Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்:

Featured Replies

20060405001_551.jpg

தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: சட்டவாக்கல் பொறுப்பாளர் சுடர் விளக்கம்

[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 20:44 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழக் காணிச்சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறையின் சட்டவாக்கல் பிரிவுப் பொறுப்பாளர் சுடர் விளக்கம் அளித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலிற்கு தமிழீழ காணிச்சட்டம் தொடர்பாக சுடர் வழங்கிய நேர்காணல்:

கேள்வி: தமிழீழ காணிச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

பதில்: தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவ

  • Replies 64
  • Views 8.3k
  • Created
  • Last Reply

அதாவது நாங்கள் இந்த இயலில் பிரதானமாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது காணிகளை விற்பனை செய்வதை இந்த சட்டம் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தடை செய்கின்றோம்.

என்னைப் பொறுத்தளவில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை..

'ஆண்டாண்டு காலமதாய் வளர்ந்து வந்த காணி

அப்பன் ஆச்சி காலமதாய் உருண்டு வாழ்ந்த காணி..'

வேர்களைக் கிளறி வேறாக்கும் செயலொத்தது இதுவென்பது எனது கருத்து. :oops:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் சோழியன் அண்ணா!

உங்கள் காணிகள் விற்பனை செய்வதற்கே தடை செய்யப்பட்டிருக்கின்றது. உங்கள் பாட்காலத்து சொத்தை நீங்கள் விற்காமல் இருக்க இந்த சட்டம் உங்களுக்கும் உதவுகின்றது எனக் கொள்ளலாம். பரம்பரை சொத்தை நீங்கள் விற்க மாட்டீர்கள். எனவே இந்த சட்டத்தால் எந்த புலம் பெயர்வாழ் மக்களும் பாதிப்படைய மாட்டார்கள் :D

விக்கிறாதால் என்ன பிரச்சினை, அவன் அவன் ரத்தம் சிந்தி சம்பாதிச்ச காணிகளை தன் தேவைக்காக விக்காமல் யாருக்காக வைத்திருக்க வேண்டும், காணி என்பதே ஒரு முதல்தானே, தேள்வைக்கு உதவாத பொருள் இருந்தென்ன விட்டென்ன? சிங்களவனுக்கா விற்கிறார்கள் தமிழனுக்குத்தானே விற்கிறார்கள், எப்படியோ ஒரு தமிழனிடம்தானே அது இருக்கப்போகுது,

கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?

பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.

இங்கே குடியிருந்த காணிகள் எங்கிருந்து வரப் போகின்றன.. புலம்பெயர்ந்தவர்களால் விற்கமுடியாத காணிகள்.. அவர்கள் சந்ததியினரால் கவனிக்கமுடியாமல் போகும்பட்சத்திலும் வரலாமமில்லையா.. ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?! :idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேர்காணலில் பின்னர் புதினம் இணையத்தளத்தினர் திருத்தங்கள் செய்து போட்டிருக்கின்றனர்.

பாட்டம் (குத்தகை) என்பதன் அர்த்தம் சரி செய்திருப்பதாக கூறியிருக்கின்றனர். பேட்டியை மீண்டும் வாசிக்க வேண்டும்.

குறிப்பு: பாட்டம் என்பதன் பொருள் தன் விருப்பத்திற்கு என எமது முன்னைய செய்தியில் வெளியிட்டிருந்தோம். ஆனால் அதற்குரிய சரியான பொருள் குத்தகை என்பதாகும். தவறுக்கு வருந்துகின்றோம்.

இந்த நேர்காணல்களை பல இணையத்தளங்கள் தம்முடையது போன்று கொப்பியடித்து போட்டிருக்கின்றனர். இத்தவறினை அவர்களும் திருத்துவது நல்லது.

புலம்பெயர்ந்து இருந்துகொண்டு காணிகளை அதிக பெறுமதிக்கு விற்று அவற்றை காசாக்கிக் கொண்டு மீண்டும் இங்கு வந்து அங்குவாழும் மக்கள் காணியும் இல்லாமல் இருக்க இடமும் இல்லாமல் வாழ்வதை விட தமிழீழ நீதி நிர்வாகத்துறையின் இச் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

புலம்பெயர்ந்து வாழும் யாரும் நீங்கள் வாழும் நாட்டில் உங்களிற்கு உங்கள் தாயகத்தில் இவ்வளவு பெறுமதியான சொத்து இருக்கின்றது என்று காட்டியிருக்கிறீர்களா? :roll:

நீங்கள் இருக்கும் நாட்டையும் ஏமாற்றி தமிழீழத்தினையும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். :idea:

இந்த முடிவை நிட்சயம் புலம் பெயர்தவர் அதிலும் புலம் பல உடையோர் கேட்டு புலம்பவே செய்வர் ஆனாலும் எடுத்த முடிவு எடுத்ததே என்பதும் எல்லோருக்கும் புரியும்

  • கருத்துக்கள உறவுகள்

விக்கிறாதால் என்ன பிரச்சினை, அவன் அவன் ரத்தம் சிந்தி சம்பாதிச்ச காணிகளை தன் தேவைக்காக விக்காமல் யாருக்காக வைத்திருக்க வேண்டும், காணி என்பதே ஒரு முதல்தானே, தேள்வைக்கு உதவாத பொருள் இருந்தென்ன விட்டென்ன? சிங்களவனுக்கா விற்கிறார்கள் தமிழனுக்குத்தானே விற்கிறார்கள், எப்படியோ ஒரு தமிழனிடம்தானே அது இருக்கப்போகுது,

பிருந்தன் அவர்களே

வெளிநாட்டில் உள்ளோர் காணியை விற்க முடியாது என்று கொண்டுவந்த சட்டம் என்பது, எம்மக்களை தாயகத்தில் இருந்து தூரவிலகிப் போவதைத் தடுப்பதற்காகத் தான் அப்படி ஒரு சட்டம் வந்திருக்க வேண்டும்.

காணி இருந்தால் கட்டாயம் தாயகத்தோடு தொடர்பைப் போண வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனக் கருதியிருக்கலாம். ஏனென்றால் சிலர் புலம்பெயர்ந்த பின்பு தாயகத்தை மறந்த நிலையில் வாழ்வது தெரிகின்றது. ஏன் தாயகத்தில் உள்ள காணியை விற்கின்றார்கள்?? தங்களுக்கும் தாயகத்துக்கும் தொடர்பை விலத்தி கொள்வதற்கு தானே? அது அனுமதிக்கப்பட வேண்டும் என நம்புகின்றீர்களா??

இச்சட்டம் பலரைப் பாதித்திருக்கலாம். ஆனால் கட்டாயம் அவசியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே குடியிருந்த காணிகள் எங்கிருந்து வரப் போகின்றன.. புலம்பெயர்ந்தவர்களால் விற்கமுடியாத காணிகள்.. அவர்கள் சந்ததியினரால் கவனிக்கமுடியாமல் போகும்பட்சத்திலும் வரலாமமில்லையா.. ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?! :idea:

சோழியன் அண்ணா சொல்வது சரியானது. தொடர்புகள் விடுபடக்கூடாது என்பதற்காக ஒரு பக்கம் சட்டம் ஒன்று கொண்டவரப்பட்ட பின்பு மறுபக்கம் குடியிருந்தவர்களுக்கு காணி சொந்தம் என்ற நிலையை உருவாக்குவது சரியாகப்படவில்லை.

அப்படி ஒரு பிரிவு கொண்டு வரவேண்டும் என்றால் தமிழீழம் கிடைத்த பிற்பாடு ஒரு நிம்மதியான காலப்பகுதியில் கொண்டுவரலாம். ஆனால் யுத்த காலப்பகுதியில் இப்படியான முறைமை ஆதரிக்கத்தக்கதல்ல. இன்று கூட காணியில் குடியிருக்கின்றவர்கள் காணியை கையளிக்க மறுப்பதாக அறிகின்றோம். தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர். இப்படியான சட்டம் மேலும் அவர்களின் அடாவடித்தனத்தை அதிகரிக்க செய்யும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விலைக் கட்டுப்பாடும் தர நிர்ணயமும் நல்ல திட்டங்கள். வெளிநாடகளில் நடைமுறையில் உள்ள திட்டங்கள். ஒரு நாட்டின் சொத்துக்களின் விலை அந்த நாட்டில் உள்ள மக்களின் வருமானங்களளிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர வெளிநாடுகளில் உள்ள மக்களின் தனிநபர் வருமானங்களிற்கு அல்ல..

யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் வீடுகள் 30 லட்சம் 40 லட்சம் என உயர்ந்ததற்கு வெளிநாட்டு தமிழ் மக்களும் ஒரு காரணம். யாழ்ப்பாணத்தில் தொழில் புரிந்து வருமானம் பெறும் ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அங்கு விலையேற்றம் உள்ளது. இதனை தடுக்க இத்திட்டம் உதவும். வெளிநாட்டுத்தமிழர்கள் தங்கள் பணத்தை வேண்டுமானால் தமிழீழத்தில் தொழில்துறைகளில் முதலிடட்டும்.

சோழியன் அண்ணா சொல்வது சரியானது. தொடர்புகள் விடுபடக்கூடாது என்பதற்காக ஒரு பக்கம் சட்டம் ஒன்று கொண்டவரப்பட்ட பின்பு மறுபக்கம் குடியிருந்தவர்களுக்கு காணி சொந்தம் என்ற நிலையை உருவாக்குவது சரியாகப்படவில்லை.

அப்படி ஒரு பிரிவு கொண்டு வரவேண்டும் என்றால் தமிழீழம் கிடைத்த பிற்பாடு ஒரு நிம்மதியான காலப்பகுதியில் கொண்டுவரலாம். ஆனால் யுத்த காலப்பகுதியில் இப்படியான முறைமை ஆதரிக்கத்தக்கதல்ல. இன்று கூட காணியில் குடியிருக்கின்றவர்கள் காணியை கையளிக்க மறுப்பதாக அறிகின்றோம். தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர். இப்படியான சட்டம் மேலும் அவர்களின் அடாவடித்தனத்தை அதிகரிக்க செய்யும்.

குடி இருப்பவனுக்குதான் காணி என்றால் நிட்சயமாக 90% புலம்பெயர் மக்களுடைய காணிகள் அவருக்கு உரிமையற்றதாக போய்விடும். இது நிட்சயம் புலம்பெயர் தமிழரிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கும், நான் நினைக்கிறேன் இச்சட்டங்கள், சுதந்திர தமிழ்ழீழத்தில் மேற்கொள்லப்பட வேண்டியவை,சுதந்திரத்தின் பின் திரும்பிவரவிரும்பாதவர்களின

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்மீது குண்டு விழாதவரை, தம்மை பயிற்சியெடுக்க அழைக்காதவரை, தாம் புலிகளால் பாதிக்கப்படாதவரையே புலத்தமிழர்களின் ஆதரவு புலிகளுக்கு இருக்கும் என்கிறீர்கள்..

90 வீதமானவர்களின் காணி உரிமையற்றதாக போய்விடும் என்றால் 90 வீதமானோர் திரும்ப மாட்டார்கள் என்கிறீர்கள்.

தங்களை பாதிக்காதவரை புலிகளுக்கு ஆதரவு.. எங்கே அவர்களது நடவடிக்கைகள் தம்மையும் பாதித்திடும் என்னும் போது.. மெதுவாக குரல் வருகிறது.. உது சரியில்லை என்று..

புலத்தமிழர்களின் எதிர்ப்புக்காக புலிகள் பணிந்து போனால் அவர்களின் பணத்திற்கு பணிந்ததாகவே கொள்ள வேண்டிவரும்..

சில தவறான நடவடிக்கைகளால் தற்போதைய நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. புலிகளின் வளர்ச்சிக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பும் முக்கியமானதொன்றென்பதை எவரும் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
குடி இருப்பவனுக்குதான் காணி என்றால் நிட்சயமாக 90% புலம்பெயர் மக்களுடைய காணிகள் அவருக்கு உரிமையற்றதாக போய்விடும். இது நிட்சயம் புலம்பெயர் தமிழரிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கும், நான் நினைக்கிறேன் இச்சட்டங்கள், சுதந்திர தமிழ்ழீழத்தில் மேற்கொள்லப்பட வேண்டியவை,சுதந்திரத்தின் பின் திரும்பிவரவிரும்பாதவர்களின
  • கருத்துக்கள உறவுகள்

தம்மீது குண்டு விழாதவரை, தம்மை பயிற்சியெடுக்க அழைக்காதவரை, தாம் புலிகளால் பாதிக்கப்படாதவரையே புலத்தமிழர்களின் ஆதரவு புலிகளுக்கு இருக்கும் என்கிறீர்கள்..

90 வீதமானவர்களின் காணி உரிமையற்றதாக போய்விடும் என்றால் 90 வீதமானோர் திரும்ப மாட்டார்கள் என்கிறீர்கள்.

தங்களை பாதிக்காதவரை புலிகளுக்கு ஆதரவு.. எங்கே அவர்களது நடவடிக்கைகள் தம்மையும் பாதித்திடும் என்னும் போது.. மெதுவாக குரல் வருகிறது.. உது சரியில்லை என்று..

புலத்தமிழர்களின் எதிர்ப்புக்காக புலிகள் பணிந்து போனால் அவர்களின் பணத்திற்கு பணிந்ததாகவே கொள்ள வேண்டிவரும்..

இல்லை நண்பரே!!

யோசித்துப்பாருங்கள். இப்போது காணிகளின் விலை எவ்வளவு போகின்றது. 50 லட்சம் ரூபா என்று ஒருவரின் சொத்தின் அளவை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தமிழீழ நிதிக்காக புலத்தமிழர் பலமடங்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது ஏனென்றால் எம் தாய் நிலத்தின் மீதுள்ள பற்று. எனவே உதவியே செய்யாமல் இருப்பவர்களை விட இவர்களின் செயற்பாடு எவ்வவோ மேல்.

மெதுவாக்க் குரல் வருவகின்றது என்பதல்ல இது. எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ..புலம் பெயர் தமிழ் மக்களுடைய அதிகமான எதிர்ப்பபை சம்பாதிக்க போகும் விடயம்..இது...சம்மந்தப்பட்டவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??

இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.

ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..

கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.

தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சட்டத்தில் ஒரு இடத்திலும் முழுமையாக கையகப்படுத்த போவதாக என சொல்லவில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களின் காணி கையகப்படுத்தப்பட்டு அவர்கள் திரும்பும் போது அவர்களிடம் கொடுக்கப்படும்.

இங்கு தான் புலத்தமிழர்களுக்கு பிரச்சனை.. திரும்பும் போது தரப்படும் என்றால்.. அது ஒரு போதும் கிடைக்க போவதில்லை. ஏனெனில் 80 அல்லது 90 வீதம் திரும்ப போவதில்லை.

அவ்வாறாயின் விற்க முடியாது என்பது தான் பிரச்சனை.. சரி.. தூயவன் சொன்னது போல வீட்டுப் பெறுமதியை விட அதிகமாக கொடுக்கிறார்கள் என்றால் அந்தக் கணக்கில் வீட்டினையும் சேர்க்கிறது தானே..

விற்பதற்கு தடை என்பதை மேற்கோள் காட்டி.. ஒருவர் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணாம்.. என்று சொல்லியிருக்கிறார். ஆச்சியின் மண் என்றால் எதற்காக விற்க வேணும்.. புலிகளின் பராமரிப்பில் நீங்கள் போகும் வரை? இருக்கட்டுமே..

ஒரு வேளை புலிகளில் நம்பிக்கை இல்லையோ தெரியாது. அவங்கடை கையில போனால் போனது தான் எண்டு புலத்தமிழர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை..

நீங்கள் திரும்பியதும் உங்கள் வீடு உங்களுக்கு தான்.. அது வரை அது புலிகளின் கையில் இருக்கட்டுமே.. நாட்டையே புலிகளின் கையில் ஒப்படைத்திருக்கிறீர்கள். வீட்டை ஒப்படைக்க மாட்டீர்களா..?

பயப்பிட வேணாம்.. உங்கடை பேரில தான் காணியிருக்கும்.. ஆனால் நீங்கள் விக்க முடியாது. விலையேத்தவும் முடியாது..

வேணுமெண்டால் நேரை சொல்லுங்கோ.. புலிகளை நம்பி அவர்களின் கையில் வீடுகளை கொடுக்க முடியாதென..

............ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?! :idea:

விளங்கித்தான்.... விரைவில் யாவரும்... வருவோம் என்றும்.... இருக்லாம் அல்லவா... :mrgreen: :D (புலத்து யூதர்கள் நிலை இப்போ அறிவீர்கள்தானே...:idea: )

மேலும் மேலும் சிறு சிறு திருத்தங்களை எதிர்பார்க்கலலாம்... :|

இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.

ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..

கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.

தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது

தளத்தில் உயிரைக்கொடுப்பவனின் தியாகத்தின் முன், புலத்தில் பங்களிப்பு செய்பவன் ஒன்றும் பெரிதல்ல, ஏனெனில் அதை ஒத்த ஒரு உயிர்தான் புலத்துக்கு வந்து உழைத்து தன்னையும் வழப்படுத்தி, தான் சார்ந்தவர்களையும், வழப்படுத்தி, ஒருபகுதியை நாட்டுக்காகவும் கொடுக்கிறான், ஆனால் தளத்தில் உள்ளவன் தன்னையே கொடுக்குறான், அவர்களோடு ஒப்பிடமுடியாது,

ஆனால் தளத்திலும் புலத்திலும் பங்களிப்பே செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு கூட்டமும் இருக்கு, அதைவிட பங்களிப்பும் செய்யாமல் ஒதுங்கியும் இராது உபத்திரம் கொடுத்துக்கொண்டு ஒரு கூட்டம் இருக்கு, இவர்களை விட புலத்தில் இருந்து கொண்டு பங்களிப்பு செய்வபன் மேலானவன். அவன் தளத்தில் வைத்திருக்கும் நிலத்தின் பெறுமதி, அவனது இங்கத்திய உழைப்புக்கு ஒரு சொற்பப்பெறுமதி அந்த துண்டு காணிக்காகவும் அங்கிருக்கும் எஞ்சிய உறவுகளுக்காகவும் அவன் வருடம் ஒருதடவை போகிறான் வருகிறான். அந்த காணியின் பெறுமதிக்கு மேலாகவே அவன் இங்கு பங்களிக்கிறான், அந்த துண்டு நிலத்துகாகத்தான் அவன் பங்களிப்பு செய்கிறான் என நினைத்தால் அது நகைப்பிற்கிடமான விடயம், இதை விட காணி இல்லாதவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன? அவனது நாடு விடுதலை பெறவேண்டும், அவன் சுதந்திர தமிழீழத்தில் வாழமுடியாவிட்டாலும் அவன்பின் வரும் இனமாவது சுதந்திரத்துடன் வாழவேண்டும், எமது முன்னோர் செய்திருந்தால் நாம் வாழ்ந்திருப்போம், நாம் செய்வதால் எமது அடுத்த சந்ததி வாழும், நாமும் செய்யாவிடால் அடுத்த சந்ததியும் போராடிக்கொண்டுதான் இருக்கும், எம்மனதுக்கு பட்டதை சொல்வோம் ஏற்பதும் மறுப்பதும் உம் பாடு.:wink:

எந்த அரசும் தனது சுயாதிபத்திற்கு உடப்பட பிரதேசத்தில் நிலத்தை வாங்கும்,விற்கும் உரிமை உடையது.

அதுவே அந்த அரசின் சுயாதிபத்திய உரிமை அல்லது சொவரின் ரைட் எனப்படுகிறது.இது உலகின் எந்த அரசிற்கும் இருக்கும் உரிமை.இதன் அடிப்படையிலயே அது சட்டங்களை இயற்றுகிறது. நாணயங்களை வெளியிடுகிறது.இது தமிழ் ஈழ தனி அரசு நோக்கிய பயணத்தில் ஒரு மையிற்கல்.

இதன் அடிப்படயிலேயே இந்த காணிச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.உதாரணத்திறு சிங்கபூரில் எந்த வீடோ கணியோ நீண்டகால குத்தகைக்கே தனியாரிற்கு விற்கப் படுகிறது, நிரந்தர நில உரிமை அரசயே சாரும்.

இங்கே தமிழ் ஈழ அரசானது உருமையாளர் அற்று இருக்கும் காணிகளைக் கையகப் படுத்தி,தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தமிழ் ஈழ அரசின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.தகுந்த உரிமையாளர் வருமிடத்து ,இது மறுபடியும் அவர்களுக்கு வழங்கப் படுகிறது.

இங்கே இரத்தத்தையும்,உயிரையும் சிந்தி மீட்கப்பட நிலம், அந்த ஈகை எதற்காக நடத்தப்பட்டதோ ,அதன் நோக்கம் நிறைவேறுவதற்காக,தமிழ் ஈழ அரசின் பொருளாதர அடித்தளத்தை கட்டி எழுப்புவதற்காக, இந்தக் காணிகள் கையகப் படுத்தப்படுகின்றன.

எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.

புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்.இவர்கள் தமிழ் ஈழத்திற்கு ஒரு போதும் போகப் போவதில்லை.இவர்களின் காணிகளை தமிழ் ஈழ அரசு கையகப் படுத்தி, தமிழ் ஈழத்தின் பொருளாதரத்தை மேம்படுத்தி,அங்கு வாளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ,அந்த நிலங்களை மீட்கப் போராடிய மாவீரரின் கனவுகளை நிஜமாக்கும்.

புலத்தில் இருந்து புலம்புபவர்கள் புலம்புவார்கள்,மேதாவிகள் ஆலோசனை சொல்வார்கள் இவற்றிற்கெல்லாம் அசைந்து கொடுக்க தமிழ் ஈழ தனியரசோ,அதனை அமைக்கப் போராடும் புலிகளோ தமது இறுதி இலக்கில் இருந்து வழுவார்கள். காரணம் போராடியவர்களுக்கே அந்த நிலம் சொந்தம்.உலக வராலாறுகளிலும் அதுவே நிதர்சனமான உண்மை.அதுவே தர்மமும் ஆகும்.

ஓடி ஒழிந்து கொண்ட நாங்கள் வரலாற்றைப் படைப்பவர்கள் அல்ல.

................. .....................

புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்..............

உண்மைதான்........

ஆனால் உண்மையாக 10 சதவீதம்தானா... :shock: :(

அப்ப 50 சதவீதம் அல்லது இதைவிட கூடவீதத்தினர் பங்களித்தால்.... :o & 8)

உண்மைதான்........

ஆனால் உண்மையாக 10 சதவீதம்தானா... :shock: :(

அப்ப 50 சதவீதம் அல்லது இதைவிட கூடவீதத்தினர் பங்களித்தால்.... :o & 8)

டோற்முன்ரில் மட்டும் 155 குடும்பத்தில் 154பேர் இறுதியாக சேகரித்த தமிழீழதிறைசேரிக்கான நிதி பங்களிப்பு செய்திருக்கிறார்கள், இது எத்தனை சதவீதம்? கிறடிற்காட்டில் அடித்து கொடுத்தவர்களும் உண்டு. :wink:

பிருந்தன் நான் புலதில் என்று தான் குறிப்பிட்டேன்,டோற்முன்ரில் என்று அல்ல.பிரித்தானியாவிலும்,கனடா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.