Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிபிசி ராம்ராஜ், ஆனந்த சங்கரி மற்றும் நான் (சிறுகதை)

Featured Replies

2009 பெப்ரவரிக்குப் பின்பு எல்லாம் முடியப் போகிறது என்பதை உணர்ந்தேன். ஆனால் சொல்லவில்லை. அத்தோடு இராணுவரீதியான கட்டுரைகளை தவிர்த்துக் கொண்டு, புலம்பெயர் போராட்டங்கள், தமிழ்நாடு அரசியல் என்று எழுதிக் கொண்டிருந்தேன்.

2009 பெப்ரவரியில் உணர்ந்ததை (தெரிந்ததை அல்ல) நான் சொல்லாமல் விட்டது தவறாக இருக்கலாம். ஆனால் அதனால்தான் நான் இன்றைக்கும் உயிரோடு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

சபேசன் அண்ணா, உங்களுக்கு நாங்கள் சொல்வது எதுவும் விளங்கவில்லை. :lol: (நீங்கள் திரும்ப திரும்ப எங்களை சொல்லும் போது நாங்கள் உங்களை சொல்வதில் என்ன பிழை :icon_idea:)

உங்களுக்கு இன்னும் விளங்காததால் மீண்டும் இணைக்கிறேன்.

இனியாவது விளங்கிக்கொள்ளுங்கள். :icon_idea: :icon_idea:

அன்றே கூறியிருக்க வேண்டும். கூறவில்லை என்றால் இன்று அதை கூறவேண்டிய அவசியமில்லை. உண்மையிலேயே உங்களுக்கு தெரிந்திருந்தால் கூட போராட்டம் முடிந்து விட்ட, பல மக்கள் கொல்லப்பட்டு விட்ட இந்த நிலையில் தேவையில்லாமல் இதை கூறி தம்பட்டம் அடிப்பது உங்களுக்கு சரியாக தெரிகிறதா????

எழுத தெரிந்தவர், ஆய்வு செய்யக்கூடியவர் என்றால் பாதிக்கப்பட்ட மக்களை பற்றி ஒரு ஆய்வு செய்து அது பற்றி எழுதி இங்கு பிரசுரியுங்கள். (பிறகு முஸ்லிம்களை பற்றி ஆராய்ச்சி செய்வதில்லை :D).

அதை விடுத்து இப்படி ஒரு திரி அதில் உண்மையை சொன்னவர்களை பாராட்டவில்லை என்றும் (அவர்கள் முன்பும் அதை தான் சொன்னார்கள், அது பிழைத்தது தானே), அதை விட உங்களுக்கு வேறு பாராட்டு கிடைக்க வேண்டும் என்று நினைத்து ஒரு போராளி மேல் பழி போடுகிறீர்கள்.

தமிழர்களின் இந்த சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா?

Edited by காதல்

  • Replies 137
  • Views 12.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நான் சொல்ல வாற விடயம் இது தான்;அந்த நேரம் நீங்கள் உசுப்பேத்தி எழுதினதும் பிழை தற்போது இப்படி எழுதுவதும் பிழை...அந் நேரம் உங்களுக்கு எழுத வேண்டிய தேவை இருந்திருக்கலாம் ஆனால் அதையே இப்போது குத்துக்கரணம் அடிச்சு மாற்றக் கூடாது[ஓம் நான் அந்த நேரம் அப்படி எழுதினேன் தான் அதை தற்போது பிழை என்று உணர்கிறேன் என எழுதியிருக்கலாம் ஆனால் எப்ப பிழையை இன்னொருத்தர் மீது போட்டீர்களோ அப்பவே உங்கள் நம்பகத் தன்மை கேள்விக்குறி]...நீங்கள் உண்மையான ஊடகவியலாளராக இருந்தால் எப்போதும் உண்மையை எழுத வேண்டும் உங்களால் முடியவில்லை என்டால் பேனாவை மூடி வைச்சிட்டு பேசாமல் இருக்கலாம் அதற்காக உங்களை எழுதக் கூடாது என சொல்லவில்லை அது உங்கள் சுதந்திர‌ம் ஆனால் இன்னமும் மற்றவரை பேய்க் காட்டுகின்ற மாதிரி எழுதுகிறீர்கள் பாருங்கள் அதைத் தான் பிழை என்கிறேன்

இந்த திரியில் சபேசனோடு வாக்குவாதம் புரிகிற எல்லோருக்கும் அந்ததகுதி இருக்கலாம்.ஆனால் ஒருவரைத்தவிர.அவற்றை கதைகேட்டால் இங்கை பச்சைகுத்துறவை எல்லாம் பச்சைமட்டையாலை றோட்டிலை கட்டிவைச்சு அடிகுடுத்து அனுப்புவாங்கள்.தேடிக்கொண்டு இருக்கிறன்.ஆள் அம்பிடுகுதில்லை.வெகு விரைவில் சந்திப்பன்.

எனக்கு இவ்வளவு நாளாய் நீங்கள் யாராக இருக்கும் என சந்தேகம் இருந்தது இப்போது தீர்ந்து விட்டது :lol::D ...நன்றி :)

  • தொடங்கியவர்

ரதி,

அன்றைக்கு நான் எழுதியது சரி என்றுதான் இன்றைக்கும் சொல்கிறேன். அன்றைக்கு அதுதான் சரி. அப்படித்தான் எழுதியிருக்க வேண்டும். நாம் போராடியவர்களின் பக்கம் நின்றவர்கள். அவர்களின் மொழியைத்தான் பேச வேண்டும். தனியாக ஒன்றைப் பேசக் கூடாது.

இதைத்தான் கதையிலும் சொல்கிறேன். ஒன்றாய் நின்றோம், ஒன்றையே பேசினோம், எழுதினோம், பின்பு ஒன்றாய் தோற்றோம்.

அப்பொழுது வாசித்துக் கைதட்டியவர்கள் இன்றைக்கு வசைபாடுவதே சந்தர்ப்பவாதம். இதுவே மற்றவர் மீது பழியைப் போடுகின்ற செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பழியை மற்றவர் மீது போடுவதால் தான் மற்றவர் உங்கள் மேல் பழி போடுகின்றனர்

  • தொடங்கியவர்

தோற்றதன் பிற்பாடு, பெரும் போராட்ட இயக்கமே அழிந்ததன் பிற்பாடு, எங்கே எல்லாம் தவறு விட்டோம் என்று இப்பொழுது பேசுவதே சரி. அதை நாம் சுதந்திரமாகச் செய்ய வேண்டும்.

ஆனால் அங்கெல்லாம் வந்து "நீ மூன்பு அப்படி எழுதினாய், உனக்கு இதை சொல்ல தகுதி இல்லை" என்று சீண்டிக் கொண்டிருப்பது பொறுப்பற்ற செயல். காரணம் நடந்த அனைத்திற்கும் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது.

நான் யார் மீதும் பழி போடவில்லை. சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் யார் மீதும் பழி போடவில்லை.

சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றால்

எல்லோரும் மறந்து போயிருந்து ரிபிசி யை இங்கு மீண்டும் தூசி தட்டியிருக்க மாட்டீர்கள்...

  • தொடங்கியவர்

இன்றைக்கு தமிழர்கள் ஒற்றுமையாக வேண்டிய தேவை இருக்கின்றது. ஆனந்த சங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்திருக்கிறார். நாளை ஈஎன்டிஎல்எவ்வும் வரலாம். தமிழ் மக்களில் உள்ள அனைத்துத் தரப்பினரும் தமது நலன்களுக்கான புள்ளி இணையும் இடத்தை உணர்ந்து ஒற்றுமையாக வர வேண்டும்.

இன்றைய நிலையில் யாரும் தீண்டத் தகாதவர்கள் அல்ல.

குறிப்பு: இந்தக் கருத்துக்கும் இந்த கதைக்கும் நேரடியான சம்பந்தம் இல்லை. இந்தக் கதையில் ரிபிசி ராம்ராஜ் மற்றும் ஆனந்தசங்கரி இருவரும் குறியீடுகளே. இதில் வேறு பெயர்களையும் சேர்க்கலாம். அது இன்னும் கசப்பாக இருக்கும்.

எனக்கு இவ்வளவு நாளாய் நீங்கள் யாராக இருக்கும் என சந்தேகம் இருந்தது இப்போது தீர்ந்து விட்டது :lol::D ...நன்றி :)

நான் சொன்னது இன்னொருவரை.நீங்களாவந்து தொப்பியை தலையிலை போடுறதுக்கு நான் என்ன பண்ண.பாக்கிற சனம் நினைக்கும் நீங்கள்தான் அவர் என்று.இதுக்குதான் முந்திரிக்கொட்டைத்தனமாய் எல்லாம் எனக்குத்தான் தெரியுமெண்டு கருத்தெழுதக்குடாது தங்கச்சி.

Edited by நீலமேகம்

அன்றைக்கு நான் எழுதியது சரி என்றுதான் இன்றைக்கும் சொல்கிறேன். அன்றைக்கு அதுதான் சரி. அப்படித்தான் எழுதியிருக்க வேண்டும். நாம் போராடியவர்களின் பக்கம் நின்றவர்கள். அவர்களின் மொழியைத்தான் பேச வேண்டும். தனியாக ஒன்றைப் பேசக் கூடாது.

இதைத்தான் கதையிலும் சொல்கிறேன். ஒன்றாய் நின்றோம், ஒன்றையே பேசினோம், எழுதினோம், பின்பு ஒன்றாய் தோற்றோம்.

அப்ப நீங்கள் நியாயத்தின் பக்கம் கதைக்க மாட்டீர்கள். நீங்கள் யாருடன் சேர்ந்து நிற்கிறீர்களோ அவர்கள் மொழியை தான் பேசுவீர்கள்.

அன்றைக்கு எழுதியது சரி என்றால் அவர்கள் மொழியை தான் பேச வேண்டும் என்றால் இன்றைக்கு ஏன் "சில விடயங்களை தெரிந்தும் நான் சொல்லவில்லை" என்று திரும்ப திரும்ப கூறுகிறீர்கள்? இன்று அதே மொழி கசந்து விட்டதா?

அப்ப இன்று நீங்கள் ஆனந்தசங்கரியின் பக்கம் நின்றால் அவர்கள் மொழியை தான் பேசுவீர்கள்.

அப்பொழுது வாசித்துக் கைதட்டியவர்கள் இன்றைக்கு வசைபாடுவதே சந்தர்ப்பவாதம். இதுவே மற்றவர் மீது பழியைப் போடுகின்ற செயல்.

அன்றைக்கு எழுதியது எழுதியபடி இருக்கட்டும் என்று விட்டிட்டு இன்றைய உங்கள் நிலைப்பாட்டை எழுதியிருக்க வேண்டும். இடையில் உங்களில் பிழை இல்லை என்று காட்டுவதற்காக அந்த போராளிமேல் பழி போடும் உங்கள் செயலை தான் நாங்கள் பிழை கூறுகிறோம். அதற்கு பெயர் வசைபாடுவதா அல்லது பழியா?

தோற்றதன் பிற்பாடு, பெரும் போராட்ட இயக்கமே அழிந்ததன் பிற்பாடு, எங்கே எல்லாம் தவறு விட்டோம் என்று இப்பொழுது பேசுவதே சரி. அதை நாம் சுதந்திரமாகச் செய்ய வேண்டும்.

அதற்கும் "இவர்களை பாராட்டாதது ஏன்" என்ற கேள்விக்கும் என்ன சம்பந்தம்?

ஆனால் அங்கெல்லாம் வந்து "நீ மூன்பு அப்படி எழுதினாய், உனக்கு இதை சொல்ல தகுதி இல்லை" என்று சீண்டிக் கொண்டிருப்பது பொறுப்பற்ற செயல். காரணம் நடந்த அனைத்திற்கும் அனைவருக்கும் பொறுப்பிருக்கிறது.

இத்திரியில் இப்படி யார் சொன்னது?

நீங்களாக தான் அன்றைய கதையை கூறி "சில விடயங்களை சொல்லாமல் விட்டு விட்டேன்" என்று கூறுகிறீர்கள்.

இதுவே இப்பொழுது பாதிக்கப்பட்ட மக்களை பற்றியோ அல்லது தமிழீழம் கிடைப்பது தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்தால் குறைகளை சுட்டிக்காட்டி ஏற்றுக்கொள்வோம் என்று தானே சொல்கிறோம். நீங்களாக ஏன் நாம் சொல்லாத ஒன்றை நாம் சொல்வது போல் கற்பனை செய்கிறீர்கள்?

சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

முதலில் நீங்கள் பொறுப்புடன் நடவுங்கள். முதலில் செய்தது தவறென்றால் அதை ஒத்துக்கொள்ள பழகுங்கள். அதிலிருந்து தான் உங்கள் சமூக பொறுப்பு ஆரம்பிக்கிறது.

  • தொடங்கியவர்

அடடா! ஏமாந்து விட்டேனே!! இந்த எழுத்தை நான் முன்பே பல முறை கண்டிருக்கிறேனே!! உண்மையான பொருள் விழங்காதது போன்று சொற்களை வைத்து மாறி மாறி இழுத்துக் கொண்டு போவது வேறு ஒருவர் பாணி அல்லவா?

இந்த முறை அந்த மனிதரோடு இருந்து அதிகமாக விவாதித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்ற முடிவோடு வந்தேன். எல்லாம் போச்சு!!

  • கருத்துக்கள உறவுகள்

<p>

இன்றைய நிலையில் யாரும் தீண்டத் தகாதவர்கள் அல்ல.

புலிகளை தீண்டலாம்...அவர்கள் இப்ப இல்லை தானே....

  • தொடங்கியவர்

இல்லை நீங்கள் மல்லையூரான் இல்லை. அவருடைய எழுத்துக்கள் நான் அவ்வளவு படித்தது இல்லை.

உங்களுடைய எழுத்து நான் யாழ் களத்தில் இணைந்த காலத்தில் இருந்து கூட வருகின்றது. சொல்ல வந்த கருத்தின் உள்ளடக்கத்தை அவர் புரிந்து கொள்வது இல்லை, அல்லது புரிந்து கொள்ளாதது போன்று நடப்பார். சொற்களை பிடித்துக் கொண்டு, அதை வைத்து இழுத்து வாதிடுபவருக்கு சலிப்பை உண்டாக்குவார்.

இங்கே இரண்டு கருத்தாடல்களை நான் ஆரம்பித்தவுடன் அவர் கட்டாயம் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அவருடனேயே இரண்டு இடங்களில் தொடர்ந்து இழுபட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.

என்ன கொடுமை இது??

உங்கள் கற்பனைகளை இங்கு புகுத்தாதீர்கள். நீங்கள் எனக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காக போடும் வேடம் இது.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் உங்களுக்கே நீங்கள் இத் திரியில் என்ன சொல்ல வந்தீர்கள்,சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை...நீங்கள் தான் ஆரம்பத்தில் சொன்னீர்கள் ஒரு போராளி சொல்லியதை வைத்துத் தான் அப்படி கட்டுரை எழுதியதாக அன்று அப்படி எழுதினது சரி தான் என்று எனக்கு எழுதிய பதிலில் சொன்னீர்கள்...பிறகு அடுத்த பதிலில் வந்து எழுதுகிறீர்கள் போராட்டம் தோற்று விட்டது,புலிகள் அழிந்து விட்டார்கள் இனி மேல் எங்கே தவறு விட்டோம் என சுதந்திரமாக பேசுவோம் என அந் நேரம் உங்களுக்கு சரியாக தெரிந்தது ஒன்று தற்போது பிழையாக தெரிகிறது இதிலிருந்து என்ன தெரிகிறது முரண்பாடு உங்களிடம் தான் உண்டு.

உங்களை எல்லோரும் இன்று விமர்சிக்கிறார்கள் என்டால் அன்று தேவைக்காக அப்படி எழுத வேண்டி வந்திட்டுது என்று சொல்லிப் போட்டு பழியை இன்னொருத்தர் மீது போடாமல்[பழியை இன்னொருத்தர் மீது போடுவதே ஒரு ஊடகவியலாளருக்கு அவமானம்] மன்னிப்பு கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம் ஆனால் இன்றும் அதே தப்பை செய்கிறீர்கள்...இனி மேலாவது நீங்கள் ஒரு ஊட‌கவியலளாராக பொறுப்பாக எழுதுங்கள்.

உங்களோடு எழுதி மினக்கெடுவதே வேஸ்ட்...இத்தோடு இத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்...நன்றி வணக்கம்

  • தொடங்கியவர்

<p>ரதி,

இது உண்மைச் சம்பவங்கள் என்றாலும் நான் அடைப்புக் குறிக்குள் கதை என்று போட்டதற்கு காரணம் இருக்கின்றன. கதை என்று சொன்னதன் ஊடாக இதிலே உள்ள பெயர்கள் குறியீடுகள் என்பதை சொல்லி நிற்கிறேன்.

இங்கே போராளி தன்னுடைய கண்களின் ஊடாக என்னை வரைபடத்தை பார்க்கச் செய்கின்றார். இது விடுதலைப் புலிகள் களநிலவரங்களை எங்களுக்கு தெரிவித்த முறையை குறிக்கின்றது. இது ஒரு குறிப்பிட்ட போராளியை மாத்திரம் குறிக்கவில்லை.

நான் என்பது என்னை மட்டும் குறிக்கவில்லை. என்னைப் போன்று அன்றைக்கு விடுதலைப் புலிகளின் தரவுகளை வைத்து ஆய்வுகளை எழுதியவர்களைக் குறிக்கிறது.

அதே போன்று ராம்ராஜும் ஆனந்த சங்கரியும் விடுதலைப் புலிகளின் முடிவை எதிர்வு கூறியவர்களை குறிப்பிடுகிறது.

"முன்னாள் வாசகர்" என்பது பொதுவான சமூகத்தைக் குறிக்கிறது. இதிலே உள்ள அனைத்தம் உண்மைச் சம்பவங்களே.

கதையில் வருகின்ற ஐந்து பாத்திரங்களோடு மட்டும் கதை நிற்கவில்லை

Edited by சபேசன்

  • தொடங்கியவர்

இந்தக் கதையில் உண்மையில் குற்றம் சாட்டுவது விடுதலைப் புலிகளை அல்ல. அவர்களுக்கு சில உண்மைகளை சொல்ல முடியாத நிலை இருந்தது. அவர்கள் சொல்வதை எழுதுவதன் ஊடாக போராட்டத்திற்கு பங்களிக்கின்ற தேவை எழுதுபவர்களுக்கு இருந்தது.

விமர்சித்தவர்களுக்கும் அதற்கான நியாயங்கள் இருந்தன.

ஆனால் ஓடுகின்ற குதிரையில் பந்தயம் கட்டுவது போன்று வெல்லுகின்ற புலிகளை மட்டுமே ஆதரிப்போம் என்பதான மனப்பாங்கும், இன்றைக்கு அவற்றை மறந்து எழுத்தாளர்களை குற்றம் சொல்கின்ற பொறுப்பற்ற தன்மையும் கொண்டுள்ள சமூகத்தையே நான் குற்றம் சாட்டுகிறேன்.

இதை புரிந்து கொள்ள வேண்டும்.

<p>ரதி,

இது உண்மைச் சம்பவங்கள் என்றாலும் நான் அடைப்புக் குறிக்குள் கதை என்று போட்டதற்கு காரணம் இருக்கின்றன. கதை என்று சொன்னதன் ஊடாக இதிலே உள்ள பெயர்கள் குறியீடுகள் என்பதை சொல்லி நிற்கிறேன்.

இங்கே போராளி தன்னுடைய கண்களின் ஊடாக என்னை வரைபடத்தை பார்க்கச் செய்கின்றார். இது விடுதலைப் புலிகள் களநிலவரங்களை எங்களுக்கு தெரிவித்த முறையை குறிக்கின்றது. இது ஒரு குறிப்பிட்ட போராளியை மாத்திரம் குறிக்கவில்லை.

நான் என்பது என்னை மட்டும் குறிக்கவில்லை. என்னைப் போன்று அன்றைக்கு விடுதலைப் புலிகளின் தரவுகளை வைத்து ஆய்வுகளை எழுதியவர்களைக் குறிக்கிறது.

அதே போன்று ராம்ராஜும் ஆனந்த சங்கரியும் விடுதலைப் புலிகளின் முடிவை எதிர்வு கூறியவர்களை குறிப்பிடுகிறது.

"முன்னாள் வாசகர்" என்பது பொதுவான சமூகத்தைக் குறிக்கிறது. இதிலே உள்ள அனைத்தம் உண்மைச் சம்பவங்களே.

கதையில் வருகின்ற ஐந்து பாத்திரங்களோடு மட்டும் கதை நிற்கவில்லை

சபேசன் இதை விட (கட்டுரை / கதை / ஆய்வு) கீழே யாவும் கற்பனை என்று போட்டிருக்கலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

. சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

அடைப்புகுறிக்குள் சிறுகதை என்று போட்டுவிட்டு ..கதை பகுதியில் இதை இணைத்து அரசியல் வகுப்பு எடுக்கிறீயள்....கதையை காணவில்லையே சபேசன்?காலத்துக்கு ஏற்ற வகையில் உங்களுக்கு உண்டாகும் கருத்துக்களை நீங்கள் சமுகத்துக்கு திணிக்க வேண்டும் என்ற கொள்கையில் எழுதுவது போல் உள்ளது

அடடா! ஏமாந்து விட்டேனே!! இந்த எழுத்தை நான் முன்பே பல முறை கண்டிருக்கிறேனே!! உண்மையான பொருள் விழங்காதது போன்று சொற்களை வைத்து மாறி மாறி இழுத்துக் கொண்டு போவது வேறு ஒருவர் பாணி அல்லவா?

இந்த முறை அந்த மனிதரோடு இருந்து அதிகமாக விவாதித்து நேரத்தை வீணடிக்கக் கூடாது என்ற முடிவோடு வந்தேன். எல்லாம் போச்சு!!

உங்களுடைய எழுத்து நான் யாழ் களத்தில் இணைந்த காலத்தில் இருந்து கூட வருகின்றது. சொல்ல வந்த கருத்தின் உள்ளடக்கத்தை அவர் புரிந்து கொள்வது இல்லை, அல்லது புரிந்து கொள்ளாதது போன்று நடப்பார். சொற்களை பிடித்துக் கொண்டு, அதை வைத்து இழுத்து வாதிடுபவருக்கு சலிப்பை உண்டாக்குவார்.

இங்கே இரண்டு கருத்தாடல்களை நான் ஆரம்பித்தவுடன் அவர் கட்டாயம் வருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. அப்பாடா என்று நிம்மதியாக இருந்தது. ஆனால் அவருடனேயே இரண்டு இடங்களில் தொடர்ந்து இழுபட்டுக் கொண்டு வந்திருக்கிறேன்.

என்ன கொடுமை இது??

உங்களால் என் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை என்றால் அதனை நேரடியாக சொல்லுங்கள். அதை விட்டிட்டு ஒத்துக்கொள்ள முடியாமல் இப்படி வேறொருவர் தான் நான் என்று என்னில் பழி போட்டு என்னுடன் விவாதிக்காமல் விட அவசியமில்லை.

அதற்குள் இப்படி வேற கருத்து எழுதிறியள். என்ன தான் நடக்குது.

நான் யார் மீதும் பழி போடவில்லை. சமூகம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

கொஞ்சம் முன்னர் தான் இன்னொரு திரியில் அனைவருக்கும் advice பண்ணினியள். முதலில் அதை நீங்கள் பின்பற்றுங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=103815&st=20#entry770411

நான் தான் அந்த இன்னொருவர் என்றால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அல்லது நிர்வாகத்திடம் முறையிடுங்கள். நிர்வாகம் நானும் அந்த இன்னொருவரும் ஒன்று என ஏற்றுக்கொண்டால் அவர்களே என்னை தடை செய்ய நான் அனுமதிக்கிறேன்.

ஏதோ நான் மட்டும் தான் கேள்வி கேட்பது போலும் அதற்கு நீங்கள் பதிலளிக்க விரும்பாதது போலும் கூறுகிறீர்கள். மற்றவர்களின் கேள்விகளுக்கு முதல் ஒழுங்காக பதிலளிக்கிறீர்களா?

ஏனைய அனைவரும் நீங்கள் கூறுவது பிழை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர்கள் கருத்தை விளங்கிக்கொள்ளாமல் சலிப்பை ஏற்படுத்துவது நீங்கள் தான். அதை முதல் புரிந்து கொள்ளுங்கள்.

நான் மரியாதை கொடுக்கும் கோமகன் [திருவள்ளுவர்] அண்ணாவிடம் துணிவாய் கேட்கிறேன் ............. இந்தத்திரி ஏன் ஆரம்பிக்கப்பட்டது??. எதைக்கூறிநின்றது?? எதைக்கூறப்போகின்றது ??..........நிழலியிடம் கேட்பது ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத இந்த திரியை ஏன் இன்னும் பூட்டாமல் இருப்பது.?? நன்றி

  • தொடங்கியவர்

தமிழ் சூரியன்,

ஏற்கனவே சொன்னது போன்று சமூகம் தனக்குள் கொண்டிருக்கும் முரண்பாட்டுத் தன்மையை சுட்டிக்காட்டும் நோக்கில் உண்மைச் சம்பவங்களைக் கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டது.

கதை சொல்ல வருகின்ற கருத்தை விளங்காது சிலர் இது குறிப்பிட்ட சிலரை போற்றிப் புகழ்வதாக கருதியதால் இந்த விவாதம் நீண்டது.

ஒரு சம்பவம் சொல்கிறேன். கப்பல்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஒரு கப்பல் அழிக்கப்பட்டு, அதில் இருந்த புலிகள் வீரச்சாவடைந்து சில மாதங்கள் கடந்த பின்னரே விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்.

நான் இது பற்றிக் கேட்டேன். கப்பல் அழிக்கப்பட்டதை உடனே மக்களிடம் சொல்வதில் என்ன தயக்கம் என்று கேட்டேன். ஒரு கப்பலை எதிரி அழித்தால் நாங்கள் பத்துக் கப்பலை அனுப்புவோம் என்கின்ற உறுதி புலம்பெயர் மக்களிடம் இருக்காதா? உண்மையை சொல்லாமே என்றென். இல்லை, மக்கள் தங்கள் பணம் கடலில் வீணாக தாண்டு விட்டது என்றுதான் சொல்வார்கள்" இப்படி அவர் பதில் சொன்னார்.

இதுதான் உண்மை. சமூகத்தின் இப்படியான தன்மையே பல உண்மைகளை பேச முடியாத நிலைக்கு கொண்டு சென்றது. வெற்றி என்கின்ற நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு வழங்கிய சமூகம், புலிகளை உண்மையை கூறவிடாது தடுத்தது. இன்றைக்கு அதே சமூகம் உண்மை சொல்லவில்லை என்று கோபிக்கிறது. ஆனால் உண்மை சொன்னவனையும் அன்றைக்கும் இன்றைக்கும் துரோகி என்கிறது.

எத்தனை முரண்பாடுகள் எங்களுக்குள்? இந்த சமூகத்தில் ஒருவன் என்ற வகையில் இது என் மீதான விமர்சனமும்தான்.

இது பற்றிய ஆதாரபூர்வமான தகவைகளை இந்த விடுதலைகாய் போராடும் சமூகத்திற்கு உங்களால் வழங்கமுடியுமா.....................அல்லது உங்கள் கதையின் தொடரினை அதாவது ராம்ராஜுக்கும்,ஆனந்த சங்கரிக்கும் ஏன் முக்கியத்துவம் தமிழர்களால் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வியினை உறுத்தி கேட்ககூடியதான நிலையில் உங்கள் கதையை தொடரமுடியுமா,???? அல்லது முடியாவிட்டால் ஏன் இந்த கொலைவெறி என்று தமிழர் சமூதாயம் [முஸ்லிம்கள் அல்ல] கேட்குமுன் இந்த திரியை பூட்டும்படி நிர்வாகத்திடம் உங்களால் கேட்கமுடியுமா ???? ஏதாவது செய்யுங்கள்.................இல்லாவிடில் உங்கள் மேல் சில மரியாதைகள் உள்ளது ...............அவற்றையும் இழந்து [திறமை உள்ள தமிழனை ] ஆளுமையற்ற தமிழன் என்று சொல்வதை தேசியத்தலைவரின் வழியில் வாழ்ந்துகொண்டிருக்கும் என்னால் தாங்கமுடியாது.நன்றி.வணக்கம்.

  • தொடங்கியவர்

புலிகளின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டு, அதை விடுதலைப் புலிகள் சில மாதங்கள் கடந்து அறிவித்ததற்கும் ஆதாரம் இருக்கிறது. அதற்கான இணைப்பை பின்பு தேடி எடுத்துப் போடுகிறேன்.

ஆனால் என்னுடைய உரையாடல்களுக்கான ஆதாரம் என்னிடம் இல்லை. அவற்றை என்னிடம் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகின்றேன்.

கப்பல் சம்பவம் என்பது ஒரு உதாரணம். விடுதலைப் புலிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர், களநிலவரம் பற்றி சொல்லாது இருந்தனர். அல்லது மிகப் பிந்தி அதைப் பற்றிச் சொன்னார்கள்.

வன்னியில் பல இடங்கள் இராணுவத்திடம் விழுந்தது பற்றி உடனடியாக அவர்கள் அறிவிக்கவில்லை. இராணுவமே அவற்றை அறிவித்தது.

கப்பல்கள் பல மூழ்கடிக்கப்பட்ட போதும், அவற்றைப் பற்றி புலிகள் மௌனம் காத்தனர்.

ஆனந்தபுரத்தில் தளபதி தீபன் உட்பட பல முன்னணித் தளபதிகள் வீரச்சாவு அடைந்த போதும், உடனடியாக விடுதலைப் புலிகள் அவற்றைப் பற்றிச் சொல்லவில்லை.

இங்கே யாழ் களத்தில் கூட தீபனின் உடல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. இது அவர் இல்லை என்று எல்லாம் கருத்துக்கள் வைக்கப்பட்டன. பின் இரண்டு மூன்று வாரங்கள் கழித்துத்தான், அதுவும் குமுதம் சஞ்சினை கேள்வி கேட்டதனால், நடேசன் இந்த அனர்த்தத்தை ஒத்துக் கொண்டார்.

ஓடுகின்ற குதிரையில் பணம் கட்டுகின்ற புலம்பெயர் மக்களின் மனப்பாங்கே இதற்குக் காரணம்.

உண்மைகள் பேசப்பட முடியாமல் போனதற்கு இந்த புலம்பெயர் சமூகம் மிக முக்கிய காரணம்.

1. வெற்றிச் செய்திகளை மட்டுமே புலம்பெயர் சமூகம் எதிர்பார்த்து இருந்தது.

2. வெற்றிச் செய்திகளின் அடிப்படையிலேயே தனது உதவிகளை தொடர்ந்து வழங்கத் தயாராக இருந்தது

3. தோல்விகளைப் பற்றிப் பேசியவர்களை "துரோகிகள்" என்று தூற்றியது

இன்றைக்கு அப்பாவி மாதிரி நடிக்கின்றது.

இந்த விடயத்தைத்தான் இந்தக் கதை பேசுகிறது. சிலர் நினைப்பது போன்று தனிமனிதர்களைப் பற்றி அல்ல.

ஹ்ம்ம்ம் உங்ககட்டுரை புல்லரிக்குது. இன துரோகிகள் எல்லாம் இப்ப உங்களுக்கு உதாரண புருசர்கள் ஆகி விட்டார்கள்

அப்பவே எட்டப்பன் சொன்னான் கட்டப்பொம்மன் தோத்து விடுவான் எண்டு முட்டாள் தமிலன் நம்பவில்லை. அப்பவே காக்கைவன்னியன் சொன்னான் பண்டாரவன்னியன் காணாமல் போய்விடுவான் எண்டு முட்டாள் தமிளன் கேட்கவில்லை

பலருக்கு பாலா அண்ணவின் இடத்திட்கு வர ஆசை ஆனால் இருந்தது ஒரெ ஒரு தலைவர் திரு பிரபாகரன் மட்டுமெ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.