Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தம் கேட்டேன்

Featured Replies

உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்

யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்

உன்னுடைய முத்தம்

அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்..............

Art91-300x300.jpg

உன்னிரு கண்களால்

என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்...................

உன் கோபம்

நான் சொன்ன உண்மையிலா! இல்லை

சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன்

எது உண்மை? எது பொய்?

தெரியாதவள் போல் கேட்டாய் நீ

கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை

நீ கோபிப்பதாய் நடிக்கும்

உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!!

இந்த மௌனம்

முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன்

வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ

உன் வெட்கத்தின்

அழகை காணத்தானே இத்தனை முயற்சியும்

மகிழ்ச்சியில் நான்..............

-எங்கேயோ படித்தது

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மௌனம்

முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன்

வெட்கத்தால் தலை கவிழ்ந்தாய் நீ

உன் வெட்கத்தின்

அழகை காணத்தானே இத்தனை முயற்சியும்

மகிழ்ச்சியில் நான்.............

முத்தம் கொடுத்து

முத்து குளித்து

முத்திரை குத்தி

மகிழ்ந்திட வேண்டும்

ஆணுக்கு அழகு அது

கவிதைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதவில்லையா?

இல்லையென்றால் எழுதியவர் பெயரையாவது இணைத்திருக்கலாமே.....

கவிதை, கதை, கட்டுரை என்பன அவை எழுதியவருக்கு அது ஒரு பிரசவவலி குழ்ந்தை பெற்ற பின் மகிழும் தாய்போலத்தான் ஒவ்வொரு படைப்பையும் படைப்பாளிகள் உருவாக்கியபின் கொள்ளும் மகிழ்ச்சி. பிறந்த குழந்தையை பலரும் பாராட்டும்போது பார்த்துப்பார்த்து பரவசப்படும் தாய்போலத்தான் படைப்பாளியின் உள்ளம் இருக்கும். தாயை மறைத்து குழந்தையை சீராட்டுதல் மனதிற்கு மகிழ்ச்சியைத் தர மறுக்கிறது இளங்கதிர்.

  • தொடங்கியவர்

உங்கள் கருத்திற்கு நன்றி. ஆனால் இங்கு ரசிப்புதான் முக்கியம்.

மகாபாரதம் எழுதியதாக சொல்லப்படும் பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது முக்கியமா.....? மகாபாரதத்தின் காதாபாத்திரங்களை வாழ்க்கையின் அங்கங்களாய் உணர்வது முக்கியமா.......?

கடவுளே இரண்டாமிடத்திற்கு வந்தபிறகு..... ம்....

  • கருத்துக்கள உறவுகள்
:) :) :)

ஆர் எழுதினால் என்ன எனது இணையத்திண்ட பேர் வரணுமே ^_^

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் இணைப்பதில் பிரச்சனை இல்லை..எழுதியவர்களின் பெயர்களோடு,ஆதரங்களோடு கொண்டு வந்தால் பார்ப்பதற்கு,படிப்பதற்கு கருத்து எழுதுவதற்கு சந்தோசமாக இருக்கும்..இது எங்கயோ எடுத்து உங்கள் பக்கத்தில் ஒட்டி பின் அங்கிருந்து இங்கு ஒட்டுவது நன்றாகவா இருக்கிறது..ஊரில் கேள்விப்பட்டு இருக்கிறன் பூக்கன்றுகளுக்கு ஒட்டு வைப்பது என்று..அது போல் தான் நடக்கிறது..பூக் கன்றாவது ஒட்டு வைத்தால் வேறை,வேறை இனத்தில்,நிறத்தில் பூக்கும்.இரண்டுவரியில் எழுதினாலும் உங்கள் சுய ஆக்கமாக இருந்தால்,அல்லது அந்தப் படைப்பாளியின் ஆதாரத்தோடு இருந்தால் மிகுந்த சந்தோசம்...

இளங்கதிர் அண்ணா,கவிதையை இணைத்தமைக்கு நன்றி.

எங்கேயோ படித்தது என்று எழுதியது சரி. அது உங்கள் சொந்த ஆக்கமில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ஆனால் அதன் கீழ் உங்கள் இணைய link ஐ கொடுத்தது தவறு. அது கள விதியை மீறும் செயல். அதனை நீக்கி விடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் இணைத்த கவிதையையே மட்டுறுத்தினர்கள் நீக்கிவிடுவார்கள்.

இதனை நான் சொல்வதற்காய் நான் கள விதியை சரியாக கடைப்பிடிக்கிறேன் என்று அர்த்தமில்லை. நான் விடும் பிழைகள் எனக்கு தெரியாது. சுட்டிக்காட்டினால் திருத்த முயற்சிப்பேன். :)

இப்பொழுது நீங்கள் நீக்காவிட்டால் உங்கள் இணையத்தின் பெயரும் கறுப்பு பட்டியலில் இடம்பிடித்து விடும். :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில் ஆக்கங்களை இணைக்கும் பல பேரும் [ஒரு சிலரைத் தவிர]ஒரு இணையத்தில் வரும் மூல ஆக்கத்தை திருடி தங்கள் சொந்த ஆக்கம் போல கொண்டு வந்து இணைக்கிறார்கள் அப்படி இருக்கும் போது ஒரு சிலரை மட்டும் மூலத்தை கொண்டு வா,எழுதியவர் பெயரைப் போடு தாங்கள் ஏதோ நிர்வாகத்தில் இருப்பவர்கள் மாதிரி கதைப்பது நகைப்புக்கிடமானது...இளங்கதிர் தான் இதை எழுதினேன் என்று அவருடைய பெயரைப் அதில் போட்டு இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அப்படி செய்யாத வரைக்கும் சந்தோச‌ப்படுங்கள்...நிர்வாகம் நட‌வடிக்கை எடுக்குமாக இருந்தால் இனி மேல் தனிய எந்த இணையம் மூலச் செய்தியை வெளியிடுதோ அந்த இணையத்து ஆக்கத்தை மட்டும் தான் இணைக்க வேண்டும் என புது ரூல்ஸ் கொண்டு வர‌ வேண்டும்.

ஒரு சிலரை மட்டும் மூலத்தை கொண்டு வா,எழுதியவர் பெயரைப் போடு தாங்கள் ஏதோ நிர்வாகத்தில் இருப்பவர்கள் மாதிரி கதைப்பது நகைப்புக்கிடமானது...

எழுதியவர் பெயரை கொண்டுவர சொல்லி இங்கு நான் சொல்லவில்லை. தன்னுடைய ஆக்கம் இல்லை என்று கூறினால் போதும். :) ஆனால் எங்கேயோ படித்தது என்று எழுதியவர் அதற்குரிய இணைப்பு இல்லாவிட்டால் வேறு இணைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை தானே? ஏன் அதற்கு தனது இணைப்பை கொடுப்பான்?

இளங்கதிர் தான் இதை எழுதினேன் என்று அவருடைய பெயரைப் அதில் போட்டு இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? அப்படி செய்யாத வரைக்கும் சந்தோச‌ப்படுங்கள்...நிர்வாகம் நட‌வடிக்கை எடுக்குமாக இருந்தால் இனி மேல் தனிய எந்த இணையம் மூலச் செய்தியை வெளியிடுதோ அந்த இணையத்து ஆக்கத்தை மட்டும் தான் இணைக்க வேண்டும் என புது ரூல்ஸ் கொண்டு வர‌ வேண்டும்.

நீங்கள் சொல்வது போல் புது ரூல்ஸ் கொண்டு வந்தாலும் தமது ஆக்கம் போல் தமது இணையத்தில் போட்டு விட்டு இங்கு கொண்டு வந்து இணைக்கலாம் தானே? இங்கு எந்த எந்த இணையங்கள் தனிய மூலச்செய்திகளை வெளியிடுகிறது என்று அவர்கள் எப்படி முதலே தெரிந்து கொள்வது? அதனால் தான் வெட்டி ஒட்டி பிரசுரிக்கும் இணையங்கள் பற்றி தெரிந்ததும் அதனை கறுப்பு பட்டியலில் சேர்க்கிறார்கள்.

இங்கு யாழில் ஆக்கங்களை இணைக்கும் பல பேரும் [ஒரு சிலரைத் தவிர]ஒரு இணையத்தில் வரும் மூல ஆக்கத்தை திருடி தங்கள் சொந்த ஆக்கம் போல கொண்டு வந்து இணைக்கிறார்கள்

இப்படியான ஆக்கங்களை இனங்கண்டால் report button ஐ அழுத்தி நிர்வாகத்திடம் முறையிடுங்கள். அந்த இணையத்தின் பெயரை கூறி அதனை கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு கேளுங்கள்.

இப்பொழுது இளங்கதிர் அண்ணா விதிமுறை தெரியாமல் பிழை விட்டிருக்கலாம் தானே? தெரிந்து கொண்டால் சிலவேளை அடுத்த முறை அவ்வாறு செய்யாமல் விடலாம். தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வழங்கி உதவி செய்யும் கள உறவுகளை குறை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். :)

அதே நேரம் திருந்த நினைப்பவர்கள் கூட உங்கள் கருத்தை வாசித்த பின் திருந்தும் எண்ணத்திலிருந்து மாறி விடுவார்களோ தெரியவில்லை. :unsure:

எல்லோரும் பிழை விடுகிறார்கள் என்பதற்காக சரியான வழியையும் பிழையாக மாற்ற கூடாது. எனவே தவறு விட்டவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி இனி கருத்து எழுதுங்கள். :)

நன்றி. :)

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதியவர் பெயரை கொண்டுவர சொல்லி இங்கு நான் சொல்லவில்லை. தன்னுடைய ஆக்கம் இல்லை என்று கூறினால் போதும். :) ஆனால் எங்கேயோ படித்தது என்று எழுதியவர் அதற்குரிய இணைப்பு இல்லாவிட்டால் வேறு இணைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை தானே? ஏன் அதற்கு தனது இணைப்பை கொடுப்பான்?

அவருடைய ஆக்கமில்லாத படியால் தான் அவர் அந்த கவிதைக்கு கீழ் எங்கேயோ படித்தது என நேர்மையாக எழுதி இருக்கிறார்...அத்தோடு அவர் அந்த கவிதையை முழுமையாக இணைத்திருக்கிறார் யாழில் உள்ள சிலரை மாதிரி அரைவாசியை இணைத்துப் போட்டு மிச்சத்தை அவருடைய இணையத்தில் வந்து பார்க்க சொல்லி உங்களைக் கூப்பிடவில்லை.

நீங்கள் சொல்வது போல் புது ரூல்ஸ் கொண்டு வந்தாலும் தமது ஆக்கம் போல் தமது இணையத்தில் போட்டு விட்டு இங்கு கொண்டு வந்து இணைக்கலாம் தானே? இங்கு எந்த எந்த இணையங்கள் தனிய மூலச்செய்திகளை வெளியிடுகிறது என்று அவர்கள் எப்படி முதலே தெரிந்து கொள்வது? அதனால் தான் வெட்டி ஒட்டி பிரசுரிக்கும் இணையங்கள் பற்றி தெரிந்ததும் அதனை கறுப்பு பட்டியலில் சேர்க்கிறார்கள்.

மூலச் செய்தியைத் தெரிந்து கொள்ளத் தான் கலைஞன் நாற்சந்தியில் ஒரு திரி தொடங்கியுள்ளார்...நீங்கள் எந் நேரமும் யாழில் தானே நிற்கிறீர்கள் போய் கலைஞன் சொன்ன முறைப்படி பரிசோதித்துப் பாருங்கோ...ஊர்ப் புதினத்தில் இணைக்கப்படும் 99% செய்திகள் மூலச் செய்திகளாக இருக்காது...தமிழரசு,அபராஜிதன் போன்ற சிலரைத் தவிர மற்றவர் எல்லோரும் தங்கட இணையத்தை பிரபல்யபடுத்தவே செய்திகளை யாழுக்கு எடுத்து வருகிறார்கள்.

இப்படியான ஆக்கங்களை இனங்கண்டால் report button ஐ அழுத்தி நிர்வாகத்திடம் முறையிடுங்கள். அந்த இணையத்தின் பெயரை கூறி அதனை கறுப்பு பட்டியலில் சேர்க்குமாறு கேளுங்கள்.

ஏன் நீங்கள் உதில வந்து கருத்து எழுதாமல் ரிப்போட் பண்ணியிருக்கலாம் தானே நிர்வாகம் தேவை என்டால் இளங்கதிருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கும்...யாழுக்கு புதிசாய் வந்திருக்கிறீங்கள் என சொல்கிறீர்கள் ஆனால் எப்படி ரிப்போட் பண்ணுவது எனக்கு சொல்கிறீர்கள்...எனக்கு வேற வேலையில்லாமல் எல்லாத்தையும் ரிப்போட் பண்ணுவது தானா என்ட வேலை?

இப்பொழுது இளங்கதிர் அண்ணா விதிமுறை தெரியாமல் பிழை விட்டிருக்கலாம் தானே? தெரிந்து கொண்டால் சிலவேளை அடுத்த முறை அவ்வாறு செய்யாமல் விடலாம். தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வழங்கி உதவி செய்யும் கள உறவுகளை குறை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். :)

அதே நேரம் திருந்த நினைப்பவர்கள் கூட உங்கள் கருத்தை வாசித்த பின் திருந்தும் எண்ணத்திலிருந்து மாறி விடுவார்களோ தெரியவில்லை. :unsure:

எல்லோரும் பிழை விடுகிறார்கள் என்பதற்காக சரியான வழியையும் பிழையாக மாற்ற கூடாது. எனவே தவறு விட்டவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி இனி கருத்து எழுதுங்கள். :)

நானும் முதலில் மூலமில்லாமல் ஆக்கங்கள் கொண்டு இணைப்பவர்களோடு சண்டை பிடித்திருக்கிறன் ஆனால் பிறகு பார்த்தேன் எல்லோரும் அதைத் தானே செய்கிறார்கள்...எல்லோரும் அதையே செய்யும் போது ஒரு சிலரை மட்டும் சகாறா அக்கா,அபராஜிதன் திரும்ப கேள்வி கேட்பது தான் சந்தேகத்திற்குரியது...மேலே நான் குறிப்பிட்ட இருவரும் மூலம் குறிப்பிட்டே ஆக்கங்களை இணைப்பவராக இருக்கலாம் ஆனால் கேள்வி மற்றவரிடம் கேட்கும் போது பிழை விடும் எல்லோரிடம் கேட்க வேண்டும்...இளங்கதிர் ஒன்றும் இது பற்றி தெரியாதவரில்லை இந்த மூலப் பிரச்சனை இதற்கு முதலும் அவரது திரியில் வந்தது ஆகவே உங்களுக்குத் தான் தெரியும் மற்றவருக்கு தெரியாது என அவர்கள் கேட்காமல் சொல்லிக் கொடுக்கிற வேலையை விடுங்கள்...யாழில் இணைக்கப்படும் நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் மூலம் யார் எழுதினது என பெயர் போட்டா யாழில் கொண்டு வந்து போடுகிறார்கள்? தாங்கள் எங்கேயோ வாசித்ததை எல்லோரும் வாசிக்கட்டும் என்று தானே போடுகிறார்கள்..இளங்கதிர் தொடர்ந்து விதி முறைகளை மீறினால் நிர்வாகம் இருக்குது அவர்களுக்கு தெரியும் எப்படி நடவடிக்கை எடுப்பது என :)

நன்றி. :)

நன்றி

http://tamilraja.wordpress.com/2007/06/26/ketkiren/

எது அசல் எது நகல் எண்டு படிக்கிறவர்களே சொல்லுங்கள்

நிர்வாகம் இப்பிடியான விளம்பரபடுதல்களுக்கு கொஞ்சம் இறுக்கமான நடவடிக்கை எடுத்தல் நல்லது

நன்றி சகாரா அக்கா திண்ணையில இணைப்பு போட்டதுக்கு

அவருடைய ஆக்கமில்லாத படியால் தான் அவர் அந்த கவிதைக்கு கீழ் எங்கேயோ படித்தது என நேர்மையாக எழுதி இருக்கிறார்...அத்தோடு அவர் அந்த கவிதையை முழுமையாக இணைத்திருக்கிறார் யாழில் உள்ள சிலரை மாதிரி அரைவாசியை இணைத்துப் போட்டு மிச்சத்தை அவருடைய இணையத்தில் வந்து பார்க்க சொல்லி உங்களைக் கூப்பிடவில்லை.

எழுதியிருக்கிறார் தான். எழுதியவர் ஏன் அவருடைய link ஐ இணைக்க வேண்டும் என்று தான் நான் கேட்டேன்.

இளங்கதிர் ஒன்றும் இது பற்றி தெரியாதவரில்லை இந்த மூலப் பிரச்சனை இதற்கு முதலும் அவரது திரியில் வந்தது

அவர் நேர்மையாக எழுதியிருக்கிறார் என்று கூறியதும் நீங்கள் தான். இதனை கூறுவதும் நீங்கள் தான்.

மூலச் செய்தியைத் தெரிந்து கொள்ளத் தான் கலைஞன் நாற்சந்தியில் ஒரு திரி தொடங்கியுள்ளார்...நீங்கள் எந் நேரமும் யாழில் தானே நிற்கிறீர்கள் போய் கலைஞன் சொன்ன முறைப்படி பரிசோதித்துப் பாருங்கோ...ஊர்ப் புதினத்தில் இணைக்கப்படும் 99% செய்திகள் மூலச் செய்திகளாக இருக்காது...தமிழரசு,அபராஜிதன் போன்ற சிலரைத் தவிர மற்றவர் எல்லோரும் தங்கட இணையத்தை பிரபல்யபடுத்தவே செய்திகளை யாழுக்கு எடுத்து வருகிறார்கள்.

எந்நேரமும் யாழில் நிற்பவர்கள் எல்லா திரியையும் வாசித்திருப்பார்கள் என்று அர்த்தமில்லை. தெரியப்படுத்தியமைக்கு நன்றி. :)

எனக்கு எதிராக கதைக்க வேண்டும் என்றவுடன் கலைஞன் அண்ணாவின் திரி பற்றி நினைவு வந்த உங்களுக்கு "எங்கேயோ வாசித்தது" என்று எழுதிய இளங்கதிர் அண்ணாவுக்கு மூலச்செய்தி எது என்று அதில் சென்று கண்டுபிடித்து எழுதும்படி கூற அத்திரி நினைவு வரவில்லையா? :unsure:

எல்லோரும் அதையே செய்யும் போது ஒரு சிலரை மட்டும் சகாறா அக்கா,அபராஜிதன் திரும்ப கேள்வி கேட்பது தான் சந்தேகத்திற்குரியது...மேலே நான் குறிப்பிட்ட இருவரும் மூலம் குறிப்பிட்டே ஆக்கங்களை இணைப்பவராக இருக்கலாம் ஆனால் கேள்வி மற்றவரிடம் கேட்கும் போது பிழை விடும் எல்லோரிடம் கேட்க வேண்டும்...

சகாறா அக்கா, அபராஜிதன் அண்ணா செய்தது பிழை என்றால் நீங்கள் செய்ததும் பிழை தான்.

ஏன் நீங்கள் உதில வந்து கருத்து எழுதாமல் ரிப்போட் பண்ணியிருக்கலாம் தானே நிர்வாகம் தேவை என்டால் இளங்கதிருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்கும்....

ஒருதடவை சுட்டிக்காட்டுவேன். கேட்கவில்லை என்றால் பின்னர் report பண்ணுவேன்.

யாழுக்கு புதிசாய் வந்திருக்கிறீங்கள் என சொல்கிறீர்கள் ஆனால் எப்படி ரிப்போட் பண்ணுவது எனக்கு சொல்கிறீர்கள்..

எப்படி report பண்ணுவது என்று நான் உங்களுக்கு சொல்லவில்லை. உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிற அளவுக்கு நான் முட்டாளில்லை. ஆனால் அதனை முறைப்படி எழுதினால் புதிதாக இணையும் கள உறவுகள் இதனை வாசிக்க நேர்ந்தால் அவர்களுக்கு report செய்வது பற்றி தெரிய வரும் என்பதால் எழுதினேன். எக்கருத்தின் தன்மையும் வாசிப்பவரின் புரிந்துகொள்ளலிலும் தங்கியுள்ளது. என்னுடன் சண்டைபிடிக்கும் நோக்குடன் வாசித்தால் வேறு அர்த்தத்தை தரும். அதுவே சந்தோஷமாக வாசித்தால் வேறு அர்த்தத்தை தரும். :)

எனக்கு வேற வேலையில்லாமல் எல்லாத்தையும் ரிப்போட் பண்ணுவது தானா என்ட வேலை?

வேறு வேலை இருந்தாலும் அதனை தள்ளி வைத்து விட்டு தானே இங்கு வந்து கருத்து எழுதுகிறீர்கள்? நீங்கள் எனக்கு எழுதிய இவ்வளவு வசனம் report செய்வதற்கு எழுத தேவையில்லை.

உங்களுக்குத் தான் தெரியும் மற்றவருக்கு தெரியாது என அவர்கள் கேட்காமல் சொல்லிக் கொடுக்கிற வேலையை விடுங்கள்...

எனக்கு தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து தான் நான் அப்படி சொல்கிறேன் என்று நீங்கள் எப்படி கூறுவீர்கள்? மற்றவர்களுக்கு தெரிந்த விடயமாக இருந்தாலும் அதனை கடைப்பிடிக்காதவர்கள் இன்னொருவர் கூறும் போது சிலவேளை கடைப்பிடிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

மற்றவர்கள் கேட்காமல் நானாக போய் சொல்லிக்கொடுத்து பயன் பெற்றவர்கள் இருக்கிறார்கள். :)

யாழில் இணைக்கப்படும் நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் மூலம் யார் எழுதினது என பெயர் போட்டா யாழில் கொண்டு வந்து போடுகிறார்கள்? தாங்கள் எங்கேயோ வாசித்ததை எல்லோரும் வாசிக்கட்டும் என்று தானே போடுகிறார்கள்..

இதுவரைக்கும் நான் இணைத்த அனைத்து நகைச்சுவை துணுக்குகளுக்கும் மூலம்: முகநூல் என்று போட்டிருக்கிறேன். எனது திரி எனின் ஆரம்பிக்கும் போதே முகநூலில் இருந்தே அனைத்தையும் இணைப்பேன் என்று கூறி விட்டு தொடங்கியிருப்பேன். அப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி எல்லோரையும் பிழை சொல்வீர்கள்? :wub:

இளங்கதிர் தொடர்ந்து விதி முறைகளை மீறினால் நிர்வாகம் இருக்குது அவர்களுக்கு தெரியும் எப்படி நடவடிக்கை எடுப்பது என :)

அதை தான் நானும் சொல்கிறேன்.

report பண்ணுவதற்கே நேரமில்லாத அளவுக்கு உங்களுக்கே வேலை என்றால் நிர்வாகத்தினருக்கு அவ்வளவு திரியையும் வாசிக்க எப்படி நேரம் கிடைக்கும்? அதனால் தான் report பண்ணி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினேன்.

நான் உங்களுடன் சண்டை பிடிக்கவில்லை. என் கருத்தை கூறியுள்ளேன். அவ்வளவுதான். :) :) :)

புதிதாக வந்த என் கருத்தை ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் இடமளிக்கவில்லை என்றால் அது உங்கள் பிரச்சினை. எனக்கு கருத்து எழுதுவதை வேண்டுமென்றால் தவிருங்கள். :)

http://tamilraja.wor...06/26/ketkiren/

எது அசல் எது நகல் எண்டு படிக்கிறவர்களே சொல்லுங்கள்

நிர்வாகம் இப்பிடியான விளம்பரபடுதல்களுக்கு கொஞ்சம் இறுக்கமான நடவடிக்கை எடுத்தல் நல்லது

நன்றி சகாரா அக்கா திண்ணையில இணைப்பு போட்டதுக்கு

நன்றி அபராஜிதன் அண்ணா, இங்கு இணைத்ததற்கு.

இளங்கதிர் அண்ணா, உங்கள் link ஐ நீக்கி விட்டு அபராஜிதன் அண்ணா இணைத்த link ஐ போடுங்கள்.

அசலும் நகலும் (மூலங்கள் தவறியவை அல்லது தவறானவை)

ஓர் பதிப்பின் பிரதான மூலத்தை கண்டுபிடிப்பது எப்படி?

இலகுவானது. கூகிழ் தேடல் இயந்திரத்தினை பயன்படுத்துங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட ஒரேமாதிரியான பதிப்புக்கள் காணப்பட்டால் பிரசுரம் செய்யப்பட்ட திகதியை கவனியுங்கள்.

http://www.yarl.com/...25

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

எழுதியிருக்கிறார் தான். எழுதியவர் ஏன் அவருடைய link ஐ இணைக்க வேண்டும் என்று தான் நான் கேட்டேன்.

அவர் நேர்மையாக எழுதியிருக்கிறார் என்று கூறியதும் நீங்கள் தான். இதனை கூறுவதும் நீங்கள் தான்.

நான் இதை எழுதியது அவருக்கு தெரியாது என நீங்கள் சொன்ன படியால் தான் எழுதினதை சுருக்காமல் என்ன எழுதியிருக்குது என வாசியுங்கோ

எந்நேரமும் யாழில் நிற்பவர்கள் எல்லா திரியையும் வாசித்திருப்பார்கள் என்று அர்த்தமில்லை. தெரியப்படுத்தியமைக்கு நன்றி. :)

எனக்கு எதிராக கதைக்க வேண்டும் என்றவுடன் கலைஞன் அண்ணாவின் திரி பற்றி நினைவு வந்த உங்களுக்கு "எங்கேயோ வாசித்தது" என்று எழுதிய இளங்கதிர் அண்ணாவுக்கு மூலச்செய்தி எது என்று அதில் சென்று கண்டுபிடித்து எழுதும்படி கூற அத்திரி நினைவு வரவில்லையா? :unsure:

நான் சொல்ல வந்தது இந்த திரியை மட்டும் அல்ல உங்களுக்குத் தானே நேரம் இருக்குது வேண்டுமானால் யாழில் இணைக்கப்படும் முழுத் திரியையும் தான் சொன்னேன்...பதில் எழுதும் போது வடிவாய் வாசித்து விட்டு எழுதுங்கள்...இந்த திரியை நான் ஏன் ரிப்போட் பண்ண வேண்டும்? நானா இந்த திரியில் பிழை பிடித்தேன்

சகாறா அக்கா, அபராஜிதன் அண்ணா செய்தது பிழை என்றால் நீங்கள் செய்ததும் பிழை தான்.

நான் என்ன பிழை செய்தேன்...யாழில் யார் என்ன பிழை செய்கிறார்கள் பார்த்துக் கொண்டு இருப்பது தான் என் வேலையா?...உங்களுக்கு நேரம் கணக்க இருந்தால் யார் எங்கே பிழை விடுகிறார்கள் எனப் பார்த்து திருத்துங்கோ

ஒருதடவை சுட்டிக்காட்டுவேன். கேட்கவில்லை என்றால் பின்னர் report பண்ணுவேன்.

எப்படி report பண்ணுவது என்று நான் உங்களுக்கு சொல்லவில்லை. உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிற அளவுக்கு நான் முட்டாளில்லை. ஆனால் அதனை முறைப்படி எழுதினால் புதிதாக இணையும் கள உறவுகள் இதனை வாசிக்க நேர்ந்தால் அவர்களுக்கு report செய்வது பற்றி தெரிய வரும் என்பதால் எழுதினேன். எக்கருத்தின் தன்மையும் வாசிப்பவரின் புரிந்துகொள்ளலிலும் தங்கியுள்ளது. என்னுடன் சண்டைபிடிக்கும் நோக்குடன் வாசித்தால் வேறு அர்த்தத்தை தரும். அதுவே சந்தோஷமாக வாசித்தால் வேறு அர்த்தத்தை தரும். :)

வேறு வேலை இருந்தாலும் அதனை தள்ளி வைத்து விட்டு தானே இங்கு வந்து கருத்து எழுதுகிறீர்கள்? நீங்கள் எனக்கு எழுதிய இவ்வளவு வசனம் report செய்வதற்கு எழுத தேவையில்லை.

எங்கே கருத்து எழுத வேண்டும்,எதை ரிப்போட் பண்ண வேண்டும் என எனக்குத் தெரியும்.

எனக்கு தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது என்று நினைத்து தான் நான் அப்படி சொல்கிறேன் என்று நீங்கள் எப்படி கூறுவீர்கள்? மற்றவர்களுக்கு தெரிந்த விடயமாக இருந்தாலும் அதனை கடைப்பிடிக்காதவர்கள் இன்னொருவர் கூறும் போது சிலவேளை கடைப்பிடிக்கும் சந்தர்ப்பம் உள்ளது.

மற்றவர்கள் கேட்காமல் நானாக போய் சொல்லிக்கொடுத்து பயன் பெற்றவர்கள் இருக்கிறார்கள். :)

இதுவரைக்கும் நான் இணைத்த அனைத்து நகைச்சுவை துணுக்குகளுக்கும் மூலம்: முகநூல் என்று போட்டிருக்கிறேன். எனது திரி எனின் ஆரம்பிக்கும் போதே முகநூலில் இருந்தே அனைத்தையும் இணைப்பேன் என்று கூறி விட்டு தொடங்கியிருப்பேன். அப்படியிருக்கும் போது நீங்கள் எப்படி எல்லோரையும் பிழை சொல்வீர்கள்? :wub:

அதை தான் நானும் சொல்கிறேன்.

report பண்ணுவதற்கே நேரமில்லாத அளவுக்கு உங்களுக்கே வேலை என்றால் நிர்வாகத்தினருக்கு அவ்வளவு திரியையும் வாசிக்க எப்படி நேரம் கிடைக்கும்? அதனால் தான் report பண்ணி அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினேன்.

உங்கட மாதிரி ஆட்கள் கிடைத்தது நிர்வாகத்திற்கு கிடைத்த பெரிய கொடை...நீங்கள் வர முதல் நிர்வாகம் சரியாக கஸ்டப்பட்டது நீங்கள் அவர்கள் பாரத்தை குறைத்து வைத்துள்ளீர்கள் :D

:)

நான் உங்களுடன் சண்டை பிடிக்கவில்லை. என் கருத்தை கூறியுள்ளேன். அவ்வளவுதான்.

புதிதாக வந்த என் கருத்தை ஏற்றுக்கொள்ள உங்கள் மனம் இடமளிக்கவில்லை என்றால் அது உங்கள் பிரச்சினை. எனக்கு கருத்து எழுதுவதை வேண்டுமென்றால் தவிருங்கள். :)

நான் என்ட பதிவை பொதுவாகத் தான் போட்டேன் அதற்கு வந்து பதில் எழுதினது நீங்களே தவிர நானில்லை

நன்றி அபராஜிதன் அண்ணா, இங்கு இணைத்ததற்கு.

இளங்கதிர் அண்ணா, உங்கள் link ஐ நீக்கி விட்டு அபராஜிதன் அண்ணா இணைத்த link ஐ போடுங்கள்.

24 மணி நேரம் உங்களுக்கு இருக்கு யாழில் ஆனால் மினக்கெட எனக்கு இல்லை :)

24 மணி நேரம் உங்களுக்கு இருக்கு யாழில் ஆனால் மினக்கெட எனக்கு இல்லை :)

எனக்கு எதிர் கருத்து எழுத உங்களுக்கு நேரமிருக்கிறது. ஆனால் வேறெதற்கும் நேரமில்லை. :lol: :D

மனமுண்டானால் இடமுண்டு. :)

உங்கள் கருத்துகளில் நக்கல் தொனிக்கிறது. ஏதாவது எழுத வேண்டுமென்று நினைத்தால் எழுதிக்கொண்டு போகலாம். எனவே இக்கருத்துடன் நான் நிறுத்தி விடுகிறேன். இனியும் இத்திரியை திசை திருப்பும்படி என் கருத்துகள் அமைவதை நான் விரும்பவில்லை.

எனக்கு 24 மணித்தியாலமும் நேரம் இருக்கிறது என்ற தப்பான எண்ணைத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நான் வாக்களிக்கும் போது ஒரு கிழமை வீட்டில் தான் இருந்தேன். ஆனால் பின்னர் பெரிதாக வீட்டில் நிற்பதில்லை. அடிக்கடி பாடல் போட்டாலோ கருத்து எழுதினாலோ வீட்டில் நிற்கிறேன் என்று அர்த்தமில்லை. அல்லது எனக்கு நேரமிருக்கிறது என்றோ அர்த்தமில்லை.

ஒருநாளில் 24 மணித்தியாலங்கள் செலவழித்தால் எல்லா நாளும் அவ்வாறு என நினைப்பதும் தவறு. இது உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டுமென்றில்லை.

கட்டாயம் report செய்யுங்கள் என்று நான் ஒரு இடமும் சொல்லவில்லை. உங்களை கட்டாயப்படுத்த எனக்கு உரிமை இல்லை. :) report செய்யுங்கள் என்று தான் கூறினேன். விரும்பியவர்கள் ஏற்கலாம். விரும்பாதவர்கள் தவிர்க்கலாம். :)

எனக்கு ஏன் திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் என்று எனக்கு தெரியும். இன்னும் சிலரும் புரிந்து கொள்வார்கள். உங்கள் பொன்னான நேரத்தில் சிறுபகுதியை எனக்காக செலவளித்ததற்கு நன்றிகள். உங்களுக்கு நேரமில்லாவிட்டால் இப்படி ஆலோசனை வழங்குவதையும் தவிர்த்து உங்கள் நேரத்தை சேமிக்கலாம். :icon_idea:

நன்றி. :)

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..... கண்ணைக் கட்டுது!!! dizzy.gifclosed.gif

  • தொடங்கியவர்

கடவுளே நான் ரசித்த கவிதை ஒன்றை எல்லோரும் ரசிக்கட்டும் என முழுமையாகவே போட்டதற்கு இவ்வளவு கருத்துகளா? கவிதையை அழித்துவிடலாம் போல் தோன்றுகிறது.

ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது... கவிதையை ரசிப்பதை விட்டு மூலத்தை தேடுவதிலேயே காலம் கடந்துபோகிறது.

இல்லை அண்ணா, மூலத்தை தேட முடியாதவர்கள் அதனை போடாவிட்டால் அது பரவாயில்லை. அது உங்கள் கவிதை இல்லை என்றாவது குறிப்பிட்டால் போதும். அதை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் அதன் கீழ் உங்கள் இணைய link ஐ இணைத்ததால் தான் இத்தனை பிரச்சினையும். அதனை இப்பொழுது நிர்வாகத்தினர் அகற்றி விட்டார்கள்.

இனியாவது இதனை கருத்தில் கொள்ளுங்கள். :) இது என் கோரிக்கை மட்டுமே. ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்களை பொறுத்தது. :)

நீங்கள் எனக்கு முன்பே யாழில் உறுப்பினர். உங்களுக்கு நான் ஆலோசனை சொல்லுவதை நீங்கள் விரும்புவீர்களோ தெரியாது. இது உங்களுக்கு தெரியாததும் அல்ல. எனினும் கூறுகிறேன். உங்கள் இணைய link ஐ வேண்டுமென்றால் உங்கள் signature பகுதியில் போடுங்கள். :)

நன்றி. :) :) :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.