Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவின் உரை நிறுத்தப்பட்டது..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் போராட்டம், இவ்வளவு ஓர்மமாக இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால்.... மகிந்த, லண்டனுக்கு வந்திருக்க மாட்டார்.

:D

  • Replies 93
  • Views 7.4k
  • Created
  • Last Reply

தமிழ் மக்களின் போராட்டம், இவ்வளவு ஓர்மமாக இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால்.... மகிந்த, லண்டனுக்கு வந்திருக்க மாட்டார். :D

ஆம். ஆனால் எந்த நிகழ்விலும் பங்குபற்ற விடாத வரை எதுவும் கூற முடியாது. கலந்துகொண்டால் அவருக்கு வெற்றியாகி விடும். ஆனால் அவரை விரட்ட வேண்டும் என்ற எண்ணம் அங்கு சென்ற மக்களிடம் உள்ளது. :)

மகிந்தவின் கொடும்பாவியும் கொண்டுசெல்லப்பட்டிருக்காம். :D :D

எண்ணற்ற தமிழீழ தேசிய கோடி, பிரான்ஸ், நோர்வே, பிரித்தானிய தேசிய கொடிகளும் பிடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

முன்னே செல்லும் பலர் தலைவரின் படங்களை காவிச்செல்கிறார்களாம். சிலர் தலைவரின் படம் போட்ட உடை அணிந்துள்ளார்களாம்.

இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களின் பல படங்களையும் போற்குற்றவாளி என்று குறிப்பிட்டபடி மகிந்தவின் படங்கள் சிலவற்றையும் மக்கள் கொண்டு செல்கின்றனராம். நல்ல விடயம். :)

கூடியவரை அனைவரும் போர்குற்றம் பற்றிய பதாகைகளை தாங்கியிருக்கிறார்களாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணற்ற தமிழீழ தேசிய கோடி, பிரான்ஸ், நோர்வே, பிரித்தானிய தேசிய கொடிகளும் பிடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

முன்னே செல்லும் பலர் தலைவரின் படங்களை காவிச்செல்கிறார்களாம். சிலர் தலைவரின் படம் போட்ட உடை அணிந்துள்ளார்களாம்.

இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களின் பல படங்களையும் போற்குற்றவாளி என்று குறிப்பிட்டபடி மகிந்தவின் படங்கள் சிலவற்றையும் மக்கள் கொண்டு செல்கின்றனராம். நல்ல விடயம். :)

உங்கள் நேர்முக வர்ணனையைத் தொடருங்கள், காதல்!

நல்லூர்த் தேர்முட்டியிலிருந்து, ரவி சர்மா பேசுகின்றேன்! என்ற பழைய நினைவுகள், மீள வருகின்றன! நன்றிகள்! :D

கடந்த பல போராட்டங்களில் ஏற்பட்ட குழப்பங்களை களைந்து இன்று அனைவரும் ஒற்றுமையாக கலந்து கொண்டுள்ளார்களாம். கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள். :)

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணற்ற தமிழீழ தேசிய கோடி, பிரான்ஸ், நோர்வே, பிரித்தானிய தேசிய கொடிகளும் பிடித்துக்கொண்டிருக்கிறார்களாம்.

முன்னே செல்லும் பலர் தலைவரின் படங்களை காவிச்செல்கிறார்களாம். சிலர் தலைவரின் படம் போட்ட உடை அணிந்துள்ளார்களாம்.

இறுதிப்போரில் பாதிக்கப்பட்ட மக்களின் பல படங்களையும் போற்குற்றவாளி என்று குறிப்பிட்டபடி மகிந்தவின் படங்கள் சிலவற்றையும் மக்கள் கொண்டு செல்கின்றனராம். நல்ல விடயம். :)

கூடியவரை அனைவரும் போர்குற்றம் பற்றிய பதாகைகளை தாங்கியிருக்கிறார்களாம். :)

கை காவலாய்.... கூழ் முட்டை, அழுகின தக்காளிப்பழமும் கொண்டு சென்றால்... அவசரத்துக்கு உதவலாம். :D:lol:

இப்பொழுது மகிந்தவின் கொடும்பாவி எரிக்கப்படுகிறதாம்.

கை காவலாய்.... கூழ் முட்டை, அழுகின தக்காளிப்பழமும் கொண்டு சென்றால்... அவசரத்துக்கு உதவலாம். :D:lol:

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

538291_4102101839748_1457480644_n.jpg

600228_4101766711370_1499036014_66089756_2095481616_n.jpg

577689_4101757071129_1829062934_n.jpg

தனது குடும்பம் இலங்கையில் இருந்தும் ரவி கருணாரத்னாவின் அணியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் மகிந்தவின் இனப்படுகொலைகளைப் பற்றி எங்களைவிட உணர்ச்சி பூர்வமாக் பேசிக்கொண்டிருக்கிறார்...கண்ணீர் வருகிறது...

Edited by சுபேஸ்

உங்கள் நேர்முக வர்ணனையைத் தொடருங்கள், காதல்!

நல்லூர்த் தேர்முட்டியிலிருந்து, ரவி சர்மா பேசுகின்றேன்! என்ற பழைய நினைவுகள், மீள வருகின்றன! நன்றிகள்! :D

ஐயையோ ILC radio இல் கூறப்படும் நேர்முகவர்ணனையை தான் நான் இங்கு கூறுகிறேன்.

இது எனது சொந்த நேர்முக வர்ணனை அல்ல.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

மகிந்தவின் உருவபொம்மைக்கு செருப்பால் அடித்துக்கொண்டிருக்கிறார்களாம். :lol: :lol:

மகாராணியின் வருகையின் போது போர்குற்ற வாசகத்துடன் கூடிய மகிந்தவின் உருவப்படங்களை தாங்குவதை தவிர்க்குமாறு லண்டன் காவல்துறையினர் கேட்டார்களாம். :wub: ஆனால் எம்மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்களாம். :)

மகாராணி இப்பொழுது வந்துகொண்டிருக்கிறார்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

Channel 4 news Journalist Jonathan Miller covering the Tamil protest outside MarlboroughHouse. Great works !!!

182530_477904542236138_133819108_n.jpg

ஆனாலும் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கொமன்வெல்த் பிஸினஸ் கவுன்சிலின் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. :wub:

இதையும் நாம் எதிர்பார்த்தோம். மகிந்த ஏற்கனவே சென்றிருந்தால் இறுதிவரை பாதுகாப்பு வழங்கப்படும். :( இனி தான் செல்வார் என்றால் அவரை போகவிடாமல் தடுப்பது தான் நல்லது. :)

சுபேஸ் அண்ணா, உங்கள் பட பகிர்வுக்கு நன்றி. :) :) :)

மகிந்த ராஜபக்ச வரும் நேரம் நெருங்கி விட்டதாக குறிப்பிடுகின்றனர்.

அவர் வரும் நேரம் மழையும் வரும் சாத்தியம் உள்ளதாம். :lol: :lol:

மகிந்த ராஜபக்ச Marlborough House இன் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. :( :( கருப்பு வானில் சென்றாராம். பின்னால் வெள்ளை வானும் சென்றதாம்.

மக்களே உங்கள் போராட்டத்தை உக்கிரப்படுத்துங்கள்.

முள்ளி வாய்க்காலில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் அழுகிறார். :( :( :(

கயல்விழி என்ற பெண்.

தனக்கு 43 வயதாம். கொமன்றியில் இருக்கிறாவாம். தனது அம்மா இறந்து விட்டாராம். அது கூட ஒரு வருடத்தின் பின் தான் தெரியுமாம். தனது சொந்தங்கள் அனைவரையும் கொன்று, கைது செய்து வைத்துள்ளனராம். அதற்கு காரணமாக இருந்த மகிந்தவுக்கு விருந்து கொடுக்குறார்களாம். இவ்வளவு மக்கள் போராட்டம் நடத்தியும் கவனத்தில் கொள்ளவில்லையாம்.

எம் தலைவர் மீண்டும் வரவேண்டும் என்றும். இந்த மாவீரர் தினத்துக்கும் தலைவர் வரவில்லை என்றால் தானே மகிந்தவை கொலை செய்வேன் என்று கூறி அழுதார். எனக்கும் அழுகை வந்து விட்டது. :( :( :(

அப்பெண் வைத்த ஒரு குற்றச்சாட்டு தான் தூர பிரதேசத்திலிருந்து வந்துள்ளாராம் ஆனால் லண்டனில் வசிப்பவர்களில் பலர் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று. :( :(

மகிந்தவை hotel ஐ விட்டு வெளியேறாது செய்திருந்தால் நல்லது. இனி ஒன்றும் செய்ய முடியாது. என்ன தான் போராட்டம் நடத்தினாலும் மகிந்த விருந்தில் பங்குபற்றுவதை அவர் வெற்றியாகவே எடுத்துக்கொள்வார். :(

மகாராணியார் தம்மை கடந்து விருந்துபசாரத்திட்கு செல்வதாக ஒருவர் கூறுகிறார்.

3 வருடத்தின் பின்னர் லண்டனில் சிங்க கொடி கீழ் இறக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஒருவர் சிறிது சிறிதாக சிங்க கொடி இறங்கும் என்று கூறி விட்டு மேலதிகமாக பேச முடியாமல் அழுதுகொண்டு விடை பெற்றார். :(

Edited by காதல்

மனு எதையும் எவரும் கையளிக்கவில்லையாம். :( ஆனால் வெளியிலிருந்து கோசம் எழுப்பினார்களாம்.

மன்சன் ஹவுசில் போராட்டம் நடத்தியவர்கள் பின் கொமன் வெல்த் நோக்கி நடந்து சென்று அங்கும் போராட்டம் நடத்தினார்கள். பின் இப்பொழுது ஹில்டன் ஹோட்டலை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்களாம்.

இங்கும் ஒருபகுதியினர் பிரிந்து நின்றிருந்தார்களாம். அவர்கள் என்ன செய்தார்கள் என்ற விபரம் இன்னும் தெரியவில்லை என்று கூறப்பட்டது. :( :(

மக்கள் தாமாக பிரிந்து செல்லவில்லையாம். லண்டன் காவல் துறையினர் தான் இடமின்மை காரணமாக சிறுபகுதியினரை இரண்டாக பிரித்துள்ளனர்.?????

ஹில்டன் ஹோட்டலை நோக்கி மக்கள் நடந்து செல்கிறார்கள். ஆனால் மகிந்த விருந்துபசாரத்தை முடித்து விடுவாரே அதற்குள்.. :( :(

மக்கள் புலிக்கொடிகளையும் தலைவரின் படங்களையும் தாங்கியபடி செல்கிறார்கள்.

ஏனைய நாட்டு கொடிகளும் இடையிடையே பிடிக்கப்படுகின்றன...

4 மணி வரை ஹில்டன் ஹோட்டலின் முன் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளார்கள் என கூறப்படுகிறது.

மகாராணியின் இந்நிகழ்வுக்கு வந்த வேற்றுநாட்டவர்கள் தம்மை புகைப்படம் பிடித்து செல்வதாக ஒருவர் குறிப்பிடுகிறார்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

Jonathan Miller writes : Rajapakse sneaked into lunch with the Queen in a police Range Rover. Protestors have gone to welcome him back to his hotel....

Edited by சுபேஸ்

தற்பொழுது ILC வானொலியில் வைகோ உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இந்த போராட்டம் வெற்றி என்றும் போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு நன்றி கூறினார். தலைவர் பிரபாகரன் கூறியபடி தமிழீழம் அமையும் என்றும் எம் குரல்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் செவிசாய்க்க வேண்டுமென்று கூறினார்.

70 வயது முதியவர் ஒருவர் கதைத்தார். யாரோ கர்ப்பிணியாக இருப்பதாக குறிப்பிட்டார். (யாரென்று விளங்கவில்லை). ஆனால் தமிழீழ பெண் ஒருவர் உருவாகிறார். அவர் வெளிவருவார் என்று உணர்ச்சிபூர்வமாக கூறினார்.

ஹில்டன் ஹோட்டல் முன் 4 மணிவரை போராட்டம் நடத்த தீர்மானித்தாலும் மகிந்த பெட்டிபடுக்கைகளை எடுத்துக்கொண்டு விமானநிலையம் செல்லும் வரை தம் போராட்டம் தொடரும் என்று சில மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

வேலை முடிந்து வந்தவர்களையும் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அங்குள்ள ஜெகா எனும் ஒரு நபர் கேட்டுக்கொள்கிறார். உங்கள் தாயகத்திற்குரிய கடமையை நீங்கள் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

காலையிலிருந்து கலந்துகொண்ட பல மக்கள் சாப்பாடு தண்ணியில்லாமல் களைத்து விட்டார்கள் என்றும் உங்களை வந்து பங்கேற்று சிறிது நேரமென்றாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கனடா மொன்றியலில் வாழும் ஜெகநாதன் என்ற ஒருவர் கதைத்திருந்தார். மகிந்த கனடாவுக்கு வந்திருந்தால் செருப்பால் அடித்து கலைத்திருப்போம் என்று ஆவேசமாக கூறினார். பங்கரில் தங்கிய மக்களை கூட்டி அள்ளிவிட்டார்கள் என்றும் பல மக்களின் உறுப்புகளை வெட்டியிருந்தாராம் என்றும் காரணம் கூறியிருந்தார்.

இன்னொரு பெண்ணும் கனடாவிலிருந்து கதைத்திருந்தார். மகிந்தவை ரத்த காட்டேரி என்று குறிப்பிட்டவர் மகிந்த வந்திருந்தால் அவரை துரத்தியிருப்போம் என்றும் எந்த ஒரு நாட்டுக்கும் மகிந்த இனி வரக்கூடாது என்றும் கூறியிருந்தார்.

மக்கள் ஹில்டன் ஹோட்டலை அடைந்து விட்டார்கள்.

இங்கு இளையவர்கள் பலர் சாலை மறியலில் ஈடுபட முயற்சிக்கிறார்களாம். காவல் துறையினர் அவர்களை கட்டுப்படுத்த தம் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம். ஒரு இளையவரை கைது செய்ய முற்பட்ட போது மக்கள் பலர் கோரிக்கை விடுத்ததன் பின் அவரை கைதுசெய்யாமல் விட்டு விட்டார்களாம்.

மக்களை கட்டுப்பாட்டுடன் நடக்குமாறு ILC வானொலி அறிவிப்பாளர் கேட்டுக்கொள்கிறார். கட்டுப்பாட்டை மீறினால் அது மகிந்தவுக்கு வெற்றியாகி விடும் என்றும் கூறினார்.

பாரதி என்ற 20 வயதுள்ள பெண், இந்தியாவில் பிறந்து லண்டனில் வசிக்கும் தமிழீழ பெண், நாம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன் காரணம் பற்றி வானொலி அறிவிப்பாளர்களின் வேண்டுகோளின்படி ஆங்கிலத்தில் கூறிக்கொண்டிருக்கிறார்.

பின் தமிழிலும் கூறுகிறார்.

ராஜபக்ச போர்குற்றம் புரிந்திருக்கிறார். தமிழ் மக்களுக்கு நியாயமான பதில் இன்னும் கிடைக்கவில்லை. அப்படியிருக்கும் போது மகாராணி அவரை விருந்துக்கு அழைத்து எம்மை அவமானப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

அதை தட்டிக்கேட்க எமக்கு உரிமை உண்டு. நாம் பிரிட்டிஷ் சிட்டிசன் வைத்திருக்கிறோம். என்று கூறினார்.

தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்றார். முள்ளி வாய்க்கால் நினைவு இன்னும் எம் நெஞ்சில் உள்ளது. இன்னும் பலர் மனதில் உள்ளது என்று கூறினார்.

இதுவரை மக்கள் கட்டுப்பாட்டை மீறவில்லை. ஆனால் ஒரு மணித்தியாலம் முன்னர் ஒரு பரியரை சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் போராட்டம் என்று வந்த பின் சில மக்கள் அப்படி தான் நடப்பார்கள். அதனை கருத்தில் கொள்ள முடியாது. இதனை லண்டன் போலீசார் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஏற்கனவே வேறு சில போராட்டங்களில் அப்படி நடந்து அவர்கள் அதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று காரணமும் கூறினார்.

போராட்டம் பற்றி நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் உரையாடலை பார்த்து ILC வானொலி அறிவிப்பாளர்கள் பாராட்டை தெரிவித்திருந்தார்கள். அவருக்கு எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும். :) :) :) :)

மிகுதியை வாசிக்க இங்கு செல்லுங்கோப்பா... :(:)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103308&st=120#entry767194

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Large numbers of police surround Park Lane Hilton as hundreds of Tamil demonstrators wait for Pres of Sri Lanka to return

https://twitter.com/millerC4/status/210375144336662528/photo/1

44m Milltwit_weenie_normal.jpg Jonathan Miller@millerC4

Large numbers of police surround Park Lane Hilton as hundreds of Tamil demonstrators wait for Pres of Sri Lanka to rtrn pic.twitter.com/jmz5IOHB

Reply to @millerC4

  • <img class="avatar size24" height="24" width="24" /> @

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.