Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய தூதுவரை நாடு உடனடியாக கடத்துமாறு -விமல் வீரவங்ச அழுத்தம்!

Featured Replies

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் எனக் கூறி நாட்டின் உள்நாட்டு பிரச்சினையில் அநாவசியமாக தலையிட்டதாகக் கூறியே தேசிய சுதந்திர முன்னணி இந்த அழுத்தத்தைப் பிரயோகித்துள்ளது.

நாடு முழுவதும் இராணுவ முகாம்களை எங்கு ஸ்தாபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இலங்கை அரசாங்கத்திற்கே இருக்கின்றது என அந்த கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜோன் ரன்கின் தெரிவித்திருந்தார். இதன்பின்னர் அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே தேசிய சுதந்திர முன்னணி அவர் நாடு கடத்த வேண்டுமென கோரியுள்ளது.

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என பிரித்தானிய தூதுவர் அண்மையில் வெளியிட்ட கருத்து பாரதூரமானது. இலங்கையின் பாதுகாப்பு உள்ளிட்ட நிறைவேற்று அதிகாரங்கள் நாட்டு மக்கள் தமது வாக்குகளால் தெரிவு செய்த ஜனாதிபதிக்கு உள்ளது. இந்த நாடு இறையாண்மையுள்ள நாடு. அத்துடன் இலங்கை சுதந்திரமான நாடு. 1972 ஆம் ஆண்டு வரை இலங்கையின் இறையாண்மை பிரித்தானியாவுக்கு சொந்தமாக இருந்தது. டொமினியன் குடியரசு என்ற நிலையில் இருந்து இலங்கை விலகி 40 வருடங்கள் கடந்துவிட்டது. எனினும் ஜோன் ரக்கின் போன்றவர்கள் இன்னும் இலங்கை பிரித்தானிய மகாராணியின் ஆட்சிக்கு உட்பட நாடு என நினைத்து கொண்டு இருக்கின்றனர்.

பிரித்தானியா மாத்திரமல்ல, உலகில் பல நாடுகள் இலங்கையின் இறையாண்மையை மதித்து நடந்து கொள்வதில்லை. இதனால் இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாடு என்ற வகையில் நாம் எதிர்ப்பையும், அதிருப்தியையும் வெளியிட வேண்டும். மனித உரிமைகள் தொடர்பாக கூச்சலிடும் போடும் மேற்குலக ஏகாதிபத்தியவாதிகள், ஏனைய நாடுகளில் உள்ள மக்களின் இறையாண்மைக்கு அழுத்தம் கொடுப்பது மிகவும் கவலைக்குரியது.

இந்த சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சர் பிரித்தானிய தூதுவரிடம் அதிருப்தி தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இது போதுமானதல்ல, பிரித்தானிய தூதுவர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் எனவும் பியசிறி விஜேநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா மாத்திரமல்ல, உலகில் பல நாடுகள் இலங்கையின் இறையாண்மையை மதித்து நடந்து கொள்வதில்லை

ஏன் மதிக்கவில்லை என்பதையும் நீங்கள் சிந்திக்கவேண்டும் சகோதரயா.....

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய தூதுவர், நாடு கடத்தப் பட்டால், மொட்டை போடுவதாக இருக்கின்றேன்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

அவசரமாக செய்யவேண்டிய வேலை

அழுத்தம் கொடுங்கள் வீரவம்ச.....

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களை நாடு கடத்தினாலும் திரும்பவும் போய் சிங்களவனின் காலை கட்டி புடித்துக்கொண்டு இருப்பாங்கள் இந்த மானம் கெட்டவங்கள்

ஏற்கனவே பிரேமதாசவின் காலத்தில் என்று நினைக்கின்றேன் பிரித்தானிய தூதரக அதிகாரிகளை ஸ்ரீலங்கா சிங்கள பயங்கரவாதிகள் நாடுகடத்தி இருந்தார்கள் அப்பொழுது அதற்க்கு நல்ல பதிலடி கொடுத்திருந்தால் இப்போது இந்த நிலை வந்திராது

கெதியாக் கடத்தட்டும். அப்பத் தான் நல்லது.

வேறு நாட்டுப் பிரதிநிதிகளையும் சேர்த்துக் கடத்தலாமே?

சொல்லவேண்டாம் செய்யுங்கள் ..........எம் ஆதரவு என்றும் தங்களுக்கு .

அப்படியே அமெரிக்கதூதுவரையும் நா.......கடத்திவிடுங்கள்....

அமெரிகாவினது ராஜதந்திரத்தை அப்படியே காப்பி அடிக்கிறார்கள்.

அமெரிக்க இராசாங்க திணைக்களத்தில் ஒரு பகுதி TNA/GTF வுடன் பேசுவார்கள். இன்னொருபகுதியினர் ஸ்ரீ லங்காவுடன் பேசுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.