Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளுக்கு வினாக்கொத்து:இன உணர்வை சோதிக்கும் அரசு: ‘சமூகச் சிற்பிகளின் ஆய்வு - பகுதி1, 2

Featured Replies

முன்னாள் போராளிகளுக்கு வினாக்கொத்து:இன உணர்வை சோதிக்கும் அரசு: ‘சமூகச் சிற்பிகளின் ஆய்வு - பகுதி1,2

[ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 08:27 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ]

['புனர்வாழ்வு' அளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்படுவதற்கு முன்னர், முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளிடம் கையளித்து நிரப்பப்படும் சர்ச்சைக்குரிய வினாக்கொத்து ஒன்று 'சமூகச் சிற்பிகள்' அமைப்பினரிடம் சிக்கியுள்ளது. அந்த வினாக்கொத்து ஏற்படுத்தவல்ல சமூக - அரசியல் - உளவியற் தாக்கங்களை ஆய்வு செய்கின்றனர் சமூகச் சிற்பிகள்].

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளிற்கும் மேலாக இனமுரண்பாடு காரணமாக நீடித்திருந்த யுத்தம் 2009ம் ஆண்டு மே மாதத்தில் முடிவிற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் பின்னதாக, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். இவ்வாறு சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு இடங்களில் இராணுவத்தின் உயர் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டு, இராணுவப் புலனாய்வு அதிகாரிகளால் வகைப்பிரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர், இவர்களில் ஒரு தொகுதியினர் மேலதிக விசாரணைகளின் நிமித்தமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் ஆகியோரால் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். இவர்கள் தவிர்ந்த ஏனையோர் 'புனர்வாழ்வு' பெறுவதற்கு யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் அரசினால் அமைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு மையங்களிற்கு அனுப்பப்பட்டதுடன் அவர்கள் கால வரையறை கூறப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பாதுகாப்பு அமைச்சினால் விடுதலைக்காக பரிந்துரைக்கப்படுவதற்கு முன்னதாக, அவர்களால் தனிச்சிறப்புடன் தயாரிக்கப்பட்ட 20 பக்கங்களை உடைய ஒரு வினாக்கொத்தினை பூர்த்தி செய்யுமாறு பணிக்கப்படுகின்றனர்.

முன்னாள் போராளிகளின் உள்ளார்ந்த உணர்வுகளை தூசு தட்டிப்பார்க்கும் ஒரு விசப்பரீட்சைக்கான வினாத்தாளாக இவ்வினாக்கொத்து தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ் எழுத்து மற்றும் கருத்து தவறுகள் மிதமிஞ்சியுள்ள தமிழ்க் கொலையுடன் அச்சிடப்பட்டுள்ள இவ்வினாக்கொத்திற்கு அவர்கள் அளிக்கின்ற விடைகளின் அடிப்படையிலேயே, அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கான தீர்மானத்தினை பாதுகாப்பு அமைச்சு எடுத்துக்கொள்கின்றது.

இத்தீர்மானத்தின் பின்னதான பரிந்துரையுடனேயே, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் முன்னாள் போராளிகளின் விடுதலைக்கான அனுமதி வழங்கப்படுவதுடன் அதனைத் தொடர்ந்தே, IOM நிறுவனத்தினரால் அவர்களிற்கு புனர்வாழ்வளிக்கப்பட்டதனை உறுதிப்படுத்தும் அடையாள அட்டை வழங்கப்படுகின்றது.

இவ்வினாக்கொத்தில் பாதுகாப்பு அமைச்சின் எதிர்பார்ப்பிற்கு மாறாக விடையளிக்கும் நபர்கள் தொடர்ந்தும் 'புனர்வாழ்வு' என்ற போர்வையில் தடுத்து வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், சங்கடமானதோர் மனநிலையுடனேயே இதனை தாம் பூர்த்தி செய்ததாகவும், இவ்வினாக்கொத்து பூர்த்தி செய்யப்படும்; போது தீட்டிய கத்தி மேல் நடப்பது போல் முன்னாள் போராளிகள் தவித்ததாகவும் புனர்வாழ்வின் பின்னதாக விடுவிக்கப்பட்டுள்ள ஒருவர் தெரிவித்தார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, முன்னாள் போராளிகள் விடுதலைக்கு தயாராகிவிட்டனரா அல்லது இல்லையா, விடுதலையின் பின்னதாக சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஏதாயினும் இனத்துவ முரண்பாடுகளை தூண்டும் சாத்தியம் உள்ளதா, அரசிற்கு எதிரான கருத்துக்களை அவர்கள் ஆதரிக்கின்றனரா, அவர்களால் எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமா முதலான விடயங்கள் மறைமுகமாக பெறும் வகையிலேயே இவ்வினாக்கொத்திலுள்ள வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இவ்வினாக்கொத்திற்கு அளித்த விடைகளின் அடிப்படையிலேயே, புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தாம் இராணுவத்தினர் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு, பின்தொடர்தல், தொடர் விசாரணை, மீளவும் கைது மற்றும் காணாமல் போதல் என்பனவற்றிற்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சம் விடுவிக்கப்பட்ட போராளிகள் மத்தியில் காணப்படுகின்றது.

இவ்வகையில், புரிந்து கொள்வதற்கு கடினமான வினாக்களிற்கு விடையளிக்க நிர்ப்பந்திக்கப்படும் முன்னாள் போராளிகள், மிகுந்த உளவியல் குழப்பத்தின் மத்தியிலேயே பதிலளிக்கின்றார்கள். அவ்விடைகளின் அடிப்படையிலேயே அவர்களது எண்ணங்களை பாதுகாப்பு அமைச்சு தமக்குரிய தகவல்களாக பெற்றுக்கொள்கின்றது என விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் கருதுகின்றனர்.

இவ்வினாக்கொத்தானது முன்னாள் போராளிகளின் தனிப்பட்ட தகவல்களை பதிவு செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. இங்கு தடுத்து வைக்கப்பட்டிருப்பவரின் பெயரிற்கு பதிலாக புனர்வாழ்வு மையத்தில் அவரை அடையாளப்படுத்தவென தனிச்சிறப்புடன் வழங்கப்பட்ட குறியீட்டு இலக்கம் மட்டுமே வினவப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வயது, புனர்வாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள காலம் ['புனர்வாழ்வு மையம்' என்னும் பதத்திற்குப் பதிலாக 'நிறுவனம்' என்ற சொற்பதம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை கவனிக்கப்படவேண்டியது], திருமண நிலை, பிள்ளைகளின் எண்ணிக்கை, தடுப்புக் காவலிற்கு வருமுன்னதாக அவரது தொழில், கல்வி நிலை மற்றும் அவரது பிறந்த இடம் உள்ளடங்கலான 11 வினாக்களிற்கு விடையளிப்பதன் மூலம் போராளிகள் தமது தனிப்பட்ட விபரங்களை இப்பகுதியில் வழங்க வேண்டியுள்ளது.

தொடர்ந்து, ஏ [A] தொடக்கம் கே [K] வரை 11 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மொத்தமாக 155 வினாக்கள் இவ்வினாக்கொத்தில் கேட்கப்பட்டுள்ளன. விடையளிக்கும் முன்னாள் போராளி எவ்வாறு கவனமாக பதிலளித்தாலும் சிக்கலை உருவாக்கக் கூடியவாறான வினாக்கள் இங்கு தொடுக்கப்பட்டுள்ளன. இவை விடையளிப்பவரை பெரும் உளவியல் சித்திரவதைக்கு உள்ளாக்குவதோடு, இவர்களின் எதிர்கால இருப்பிற்கும் கேள்விக்குறியினை இடுகின்றது.

எடுத்துக்காட்டாக, A பகுதியில் 11வது வினாவாக கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வி, பின்வருமாறு உள்ளது:

“தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வது ஆயுதக்குழுவான விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களாலேயே ஆகும்.”

இக்கேள்வியானது, அதற்குப் பதிளிக்கும் முன்னாள் போராளியை பெரும் சிக்கலுக்குள் ஆழ்த்தும் தன்மையினதாயுள்ளது. அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சம்பந்தனை மனதில் வைத்தா, அல்லது அரசாங்க பங்காளிக் கட்சியைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தாவை மனதில் வைத்தா பதிலளிப்பது என தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்.

மேலும், A பகுதியில் 33வதாக கேட்கப்பட்டுள்ள வினா பின்வருமாறு உள்ளது:

'எவ்வாறான வலிமையையும் பிரயோகிக்க மறுப்பவர் அடிமைகளே" –

இதற்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற அடிப்படையில் பதிலளிக்க வேண்டும். இங்கு, விடையளிப்பவர் இக்கருத்தினை ஆதரிப்பின் அவர் தன்னை ஓர் 'அடிமையாக' உணர வேண்டியிருக்கும். ஆதரிக்கவில்லையாயின், அவர் ‘போராட்டத்திற்கு தயாராகின்றார்’ என்ற சந்தேகம் எழுப்பப்படலாம். இவ்வாறு, பதிலளிப்பதற்கு சிக்கலான வினாக்களின் எண்ணிக்கை இவ்வினாக்கொத்தில் நீள்கின்றன...

சரணடைந்த முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து, அவர்களை தத்தமது குடும்பங்களோடு மீளிணைத்து சமூகத்தில் அவர்கள் சாதாரண குடிமக்களாக வாழ்வதற்கான சகல ஏற்பாடுகளையும் தாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக விளம்பரம் செய்து கொள்ளும் இலங்கை அரசாங்கம், உண்மையில் சரணடைந்த போராளிகளிற்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வேளையிலும், விடுதலை செய்யப்பட்டதன் பின்னதாகவும் தொடர்ச்சியான உளவியல் நெருக்கடியினையினையும், அவர்களின் சாதாரண வாழ்க்கையில் தாக்கத்தினையும் அவர்களின் இருப்பிற்கு அச்சுறுத்தலினையும் கொடுத்து வருகின்றது.

முன்னாள் போராளிகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய திட்டமிட்ட சூழ்ச்சி நிறைந்த கையாள்கையை பகிரங்கப்படுத்தும் நோக்கிலேயே இவ்வாய்வுக் கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கேள்விக்கொத்தின் மீதான ஆழமான பார்வை அடுத்த வாரங்களில் தொடரும்…

இலங்கை அரசினால் என்ன காரணத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ளது என்ற விபரிப்பு வழங்கப்படாது, தலைப்பு எதுவும் இடப்படாது, கருத்துக்களை புரிந்து கொள்ள முடியாதவாறு எழுத்துப் பிழைகளோடு அச்சிடப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளின் இதயத்துடிப்பை பரீட்சிக்கும் வினாக்கொத்தின் மீதான ‘சமூகச் சிற்பிகள்’ அமைப்பினரின் கடந்த வாரப் பார்வை இவ்வாரமும் தொடர்கிறது.

முன்னாள் போராளிகளின் இருப்பினை நிர்ணயிக்கும் வினாக்கொத்து - இன உணர்வை சோதிக்கும் சிங்கள அரசு- பகுதி 1

ஆரம்பம் தொடங்கி முடிவு வரை கேட்கப்படும் கேள்விகள் அனைத்துமே - மறைமுகமாகவும் நேரடியாகவும் - பதிலளிப்பவரை குற்றவாளி போலவும், கேள்வி கேட்பவரையும் அரசாங்கத்தையும் மன்னிப்பு வழங்கும் பரோபகாரிகள் போலவும் அர்த்தப்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

இவ்வினாக்கொத்தின் பகுதி A இல்,

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

என்ற விபரிப்புடன் 42 கருத்துக்கள் வினாக்களாக முன்வைக்கப்பட்டுள்ளன. இங்கே கேட்கப்பட்டுள்ள வினாக்களிற்கு 'ஆம்' என்றோ அல்லது 'இல்லை' என்றோ அல்லது கூறப்படுகின்ற ஒரு கருத்தினை 'ஆதரிக்கின்றேன்' அல்லது "ஆதரிக்கவில்லை' என்றோ முன்னாள் போராளிகளால் எளிதில் விடையளித்துவிட்டுப் போய்விட முடியாது. மாறாக, பல்தெரிவுகள், அதாவது ஏழு அளவீடுகள் பதிலளிப்பவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

இவ்வினாக்களை கிரகித்துக் கொள்வதற்கு சாராதண நுண்ணறிவு வினாக்களுக்கு செலவிடும் நேரத்தைவிட பலமடங்கு நேரம் சராசரியான மனநிலையில் உள்ள எவருக்கும் தேவைப்படும் என்பதை இவ்வினாக்கொத்து எமது கைகளுக்கு கிடைத்த போதே எம்மால் அனுமானிக்க முடிந்த உண்மையாகும். அவ்வாறாயின், யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்திலும் அதன் பின்னரும் பல்வேறுபட்ட ரீதியில் பலதரப்பினராலும் உடல், உள ரீதியாக மிகவும் மோசமான தாக்கங்களுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு இவ்வினாக்களுக்கு விடையளிப்பது என்பது கொலைக்களம் செல்லும் உணர்வையே தோற்றவித்திருக்கும் என்பது வெள்ளிடை மலை.

ஒப்புக்கொள்தலுக்கும் நிராகரித்தலிற்கும் இடையில் திட்டமிட்டு புகுத்தப்பட்டுள்ள நுண்ணிய அளவுகோல்கள், இதிலுள்ள எந்தப் பதிலை தேர்ந்தெடுத்தால் அது தனக்கு சாதகமாக அமையும், அல்லது தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதனைத் தீர்மானிக்கும் பெரும் போராட்டத்திற்குள் ஒவ்வொரு முன்னாள் போராளியையும் இட்டுச்செல்கிறது.

இவ்வினாக்கொத்தினை பூர்த்தி செய்யும் போது, “இதில கேட்டிருந்த நிறையக் கேள்விகளுக்கு அப்ப அந்த நேரத்தில என்ன பதில சொல்றதென்டே தெரியாமல் இருந்துது. இதை எதுக்காகத் தாறாங்கள் எண்டும் தெரியாது. அத விட கேட்டிருந்த நிறைய விசயங்கள் என்ட மண்டைக்கு புரியவே இல்ல. நான் பெரிசா படிக்கவும் இல்ல. உண்மையா ஒரு சீஐடி-க்கு முன்னால இருந்து இதுக்கு நான் பதில் சொல்லேக்க, ஒரு லூசு ஆஸ்பத்திரியில இருந்தது போல தான் இருந்தன்” என்று தடுப்பு நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது குறிப்பிட்ட இவ்வினாக்கொத்தினை பூர்த்தி செய்த முன்னாள் போராளி ஒருவர் தனது அனுபவத்தினை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

வினாக்கொத்திலுள்ள வினாக்களை ஒவ்வொன்றாக அலசிப்பார்க்கும் போது முன்னாள் போராளிகளை சமூகத்துடன் மீளிணைக்கும் திட்டத்தில் உண்மையில் அரசு எந்தளவிற்கு அக்கறை காட்டுகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

பகுதி Aயில் பின்வருமாறு தொடுக்கப்பட்டுள்ள வினாவை உதாரணமாக எடுத்துக்கொண்டால்,

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

இங்கு ‘ஆயுதக்குழுக்கள்' என்று குறிப்பிடப்பட்டிருப்பது யாரை என்ற தெளிவின்மை முதலில் எழுகின்றது. இதற்குப் பதிலளிக்கும் முன்னாள் போராளி - இதனை தாம் ஆதரிப்பதாகவோ அல்லது ஆதரிக்கவில்லை என்றோ இலகுவாக கூறிவிட முடியாது. காரணம், அவ்வாறு அவர் கூறுவாராயின் எதையோ உள்நோக்காக கொண்டுள்ளார் என எளிதில் இனங்காணப்பட்டுவிடுவார். 'ஆதரிக்கவில்லை' எனக் குறிப்புணர்த்தும் முன்னாலுள்ள மூன்றிலொரு தெரிவை அடையாளப்படுத்துவாராயின், அரச படைகள் மற்றும் அவர்களது ஆதரவோடு செயலாற்றும் துணை ஆயுதக்குழுக்களால் செய்யப்படும் கொலைகளை அவர் எதிர்க்கின்றார் என்ற கருத்தினை அது ஏற்படுத்தும். அதனைத் தவிர்ப்பதற்காக – 'ஆதரிப்பதாகக்' குறிக்கும், பிற்பகுதியில் உள்ள மூன்றிலொரு தெரிவினை அவர் சுட்டுவாராயின், அரசிற்கு எதிரான ஆயுதக் குழுக்களின் செயற்பாட்டை அவர் ஆதரிக்கிறார் எனக் கருதப்படலாம். ஆக, எப்படிப் பதிலளிப்பினும் ஆபத்தாக அமைந்துவிடக் கூடிய நிலையே உள்ளது.

கீழுள்ள கேள்வியை எடுத்துக்கொண்டால் பதிலளிப்பவர் எக்காலகட்டத்தை மனதில் கொண்டு விடையளிப்பார்? போர் முடிவிற்கு வந்ததற்கு முன்னரான காலத்தினையா அல்லது எதிர்காலத்தையா கருத்திற்கொள்வார்?

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

இரண்டில் எதனைத் தீர்மானிப்பினும் அது சிக்கலான தோற்றப்பாட்டையே உருவாக்கும். குறிப்பாக, முன்னாள் போராளி ஒருவர் இக்கருத்தினை 'ஆதரிக்கிறேன்' எனக்கூறுவாராயின், "ஒவ்வொரு தமிழரும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டும்" என்ற நிலைப்பாட்டில் அவர் இன்னமும் உள்ளதாக கருதப்படுவார்.

இக்கருத்தினை 'ஆதரிக்கவில்லை' என பதிலளிப்பின், பதிலளிப்பவர் தனது பூரண சம்மதத்துடன் தானாக முன்வந்து புலிகள் இயக்கத்துடன் செயற்பட்டார் என அடையாளப்படுத்தப்படுவார். தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முன்னாள் போராளியும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றனரா என்பதை நாடிபிடித்துப் பார்க்கும் நோக்கிலேயே இவ்வினா வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வினாவிற்கான விடையே விடுதலையின் பின்னர் அவர்கள் பின்தொடரப்படுவதற்கு அடிப்படையான தகவலாக அமையுமோ என எண்ணத் தோன்றுகின்றது.

இதனைத் தொடர்ந்து பார்க்கையில், இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பாக முன்னாள் போராளிகளின் கருத்து எப்படி அமைந்துள்ளதென்பதனை கண்டறியும் நோக்குடனும் வினாக்கள் தொடுக்கப்பட்டுள்ளமை இவ்வினாக்கொத்து எத்தகையதோர் அரசியல் உள்நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாகும். ஆக, கீழுள்ள வினா அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் முழு முயற்சியாகும்.

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

முன்னாள் போராளிகளின் உளவியலில் எதிர்மாறான தாக்கத்தை ஏற்படுத்த எத்தனிக்கும் அரசு இனவாதத்தினையும் அவர்களிடம் பரீட்சிக்க விளைவதை பின்வரும் வினாக்கள் குறிப்புணர்த்துகின்றன.

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் பிரிவினை வாதத்தினை வளர்க்கும் நோக்கில் கேட்கப்பட்ட இவ்வினாக்களுக்கு முன்னாள் போராளி எப்படி பதிலளிப்பார்?

சிங்கள மக்கள் தமிழர்களிற்கு எதிராகச் செயற்படுபவர்கள் என்ற கருத்தில் முன்னாள் போராளிகள் எத்தகைய எண்ணப்பாட்டினை கொண்டுள்ளனர் என்பது இங்கு பரிசீலிக்கப்படுகிறதா? இத்தகைய விடயங்களிற்குப் பதிலளிப்பவர் இன ரீதியாக சிங்கள மக்கள் மீதுள்ள வெறுப்பினை வெளிப்டுத்த முயல்வர் என எதிர்பார்க்கப்படுகின்றதா? இன நல்லிணக்கம் என வெளியுலகத்திற்கு பேசிக்கொள்ளும் அரசின் உண்மையான முகம் என்ன என்னும் கேள்விக்கு பதிலளிக்க இவ்வினா ஒன்றே போதுமானதாகும்.

ஒட்டுமொத்தமாகவே புரிந்து கொள்வதற்கு கடினமானதாகவும் எழுத்துப்பிழைகளோடும் காட்சியளிக்கும் இவ்வினாக்கொத்தில் சில வினாக்கள் முற்றுமுழுதாக விளங்கிக்கொள்ள முடியாதளவிற்கு கருத்துப் பிழைகளோடு காணப்படுவது மேலும் விசனத்தை ஏற்படுத்தும் விடயமாகும். கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளிற்கான அர்த்தம் புரியாத போது, முன்னாள் போராளிகள் எங்ஙனம் இக்கருத்துக்களிற்கு பதிலளிப்பதென்ற இக்கட்டான சூழ்நிலையை கடந்து வந்ததாக தெரிவித்தனர்.

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

A பகுதியில், இறுதியாக கேட்கப்பட்டுள்ள -

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

என்ற கேள்விக்கு பதிலளிப்பவர், குறிப்பிட்டுள்ள மூன்றிலொரு பதிலை தெரிவு செய்ய வேண்டும். இங்கு, என்ன கேட்கிறார்கள் என்பதே புரியாத பட்சத்தில் பதிலளிக்கும் முன்னாள் போராளி என்ன பதிலை அளிப்பது? ‘தமிழர்களிற்காக நாடு கேட்டு மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்குத் தூண்டுகோலாய் தாம் இருப்போமோ’ என்ற சந்தேக உணர்வை அரசு இன்னும் கொண்டுள்ளதா என்று புனர்வாழ்வின் பின்னதாக விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பல முன்னாள போராளிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ள இவ்வினாக்களிற்கான பதில்களை புனர்வாழ்வு அமைச்சின் பிரதியமைச்சரான முன்னாள் போராளி விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தும் பெறுவதற்குச் ‘சமூக சிற்பிகள்’ மிகவும் ஆவலாக உள்ளனர்.

பகுதி B

படத்தை இணைக்க முடியவில்லை

http://www.puthinappalakai.com/view.php?20120617106412

வினாக்கள் பற்றிய பார்வை அடுத்த வாரம் தொடரும்…

http://www.puthinappalakai.com/view.php?20120612106381

Edited by BLUE BIRD

குறிப்பிட்ட தகவல்களை பெற்றவர்கள் மனித உரிமை அமைப்புக்களிடம் இவ்வாறான விடயங்கள் பற்றி முறைப்பாடு செய்தல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பான விடயத்தில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பரவலாக கவனம் செலுத்தவில்லை. போராட்டத்துக்காக திரட்டிய நிதியின் மிகுதியில் முன்னை போராளிகளின் விடுதலைக்கான சட்ட நடவடிக்கை, போராளிகளின் கல்வி போன்ற விடயங்களில் செலவிடப்படுவதாகவும் தெரியவில்லை.

போராளிகளின் விடுதலைக்காக ஐநா மேற்பார்வையிலான முறையான புனர்வாழ்வுப் பணிகளுக்காக குரல் எழுப்பும் வகையில் தமிழ் சிங்களம் பேசும் மனித உரிமைக் குழுக்களை தூண்டி ஆதரித்தல் முக்கியம்.

ஆபிரிக்க நாடுகளில் . விடுதலையான போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பான பணிகளில் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனமான UNDP நீண்டகாலமாகப் பணி புரிந்து வருகிறது. குறிப்பாக பெண்போராளிகள் தொடர்பான அவர்களது கரிசனை நல்ல பலனைத் தந்துள்ளது. மின்னைப் பெண் போராளிகள் கைவிடப்படுவது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒழுக்கங்களைவிட உயிர் பிழைத்திருத்தல் முக்கியம்.

போராளிகளின் புனர்வாழ்வு தொடர்பாக ஆபிரிக்காவில் UNDP செய்யும்பணிகள் தொடர்பாக யாராவது ஆராய்ந்து எழுதுங்கள். UNDP ஈழத் தமிழ் முன்னைநாள் போராளிகள் தொடர்பாக தன்னுடைய கடமையை இன்னும் முழுமையாக மேற்கொள்ளவில்லை. UNDP உட்ப்பட இதற்கான அலுவல்களுடன் தொடர்புடைய ஐநாசபை அமைப்புகளமீது அழுத்தத்தை ஏற்படுத்துவது நமது கடமையாகும்.

.

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிஞரே;

இங்குள்ள பிரச்சனைகள் நீங்கள் அறியாதது அல்ல. இணக்கமான அரசியல் என்பது முள்ளிவைக்காலில் நிகழந்த அவலத்திலும் கேவலமான அரசியலாக, அழிவாக இங்கே பார்க்கப்படுகிறது. அது ஒன்றும் புதிதும் அல்ல. பிரபாகரன் கூட முன்பு ஒருமுறை சொன்னது போல- தமிழீழத்தில் இருந்து இறங்கி வந்தால் என் முதல்நிலை போராளியே என்னைக் கொன்று விடுவார் என்று"- அதனால் தான் என்னோவோ, இங்கே எல்லாவற்றுக்கும் - ஈழ விடுதலை என்கிற நாமத்துடன் பெயர் போட்டு வைத்துக்கொண்டு இருக்கிறோம். அது EPDP ஆக இருந்தாலும் கூட.

இங்கே நீங்கள் புலம் பெயந்தவர்களை நோக்கி கை காட்டுவது- சும்மா விழுந்த மாட்டுக்கு குறி சுடுவது போல இருக்குது- அண்மையில் TVO நடந்த விவாதம் ஒன்றை இணைத்திருந்தார்கள், பெரும்பாலான பகுதிகள் பார்த்தேன் சிலது விடுபட்டும் இருக்கிறது- அங்கே சிங்கள தரப்பை சர்த்தவர்களும், நிகழ்வை ஒருன்கினைத்தவர்களும் கேட்ட கேள்வி; இதில் இருந்து முன்னே போவதர்ற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள், அல்லது இங்கே புலம் பெயர் தேசத்தில் என்ன செய்யலாம். சிங்களவர் முழு ஆர்வமாக இருக்கிறார்கள், இணைத்து செய்வதரற்கு -இங்கே- சண் நீதான் சொன்னது போல; பிறகுவரும்; இரண்டு சிங்களவரும் இரண்டு தமிழரும் சேர்ந்து 4 மரம் நட்டுப்போட்டு " நாங்கள் எல்லோரும் ஒருவர், நமக்கிடையே இல்லை பேதம், எங்கள் நாடு ஸ்ரீ லங்கா எமக்கு வேண்டாம் தீவிரவாதம்"

ஏன் இப்படி சொல்ல வேண்டி இருக்கென்றால், இங்கே காரியம் செய்வது மிகக் கடினம். ஒருபக்கம் சிங்களவன், மற்றப்பக்கம் தமிழ் தீவிர அதாதவளர்கள். இதற்ற்கிடையில் எதுவித அரசியல் பலமுமற்ற நிலை- புலம் பெயர் சமூகம். இந்த நிலையில் எப்படி செய்யலாம்.

எனக்கு தெரிந்த ஒருவர், பெருமளவு நிதி வழங்கியவர்- ஒரு நிறுவனம் ஒன்றின் ஊடக- அவரையும் சிங்களவன் புலி என்று கட்டுரை வரைந்து கொண்டு இருக்கிறான். நாங்கள் எதாவது விதத்தில் சேர்ந்தால் உடனடியாக -ஒரே நாடு எமக்கிடையே பிரிவு இல்லை என்பார்கள்- அப்படி இல்லாமல் தானே செய்தால் பயங்கரவாதம்.

நிற்க;

இங்கே இருப்பவர்களை விடுங்கள், இலங்கையில் உள்ள சம்பதன் என்ன செய்கிறார்? அவர்களுடைய படை பரிவாரங்கள் என்ன செய்கின்றன? வெட்கமில்லாம் சொல்லுகிறார்கள் தங்களால்தான், ஐநா தீர்மானம் வந்ததாக.அவர்கள் செய்ய வேண்டி செயக்கூடி வேலைகள் அதிகம் இருக்கு. அவர்களுக்கு அதுபற்றி கதைக்க சிந்திக்க நேரமில்லை- புலம் பெயந்தவர்கள் செய்வதில் ஒரு ஆயிரத்தில் ஒன்றை தமிழ் கூட்டமைப்பு செய்தல் காரியங்கள் இன்னும் கொஞ்சம் வேகமாக நடக்கும்.

-இங்கே சிலருக்கு புலத்தில் இருபவர்களுக்கு, சம்பந்தனை தேர்தேடுத்ததே பிடிப்பில்லை, ஆனால் எனக்கு தெரிந்த வகையில் அந்த நேரத்தில் இருந்த தெரிவாக அவர்கள்தான் இருந்தார்கள், அதே நேரத்தில், பொன்னம்பலம், கஜேந்திரகுமார் போன்றோர்- தங்களை அடுத்த தேர்தலுக்கு ஆகத்தான்னும், இப்ப உள்ள இந்த பிரச்சனைகளில் குரல் கொடுக்க வேண்டும். இரு இரு என்று இருந்து போட்டு, தேர்தலுக்கு ஒரு மாதம், 2 மாதம் முந்தி சுப்பனையும், சொப்பனையும் தேர்தலில் இறக்க கூடாது. மக்கள் விழிப்புணர்வு கருத்தரங்குகளில் ஈடுபட வேண்டும். நடேசன் சொன்ன- சுத்தி உள்ள ராணுவத்தை வென்றாலே ஈழம் கிடைத்து வேண்டும் என்பது போல; சுத்தியுள்ள பிரச்சனைகளை தீர்த்தலே மக்கள் நிமதியாய் வாழும் நிலை வரும்.

முந்தின மாதிரி இதுதான் பிரச்சனை என்று ஒருவருக்கு சொல்லி விளங்கபடுத்த தேவையில்லை. எல்லாருக்கு தெரியும், யாழ்பாணம் முழுக்க ராணுவம் இருக்கு, அவர்களை அங்கிருந்து வெளியேற சொல்லுவது தான் வேலை...

கைதிகள் விசாணை இன்றி இருக்கிறார்கள்; விடுதலை செய்

தமிழ் பிரதேரத்தில் சிவில் நிர்வாகம் இல்லை/ ராணுவ தலைஈடு ; அதை நிவர்த்தி செய்

இப்ப உள்ளதை விட இன்னும் காலம் வரும் என்று சொல்லத்தேவையில்லை; யாழ்ப்பாணத்திலேயே எல்லாம் செயலாம்..ஆனால் செய்ய வேண்டுமே

போராளிகளில் புனவர்விர்ற்கு உதவ சொல்லி; எத்தனை நாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை கேட்டிருக்கு? அவர்களில் பதில் என்ன?

போராளிகளின் புனர்வாழ்வு; ஒரு நாள் இரண்டு நாள் விடயம் அல்ல; கயமடைத்த போராளிகளுக்கான பரமாரிப்பு வாழ்நாள் பூராகவும் தேவை; அதை ஒரு பெரிய நிறுவனம்/ நிர்வாகம் செய்ய வேண்டும்..அரசில் பலம் உள்ளவர்களே செய்யாமல் விட்டால், சாதாரண மக்கள், அது இலங்கைளில் ஆகட்டும், அல்லது இங்கே புலத்தில் ஆகட்டும் எவ்வாறு செய்வது...

சும்மா புலம் பெயந்தவர்களை திட்டுவதை விட்டுவிட்டு; செய்யவேண்டியவர்களை, செய்யக்கூடியவர்களை செய்யச்சொல்லுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
ques-07.JPG
  • கருத்துக்கள உறவுகள்

ques-03.JPG

ques-04.JPG

ques-06.JPG

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.