Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சன் டிவி-யால் தோற்கப்போகும் திமுக!

Featured Replies

இந்த வாரம் திண்னையில் வெளிவந்துள்ள ஒருவரின் கருத்து.

கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. கடந்த ஜெயலலிதா ஆட்சியில் வளர்ப்பு மகன் திருமணத்தின் ஆடம்பரத்தை மக்கள் மத்தியில் அம்பலப் படுத்திய பெருமை சன் டிவியையே சேரும். ஜெயலலிதாவின் வீழ்ச்சிக்கு 70% க்கு மேல் இது மட்டுமே காரணம். ஆனால், தற்போது சன் டிவியின் வியபார ஒழுங்கிண்மையால், தி.மு.கவிற்கே சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.

2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.

தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பான்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அனைத்து உதவிகளும் செய்தார்.

3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர். தற்போது தான் நிறுத்தி உள்ளனர். சன் டிவிக்கு எதிராக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய போராட்டம் பாராட்டுக்கு உரியது.

4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?

5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. இது போன்ற வணிக நடவடிக்கைகள் அமெரிக்காவில் தான் நடைபெறும். பல பத்தாண்டுகளாக, தினத்தந்தி தமிழ் நாட்டில் விற்பனையில் முதலிடம் பெற்று விளங்கியது. நாளிதழான 'தின மலர்' எவ்வளவு முயன்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தினத்தந்தியை தாண்ட முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட தினமலர் நாளிதழால், தினத்தந்தியின் விற்பனையை தாண்ட முடியவில்லை. தற்போது, சன் டிவி நிறுவனத்தில் இருந்து வெளிதவரும் தினகரன், தமிழ் முரசு நாளிதழ்களில் வேலை செய்யும் செய்தியாளர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தினமலரில் இருந்து ஒரே நேரத்தில் வேலையில் இருந்து நின்று சன் டிவியின் பத்திரிக்கைகளில் வேலைக்கு சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

6. மத்திய அரசின் செய்திகளை வௌதயிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வௌதயிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வௌதயிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.

நன்றி>http://jeyakumar777.blogspot.com/2006/04/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்குத்தான் நான் சன் டிவி பார்ப்பதில்லை. கருணாவின் பிரிவின் போது வன்னிப்புலிகள், கிழக்குப்புலிகள் என்று அடிக்கடி செய்தி வாசித்தவர்கள். வன்னியினைத்தவிர ஈழத்தமிழர்கள் உள்ள இடங்களில் ஒளி ஒலி பரப்பி தமிழ்க்கொலை(பெஸ்டுக்கண்ணா, பெஸ்டு குங்குமம்) செய்யும் தொலைக்காட்சி.

தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிக்கவும். செய்தியினை நீக்கிவிட்டேன். சுட்டிக்காட்டிய லக்கிலுக்குவுக்கு நன்றிகள்

கந்தப்பு புளுகாதீர்கள் !

வைகோவின் உதவியுடன் கலைஞரை கொல்ல சதி என்று சன் டிவி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை.... காரணம் அந்தப் பிரச்சினை நடந்தது 93ஆம் ஆண்டு.... சன் டிவி அப்போது மாலைகளில் 1 மணி நேர பல்சுவை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்திக் கொண்டிருந்தது.... சன் டிவியில் செய்திகள் தொடர்பான நிகழ்ச்சிகள் வந்தது 96ஆம் ஆண்டில் இருந்து மட்டுமே.... மேலும் எப்போதுமே சன் டிவியில் "புலிகள்" என்று தான் சொல்வார்களே தவிர பிரித்து சொன்னதில்லை....

யோவ் லக்கிலுக்

என்ன லொள்ளா கந்தப்பு சன் ரிவி பார்ப்பதில்லை. அவர் ஞானக் கண்ணால் பார்த்துத் தான் சன் ரிவியில் என்ன என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது என்று சொல்கின்றார். அதைப் போய் நீர் ..............

//சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.//

மக்கள் சன் டிவி பார்பது நல்ல பொழுதுபோக்கிற்கு மட்டுமே, அதை புறிந்து கொண்ட சன் டிவி நிறுவணத்தினர் வியாபார நோக்கில் செயல்படுவது அவர்களின் புத்திசாலித்தனமும் கூட். மக்கள் டிவி பார்த்துவிட்டு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போடுவார்களா போடமாட்டார்களா என்பது நகைப்புக்கு இடமானதே, சினிமா நடிகர்களுக்கு இருக்கும் தாக்கம் டிவிக்கு கிடையாது.

சன் டிவி மெகா சீரியலுக்கு என்றால், ஜெ ஜெ டிவி அம்மா புகழ்பாடும் காமடிக்கும் தான் டிவி பார்கிறார்கள் அல்லாமல், தங்களுடைய வாக்கு சீட்டில் அவை மூக்கை நுழைப்பதாக பெருவாரியான மக்கள் நினைக்கவில்லை.

//1. சன் டிவி, தன்னிடம் நாடகம் ஒளிபரப்பும் நிறுவனங்களிடம் போடும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஒருதலைப் பட்சமானது. அயோக்கியத் தனமானது. மோசடித் தனமானது.//

சன் டி.வி. ஒரு வணிக நிறுவனம். அந்த நிறுவனம் தன்னுடன் வியாபாரத் தொடர்பு கொள்ளும் மற்றொரு நிறுவனத்துடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும்போது, அது விரும்பியதுபோன்றுதான் செய்து கொள்ளும். அதன் நிபந்தனைகளுக்கு எந்த நிறுவனம் உடன்படுகிறதோ அந்த நிறுவனத்துடன் மட்டும்தான் ஒப்பந்தங்கள் ஏற்படும். இது சாதாரண ஒரு வணிக நடவடிக்கையே. எந்த ஒரு நிறுவனமும் (சன் டி.வி. மற்றும் அதில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் நிறுவனம் உட்பட) நட்டம் அடைவதை விரும்பமாட்டா.

எனவே இந்த குற்றச்சாட்டு, பெரும்பாலான மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்ட ஒரு டி.வி.யில் தங்கள் நிகழ்ச்சிகளை காட்ட முடியவில்லையே (பெரும் இலாபம் அடையவில்லையே) என்று ஆதங்கப்படும் மற்றொரு வியாபாரியின் குற்றச்சாட்டே அன்றி - இதனால் பொதுமக்களுக்கு எந்த வித நட்டமும் இல்லை என்பதே எனது கருத்து.

//2. சன் டிவி குழுமம் நடத்திய சுமங்கலி கேபிள் நெட்வொர்க் மக்கள் வெறுக்கும் வண்ணம் நடந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல இன்னல்களைக் கொடுத்தது. பிற சேணல்களைப் பார்க்க விடாமல் செய்தது. அதிக கட்டணம் வசூலித்து வாடிக்கையாளர்களைச் சுரண்டியது.தாங்கள் மட்டுமே இத்துறையில் ஆதிக்கம் செய்ய வேண்டும். பிற யாரும் தலையெடுக்கக் கூடாது என்ற மனப்பாண்மையில் செயல்பட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸை விட மோசமாக செயல் பட்டார் கலாநிதி மாறன். இதற்கு இவரது தம்பி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தன் துறையைப் பயன்படுத்தி அனைத்து உதவிகளும் செய்தார்.//

ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டை அப்படியே கூறியிருக்கிறார்கள். இதுவெல்லாம் வணிக உத்திகளே. சன் குழுமம் சமூகசேவை செய்யவில்லை என்பதை நினைவுறுத்த விரும்புகிறேன்.

//3. செய்திகளில் 'முஸ்லிம் தீவிரவாதிகள்' என்ற சொல்லை நீண்ட காலமாகப் பயன்படுத்தினர்.//

இந்த விஷயத்தில் எந்த ஒரு ஊடகமும் விதிவிலக்கல்ல. சன் டி.வி.யை மட்டுமே முன்னிறுத்துவது அரசியல் காரணமன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

//4. தமிழ் நாட்டின் உயிராதாரமான பிரச்சினைகளுக்கு, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதும் கலைஞர், ஜெயலலிதா கொண்டு வந்த கேபிள் டிவி மசோதாவுக்கு கையெழுத்துப் போட வேண்டாம் என கவர்னரிடம் தன் பேரனுடன் சென்று கேட்டார். தயாநிதி மாறனும், தி.மு.க எம்.எல்.ஏக்களும் பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் இது தொடர்பாகப் பேசுகின்றனர். ஒரு குடும்பத்தின் நலனுக்காக ஒரு கட்சியா?//

இதில் ஓரளவு உண்மை உண்டு என்றாலும் அரசியல் ரீதியிலான முறையிலேயே விமர்சிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியை விமர்சிக்கிறீர்களா? அல்லது சன் டி.வி.யின் செயலை விமர்சிக்கிறீர்களா? தெளிவுபடுத்தவும்.

//5. தினகரனை, சன் டிவி வாங்கியதே ஒரு முறையற்ற வணிக நடவடிக்கை. .....

............அடக்க விலையை விட குறைத்து விற்பது, இலவசப் பொருட்கள் என விற்று பிற நாளிதழ்களை பாதிக்கும் சன் டிவி நிறுவனத்தின் இதழ்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.//

முறையற்ற வணிக நடவடிக்கை என்றால் என்ன என்பதையும் கொஞ்சம் விளக்குங்களேன். அதே போன்று விலையை குறைத்து விற்பனையை அதிகரிப்பது என்பதும் வியாபர உத்திகளில் ஒன்றே. மற்ற இதழ்களின் வியாபாரத்தை பாதிக்கிறது என்பதற்காக அதனை நாம் புறக்கணிக்க வேண்டும் என்பது.....??????

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய பொருளாதார ஆசிரியர் குமுதம் குறித்து கூறும்போது (அப்பொழுது அதன் விலை 90 பைசா என்று நினைவு), ஒரு வாரம் குமுதம் அச்சாகும் அத்தனை பிரதிகளையும் விற்பனை செய்யாமல் இருந்தாலும், அதற்கு நட்டம் ஒன்றும் இல்லை. அது விளம்பரம் மூலம் தனது அடக்கவிலையை அடைந்துவிடுகிறது என்று கூறியது என் நினைவுக்கு வருகிறது. (இது இப்போது எந்தளவுக்குப் பொருந்தும் என்பது தெரியாது?)

//6. மத்திய அரசின் செய்திகளை வெளியிடும் போது, தயாநிதி மாறனின் செய்திகளை மட்டுமே வெளியிடுவது, பிற அமைச்சர்களின் செய்திகளை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசின் நலத்திட்டங்களை வெளியிடாமல் இருப்பது, மாநில அரசைப் பற்றிய விமர்சனங்களை மட்டுமே வெளியிடுவது, திமுகவிலேயே தயாநிதி மாறன், ஸ்டாலின் ஆகியோரை மட்டுமே காட்டுவது, அன்பழகன், துரைமுகன் - போன்ற தலைவர்களை செய்திகளில் காட்டாமல் இருப்பது, கூட்டணிக் கட்சிகளின் செய்திகளைப் புறக்கணிப்பது என பட்டியலிட்டு மாளாது சன் டிவியின் அழிம்புகள்.//

இதுவும் அனைத்து ஊடகங்களும் செய்யும் தவறே. நமக்குத் தேவையான அல்லது நமக்குப் பிடித்தமானவர்களின் செய்திகளை மட்டும் தருவது. சன் டி.வி.யைவிட ஜெயா டி.வி. இந்த விஷயத்தில் பலநூறு மடங்கு மோசம் என்பதே எனது கருத்து. சன் டி.வி.யை மட்டுமே இது குறித்து விமர்சனம் செய்வது அறிவுடைமை ஆகாது.

யோவ் லக்கிலுக்

என்ன லொள்ளா கந்தப்பு சன் ரிவி பார்ப்பதில்லை. அவர் ஞானக் கண்ணால் பார்த்துத் தான் சன் ரிவியில் என்ன என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது என்று சொல்கின்றார். அதைப் போய் நீர் ..............

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் லக்கிலுக்

என்ன லொள்ளா கந்தப்பு சன் ரிவி பார்ப்பதில்லை. அவர் ஞானக் கண்ணால் பார்த்துத் தான் சன் ரிவியில் என்ன என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது என்று சொல்கின்றார். அதைப் போய் நீர் ..............

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ke ke ke தின்னையில எப்பவுமே தி.மு.க விக்கு எதிராண செய்திகள தானே போடுவாங்க..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுக்குத்தான் நான் சன் டிவி பார்ப்பதில்லை. கருணாவின் பிரிவின் போது வன்னிப்புலிகள், கிழக்குப்புலிகள் என்று அடிக்கடி செய்தி வாசித்தவர்கள். வன்னியினைத்தவிர ஈழத்தமிழர்கள் உள்ள இடங்களில் ஒளி ஒலி பரப்பி தமிழ்க்கொலை(பெஸ்டுக்கண்ணா, பெஸ்டு குங்குமம்) செய்யும் தொலைக்காட்சி.

தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிக்கவும். செய்தியினை நீக்கிவிட்டேன். சுட்டிக்காட்டிய லக்கிலுக்குவுக்கு நன்றிகள்

யார் சொன்னது வன்னியில சண் டிவி இல்லையென்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்தொலைக்காட்சியை பொறுத்தவரை தாமே பெரியவர்கள் என்ற நினைப்பு. பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை இலங்கை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவரும்., அதை தென்னிந்தியாவில் சண் தொலைகாட்சியுூடாக நடாத்தி வந்தவருமான ஈழத்து அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களை சண் hP.விக்காக மட்டும் பணியாற்று மாறு கட்டாயப்படுத்தியதன் விளைவாய் அவர் சண் hP.வியிலிருந்து வெளியேறினார். தற்போது அவர் ராஜ் hP.வியில் ராஜகீதம் நிகழ்ச்சியையும் ஏனைய தொலைக்காட்சிகளிலும் பணியாற்றுவதாக அறிந்தேன். ஊடகம் என்பது மக்களுக்கானதே தவிர வியாபாரத்துக்கானதல்ல. அதை ஊடகத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். தமிழ் நாட்டின் கிராமப்புறங்களின் நிலையை தமிழ் நாட்டில் இருக்கும் எந்த ஒரு தொலைகாட்சியாவது படம்பிடித்த காட்டியதா என்றால்...விடை 0 தான். ஆனால் இதை தட்டிக் கேட்க வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழக மக்களிடம் உள்ளது. ஆனால் சண் hP.வி பார்ப்பவர்கள் தி.மு.க என்றும் ஜெயா hP.வி பார்ப்பவர்கள் அதிமுக என்றும் ராஜ் hP.வி பார்ப்பவர்கள் பொது நல வாதிகள் என்ற கணக்கில் மக்கள் பிரிந்திருக்கையில் இது சாத்தியமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கந்தப்பு புளுகாதீர்கள் !எப்போதுமே சன் டிவியில் "புலிகள்" என்று தான் சொல்வார்களே தவிர பிரித்து சொன்னதில்லை....

லக்கி லுக் என்ன கனவோ.....

கருணாவை பேட்டி கண்ட தொலைகாட்சி என்றால் அது சண் தொலைகாட்சி தான். அவனால் வைக்கப்பட்ட தலைவருக்கெதிரான கருத்தை சண் ரீ.வி ஒளிபரப்பியது. அத்தோடு அந்த வேளை கிழக்கு புலிகள், வடக்கு அல்லது வன்னி புலிகள் என்ற பதத்தை சண் ரீ.வியினரும் பாவிக்க தவறவில்லை.

அந்த நேரம் நீர் நித்திரை போல... :P

நிதர்சன்

பொதுவாகவே ஒரு ஊடகத்தில் பணியாற்றுபவர் இன்னொரு ஊடகத்தில் பணியாற்றுவதில்லை. அதனை அந்த ஊடகத்தின் நிர்வாகமும் அனுமதிக்காது. இது வானொலிகள் உட்பட எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும். இப்போது அப்துல் ஹமீத் ராஜ் தொலைக் காட்சியில் மட்டுமே கடைமையாற்றுகின்றார்.

நிதர்சன்

பொதுவாகவே ஒரு ஊடகத்தில் பணியாற்றுபவர் இன்னொரு ஊடகத்தில் பணியாற்றுவதில்லை. அதனை அந்த ஊடகத்தின் நிர்வாகமும் அனுமதிக்காது. இது வானொலிகள் உட்பட எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும். இப்போது அப்துல் ஹமீத் ராஜ் தொலைக் காட்சியில் மட்டுமே கடைமையாற்றுகின்றார்.

குறைந்தது இக்பால் அதாஸ் எனும் இலங்கையர் பற்றி வசம்பு அறிந்து இருக்கின்றாரா... அவர் வேலை செய்யும் ஊடகங்கள் கட்டுரை எழுதும் ஊடகங்கள் எல்லாம் ஒரே ஒரு ஊடகம் மட்டும்தானா...???

ஏன் எங்கள் தாரகி.. இப்படி பலர் இருப்பது தெரியாதா..? பிபிசியில் ஹிந்துவில் அடிக்கடி பேர்வரும் வாஸந்தி, அதையும் தாண்டி பல சின்னத்திரை நடிகர்கள், அறிவிப்பாளர்களாய் பல தொலைக்காட்ச்சிகளில் உள்ளனரே..??? அதுவெல்லாம் ஹமீதுக்கு விதிவிலக்கா.? :roll: :roll: :roll: :roll:

புலம்பெயர் தமிழர் மத்தியில், தமிழ்விளிப்பு உள்ள ஒரு தொலைக்காட்சி உருவாகிடகூடாதென்பதில் சூரிய தொலைக்காட்சி மிக கவனமாக இருக்கின்றது. இது ஈழத்தமிழரின் தனித்துவ கலைரீதியான வளர்ச்சியை மழுங்கடிக்கின்றது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சன்

பொதுவாகவே ஒரு ஊடகத்தில் பணியாற்றுபவர் இன்னொரு ஊடகத்தில் பணியாற்றுவதில்லை. அதனை அந்த ஊடகத்தின் நிர்வாகமும் அனுமதிக்காது. இது வானொலிகள் உட்பட எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும். இப்போது அப்துல் ஹமீத் ராஜ் தொலைக் காட்சியில் மட்டுமே கடைமையாற்றுகின்றார்.

நீங்கள் சண் தொலைகாட்சியிலிருந்து வெளியேறினீர்கள் என்று முன்னொரு முறை கனடாவிலிருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றுக்கு பதிலளித்த அவர், தான் சுயமாக இயங்குவதையே விரும்புவதாக கூறினார். அவர் சொன்ன இன்னோரு காரணம், புகலிடத்தில் வளர்ந்து வரும் தமிழ் தொலைகாட்சி சேவைகளுடன் தன்னை இணைய விடாமல் தடுப்பதற்கான அவர்களின் உத்தியாக கூட இருக்கலாம் என்றும் சொன்னார்.

அதே வேளை அவர் ராஜ் தொலைகாட்சியில் மட்டும் தற்போது பணி புரியவில்லை.

இலங்கையில் ரூபவாகினி தமிழ் சேவையிலும் இடையிடை பணியாற்றுகின்றார். தே போல பல கலை நிகழ்ச்சிகளை தமிழகத்திலும், தமிழகத்துக்கு வெளியே கனடாவிலும் தொகுத்து வழங்குகின்றார். அதை விட இந்திய தேசிய தொலைக்காட்சியிலும் பணி புரிவதாக அறிந்தேன் (உறுதியாக தெரியாது)

ஒரு ஊடகத்தில் பணிபுரிபவர் சுயாதீனமாக செயற்ப்பட வேண்டும். அது அந்த அறிவிப்பாளரின் தனியுரிமை. அதை நிறுவனக்கட்டுப்பாடு என்று சொல்லி தடுக்க நினைப்பது. அவரது உரிமையை மீறும் செயல். ஆனால் அவரின் வெளியேற்றம் சண் தொலைக்காட்சிக்கு நட்டமே தவிர அவருக்கல்ல.

பொதுவாகவே ஒரு ஊடகத்தில் பணியாற்றுபவர் இன்னொரு ஊடகத்தில் பணியாற்றுவதில்லை. அதனை அந்த ஊடகத்தின் நிர்வாகமும் அனுமதிக்காது. இது வானொலிகள் உட்பட எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும். இப்போது அப்துல் ஹமீத் ராஜ் தொலைக் காட்சியில் மட்டுமே கடைமையாற்றுகின்றார்.

:D:D:D:lol::lol::lol:

பெரிய கண்டுபிடிப்பு

:lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

லக்கி லுக் என்ன கனவோ.....

கருணாவை பேட்டி கண்ட தொலைகாட்சி என்றால் அது சண் தொலைகாட்சி தான். அவனால் வைக்கப்பட்ட தலைவருக்கெதிரான கருத்தை சண் ரீ.வி ஒளிபரப்பியது. அத்தோடு அந்த வேளை கிழக்கு புலிகள், வடக்கு அல்லது வன்னி புலிகள் என்ற பதத்தை சண் ரீ.வியினரும் பாவிக்க தவறவில்லை.

அந்த நேரம் நீர் நித்திரை போல... :P

பிரிவின்பின்பு எட்டப்பன் கருணா முதன் முதலாக பேட்டி அளித்ததொலைக்காட்சி சன் ரிவி தான். ஆனந்த சங்கரியின் பேட்டியினை வெளியிட்ட வெக்ரன் தொலைக்காட்சிக்கு எதிராக கத்திய எம்மவர்கள் சிலர்சன் ரிவிக்கு மட்டும் எதிராகக் கதைக்காத மர்மம் என்ன?. ஈழமக்களின் தொலைக்காட்சியான TTN,TVI,சிகரம் TV க்கு ஆதாரவு அளிப்போம்

நான் எழுதியது வானொலி தொலைக்காட்சி போன்றவற்றுக்கு மட்டுமே பொருந்தும். அதை தெளிவாகக் குறிப்பிடாதது எனது தவறு தான். இது பொறாமையில் செய்யப்படுவதில்லை. ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் பல ஊடகங்களில் பணியாற்றும் போது நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்துவதில் சிரமங்கள் இருக்கும். ஒரு ஊடகத்தில் சிறப்பாகச் செய்து இன்னொரு ஊடகத்தில் அவரின் நிகழ்ச்சி சோடை போனால் தேவையில்லாத பிரைச்சினைகள் எழும். ஆனால் ஒரே ஊடகத்தில் அவர் நிகழ்ச்சி செய்யும் போது புதுப்புது எண்ணங்களால் நிகழ்ச்சியை மெருகூட்ட முடியும். மேலும் தொலைக்காட்சி நடிகராக எத்தனை தொலைக்காட்சியிலும் தோன்றலாம். ஆனால் அவர் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு தொலைக்காட்சியில் தானே வருகின்றார்.

எழுத்தாளர்கள் ஆய்வாளர்களுக்கு இந்தப் பிரைச்சினையில்லை. அவர்களின் படைப்புக்கள் எந்த ஊடகத்தையும் சார்ந்து படைக்கப் படுவதில்லை.

மேலும் அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கிய சில மேடை நிகழ்ச்சிகள் வேறு தொலைக் காட்சிகளில் இடம் பெற்றதால் அவர் அந்த தொலைக்காட்சியில் பணியாற்றுகின்றார் என்று அர்த்தமில்லை.

சன் டிவியைப் பொறுத்தவரை அதில் நிகழ்ச்சி செய்பவர்கள் வேறு டிவிக்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் இந்த நிகழ்ச்சி பாதிக்கப்படும் என்ற கருத்து கொண்டவர்கள்... அதனாலேயே அது போல ஒரு ஒப்பந்தமும் செய்து கொள்வார்கள்... அப்துல் ஹமீது சன் டிவி நிகழ்ச்சியில் புகழ் பெற்றது போல ராஜ் டிவி நிகழ்ச்சியில் புகழ் பெற்றாரா என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்க வேண்டும்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.