவளைச் சிந்திக்கவே அனுமதிப்பதில்லை.... இதில் முக்கியமாக பிம்பங்களுக்குக் கொடுக்கப்படும் அதி முக்கியந்தான்.....இந்த வன்மை, மென்மை, இரும்பு ,தங்கம் என்பன..... இங்கு தாழ்ச்சியையும் உயர்ச்சியையும் யார் அதிகம் உருவாக்குகிறார்கள் என்றால் ஆண்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

யாருக்குக் காவல் என்பது முக்கியம் ?

புத்தி சுவாதீனமான அல்லது உடல்நிலை சீராக இயங்க முடியாத அல்லது நல்லது கெட்டது தெரியாவர்களுக்கா யாருக்குக் காவல் வேண்டும்? எல்லாவகையிலும் இயல்பாக இயங்கவும் சிந்திக்கவும் தெரிந்த பெண்ணுக்கா? ஆக காவல் என்ற பெயரால் ஒரு சீரான இயங்குநிலையில் இருக்கக்கூடிய ஒருவரை பெண் என்ற பிம்பத்தின் காரணத்தால் காக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் ஆழமாகச்சிந்தித்துப்பாருங்கள் இந்தக்காவல் என்பது அவளை ஏதோ ஒரு விதமான குறைபாடு உள்ளவளாக இருக்க நிர்ப்பந்திக்கும் ஒன்றாகத்தானே கருத முடிகிறது.

எத்தனைக் கட்டுக்காவல் இருந்தாலும் ஒரு பெண் உடைக்க நினைத்தால் அந்தக்காவல் எல்லாம் தவிடு பொடி... காவல் என்ற சொல்லே ஏதோ மாதிரி இருக்கிறது. உயிரற்ற விலைமதிப்பில்லாத பொருட்களுக்கு காவல் என்றால் ஏற்புடையதே அதுவே ஆணைப்போல ஆறிறிவு படைத்த உயிருள்ள பெண்ணுக்கு என்றால் நகைப்பாக இருக்கிறது....... ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் துணையாக எல்லாவிடயத்திலும் துணையாக இருப்பது என்பது வேறு ........பெண்ணுக்கு ஆண் காவலாக இருப்பது என்பது வேறு.....

நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வாழ்வியல் கருவூலத்தில் கீழ்வரும் ஒரு குறளும் வரும்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

  • கருத்துக்கள உறவுகள்

சகாராவை வெளியில் கொண்டுவந்த கோவுக்கு நன்றிகள் :icon_idea: :icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்

சகாராவை வெளியில் கொண்டுவந்த கோவுக்கு நன்றிகள் :icon_idea: :icon_idea: :icon_idea:

உங்கள் மீள் கருத்துக்கு நன்றிகள் . விசுகர் ........... பெட்டி அடித்தாலும் , சதுரம் அடித்தாலும் கோ....... என்றும் கோமகனாகவே இருப்பார் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

புலம்பெயர்ந்த நாடுகளில் பல குடும்பப் பெண்கள் ஆண்களில்

தங்கியிருப்பதற்கு அவர்களே பல விடயங்களில் காரணமாக இருக்கின்றனர்.

அசட்டையீனம் என்பது நான் கண்ட கரணங்களில் ஒன்று.

அடுத்தது மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் தவிர்ந்த மொழிகளில்.

புரியவில்லை கவிதையை இன்னும் புரியும்படி எழுதியிருக்கலாம்

கோமகன்.

நான் வளர்ந்து வரும் குழந்தை . உங்களைப் போன்றோர்களது விமர்சனங்களே என்னைச் சீர்படுத்தும் . நீங்கள் சொல்கின்ற "அசண்டையீனம் " ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளையும் உள்ளடக்கியது என்பது எனது கருத்து . அவர்கள் சார்ந்த அரசுகள் ஊக்கத்தொகையையும் கொடுத்து மொழியைப் படியுங்கள் , தொழில் சார்துறையொன்றைத் தெரிவு செய்து உங்கள் காலில் நில்லுங்கள் என்று சொல்லும் பொழுது இவர்கள் " மானாட மயிலாட " அல்லது " சூப்பர் ஜூனியர் சிங்கர் " ல் நிற்பார்கள் . ஒருசிலர் காசுக்காகப் படிக்கிறம் பேர்வழி என்று போய் , வரும் காசில் சீட்டுக் கட்டுபவர்களையும் நான் கண்டிருக்கின்றேன் . இதற்குள் தங்களை ஆண்கள் முனேற விடுகின்றார்கள் என்று மூக்குச் சிந்தல் வேறை . உங்கள் விமர்சனங்களுக்கு மிக்க நன்றிகள் .

  • தொடங்கியவர்

<p>

நான் சில கவிதை தலைப்புக்களுக்குள் வருவதில்லை..ஆனால் சிலருடை விமர்சனங்கள் வர வைத்து விடுகிறது அந்தவகையில் கேக்கிறன் ஆண்கள் தங்கள் சுய விருப்பின் பேரில் தானே பெண்களை கட்டியாள்வதை செய்கிறார்கள்..எத்தனை வீதமான ஆண்கள் பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவளும் ஒரு உணர்வுள்ள ஜீவன் தான் என்பதை உணர்ந்து நடந்து இருக்கிறீங்கள்......அதை முதலில் சொல்லுங்கள்..மிஞ்சிப்,மிஞ்சிப் போனால் கதைக்காமலே அவளை அவோயிட் பண்ணுவீர்கள்...பெண் ஆகப்பட்பட்டவள் தன் உணர்வுகளை எல்லாரிடமும் சொல்லமுடியாதவள்..தனக்கு சுதந்திரம் எங்கே கிடைக்கும் என்று எண்ணிக் கொள்கிறாளோ அங்கே தான் சொல்ல முடியும்..ஆனால் சுய விருப்பின் பேரில் உணர்வுகளை கொட்டிக் கொள்ளும் இடமும் தவறாகி போகும் பட்சத்தில் என்ன செய்ய முடியும்..உங்கள் நியாயம் தான் நியாயம் மற்றர்வகளுக்கு ஒன்றுமே தெரியாது, விளங்காது என்று கருதிக்கொள்ளாதீர்கள்.

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் எனபதும் எனக்குப் புரியவில்லை யாயினி . புலத்தில் இருக்கின்ற ஆண்கள் பெண்களைப் புரியமல் நடக்கின்றார்களா ? அவர்களின் புரிதல் என்கின்ற உழைப்பினால் தான் உங்களைப் போன்ற சிறு தங்கைகள் அண்ணைமாரிடமும் , இளங் குமரிகள் துணைவர்களிடம் வந்தார்கள் . இப்பிடி நன்றி இல்லாமல் கதைக்கலாமா சொல்லுங்கோ ? நான் எழுதிய ஒப்பீடு பெண்ணின் குணவியல்பு சார்ந்ததே ஒழிய உடல் சார்ந்தது இல்லை . கவிதைக்கு மொழி இல்லை தங்கைச்சி .

மீண்டும் எரியப்போகிறது...............

  • தொடங்கியவர்

மீண்டும் எரியப்போகிறது...............

ஏன் உந்தவேலை ? பேசாமல் இருக்கலாம் தானே . எல்லாம் நீங்கள் இருக்கிற துணிவு தான் .

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் கலகம்.........??? :icon_idea: :icon_idea:

  • தொடங்கியவர்

வல்வை சகாறாவிற்கான எனது பதில்கள்.

< கோமகன்,

உங்களுடைய கவிதை என்ன சொல்லவருகிறது என்று புரியவில்லை. ( புரியாமல் இருப்பதும் ஒருவகையில் நன்றே . ஏனேனில் கவிதையின் தலைப்பே புரியவில்லை என்று தொடர் முற்றுப் புள்ளிகளுடன் தான் ஆரம்பிக்கப்பட்டது ) இருந்தாலும் இங்கு பதிவிட்டவர்கள் அனைவருக்கும் ஏதோ சளைக்காமல் பதில் எழுதுகிறீர்கள் . ( ஒரு ஆக்கத்தைப் படைத்தவர் என்ற வகையில் அதுசார்பாக வரும் கேள்விகளுக்குப் பதில் எழுதவேண்டியது படைத்தவரின் பொறுப்பு . அதுவே கருத்துக்களத்தின் பாரம்பரியமும் கூட . ஆகவே இதில் " எகடியம் " தேவையில்லை ).

வன்மை, மென்மை, இரும்பு , தங்கம் இவையெல்லாம் காலங்காலமாக கவிஞர்கள் உருவாக்கி வைத்துவிட்டுச் சென்ற போதை மிக்க வார்த்தைகள் இதற்கு நானும் விதிவிலக்கல்ல.....( நீங்களும் கவிஞர் தானே ஒத்துக்கொள்கின்றீர்கள் தானே ? ) உடல் ஒன்றுதான் இந்தக்குறியீட்டுச் சொற்களால் விளிக்கப்படக்கூடியது. மனோவலிமை, செயல்திறன் என்பன இருபாலாருக்கும் சமமானதாகவே இருக்கிறது. பெண்கள் முன்னுக்கு வரவில்லையே தவிர அவர்களுக்கான அந்தச்சந்தர்ப்பங்கள் உருவங்களைக்கடந்து அவர்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில் சமஅளவில் எல்லாவகையிலும் அவர்களின் பயணிப்பு இருக்கும் (வாத்தியர் கூறியது போன்று புலத்தில் பெண்களுக்கான சுயசார்புக்கான சந்தர்பங்கள் இருந்தும் அதற்கான தேடலை சரிவரக் கையாளவில்லை என்பது எனது கருத்து ) . நானும் அநேக இடங்களில் அவதானித்திருக்கிறேன் . இவளுக்கு ஒன்றும் தெரியாது என்று தாயை, மனைவியை, பெண் பிள்ளைகளை அசட்டை செய்யும் ஒரு இனமாகத்தான் நம்மவர்களைக் காண்கிறேன். ( நீங்கள் எந்தக் காலத்திலத்தில் இருக்கின்றீர்கள் ?) . இது இன்று நேற்றல்ல பண்டைக்காலத்திலிருந்தே பெண்ணைப் போகப்பொருளாக உருவகித்து அழகியலோடு மட்டும் நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அன்றிலிருந்து இன்றுவரை காலங்களுக்கு ஏற்றபடி பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெண்கள் என்ற விடயத்தில் மாற்றங்கள் அவ்வளவு இலகுவாக வரவில்லை.... அல்லது உருவாக்க விரும்பவில்லை... திறனாய்வு செய்து பார்த்தால் இவளுக்கு ஒன்றும் தெரியாது என்று ஆண்களே எல்லா புற அலுவல்களையும் தாமே பார்ப்பதால் தாம் முடக்கப்படுவதை உணராமலேயே பெண் முடங்கிப்போகிறாள்.... இந்த முடங்கலில் ஏற்படும் சோம்பேறித்தனத்தின் சுகம் அவளைச் சிந்திக்கவே அனுமதிப்பதில்லை.... இதில் முக்கியமாக பிம்பங்களுக்குக் கொடுக்கப்படும் அதி முக்கியந்தான்.....இந்த வன்மை, மென்மை, இரும்பு ,தங்கம் என்பன.....( இந்த ஒப்பீடு ஒரு பெண்ணின் குணவியல்புகள் சர்ந்தது ) . இங்கு தாழ்ச்சியையும் உயர்ச்சியையும் யார் அதிகம் உருவாக்குகிறார்கள் என்றால் ஆண்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

யாருக்குக் காவல் என்பது முக்கியம் ?

புத்தி சுவாதீனமான அல்லது உடல்நிலை சீராக இயங்க முடியாத அல்லது நல்லது கெட்டது தெரியாவர்களுக்கா யாருக்குக் காவல் வேண்டும்? எல்லாவகையிலும் இயல்பாக இயங்கவும் சிந்திக்கவும் தெரிந்த பெண்ணுக்கா? ஆக காவல் என்ற பெயரால் ஒரு சீரான இயங்குநிலையில் இருக்கக்கூடிய ஒருவரை பெண் என்ற பிம்பத்தின் காரணத்தால் காக்கவேண்டும் என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள் . இந்தக்காவல் என்பது அவளை ஏதோ ஒரு விதமான குறைபாடு உள்ளவளாக இருக்க நிர்ப்பந்திக்கும் ஒன்றாகத்தானே கருத முடிகிறது . ( அப்படி ஒரு காவல் தேவையில்லை என்று ஒரு பெண் நினைத்தால் ஏன் மறுமணம் என்கின்ற பந்தம் அவளிற்குத் தேவைப்படுகின்றது ? )

எத்தனைக் கட்டுக்காவல் இருந்தாலும் ஒரு பெண் உடைக்க நினைத்தால் அந்தக்காவல் எல்லாம் தவிடு பொடி... காவல் என்ற சொல்லே ஏதோ மாதிரி இருக்கிறது. உயிரற்ற விலைமதிப்பில்லாத பொருட்களுக்கு காவல் என்றால் ஏற்புடையதே அதுவே ஆணைப்போல ஆறிறிவு படைத்த உயிருள்ள பெண்ணுக்கு என்றால் நகைப்பாக இருக்கிறது....... ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் துணையாக எல்லாவிடயத்திலும் துணையாக இருப்பது என்பது வேறு ........பெண்ணுக்கு ஆண் காவலாக இருப்பது என்பது வேறு.....

நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் வாழ்வியல் கருவூலத்தில் கீழ்வரும் ஒரு குறளும் வரும்

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை

( இதே பொய்யாமொழிப் புலவர் பெண்வழி சேறல் என்ற அதிகாரத்தில் எப்படி பெண்களை வாருகின்றார் என்றும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .

உதாரணத்திற்கு ,

« இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்

அமையார்தோள் அஞ்சு பவர் » 906

விளக்கம் :

அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

« பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்

பெண்ணே பெருமை உடைத்து » 907

விளக்கம் :

ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்.

ஆகமொத்தில் அடுத்தடுத்து இரண்டு குறளிலுமே ஐயன் இருபாலாரையும் காலை வாருகின்றார் . இவரை நம்பி எப்பெடி எடுகோளைப் போடமுடியும் ? > ) .

***********************************************************************************************************************************

அத்தி பூத்தாற்போல் அன்புத் தம்பியின் பதிவிற்கு தட்டுவேண்டிய இடத்தில் தட்டி ,

குட்ட வேண்டிய இடத்தில் குட்டிய எனதருமை அக்கையார் வல்வை சகாறாவிற்கு எனது நன்றிகள் . எனது கவிதை எனது முரண்பாடுகளையும் இரண்டு பந்தியில் உள்ள இறுதி வரிகள் மூலம் தொட்டே சொல்கின்றது . பெண்களை வன் இரும்புக்கும் , மென்தங்கத்திற்கும் ஒப்பீடு செய்கின்ற உலகத்தைக் கூட என்னால் புரியமுடியவில்லை என்று உலகத்துடன் முரண்படுகின்றேன் . முதலாவது பந்தியில் சுவர்களைக் கூட சுவாரசியமாக ஊடறத்துப் பார்கத் தெரிந்த எனக்கு கையில் வெள்ளிடைமலைபோல் இருக்கும் ரேகை போன்ற பெண்ணைப் பார்க்கத் தெரியவில்லை என்று என்னுடன் முரண்பட்டு என்னையே புரியவில்லை என்று என்னுடனேயே முரண்படுகின்றேன் . ஆகவே இந்தக் கவிதை சொல்லவருகின்ற செய்தியை தெட்டத் தெளிவாகவே சொல்கின்றது . எனவே இதில் « புரியவில்லை » என்கின்ற வாதம் அடிபட்டுப் போகின்றது.

மேலும் நான் சொல்லிய « பெண்மை « என்கின்ற சொல்லாடல் குண இயல்பு சார்ந்ததே ஒழிய உடல் சார்ந்தது இல்லை . இருபாலாரும் அவரவர் குண இயல்புகள் சார்ந்த இருப்பில் இருந்தாலே அந்தப்பாலுக்கு அழகு . இதில் நீயா நானா பெரிது என்ற சித்தாந்தத்திற்கு இடம் இல்லை . சொல்லாடல்கள் சுருதி மாறும் பொழுது தான் « ஈகோயிசம் « தலைதூக்குகின்றது . மேலும் உங்கள் கேள்விகளிற்கான எனது பதில்களை பச்சை நிறத்தினால் வேறுபடுத்திக் காட்டியுள்ளேன் . உங்கள் நேரத்திற்கும் அக்கறைக்கும் மிக்க நன்றிகள் .

புரியவில்லை என்று நாம் எழுதியதே இந்தக்கவிதைக்குக் கிடைத்த வெற்றி :lol: :lol: :lol::D

  • தொடங்கியவர்

புரியவில்லை என்று நாம் எழுதியதே இந்தக்கவிதைக்குக் கிடைத்த வெற்றி :lol: :lol: :lol::D

உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டால் வாசகர்களும் நானும் என்ன செய்வது ? வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பவர்கள் வாசகர்கள் மட்டுமே .

  • கருத்துக்கள உறவுகள்

எழுதியவருக்கும் புரியல

கவிதாசினிக்கும் புரியல

பாவம் நாங்கள்

என்னமோ புரியல

ஆனாலும் வாசிக்கின்றோம்???

எழுதுகின்றோம்???

  • தொடங்கியவர்

எழுதியவருக்கும் புரியல

கவிதாசினிக்கும் புரியல

பாவம் நாங்கள்

என்னமோ புரியல

ஆனாலும் வாசிக்கின்றோம்???

எழுதுகின்றோம்???

இதுவும் ஒருவகையில் " புரிந்தும் புரியாத கவிதை " . வாழ்த்துக்கள் .

Edited by கோமகன்

நான் வளர்ந்து வரும் குழந்தை . உங்களைப் போன்றோர்களது விமர்சனங்களே என்னைச் சீர்படுத்தும் . நீங்கள் சொல்கின்ற "அசண்டையீனம் " ஆங்கிலம் பேசுகின்ற நாடுகளையும் உள்ளடக்கியது என்பது எனது கருத்து . அவர்கள் சார்ந்த அரசுகள் ஊக்கத்தொகையையும் கொடுத்து மொழியைப் படியுங்கள் , தொழில் சார்துறையொன்றைத் தெரிவு செய்து உங்கள் காலில் நில்லுங்கள் என்று சொல்லும் பொழுது இவர்கள் " மானாட மயிலாட " அல்லது " சூப்பர் ஜூனியர் சிங்கர் " ல் நிற்பார்கள் . ஒருசிலர் காசுக்காகப் படிக்கிறம் பேர்வழி என்று போய் , வரும் காசில் சீட்டுக் கட்டுபவர்களையும் நான் கண்டிருக்கின்றேன் . இதற்குள் தங்களை ஆண்கள் முனேற விடுகின்றார்கள் என்று மூக்குச் சிந்தல் வேறை . உங்கள் விமர்சனங்களுக்கு மிக்க நன்றிகள் .

மன்னிக்க வேண்டும் கோமகன் அண்ணா, நீங்கள் பலருக்கு எழுதிய கருத்துகளில் நீங்கள் ஆண் என்ற பெருமிதம் தலை காட்டுகிறது.

நான் போன வருடம் தான் வெளிநாடு வந்தேன். இங்கு நானும் மொழி படிக்க செல்கிறேன். எனக்கு தெரிந்த திருமணம் செய்யவென அழைக்கப்பட்டவர்கள்/ திருமணம் செய்து புதிதாக வந்தவர்கள் பலரை இங்கு படிக்க செல்ல அவர்கள் கணவர்கள் அனுமதிப்பதில்லை. ஒரு சிலருக்கு தன் மனைவி தன்னைவிட கூட தெரிந்து விடக்கூடாது என்ற பொறாமை, தெரிந்தால் தான் விடும் பிழைகளை தட்டிக்கேட்பாள் என்று சிலர் நினைக்கிறார்கள்.

சில பெண்களை கணவன்மார் படிக்க அனுமதித்தாலும் அவர்களால் படிக்க செல்ல முடிவதில்லை. காரணம் அவர்கள் சோம்பேறி தனம் அல்ல.

  • வெளிநாடு வந்தவுடன் மொழி தெரிய முன்னமே அவர்களை வீட்டுவேலைக்கு அமர்த்தி விடுவார்கள். அதாவது கணவன் வேலைக்கு சென்ற பின் மனைவி தான் சமையல் செய்யவேண்டும், கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும்.
  • கணவனுக்கு நேரமில்லாவிட்டால் தனது விசா அலுவல்களுக்கு, வேறு அலுவல்களுக்கு என அனைத்திற்கும் அவர்கள் தான் இன்னொருவரை உதவிக்கு அழைத்துக்கொண்டு செல்ல வேண்டும்.
  • பத்தாததுக்கு மொழி படிக்க முன்னமே குழந்தைகளை பெற்று விடுவார்கள். (அதற்கு அவளும் தானே காரணம் என்று மட்டும் கூறி விடாதீர்கள். திருமணம் செய்ய அழைக்கப்பட்ட/ திருமணம் செய்து அழைக்கப்பட்ட பெண்களிடம் அவர்கள் விருப்பத்தை யாரும் கேட்பதில்லை). பின் குழந்தைகளை கவனிக்க வேண்டும். விட்டிட்டு ஒரு பக்கமும் நகர முடியாது. கொஞ்சம் வளர்ந்த பின் படிக்க செல்லலாம் என்றால் அதற்கும் பிள்ளைகளை கொண்டு சென்று பள்ளியில் விட்டு திரும்ப அழைக்கவும் செல்ல வேண்டும். (எம் நாட்டிலாவது பிரச்சினைகளின் மத்தியிலும் பிள்ளைகள் தனியாக பாடசாலை சென்று வருவார்கள். ஆனால் இங்கு பெற்றோர் வராமல் பிள்ளைகளை வெளியில் விட மாட்டார்கள்.)

எனக்கு தெரிந்த ஆண் ஒரு மனைவியை இங்கு வைத்துக்கொண்டே இன்னொருவரை ஊரிலிருந்து அழைத்திருக்கிறார். பின் அவருடன் 2 வருடம் வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்று விட்டு அவரை divorce செய்துள்ளார். அன்றுவரை அவரை படிக்க செல்ல அனுமதிக்கவில்லை. அதற்கு காரணமாக அவர் கூறிய கருத்து. அவளை படிக்க அனுப்பினால் இந்நாட்டின் சட்டதிட்டங்களை அறிந்து விடுவாள். நான் divorce எடுத்த பின் என் பணத்தில் பாதியை அவளுக்கு கொடுக்க வேண்டி வந்து விடும் என்று கூறியிருக்கிறார். இதனை என்னிடம் கூறவில்லை. கூற மாட்டார். இன்னொரு ஆணிடம் கூறி அவர் என்னிடம் கூறினார்.

இன்னொருவர் தன மனைவியை படிக்க அனுப்பவில்லை. காரணம் படிக்க சென்றால் அவள் வேறு ஆண்களுடன் கதைப்பாளாம். தனக்கு அது பிடிக்காதாம். அப்படியென்றால் ஆண்களுடன் கதைப்பது தவறா? கதைத்தால் கற்பு போய்விடுமா? ஆண்களுடன் தவறாக கதைத்தால் பிடிக்கவில்லை என்று கூறலாம். ஆனால் கதைக்கவே கூடாது என்றால்???????

அத்துடன் அரசுகள் ஊக்கத்தொகையை கொடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, அந்த அரசின் ஊக்கத்தொகைக்கு ஆசைப்பட்டு தமது மனைவிமாருக்கு இலகுவாக எடுக்கக்கூடிய immigrant விசாவை விட்டிட்டு refugee விசாவை எடுக்க சொல்லி பல வருடக்கணக்காக அலைக்களிக்கிறார்களே. இவற்றை பற்றி என்ன சொல்கிறீர்கள்.

எனக்கு தெரிந்த இன்னொரு பெண் இக்காரணத்தினாலேயே தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கிறார். அகதி விசாவை பெற்றுக்கொள்ள என கூறி பதிவு திருமணம் செய்யாமல் சாதாரண திருமணம் செய்து குழந்தையை பெற்று விட்டு அவர் கணவர் இப்பொழுது பதிவு திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறி அவரை விட்டு நீங்கி விட்டார். அந்த பெண்ணிடம் விசாவும் இல்லை பணமும் இல்லை. கணவரும் இல்லை. கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்வாள்? எல்லோரும் இவளை திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுவிட்டாள் என்று சொல்லித்திரிகிறார்கள்.

இவர்களெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரிவதில்லையோ? பெண்கள் மட்டும் தான் மானாட மயிலாட பார்ப்பவர்கள் என்ற மாதிரி கதைக்கிறீர்கள். வேலை முடிந்து வீடு வந்த ஆண்கள் நாடகம் பார்ப்பதை இன்னும் காணவில்லை போலிருக்கு.

இத்தனைக்கும் நான் நாடகம் மட்டுமல்ல. தொலைகாட்சி நிகழ்ச்சி எதுவும் பார்ப்பதில்லை. இணையங்களில் ஈழத்து கலைஞர்கள் premgopal, premini இன் நடனம் பற்றி வந்ததால் அதனை மட்டும் youtube இல் தேடி பார்த்தேன். அது தான் நான் கடைசியாக பார்த்த தொலைகாட்சி நிகழ்ச்சி. மற்றபடி ஒருசில படங்கள் பார்ப்பேன்.

எனவே எல்லோரையும் சேர்த்து நீங்கள் குறைசொல்ல முடியாது.

ஆண்கள் எப்பொழுது தாம் ஆண் என்ற திமிர் நிலையிலிருந்து கீழிறங்கி யோசிக்கிறார்களோ அப்பொழுது தான் அவர்களால் பெண்ணின் உணர்வுகளை பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

Edited by காதல்

ஏன் கலியாணம் செய்கின்றோம் ???? உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் இசை .

இசை அண்ணா கூறியதில் என்ன பிழை உள்ளது? அதற்கு நீங்கள் கூறிய பதில் இது. திருமணம் செய்வது எதற்கு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

உங்கள் மீள் கருத்துக்கு நன்றிகள் . விசுகர் ........... பெட்டி அடித்தாலும் , சதுரம் அடித்தாலும் கோ....... என்றும் கோமகனாகவே இருப்பார் .

விசுகு அண்ணாவின் மீள்கருத்தில் என்ன குறை கண்டீர்கள்? ஒருவர் சொல்வது சரியாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்வது பிழையா? ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்பவர்கள் மாறிவிட்டார்கள் என்று அர்த்தமா? நாம் நினைப்பது தான் சரி என்ற அகங்காரம் எம்மை விட்டு நீங்க வேண்டும். நீங்கினால் தான் நடுநிலையாக கருத்து கூற முடியும்.

உங்கள் கருத்திலிருந்து புரிகிறது. யார் என்ன சொன்னாலும் நீங்கள் நினைத்ததை தான் சரி என்று சொல்லி வாதாடுவீர்கள்.

Edited by காதல்

  • தொடங்கியவர்

இசை அண்ணா கூறியதில் என்ன பிழை உள்ளது? அதற்கு நீங்கள் கூறிய பதில் இது. திருமணம் செய்வது எதற்கு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

விசுகு அண்ணாவின் மீள்கருத்தில் என்ன குறை கண்டீர்கள்? ஒருவர் சொல்வது சரியாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்வது பிழையா? ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்பவர்கள் மாறிவிட்டார்கள் என்று அர்த்தமா? நாம் நினைப்பது தான் சரி என்ற அகங்காரம் எம்மை விட்டு நீங்க வேண்டும். நீங்கினால் தான் நடுநிலையாக கருத்து கூற முடியும்.

உங்கள் கருத்திலிருந்து புரிகிறது. யார் என்ன சொன்னாலும் நீங்கள் நினைத்ததை தான் சரி என்று சொல்லி வாதாடுவீர்கள்.

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின்

தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு. 190

ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்நடு ஏரியில சண்ட வெலக்கப் போன வெறா மீனுக்கு ஒடஞ்சி போச்சாம் மண்ட.

பிகு :

இது தங்களுக்கான தனிமனிதத் தாக்குதல் இல்லை . மாறாக தங்களுக்கான சூசகமான செய்தி . மிக்க நன்றிகள் .

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கின்பின்

தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.

உங்கள் புலமையை கண்டு நான் வியக்க. :unsure:

கருத்திலுள்ள பிழைகளை சுட்டிக்காட்டுவதும் புறங்கூறுவதும் வேறு வேறு என்பது இவ்வளவு அறிவாற்றல் கொண்ட கோமகன் அண்ணாவுக்கு தெரியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. :wub:

இத்திரியில் நானாவது உங்கள் ஒருவருக்கு தான் அதுவும் காரணத்துடன் பிழையை சுட்டிக்காட்டி கருத்து எழுதியுள்ளேன். நீங்கள் எத்தனை பேருக்கு காரணமில்லாமல் அவர்கள் கூற்றை பிழை பிடித்து கருத்து எழுதியிருக்கிறீர்கள்.

நீங்கள் மற்றவர்களுக்கு எழுதிய அனைத்து கருத்துகளையும் மீண்டும் வாசித்து பாருங்கள். மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளாமலேயே அவர்களை நீங்கள் தான் புறங்கூறுகிறீர்கள் . எனவே எனக்காக நீங்கள் கொடுத்த குறள் உங்களுக்கு தான் பொருத்தம்.

அக்குறள் மீண்டும் உங்களுக்காக.

சிலவேளை நாம் கூறி நீங்கள் என்ன கேட்பது என்று நினைக்கிறீர்களோ தெரியவில்லை. இனிமேலாவது கூறுபவர்கள் யார் யார் என்பதை பார்க்காமல் கூறப்படும் கருத்து என்ன என்பதை பாருங்கள்.

இப்பொழுதும் கூட நான் உங்கள் எழுத்தாற்றலை மதிக்கிறேன். :) ரசிக்கிறேன். :)

ஆனால் எழுத்தாற்றல் கொண்ட ஒவ்வொருவரும் தமது எழுத்துகளை நல்வழியில் பிரயோசனப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். :rolleyes:

உங்களுக்காக நான் தருவது...

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு.

உட்சுவர் இருக்க, புறச்சுவர் பூசலாமா ?

உங்கள் எழுத்துக்களிலிருந்தும் , அசைவுகளிலிருந்தும் உங்களை என்னால் அடையாளம் காணமுடிகின்றது . மேற்கொண்டு விவாதங்களை இந்தப் பதிவில் நான் மேற்கொள்ள விரும்பவில்லை . இத்துடன் எனது விவாதத்தை நிறுத்துகின்றேன் .உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

Edited by கோமகன்

உங்கள் எழுத்துக்களிலிருந்தும் , அசைவுகளிலிருந்தும் உங்களை என்னால் அடையாளம் காணமுடிகின்றது .

:unsure: :unsure:

என்ன அர்த்தத்தில் கூறினீர்கள் என்று தெரியவில்லை. :unsure: என்னை பிரபலப்படுத்திக்கொள்ள நான் இப்படி கதைக்கிறேன் என்று நினைத்திருந்தால் அது தவறு. அல்லது நான் காதல் இல்லை வேறொருவர் என்று நீங்கள் நினைத்திருந்தால் அதுவும் தவறு. :)

மேற்கொண்டு விவதங்களை இந்தப் பதிவில் நான் மேற்கொள்ள விரும்பவில்லை . இத்துடன் எனது விவாதத்தை நிறுத்துகின்றேன் .உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் .

நன்றி. நானும் இத்துடன் என் விவாதத்தை நிறுத்துகிறேன். :)

இத்திரியில் உள்ள விடயங்களை மற்றைய திரிகளில் சம்பந்தப்படுத்தி நான் கதைக்க மாட்டன். எனவே அங்கு நான் எழுதும் கருத்துகளை சாதாரணமாகவே பாருங்கள். :) :) :)

நன்றி. :)

Edited by காதல்

விளங்கவில்லை.....

- இந்தியன் தமிழை எதிர்ப்போர் சங்கம்.

பிரித்தானியாக் கிளை.

  • கருத்துக்கள உறவுகள்

விளங்கவில்லை.....

- இந்தியன் தமிழை எதிர்ப்போர் சங்கம்.

பிரித்தானியாக் கிளை.

அண்ணை உங்கட சங்க வளர்ச்சிக்கு நிதி சேர்க்க நமீதாவை கூப்பிடுங்கோ....அந்த அம்மணிதான் இந்தியத் தமிழை உங்களைவிட அதிகமாய் எதிர்க்குது...... :lol: :lol:

சங்கத்தின் கொள்கை விளக்கத்தில் தெளிவு காணாது எண்டு நினைக்கிறன்.

இந்தியன் தமிழை பேசும் ஈழத்தமிழர்களை எதிர்ப்போர் சங்கம் எண்டு பேரை மாத்திறம்.

விளங்கவில்லை.....

:lol: :lol:

அது தான் தலைப்பும் அதே அர்த்தத்தில் வைக்கப்பட்டிருக்கு. :lol::D:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை உங்கட சங்க வளர்ச்சிக்கு நிதி சேர்க்க நமீதாவை கூப்பிடுங்கோ....அந்த அம்மணிதான் இந்தியத் தமிழை உங்களைவிட அதிகமாய் எதிர்க்குது...... :lol: :lol:

:D :D :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.